Friday, 10 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழ் மொழி தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ...

Posted: 10 Oct 2014 09:01 AM PDT

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ...

ஐயத்தின்போது
மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...

வக்கணையின் போது
மட்டும் ஒள...

விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!


அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம் பிலடெல்பியா: அமெரிக்காவில் பில...

Posted: 10 Oct 2014 06:30 AM PDT

அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம்

பிலடெல்பியா: அமெரிக்காவில் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில், 1550ம் ஆண்டைச் சேர்ந்த மதுரை இந்து மண்டபம் உள்ளது. மதுரை மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட கலைப் பொக்கிஷம் தான் இந்த மண்டபம். இந்த மண்டபம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்தின் 2வது தளத்தில் உள்ள இந்த இந்து மண்டபத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிலைகளும், கிருஷ்ணர், அனுமர், கருடர் ஆகியோருடைய சிலைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நடராஜர் வடிவில் சிவன், ராமர், துர்கை, நடன கணேசர், கார்த்திகேயர், காளி, பைவரவர், இந்திரன், காமதேனு, நந்தி, சூர்யன் ஆகிய சிலைகளம் உள்ளன.

கடந்த 1876ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2 லட்சத்து 27 ஆயிரம் கலைப்பொருட்களுடன், ஓவியம், சிலைகள், காகித வேலைப்பாடுகள், புகைப்படங்கள், அலங்கார கலைகள், துணி ரகங்கள், மற்றும் கட்டட கலை தொடர்பான 200 பகுதிகளைக் கொண்டுள்ளது.

இங்கு இந்து மண்டபம் மற்றும் சிலைகள் பராமரிக்கப்படுவதைப் பாராட்டியுள்ள பிரபஞ்ச இந்து சமதாயத்தின் தலைவர் ராஜன் ஜெட், இது போன்று அமெரிக்காவில் உள்ள இதர அருங்காட்சியகங்களும் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களையும், கலைப் பொருட்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

# அந்நியர்கள் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களை பாதுகாத்து வருகிறார்கள், ஆனால் நாம் என்ன செய்கிறோம் கோவிலில் உள்ள சிற்பங்கள் மீது குங்குமம், விபூதியை கொட்டி சிற்பத்தின் அழகை கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பா விவேக்


மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்க...

Posted: 10 Oct 2014 05:30 AM PDT

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்கில் தான் நடக்கும்.

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறது வரலாற்று ஆய்வுகள்.

பா விவேக்


சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோ...

Posted: 10 Oct 2014 04:30 AM PDT

சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

பா விவேக்


தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் ம...

Posted: 10 Oct 2014 02:30 AM PDT

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
PETER விடும் சில தமிழ் மக்களே..படியுங்கள் ..

*************** *************** ***
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
*************** *************** ***

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள் ள நான் பெருமையடைகிறேன் . ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங் களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கு ம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்.

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன்பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல்பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட ்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்க ியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possibleto describe it with a pen, particularly since it is like no otherbuilding in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது . அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—mi ght takean honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ள ார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்ப ட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப ் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த2012 வரை கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே! !
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது...

பா விவேக்


தமிழன் சாதித்த கட்டிடக்கலை!!! தஞ்சை பெரிய கோவில் !!! #ஆச்சரியம் பா விவேக்

Posted: 10 Oct 2014 01:30 AM PDT

தமிழன் சாதித்த கட்டிடக்கலை!!!

தஞ்சை பெரிய கோவில் !!!

#ஆச்சரியம்

பா விவேக்


தண்டட்டி : அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற...

Posted: 10 Oct 2014 12:30 AM PDT

தண்டட்டி :

அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்போது தண்டட்டி அணிந்த பெண்களை காண்பது அரிதாகிவிட்டது. தண்டட்டி அணிவதர்க்காகவே காத்துகளை வளர்த்தால் தான் இந்த தண்டட்டியை அணியமுடியும். காத்து வளர்த்து தண்டட்டி அணியவேண்டும் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொண்டு ஒரு ஆட்டை பலிகொடுத்து காதுளில் துளையிட்டு இந்த தண்டட்டியை அணிவர்.

இந்த தண்டட்டி தங்கள் அல்லது வெங்களத்தில் செய்யப்பட்டிருக்கும். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர்.

நவனாகரீகத்தின் மீது அடிமையாகாமல் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்டட்டி அணிந்த பெண்களை பார்க்கலாம்.

பா விவேக்


Posted: 09 Oct 2014 11:30 PM PDT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை. பாதி ஆண், மீதி பெண்ணா...

Posted: 09 Oct 2014 10:30 PM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை. பாதி ஆண், மீதி பெண்ணாக இருக்கும் ஒரே கடவுள்.

பா விவேக்


சில தமிழ் பெயர்களைத் தெரிந்துகொள்வோம் பா விவேக்

Posted: 09 Oct 2014 10:00 PM PDT

சில தமிழ் பெயர்களைத் தெரிந்துகொள்வோம்

பா விவேக்


இதை எங்கேயோ பார்த்த மாதிரி தெரிகிறதா? எங்கன்னு சொல்லுங்க பாப்போம்?????? பா விவேக்

Posted: 09 Oct 2014 09:30 PM PDT

இதை எங்கேயோ பார்த்த மாதிரி தெரிகிறதா?

எங்கன்னு சொல்லுங்க பாப்போம்??????

பா விவேக்


இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போன...

Posted: 09 Oct 2014 07:32 PM PDT

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட
கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.
தமிழில் இட்டிருந்தார்...

அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும்
வந்துது...

★சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன
மொழியில்தான் உள்ளது. பெரும்பாலும் உலகின்
அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர்
தாய்மொழியிலேயே...

★ கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக
ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த
சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத
காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை..?

★அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த
சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான்
இருக்கிறது...

என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்
போகிறேன். (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும்,
கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும்
தமிழுக்காக) தமிழன்
என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில்
கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய்
இருக்கிறது...

தமிழர் என்று சொல்லுவோம். தமிழராய் வாழ்வோம். நம்
அடையாளம் அதுவே...!

பா விவேக்


0 comments:

Post a Comment