பிஜேபி ஆட்சியின் மனித விரோத செயல்களை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கம் நடத்தும் தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம்!
மத்தியில் பிஜேபி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, மதவெறி சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஏராளமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் பலர் பகிரங்கமாகவே மதவெறியை தூண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதசார்பின்மைக்கு உலகில் பெருமை சேர்க்கும் இந்தியாவில் மதவெறிகளை தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி சக்திகளின் சதியை முறியடிக்க இந்து,கிருஸ்தவ,இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து "தேச ஒற்றுமை இயக்கம்"என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் நேற்று(16.02.15)பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய தேச ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் "வருகின்ற 28.02.15 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."என தெரிவித்தனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏராளமான இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்

0 comments:
Post a Comment