ilovemynative: Facebook page wall posts in Tamil |
- நடிகர்கள் படத்தை ஒட்டி வைக்கும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் கலெக்டர் சகாயம் அவர்கள...
- காங்கிரசில் 4 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் - இளங்கோவன். 4 லட்சம் பேரு...நீ...
- இனிய காலை வணக்கம்..
- எடுத்தெறிஞ்சு பேசிய மனைவி!! அழுத கணவன்!! பூரிக்கட்டையில் #ரத்தக்கறை!! - சத்தி
- மரணிக்கப்படுவோமெனத் தெரிந்தும் தொழிலுக்கு போகும் ராணுவன் மட்டுமில்லை எங்கள் தமிழ...
- செவ்வாழை... திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவ...
- நாம பாட்டுக்கு சிவனே என்று பணத்தை வங்கிக்கு சென்று எடுத்துக்கொண்டு இருந்தோம் . ப...
- அன்பு! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Con...
- ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் க...
- அழகு தமிழ்நாடு! வால்பாறை!
- இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்...! அச்ச...
- கொழும்புவில் இலங்கை - இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி. #காங்கிரஸ்காரன் ப...
- மீனவர்களை காப்பாற்ற அம்மாவிடம் சொல்கிறேன் என்று உறுதிமொழி அளித்தார் முதர்வர் ஓபி...
- பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்... #எத்தனை பேருக்கு தெரிய...
- அழகு கொடைக்கானல்!
- விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்...
- ”மச்சான் என் அக்கவுண்டுல 80ரூபாய் தான் இருக்கு. நீ ஒரு 20ரூபாய் ஆன்லைன்ல ட்ரான்ஸ...
- ப்ரிட்ஜ்ல தோசைமாவு இருந்தாலும் ரவைஉப்புமா செய்யறதெல்லாம் மனைவியோட தீவிரவாதம்.......
- சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான், அவனை விட்ருங்க... ஸ்டேட்...
- அழகு தமிழ்நாடு!
Posted: 04 Nov 2014 08:56 PM PST |
Posted: 04 Nov 2014 08:46 PM PST |
Posted: 04 Nov 2014 08:40 PM PST |
Posted: 04 Nov 2014 08:16 PM PST |
Posted: 04 Nov 2014 06:45 PM PST |
Posted: 04 Nov 2014 09:08 AM PST |
Posted: 04 Nov 2014 08:34 AM PST எடுத்தெறிஞ்சு பேசிய மனைவி!! அழுத கணவன்!! பூரிக்கட்டையில் #ரத்தக்கறை!! - சத்தி |
Posted: 04 Nov 2014 08:29 AM PST |
Posted: 04 Nov 2014 07:38 AM PST செவ்வாழை... திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... ![]() |
Posted: 04 Nov 2014 07:04 AM PST நாம பாட்டுக்கு சிவனே என்று பணத்தை வங்கிக்கு சென்று எடுத்துக்கொண்டு இருந்தோம் . பொது மக்கள் வங்கியில் காத்திருக்கும் சிரமத்தை குறைக்கிறோம் என்று ரிசர்வ் வங்கி ஏ. டி.எம் வசதியை ஆரம்பித்தது . #ஆரம்பத்தில் மாதம் ஒன்றிற்கு ஐந்து முறை வரை இலவசமாக ஏ. டி.எம் ல் ல் பணம் எடுத்ததுக்கொள்ல லாம் என்று விதி இருந்தது . ஆனால் நேற்று முதல் அதனை முன்று முறையாக குறைத்து விட்டார்கள் அதாவது இனிமேல் மாதம் முன்று முறை தான் இலவசமாக பணத்தை ஏ. டி.எம் ல் எடுக்கலாம். நான்காவது முறை எடுக்கும் பொழுது ரூபாய் 20 யை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மாத்தி இருக்கிறார்கள் . பராமரிப்பு செலவு அதிகம் என்று கூறிவிட்டு இதை செய்து இருக்கிறார்கள் விரைவில் இதுவும் வாபஸ் பெறப்பட்டு முழுவதும் கட்டண சேவையாக ஆக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கொடுமை எல்லாம் இந்தியாவில் மட்டும் தானா.? @D Latha Prabhu |
Posted: 04 Nov 2014 06:54 AM PST அன்பு! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் . அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும்...... @Rohaiyaah Bibi ![]() |
Posted: 04 Nov 2014 06:33 AM PST ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் கூறி மத்திய அரசு நிராகரித்தது. |
Posted: 04 Nov 2014 05:17 AM PST |
Posted: 04 Nov 2014 03:54 AM PST |
Posted: 04 Nov 2014 03:23 AM PST கொழும்புவில் இலங்கை - இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி. #காங்கிரஸ்காரன் பரவாயில்ல போல இந்த கொரலி வித்த காட்டுற மோடிக்கு |
Posted: 04 Nov 2014 02:44 AM PST மீனவர்களை காப்பாற்ற அம்மாவிடம் சொல்கிறேன் என்று உறுதிமொழி அளித்தார் முதர்வர் ஓபிஎஸ் #டக்ளஸ் அண்ணேன் அப்போ ஓனர் இல்லியா..?? @நகுபர் அலி |
Posted: 04 Nov 2014 02:38 AM PST பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்... #எத்தனை பேருக்கு தெரியும்... அது தேனியையும் மாட்டையும் ஏமாத்தி ஆட்டையப் போட்டதுன்னு.. @விவிகா சுரேஷ் |
Posted: 04 Nov 2014 02:22 AM PST |
Posted: 04 Nov 2014 01:59 AM PST விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. அவரும் யாரையாவது பிடித்து உலுக்கிக் கேள்விகள் கேட்கிறார். அறிவுத் திருட்டு குற்றம்தான், இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் சில அடிப்படையான கேள்விகள்: - அத்துமீறி ஒருவரின் இடத்தில் நுழைவதும் அவரை அடா புடா என்று ஏசுவதும் சட்டப்படி குற்றம். அவர் குற்றமற்றவராக இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? - திருட்டு விசிடி விற்பவர் சட்டத்தை மீறுகிறார் என்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சட்டத்தை மீறுவோம் என்ற போட்டியா? - காவல் துறை என்ன செய்கிறது? ஒவ்வொருவரும் தாங்கள் சந்தேகப்பட்ட நபரின் வீட்டுக்குள் அல்லது கடைக்குள் நுழைந்து சோதனையிடத் தொடங்கலாமா? குறைந்த பட்சம் நான் பார்த்த வீடியோவில் காவல் துறையைச் சார்ந்த யாரும் இல்லை. இந்த செயல்களை அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய மதிப்பைத் தானே தாழ்த்திக் கொள்கிறது காவல் துறை. - கடையில் டிவிடி வாங்கிப் பார்ப்பவர்களை விட டோரண்டுகள் மூலம் தரவிறக்கிப் பார்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? பெரும்பாலான படங்கள் பென் டிரைவ்களில்தான் சுற்றுகின்றன. - இந்த வேகத்தை, உணர்ச்சியை சேரன், கமல் போன்றவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்குப் பின் நிற்பதிலும் காட்டலாமே? எனக்கென்னவோ அவர்கள் செய்வது தொலைநோக்குள்ள முயற்சியாகத் தெரிகிறது. ஆனால் இது போன்ற நேரங்களில் அவர்கள் திட்டமிட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதன் பின்னணியிலும் திரைத்துறையினரே இருக்கிறார்கள். ரிஸ்க்தான், சில தலைகள் உருளும்தான். ஆனால் எந்த மாற்றமுமே அப்படித்தான். - ஆங்கிலப் படங்கள், பிற மொழிப்படங்கள், பாடல்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து பிறகு ரூம் போட்டு யோசித்த மாதிரி திரைத்துறையைச் சார்ந்தவர்களே கூச்சமின்றி பேசும்போது பைரசி ஒரு குற்றம் இல்லை என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கிறார்கள். மக்களின் நேர்மையைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில் திரைத்துறையும் தன்னை அலசிக் கொள்வது அவசியம். - தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அதை அரவணைத்துத் தொழில் செய்வது புத்திசாலித்தனம். படங்கள் ஒரே நேரத்தில் டிவிடி, டிடிஎச், ஐடியூன்ஸ், ப்ளே ஸ்டோர் என்று வெளியானால் குறைந்த விலையில் அனைவரும் காண வழி கிடைக்கும். திருட்டி விசிடிகள் தேவை குறைந்து தானாக ஒழியும். இப்போதைக்கு முப்பதாண்டு பழைய சடங்கு ஒன்றை வலிந்து திணிக்கும் முயற்சிதான் இங்கே நடக்கிறது. மாற்று முயற்சிகள் தியேட்டர் லாபிகளால் முடக்கப்படுகின்றன. - ஷான். |
Posted: 03 Nov 2014 11:12 PM PST "மச்சான் என் அக்கவுண்டுல 80ரூபாய் தான் இருக்கு. நீ ஒரு 20ரூபாய் ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டீனா நான் 100ரூபாயா ஏடிஎம்ல எடுத்துக்குவேன் ,"னு மாசக்கடைசில டெக்னிக்கலா ஐடியா பண்ணி வாழுற அப்பாவிகள் இருக்க ஊருடா இது! அதுலயும் வந்து 20ரூபாய் திருடுறீங்களே... உருப்படுவீங்களா டா நீங்கள்லாம்? :( @டான் அசோக் |
Posted: 03 Nov 2014 10:17 PM PST ப்ரிட்ஜ்ல தோசைமாவு இருந்தாலும் ரவைஉப்புமா செய்யறதெல்லாம் மனைவியோட தீவிரவாதம்..... :P - சுகன் |
Posted: 03 Nov 2014 10:01 PM PST சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான், அவனை விட்ருங்க... ஸ்டேட் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன்கிட்ட வந்து இருபதுஇருபதா புடுங்குங்க... #ATM... @காளிமுத்து |
அழகு தமிழ்நாடு! Posted: 03 Nov 2014 09:52 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |