Relax Please: FB page daily Posts |
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும்....
- உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..! ரோலர் கோஸ்டர் எனப்படும் மி...
- காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே? . . . . . . . . . . . . . .. . ....
- இப்படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன? How many cats?
- :)
- குட்டிக்கதை: சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இரு...
- "தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க /...
- லெட்ஸ் டேக் எ ...செல்பி புள்ள :P :P அந்த காலமே எம்.ஜி.ஆர் செல்பி எடுத்திருக்கார்...
- நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்ப...
- :)
- நகைச்சுவைக்காக மட்டுமே ....... ;-) ;-) ஒரு முறை சில விஷமத்தனமான மாணவர்கள் காலே...
- # ’தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ’ # பெயர்: கோதையம்மாள். வயது:75 க்கும் மேல்.....
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, அனைத்தும் மிக அழகாக தெரியல...
- இறால் ப்ரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y)
- "சிந்தனைகள்" • வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய். - கதே • சோம்...
- "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாத போது ஏற்படும் வலியை விட...
- நம்மால் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள்,பல ஏழைக் குழந்தைகளின் உயிர்த்துளிகள்......
- :)
- ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்...
- பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெரு...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடமையை கவனத்துடன் செய்வது, மனிதரின் பொறுப்பு.... அதற்கு பல...
- வளர்த்திட்ட மண்ணிற்கு நன்றி சொன்னது மரம் . பூ உதிர்த்து .. <3 - Kalimuthu
- :)
- எத்தனை பேருக்கு தெரியும்?? வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை...
- சூப்பர் பஞ்ச் .. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தை...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் உங்களை ஏமாற்றாது உங்களை விரும்பும் ஒருவரை நேசித்தால் !!!
Posted: 04 Nov 2014 09:40 AM PST |
Posted: 04 Nov 2014 09:30 AM PST |
Posted: 04 Nov 2014 09:10 AM PST தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத் - நறுமட்டு சோமாஸ் - பிறைமடி பப்ஸ் - புடைச்சி பன் - மெதுவன் ரோஸ்டு - முறுவல் லட்டு - கோளினி புரூட் சாலட் - பழக்கூட்டு... Relaxplzz |
Posted: 04 Nov 2014 09:00 AM PST உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..! ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம். எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது. ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும். வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும். உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம். ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும். உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு. ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள். நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள். ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது. தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது. டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள். நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே. ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 08:50 AM PST காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே? . . . . . . . . . . . . . .. . . . என் காதுலே காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்! :P :P Relaxplzz |
Posted: 04 Nov 2014 08:40 AM PST |
Posted: 04 Nov 2014 08:30 AM PST |
Posted: 04 Nov 2014 08:15 AM PST குட்டிக்கதை: சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும் " என்றான். மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது" சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான்.அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை. மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம் " வா , வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது. மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது.மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை. வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான். காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு , மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது. எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது. அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான். # நீதி : கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!! கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம். நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள். Relaxplzz |
Posted: 04 Nov 2014 07:50 AM PST "தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும். மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும். - கிரிதரன் மகாதேவன் |
Posted: 04 Nov 2014 07:40 AM PST |
Posted: 04 Nov 2014 07:30 AM PST நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு'விதி' அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா? முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது. 4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள். 5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்) 6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி. 7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939. 8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான். 10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன். இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது. 1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார். ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர். மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது. இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு 'விதி'யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா? Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 07:30 AM PST |
Posted: 04 Nov 2014 07:15 AM PST நகைச்சுவைக்காக மட்டுமே ....... ;-) ;-) ஒரு முறை சில விஷமத்தனமான மாணவர்கள் காலேஜ் நோட்டீஸ் போர்டில் இவ்வாறு எழுதி போட்டு விட்டார்கள் .... "50% மாணவிகள் முட்டாள்களாக உள்ளார்கள் " இதை பார்த்த மாணவிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள் ..உடனே காலேஜில் போராட்டம் நடத்த தொடங்கினார்கள் ......!! . . . . . . காலேஜ் கமிட்டி மெம்பெர்ஸ் சேர்ந்து விவாதித்து உடனே நோட்டீஸ் போர்டில் உள்ளஅந்த நோட்டீசை எடுத்து விட்டு வேறு புது நோட்டீஸ் போட்டனர்.. அதை படித்து விட்டு மாணவிகள் சமாதனம் அடைந்து போராட்டத்தை விலக்கி கொண்டனர் .. அந்தநோட்டீஸ் இதுதான் .... "50% மாணவிகள் முட்டாள்கள் இல்லை " நண்பிகளே நோ வன்முறை ப்ளீஸ் :P :P - Chitra Chari Relaxplzz |
Posted: 04 Nov 2014 07:00 AM PST # 'தன்மானச்சிங்கம் ' கோதையம்மாள் ' # பெயர்: கோதையம்மாள். வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..) ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்.. பிள்ளைகள்: தறுதலைகள்.. தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது.. சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500.. ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். ) எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்.. என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..) ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்.. ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம். அதனாலென்ன தன் மானம் இல்லாதவர்களுக்கெல்லாம் தன்மானச்சிங்கம் என 'பேனர்' வைக்கும் என் திரு நாட்டில் ,இவருக்கு பேனர் வைக்க என் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதான்..அதனால் என்ன... என் முகநூல் பக்கத்தில் மனதார பேனர் வைக்கிறேன்.. நீங்கள் முடிந்தால் 'share' செய்யுங்களேன்... "தன்மானச்சிங்கம் கோதையம்மாள்" Thanks : Ramesh Rama. Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 06:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, அனைத்தும் மிக அழகாக தெரியலாம்.. ஆனால், நெருங்கிப்பார்த்தால் தான் அதன் உண்மை விளங்கும்.. |
Posted: 04 Nov 2014 06:40 AM PST |
Posted: 04 Nov 2014 06:30 AM PST |
Posted: 04 Nov 2014 06:15 AM PST "சிந்தனைகள்" • வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய். - கதே • சோம்பலே தீமைக்கும், துன்பத்திற்கும் பிறப்பிடம். - அவ்வையார் • அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் மாறும். - கதே • நம்பிக்கை இழந்தவன் நடைபிணத்திற்குச் சமம். - ஜேம்ஸ் கார்பீல்டு • பரந்த உலகில் முயற்சிக்கும், திறமைக்கும் தான் முதலிடம். - ஐன்ஸ்டீன். Relaxplzz |
Posted: 04 Nov 2014 06:00 AM PST "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம். ''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.'' Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 05:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாத போது ஏற்படும் வலியை விட அவர்கள் மற்றவருடன் நெருக்காமாக பேசும் போது ஏற்படும் வலி அதிகம்...!!! |
Posted: 04 Nov 2014 05:40 AM PST |
Posted: 04 Nov 2014 05:30 AM PST |
Posted: 04 Nov 2014 05:15 AM PST ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.'' ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?'' 'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்' ''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?'' 'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும். :P :P #சிரிக்க_மட்டும் Relaxplzz |
Posted: 04 Nov 2014 05:00 AM PST பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…. Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 04:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடமையை கவனத்துடன் செய்வது, மனிதரின் பொறுப்பு.... அதற்கு பலன் தருவது, இறைவனின் பொறுப்பு... |
Posted: 04 Nov 2014 04:40 AM PST |
Posted: 04 Nov 2014 04:30 AM PST |
Posted: 04 Nov 2014 04:15 AM PST எத்தனை பேருக்கு தெரியும்?? வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை உட்கொண்டுவிட்டு செல்லவில்லை, அவர்களை வேலைக்கு கிளப்பிவிடும் தாயோ அல்லது மனைவியோ அதே போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் அடுக்களையில் நின்றுகொண்டே என்பது எத்தனை ஆண்களுக்கு தெரியும்... ? என் ஆசை எதையுமே என் தந்தை உடனடியாக நிறைவேற்றுவதில்லை, காலம் தாழ்த்தியே நிறைவேற்றி வைக்கிறார் என்று சொல்லும் எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும், தன் தந்தை தன்னுடையை ஆசைகளை புதைத்து விட்டுத்தான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார் என்று...? அசைவ வாடையே ஆகாது இருந்தும் மகனின் ஆசைக்காக அசைவம் எடுத்து சமைத்து தருகிறாள் தன் தாய் என்று எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்...? பிடிக்காத உணவை தந்தை ஊட்டிவிட, தந்தை ஊட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த உணவை உண்கிறோம் என்று எத்தனை தந்தைமார்களுக்கு தெரியும்...? சகோதரரின் கனவு நிறைவேற வேண்டும் என்று தன் கனவை தனக்குள் போட்டு புதைத்துக்கொள்ளும் சகோதரிகளின் கனவு எத்தனை சகோதரர்களுக்குத் தெரியும்...? தங்கையின் திருமனத்திற்காக பணம் சம்பாரிக்க வேண்டும் என்று தன் உறக்கத்தையும்,உணவையும் மறந்து உழைக்கிறார் என்பது எத்தனை தங்கைகளுக்கு தெரியும்...? தாத்தா பாட்டியிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து தெரியாது போல் நடிப்பது நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை கண்டு ரசிக்கத்தான் என்பது எத்தனை பேரப்பிள்ளைகளுக்கு தெரியும்...? இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இன்மைபாக இருக்கிறது. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டால் நமக்காக மற்றவர்கள் இழந்ததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். #நந்தமீனாள் Relaxplzz |
Posted: 04 Nov 2014 04:00 AM PST சூப்பர் பஞ்ச் .. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான். "அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?" Relaxplzz ![]() |
Posted: 04 Nov 2014 03:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் உங்களை ஏமாற்றாது உங்களை விரும்பும் ஒருவரை நேசித்தால் !!! |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment