Tuesday, 17 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தமிழுக்கு ட்விட்டரில் முதலிடம்!! "#தமிழ்வாழ்க" என்ற குறியீடு இந்தியாவில் முதல் ம...

Posted: 17 Feb 2015 08:51 PM PST

தமிழுக்கு ட்விட்டரில் முதலிடம்!! "#தமிழ்வாழ்க" என்ற குறியீடு இந்தியாவில் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தது ..

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.

பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.

அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.

கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.

அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.

இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.

#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.

எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

நன்றி : தமிழ் இந்து


Posted: 17 Feb 2015 08:20 AM PST


நல்லா தமிழ் பேசிட்டு இருந்தவங்க, இந்தா இருக்கற மெட்ராஸ் க்கு வேலைக்கு போனாங்க,...

Posted: 17 Feb 2015 07:03 AM PST

நல்லா தமிழ்
பேசிட்டு இருந்தவங்க,
இந்தா இருக்கற
மெட்ராஸ்
க்கு வேலைக்கு போனாங்க,

2 வருஷம்
கழிச்சு பேசுனா பிட்ஸா பர்கர்
நு ஒரே பீட்ரு, தாங்க
முடில. என்ன
நினச்சனோ தெரில
திடீர்னு சரிப்பா இந்த
எலந்த
பழத்துக்கு இன்கிலீஷ்
என்னானு கேட்டேன்,
அப்புறமா தாராளமா தமிழ்
வருது..,

@Indupriya MP

சாதாரண போன் யூஸ் பண்றவனுக்குதான் இன்னைக்கு சிவராத்திரி...! ஆண்ட்ராய்ட் போன் யூஸ...

Posted: 17 Feb 2015 06:52 AM PST

சாதாரண போன் யூஸ்
பண்றவனுக்குதான்
இன்னைக்கு சிவராத்திரி...!

ஆண்ட்ராய்ட் போன் யூஸ்
பண்றவனுக்கு தெனம்
தெனம் சிவராத்திரிதான்!!

@டாவின்சி

எங்கள் வீட்டில் கடந்த வாரம் கடையில் அரிசி வாங்கி வந்தோம். அதை கடந்த ஒரு வாரமாக ச...

Posted: 16 Feb 2015 11:11 PM PST

எங்கள் வீட்டில் கடந்த வாரம் கடையில் அரிசி வாங்கி வந்தோம். அதை கடந்த ஒரு வாரமாக சமைத்து உண்டு வருகிறோம். கடந்த ஒரு வார காலமாக உணவில் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்து வருகிறது. அதை இன்று பரிசோதித்ததில் அதில் பூச்சுக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.

அரிசி மூட்டைகளை விற்பனைக்காக வைத்திருக்கையில் கடைக்காரர் (வியாபாரி) அரிசியில் பூச்சுக்கள், வண்டுகள் வைக்காமல் இருப்பதற்காக அரிசி மூட்டைகளின் மேல் பூச்சுக்கொல்லி ஸ்ப்ரே அடித்ததின் விளைவு தான் இப்போது அரிசியை சமையல் செய்து உண்ணும் போது அதில் பூச்சிக்கொல்லி மருந்தின் வாசனை அடிக்கிறது என்பதை உறுதி செய்தேன்.

உண்ணும் உணவிலும் பூச்சுக்கொல்லி, உண்ணும் உணவே உயிர்க்கொல்லி. இன்று அரிசியை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் வாங்க வேண்டியிருக்கிறது.

இத்தகவலை தங்களுடன் பகிர்வதன் நோக்கம் இதை படிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நன்றி : கமலஹாசன் ரவீந்தர தாஸ் பா விவேக்

Posted: 17 Feb 2015 05:43 AM PST

நன்றி : கமலஹாசன் ரவீந்தர தாஸ்

பா விவேக்


நமது நண்பர் ரமேஷ் பக்கத்திற்கு அளித்த தமிழ் மொழி பற்றிய தகவல் இது. ஆங்கிலத்தில்...

Posted: 16 Feb 2015 08:28 PM PST

நமது நண்பர் ரமேஷ் பக்கத்திற்கு அளித்த தமிழ் மொழி பற்றிய தகவல் இது. ஆங்கிலத்தில் உள்ள இந்த தகவலை முடிந்தவரை தமிழ்மொழிக்கு மாற்றம் செய்து மற்றவர்களுக்கும் எளிதில் புரியும் படி செய்வோமாக...

Tamil: Language Family:Dravidian

Written System:Tamil Script

Civilization:Indus-Valley Civilization

Standard forms/Dialects:7 Dialects

Origin:before 300 BC(Some Estimate over 2000BC )

Native Speakers:>77 million

Today:Tamil Spread across south Asia.It Enjoy Official status of more 4 countries.

Specialty:55% of the epigraphical Inscription found in India are in Tamil.Tamil-Brahmi Script inscription are found in Egypt,Thailand,Sri lanka,Which is about 2000 years old.Tamil is the only surviving classical language of the world.

History:Tamil-Brahmi Script are first written form of Tamil.Tamil Language had well defined written grammar even 2500 years ago(Tholkkapium).So Many believe that Tamil also one of the Language evolved during origin of Communication.Thirukurral One of the Greatest Literature of the world.

Personality:Thiruvalluvar,Tholkkapiur,Bodhidharman etc. Dead World Treasure Languages: Language more than just mode of communication,its a rich culture.So Everyone's duty to protect a language and mother tongue.Otherwise we will lose our rich culture and tradition which our fore fathers left for each and everyone.Some Of the dead languages which brought civilization to the world.1.Sumerian(Mesopotamian Civilization-5000BC)2.Akkadian(Mesopotamian Civilization-4500BC)3.Armenian(Jesus Christ Mother tongue)4.Egyptian(Egypt Civilization-3000BC) "Protect your language,To Preserve your Past For Historic Future"

நன்றி : ரமேஷ்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 17 Feb 2015 08:09 AM PST


Posted: 17 Feb 2015 02:58 AM PST


:P

Posted: 17 Feb 2015 02:51 AM PST

:P


பிஜேபி ஆட்சியின் மனித விரோத செயல்களை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கம் நடத்தும் தொடர...

Posted: 16 Feb 2015 11:19 PM PST

பிஜேபி ஆட்சியின் மனித விரோத செயல்களை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கம் நடத்தும் தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம்!

மத்தியில் பிஜேபி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, மதவெறி சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏராளமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் பலர் பகிரங்கமாகவே மதவெறியை தூண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதசார்பின்மைக்கு உலகில் பெருமை சேர்க்கும் இந்தியாவில் மதவெறிகளை தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி சக்திகளின் சதியை முறியடிக்க இந்து,கிருஸ்தவ,இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து "தேச ஒற்றுமை இயக்கம்"என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் நேற்று(16.02.15)பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய தேச ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் "வருகின்ற 28.02.15 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."என தெரிவித்தனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏராளமான இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:p

Posted: 17 Feb 2015 08:54 AM PST

:p


:'(

Posted: 17 Feb 2015 06:53 AM PST

:'(


மகா சிவராத்திரி :p

Posted: 17 Feb 2015 05:57 AM PST

மகா சிவராத்திரி :p


Happy birthday Makkal Thalapathy Sivakarthikeyan anna

Posted: 16 Feb 2015 07:11 PM PST

Happy birthday Makkal Thalapathy Sivakarthikeyan anna


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண...

Posted: 16 Feb 2015 06:11 PM PST

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்n அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்.... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#SHARE

Posted: 16 Feb 2015 05:29 PM PST

#SHARE


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்...

Posted: 17 Feb 2015 08:15 AM PST

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன்.

" என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர்.

"மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான்
"உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர்

"அப்படியா சொல்கிறீர்கள்?"
"ஆமாம்!"

"அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?"
"மனதைப் புரிந்து கொள்... அது போதும்."

"எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் -

"ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தவும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம்.

தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம்,

தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை..." - என்று அவர் கதையை முடித்தார்.

இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

"மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்."

Relaxplzz

* சாப்பாடு * சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பர...

Posted: 17 Feb 2015 07:15 AM PST

* சாப்பாடு *

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

-கோ.மோகன்ராம் @ Relaxplzz

#Whymenaregreat - 1 கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்கள் போல்...

Posted: 17 Feb 2015 06:15 AM PST

#Whymenaregreat - 1

கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!!

பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம்
பீட்டரு விடவே மாட்டோம்..

நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்..

பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது..

அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்...

ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்...

சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி....

பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா இருந்தாலும்,'ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி'ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது...

வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே..

குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று #கக்கூஸ் கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம்.

வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்..

எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது..

வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்...

தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்..

தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்...

தெரியாத பெண்கள் கேட்டால் கூட
உடனே உதவி செய்வோம்!!

35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம்.

எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்...

தங்கை திருமணத்துக்காக தன் திருமண வயதிலும் திருமண செய்து கொள்ளாமல் உழைக்கும் ஒவ்வொரு அண்ணனும் இன்னொரு அப்பா தான்.

Relaxplzz

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்: பாலு : டேய் ! இன்னிக்கு...

Posted: 17 Feb 2015 05:30 AM PST

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..

*
*
*

சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது

பாலு & வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....

பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...

: P:P

Relaxplzz


குசும்பு... 4

நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா? சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு...

Posted: 17 Feb 2015 05:15 AM PST

நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். இதோ... பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்...

- இந்து மத வரலாறு

Relaxplzz

மெளனம் என்பது என்ன? சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று...

Posted: 17 Feb 2015 04:15 AM PST

மெளனம் என்பது என்ன?

சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம்.

ஒரு மனிதனால் எண்ணங்கள் இல்லாமல் மெளனமாக இருக்க முடியுமா?

உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் ஏன் பிறந்தது முதல் இறப்பு வரையிலும் இதயம் துடித்து கொண்டே இருக்கிறது ரத்தமும் அப்படியே ஓடிகொண்டே இருக்கிறது. நாம் நினைத்தாலும் அவைகளை நிறுத்தி விட முடியாது. நிறுத்தி விட்டால் மரணம் சம்பவிக்கும் எண்ணங்கள் என்பது அப்படி அல்ல நினைவிலும் கனவிலும் அவைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருந்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியும். ஒன்றையே நினைத்து ஒன்றிலே கரைந்து ஒன்றிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த ஒன்றும் மறைந்து எதுவுமற்ற மோன நிலை சித்திக்கும்

மோன நிலை அடைய என்ன செய்ய வேண்டும்?

அறிவு, ஆராய்ச்சி, கேள்விகள், பதில்கள் எல்லாவற்றையும் காலணிகளை கழற்றி போடுவதை போல் போடுங்கள் இப்படி சொல்வது எளிது செய்வது கடினம் கடினமானது என்றால் அதை விட்டு விடலாமா? விட்டு விட்டால் மோன நிலையை அடைய முடியாதே என்று கேட்பது புரிகிறது. அறிவும் ஆராய்ச்சியும் எதற்க்காக? எதோ ஒன்றை தெரிந்து கொள்வதற்காக. அந்த எதோ ஒன்று எது என்பதில் தான் போராட்டம் இருக்கிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிய முயல வேண்டும். அறிந்த பிறகு மோன நிலை தானாக கிடைக்கும்.

எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம்?
பூமி சுற்றுவது எதனால்? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஒழுங்கு முறைப்படி இயங்குவது எதனால்? கண்ணுக்கு தெரியாமல் கருத்துக்கு புலப்படாமல் எங்கோ இருந்து இயக்குவிக்கும் ஒரு மூலபொருளே அதற்கு காரணம். அந்த மூல பொருளை அறிந்தால் அறிய முயற்சித்தால் எல்லாவற்றையும் அறியலாம்.

இதற்கு எளிய விளக்கம் என்ன?

கண்ணுக்கு தெரியாத கடவுளை காண முயலுங்கள் கருத்துக்கு அகப்பாத கடவுளை அகப்படுத்த அதாவது உள்ளத்திற்குள் உணர துவங்குங்கள் அறியாதது எல்லாம் அறியப்படும். அறிந்த பிறகு ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் வராது. கேள்விகள் இல்லை என்றால் சிந்தனை குளத்தில் அலைகள் இல்லை அதாவது எண்ணங்கள் இல்லை எண்ணங்கள் இல்லாத போது மெளனம் வரும். மெளனத்தின் உள்ளே மோன வடிவமாக கடவுள் இருப்பான். கடவுளை கண்டவன் கடவுளே ஆவான்.

அப்படி என்றால் மனிதனும் கடவுள் ஆகலாமா?

கடவுள் இருக்கிறார் அவர் இல்லை என்பதை வாதங்களால் எண்ணங்களால் வார்த்தைகளால் நிரூபிக்க முடியாது உணர்வுகளால் மட்டுமே நிரூபிக்க முடியும். கடவுள் உணர்வு மிக ஆழமானது அது உனக்குள்ளே புதைந்து கிடக்கிறது. உன்னை தோண்டி பார்த்தால் கடவுள் கிடைப்பார் அதாவது உனக்குள்ளே கிடைப்பார். அப்படி என்றால் நீயும் அவரும் வேறு வேறல்ல வேறு வேறாக தெரிகிறீர்கள் அவ்வளவே.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 17 Feb 2015 03:30 AM PST

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில்...

Posted: 17 Feb 2015 03:15 AM PST

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு.

2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு.

3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு.

4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு.

5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு.

6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு.

7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும்.

8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும்.

# இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 17 Feb 2015 02:54 AM PST

‘மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கச் சொல்லி, அந்த அல்லாதான் உங்களுக்கு...

Posted: 17 Feb 2015 02:45 AM PST

'மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கச் சொல்லி, அந்த அல்லாதான் உங்களுக்கு ஆணையிட்டாரா? அல்லது அவருக்கு அர்ப்பணிக்கிறீர்களா? நான் சத்தியமாகச் சொல்வேன் - நீங்கள் யாரும் கடவுள் வழியில் செல்லவில்லை. நீங்கள் அனைவரும் சாத்தான்களடா!

ஈராக்கைச் சேர்ந்த 87 வயது பாட்டி ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளை திட்டி தீர்த்து விட்டார் . நாமும் வணங்குவோம் வீர மங்கையை (y)


உங்களுக்குத் தெரியுமா? காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும்...

Posted: 17 Feb 2015 02:15 AM PST

உங்களுக்குத் தெரியுமா?

காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

ஆங்கிலத்தில் '-dous' என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous
"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.

ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.

உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.

மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.

Relaxplzz

30.02.2015 ல இருந்து பெட்ரோல் ரேட் Rs 30.77, மற்றும் டீசல் ரேட் Rs 27.52 குறையபோ...

Posted: 17 Feb 2015 02:00 AM PST

30.02.2015 ல இருந்து பெட்ரோல் ரேட் Rs 30.77, மற்றும் டீசல் ரேட் Rs 27.52 குறையபோகுதுனு ரூமர்ஸ் பறவுது .. :)


தேனும் லவங்கமும் சேர்ந்தால் ஏற்படும் மாயாஜாலங்கள்...! தேனை பற்றியும், லவங்கப்பட...

Posted: 17 Feb 2015 01:45 AM PST

தேனும் லவங்கமும் சேர்ந்தால் ஏற்படும் மாயாஜாலங்கள்...!

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருளாகும். இது தான் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் பதிலாக இருக்கும். வெகு சிலருக்கே அதையும் மீறி அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் சேரும் போது நீங்கள் நினைத்ததை விட இன்னும் பல உடல்நல பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா? உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க... பொதுவாக உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க தேன் பயன்படும் என தான் பலரும் நினைக்கின்றனர். இது போக சர்க்கரைக்கு பதில் அதனை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் தேனும் லவங்கப்பட்டையும் சேரும் போது சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து வழியும் இதனை பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தேன் மற்றும் லவங்கப்பட்டையில் உள்ள குணப்படுத்தும் குணங்கள் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

லவங்கப்பட்டை மற்றும் தேன் சாப்பிடும் முறை...!

உங்களுக்கு தேவையானது எல்லாம் லவங்கப்பட்டை, தேன் மற்றும் தண்ணீர் மட்டுமே! 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இதன் செய்முறை மிகவும் சுலபமானது. இந்த கலவை சமமாகும் வரை லேசான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை ஆற வைத்து, வெதுவெதுப்பாக குடிக்கவும். பதனிடப்படாத தேனையும், நற்பதமான லவங்கப்பட்டை பொடிக்கு லவங்கப்பட்டை குச்சிகளை அரைக்கவும் பரிந்துரைக்கிறோம்.

கீல்வாதம் ...!
தினமும் காலையிலும் இரவிலும், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சின்ன டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெந்நீரை குடிக்கவும். இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், தீவிரமான கீல்வாதத்தை குணப்படுத்தலாம்.

சிறுநீர்ப்பை தொற்றுக்கள் ..!
ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.

கொலஸ்ட்ரால்...!
இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை 1 கப் தேநீரில் கலந்து குடித்தால், இரண்டு மணிநேரத்திற்குள், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு 10 சதவீதம் குறையும்.

சளி ....!
ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான தேனை, 1/4 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் கலந்து மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் தீவிரமான இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தி, சைனஸை நீக்கும்.

இதய நோய்கள்...!
தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதனை கோதுமையால் செய்யப்பட ரொட்டியின் மீது தடவி தினமும் காலையில் உட்கொண்டால், தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். இதனால் நெஞ்சு வலி ஏற்படாமல் தடுக்கும்.

வயிற்று கோளாறு..!
வயிற்று வலியை குணப்படுத்தும். மேலும் வயிற்று அல்சரை அதன் வேரிலிருந்து நீக்கி விடும்.

வாய்வு ...!
லவங்கப்பட்டை பொடியுடன் தேனை எடுத்துக் கொண்டால், வாய்வு தொல்லையில் இருந்து உங்கள் வயிறு நிவாரணம் பெறும்.

நோய் எதிர்ப்பு அமைப்பு ...!
தேனையும் லவங்கப்பட்டை பொடியையும் தினசரி உட்கொண்டு வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவடைந்து, பாக்டீரியா மற்றும் நச்சுயிர்களில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்கப்படும்.

செரிமானமின்மை ...!
2 டீஸ்பூன் தேனில் தூவப்பட்ட லவங்கப்பட்டை பொடியை தினமும் உணவிற்கு முன் உட்கொண்டால், அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் மிக அதிகமான உணவையும் கூட செரிக்க வைக்கும்.

இன்ஃபுளுவென்சா ..!
- ஃப்ளூ இன்ஃபுளுவென்சா கிருமிகளை கொல்லும் இயற்கையான பொருட்கள் தேனில் உள்ளது. இது நோயாளிகளை ஃப்ளூ தாக்காமல் பாதுகாக்கும்.

முதுமை பிரச்சனைகள்..!
4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை போடி மற்றும் 3 கப் தண்ணீரை ஒன்றாக கலந்து, அதனை கொதிக்க வைத்து, தேநீர் போல் தயார் செய்து கொள்ளவும். இதனை தினமும் பருகி வந்தால் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

பருக்கள் ...!
3 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை தூங்க செல்வதற்கு முன் பருக்களின் மீது தடவவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால் வேரிலிருந்தே பருக்கள் நீங்கும்.

உடல் எடை குறைப்பு..!
ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்த தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் வெறும் வயிற்றிலும், இரவு தூங்க செலவற்கு முன்பும் குடித்து வந்தால், உடலில் கொழுப்பு குவியாமல் தடுக்கப்படும்.

சரும தொற்றுக்கள் ...!
பாதிக்கப்பட்ட இடங்களில் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியைத் தடவி வந்தால் சிரங்கு, படர்தாமரை மற்றும் அனைத்து விதமான சரும தொற்றுக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சோர்வு ...!
தேனில் உள்ள சர்க்கரை உடல் வலுவடைவதற்கு இடைஞ்சலாக இல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து, அதன் மீது கொஞ்சம் லவங்கப்பட்டை பொடியை தூவி, காலையில் பல் துலக்கிய பின்னும், மதியமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடலின் உற்சாகம் அதிகரிக்கும்.

புற்றுநோய்...!
1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை ஒரு மாத காலத்திற்கு, தினமும் 3 வேளை எடுத்துக் கொண்டால், வயிறு மற்றும் எலும்பில் முற்றிய புற்றுநோய் சரியாகும்.

காது கேளாமை...!
தினமும் காலையிலும் இரவிலும் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சரிசமமான அளவில் எடுத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் காது கேட்க உதவிடும்.


இயற்கை வைத்தியம்

:) Relaxplzz

Posted: 17 Feb 2015 01:33 AM PST

ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தேன் நியுட்டன்க்கு gravity force உதித்தது போல என் ம...

Posted: 17 Feb 2015 01:15 AM PST

ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தேன் நியுட்டன்க்கு gravity force உதித்தது போல என் மனதில் ஏகப்பட்ட டஉட்ஸ். எல்லாம் அதன் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது அதில் ஏன் numbers உள்ளது.. யோசித்தேன் புரியவில்லை...google செய்தேன் .. அதிர்ச்சியாக இருந்தது . உங்களுடன் share செய்ய் விரும்புகிறேன்..படித்து பயன் பெறவும்..

PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா/ chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் (என்னுடைய ஆப்பிள் photo வை பார்க்கவும்) - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்ய பட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்க்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்...

இருங்க இன்னும் முடியல.. அந்த sticker ம் ஆபத்தானதே ...எடுத்து விட்டு சாப்பிடுங்க..

- ஐுமைலத் சமீம்

Relaxplzz

தாலி கட்டும் நேரத்தில் ஒவ்வொருப் பெண்ணும் நினைப்பது இனி நம் வாழ்க்கை எப்படி இருக...

Posted: 17 Feb 2015 01:05 AM PST

தாலி கட்டும் நேரத்தில் ஒவ்வொருப் பெண்ணும் நினைப்பது இனி நம் வாழ்க்கை எப்படி இருக்குமாே என்று
புது சொந்தங்கள் நம்மை எப்படி நடத்துவார்களாே என்று..

உண்மையான அன்பை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை தொடங்கினால் எல்லா உறவுகளும் இனிமையே ..

- Deepa Saravanan.


குடும்பஸ்தன்_பாடசாலை

ஜாலியா விளையாடுறார் போல

Posted: 17 Feb 2015 12:50 AM PST

ஜாலியா விளையாடுறார் போல


அருமையான மணல் சிற்பம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 17 Feb 2015 12:40 AM PST

அருமையான மணல் சிற்பம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 17 Feb 2015 12:28 AM PST

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!! ************************************** டிப்ஸ்...

Posted: 17 Feb 2015 12:15 AM PST

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!
**************************************

டிப்ஸ் -1:

ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:

மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

Relaxplzz

பத்து ரூபாய் நோட்டை பத்து முறை எண்ணி பார்த்து செலவு செய்த தாத்தாகளுக்கு பிறந்தவர...

Posted: 17 Feb 2015 12:03 AM PST

பத்து ரூபாய் நோட்டை பத்து முறை எண்ணி பார்த்து செலவு செய்த தாத்தாகளுக்கு பிறந்தவர்கள் இன்று லட்சங்களில் புரளும் போது தாத்தாக்களும் பாட்டிகளும் பெற்றோருமே பாரமாகி போகிறார்கள்


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா... நண்பன்: இல்லைப்பா... நாங்க கற...

Posted: 16 Feb 2015 10:15 PM PST

MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா...

நண்பன்: இல்லைப்பா... நாங்க கறி சாப்பிட மாட்டோம்...

MR ராதா: ஏன்டாப்பா...

நண்பன்: நாங்க ஜீவ காருண்யம் கட்சியை சேர்ந்தவங்க. உயிரைக் கொல்ல மாட்டோம்.

MR ராதா: சோறு திங்கிறதுக்கெல்லாம் கட்சியா டா... நீ உயிரைக் கொல்லவே மாட்டியா... சரி நைட்டு மூட்டப் பூச்சி கடிச்சா என்னடாப்பா பண்ணுவ...

#ரத்தக்கண்ணீர்

Relaxplzz

பாட்டி வைத்தியம் :- 1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்ல...

Posted: 16 Feb 2015 10:15 PM PST

பாட்டி வைத்தியம் :-

1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

3. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

4. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

6. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

7. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

8. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

9. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

10. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 16 Feb 2015 08:30 PM PST

(y) Relaxplzz

Posted: 16 Feb 2015 07:30 PM PST

:) Relaxplzz

Posted: 16 Feb 2015 06:30 PM PST

நம் எல்லார் அப்பாவும் இப்படித்தான்... 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்...

Posted: 16 Feb 2015 06:15 PM PST

நம் எல்லார் அப்பாவும் இப்படித்தான்...

1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.

6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி
தியாகம் செய்த தாயுமானவன்
என் தந்தை!

-ஆதிரா

Relaxplzz

அமைதியாய் இருக்க வேண்டிய தருணங்கள்.. தெய்வத்தை வழிபடும்பொழுது ! குரு போதனை செய...

Posted: 16 Feb 2015 06:15 PM PST

அமைதியாய் இருக்க வேண்டிய தருணங்கள்..

தெய்வத்தை வழிபடும்பொழுது !

குரு போதனை செய்யும்பொழுது !

பெற்றோர் பெரியோர் பேசும்பொழுது !

தாய் தந்தை சகோதரர் கண்டிக்கும்போழுது !

ஒருவர் உன்னிடம் பிறரைப்பற்றி புறம் கூறும்பொழுது !

ஒருவர் உன்னைப் புகழும்பொழுது!

ஒருவர் உன்னை இகழும்பொழுது!

ஒருவர் உனது கோப உணர்வைத் தூண்டும்போழுது !

'' அமைதி காப்பவன்
ஆனந்தம் அடைவான் !
ஆனந்தம் அடைந்தவன்
அமைதி பெறுவான் ! '

Relaxplzz

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துர...

Posted: 16 Feb 2015 06:15 PM PST

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.

2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.

3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.

4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.

6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.

8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.

9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.

10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 16 Feb 2015 05:30 PM PST