ilovemynative: Facebook page wall posts in Tamil |
- படத்துல பேசுன வசனத்துக்கும் பாட்டுல சொன்ன தத்துவத்துக்கும்... முதலமைச்சர் ஆக்கணு...
- Do you know? Legend has it that once the great king Athiyaman gave an eternal g...
- மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் - ரஜினி. #வண்டலூரிலிருந்து புலிகள் ஓடிடுச்சா...
- கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் - ரஜினி. நாங்களும் கடவுள் விரும்பினால்...
- பனை எண்ணெய் பயங்கரம்! காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட...
- உண்ண உணவில்லாமல் வருந்தும் ஒருவருக்காவது உணவளித்துவிட்டு கண்ணாடியைப் பார்.... #...
- தமிழகத்தில் மட்டுமே ஓடும் தொடர்வண்டியில் எப்படியான இந்தித் திணிப்பு என்பதை பாருங...
- எது கலாச்சாரம் என்று தெரியாமலே பெண்களின் உடை குறித்து பேசுபவர்கள் எல்லாம், "திர...
- கோழிக்கோடு காபி ஷாப்பில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கங்கள...
- அழகு தமிழ்நாடு!
- திருநெல்வேலி அல்வா.
- இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???
Posted: 16 Nov 2014 09:33 PM PST படத்துல பேசுன வசனத்துக்கும் பாட்டுல சொன்ன தத்துவத்துக்கும்... முதலமைச்சர் ஆக்கணும்னா.... . . . . . வசனம் எழுதுனவனையும்.. கவிஞனையும் தான் முதலமைச்சர் ஆக்கணும்..... |
Posted: 16 Nov 2014 05:54 PM PST |
Do you know? Legend has it that once the great king Athiyaman gave an eternal g... Posted: 16 Nov 2014 05:20 PM PST Do you know? Legend has it that once the great king Athiyaman gave an eternal gooseberryNellikani fruit to Avvaiyar, this is a special and powerful fruit, whoever eats it will have a healthy and long life. Athiyaman wanted Avvaiyar to eat the eternal fruit as she was the right person who could serve the Tamil community. If she could live forever, so would the Tamil heritage and language. http://www.youtube.com/watch?v=pJnnU9THrg8 ![]() |
Posted: 16 Nov 2014 09:19 AM PST மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் - ரஜினி. #வண்டலூரிலிருந்து புலிகள் ஓடிடுச்சாம். நீங்க தான் ஹீரோ ஆச்சே... புடிச்சி கொடுங்களேன் -Prãkãšãm Pãzhãñí |
Posted: 16 Nov 2014 09:11 AM PST கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் - ரஜினி. நாங்களும் கடவுள் விரும்பினால் தியேட்டருக்கு வரோம்... @பூபதி |
Posted: 16 Nov 2014 05:56 AM PST பனை எண்ணெய் பயங்கரம்! காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம்களின் மென்மையான மேற்பரப்புக்காவும் பாம் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க மக்களின் மேக்கப் மோகம் பல மடங்கு அதிகரிக்க, (அந்த மோகத்தைத் தூண்டுவதும் இதே பன்னாட்டு நிறுவனங்கள்தான்!) பாம் ஆயிலின் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்தது. 'தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தான்... பனையை வெச்சவன் பார்த்துட்டு செத்தான்' என்பது, இரண்டு மரங்களும் வளர்வதற்கு ஆகும் காலத்தைச் சொல்லும் அட்டகாசப் பழமொழி. வளர்வதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பனைமரம், கொடுப்பது என்னவோ கொஞ்சூண்டு எண்ணெய்தான். 'அது எப்போ ஆயில் தந்து... நாம எப்போ காசு பார்த்து' என்கிற அவசரம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு. என்ன செய்வது என யோசித்தவர்கள் எடுத்த குரூரமான முடிவுதான், காடுகளை அழித்து பனைமரங்களை நடுவது. எங்கே காட்டை அழிப்பது? இந்தியா, ஜெர்மன் போன்ற இரண்டாம் நிலை நாடுகள் என்றால், எதிர்ப்பு இருக்கும். வறுமையும் கல்வியறிவும் குறைவான மூன்றாம் நிலை நாடுகள் என்றால் எந்த எதிர்ப்பும் இருக்காதே! இந்தோனேஷியா, மலேசியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற குட்டி நாடுகளை இந்தப் பன்னாட்டு கம்பெனிகள் குறிவைத்தன. சிறு வயதில் புவியியல் வகுப்பில் டிராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட்(Tropical rain forest) எனப் படித்திருப்போமே, இந்தத் தீவுகளில் அப்படிப்பட்ட காடுகள் நிறையவே உண்டு. இந்தக் காடுகளில் மழையும் அதிகமாக இருக்கும்; அதே அளவு வெயிலும் இருக்கும். வெப்பமும் குளிரும் கலந்திருப்பதால் நிறையப் புற்கள் முளைக்கும். எனவே மான்கள் இருக்கும். அதை வேட்டையாட புலிகள் இருக்கும். ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு ஸ்பெஷல் உயிரினம் இருப்பதைப்போல, இங்கே உராங்உட்டான் குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் காட்டை அழித்தால் வளர்வதற்கு குறைவான காலம் எடுத்துக்கொள்ளும், அதே சமயம் அதிக எண்ணெய் தரும் பனைமரங்களை நடலாம். அப்புறம் என்ன? காசு, பணம், துட்டு, மணி, மணி! அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாக டீல் போட்டு, 'உங்கள் நாட்டில் ஒரு பகுதி காட்டை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதில் விதவிதமான மரங்களுக்குப் பதில் பனைமரங்கள் நடப்போகிறோம்' என ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். எப்போ மரத்தை வெட்டி, எப்போ புது பனைமரங்கள் நட்டு, எப்போ காசு பார்ப்பது? அதனால் காடுகளை அழிக்க, சிம்பிளாக அவற்றுக்குத் தீவைத்துவிட்டார்கள். எந்தப் பக்கமும் போக முடியாமல் புலிகள், சுமத்ரன் நீர்யானைகள், ஆசிய யானைகள் போன்றவை தீயில் கருகி அலறிச் செத்தன. பறவைகள் கூச்சலோடு இடம்பெயர்ந்தன. இதுவரை 400 சுமத்ரன் புலிகளைக் காணவில்லை. இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. ஒரு பகுதியை எரித்து, பனை நடவு முடிந்தவுடன் அடுத்த பகுதி. இப்போது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கே கரும் புகையைக் கக்கியபடி, மரண ஓலத்துடன் காடு எரிந்துகொண்டிருக்கும். உலகில் ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட எட்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான காடுகள், தினமும் அழிக்கப்பட்டுவருகின்றன என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு கவலையோடு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எரிக்கப்படும் காடுகளால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை சரசரவென சரிபாதியாகக் குறைந்துவிட்டது. 'உராங்உட்டான்' என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும். பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி. International union for the conservation of Nature and natural resources என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் ஒவ்வொரு வருடமும் 'ரெட் புக்' என்ற பட்டியலை வெளியிடுகின்றனர். அதில் '55 ஆயிரம் போர்னியோ உராங்உட்டான் உள்ளன. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமத்ரன் தீவு உராங்உட்டான் மொத்தமே 6,300-தான் இருக்கின்றன. அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது' என்கிறது. காடுகள்தானே அழிகின்றன என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இப்படி வருடம் முழுவதும் எரிக்கப்படும் காடுகளால் 35 மில்லியன் டன் கார்பன் வெளியாகி, கடந்த 10 ஆண்டுகளில் குளோபல் வார்மிங் 20 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. இப்படி ஓர் அழிப்பு வேலை வெளியே தெரியவந்து அதிர்ச்சி அலை ஏற்படுத்த, பல தன்னார்வ நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராட ஆரம்பித்திருக்கின்றன. அதுபோன்ற ஓர் அமைப்புதான் Roundtable on Sustainable Palm Oil (RSPO). 'இன்றைய தினசரி வாழ்க்கையில் இருந்து பாம் ஆயில் பயன்பாடுகொண்ட பொருட்களை நீக்குவது என்பது ரொம்பவே கஷ்டம். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் பாம் ஆயிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம், காடுகளை அழித்தே எடுக்கப்படுகிறது. இதில் மக்களைக் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. 'காடுகளை அழித்து பனைமரங்களை நடுவதற்குப் பதிலாக, இயல்பாக பனை மரங்கள் வளர்க்க முடிந்த இடங்களில் வளர்த்து அதைப் பயன்படுத்துங்கள்' என, பன்னாட்டு நிறுவனங்களை வலியுறுத்துகிறோம். இதில் மக்கள் தங்கள் பங்காக கடையில் வாங்கும் பொருட்களில் எங்கள் முத்திரையான Certified Sustainable Palm Oil(CSPO) அல்லது green palm முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். அப்படி நாங்கள் முத்திரை கொடுத்திருக்கும் பொருட்கள், காடுகளை அழிக்காமல் பாம் ஆயில் எடுத்துப் பயன்படுத்தியது என அர்த்தம். அப்படி எந்த முத்திரையும் இல்லையென்றால், அதன் தயாரிப்பாளரிடம் நீங்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. காடுகளை அழிக்காமல் நல்ல முறையில் உருவாக்கப்படும் பாம் ஆயிலினால் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியல், இணையதளத்திலும் கிடைக்கிறது. நமது பங்காக அதை வாங்க ஆரம்பித்தாலே மற்ற கம்பெனிகள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்' என்கிறார்கள். அடுத்த முறை லிப்ஸ்டிக் பூசும்போது லேசாகச் சுவைத்துப் பாருங்கள். உராங்உட்டான் குரங்கின் ரத்தப் பிசுபிசுப்பை உணரலாம்! - ந.கீர்த்தனா, ஓவியம்: ஹாசிப்கான் ![]() |
Posted: 16 Nov 2014 05:42 AM PST உண்ண உணவில்லாமல் வருந்தும் ஒருவருக்காவது உணவளித்துவிட்டு கண்ணாடியைப் பார்.... #கடவுள் தெரிவார்!! @காளிமுத்து |
Posted: 16 Nov 2014 03:25 AM PST தமிழகத்தில் மட்டுமே ஓடும் தொடர்வண்டியில் எப்படியான இந்தித் திணிப்பு என்பதை பாருங்கள் ! படம் க : விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்தில் இந்தித் திணிப்பு பலகை. அதாவது தமிழர்கள் தினம் ஒரு இந்தி சொல்லை கற்க வேண்டுமாம். ஏன் தமிழர்கள் தினம் ஒரு திருக்குறளை கற்கக் கூடாதா ? அதற்கான ஒரு திருக்குறள் பலகையை ஏன் தொடர்வண்டி துறை வைப்பதில்லை ? அடுத்து அலுவலகர் பெயர் பலகையில் தமிழ் இல்லை என்பதை பாருங்கள். படம் ௨ : தொடர்வண்டியில் தீ விபத்து, பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது. தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கருதுகிறது இந்தி தொடர்வண்டித் துறை. படம் ௩ : சென்னை தஞ்சாவூர் இடையே ஓடும் தொடர்வண்டிக்கு ஏன் இந்தியில் பெயர் பலகை ? ஏன் பயணிகள் பெயர்பட்டியல் இந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது ? படம் ௪ : கழிவறை சுகாதாரமான முறையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தியில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதினால் தமிழர்களுக்கு புரிய வேண்டாமா ? ஏன் தமிழில் அந்த செய்தியை எழுதவில்லை ? படம் ௫ : தொடர்வண்டியில் வழங்கப்படும் போர்வையில் கூட இந்தி எழுதுருவும் எண்ணுருவும். இந்தியை வளர்க்கிறார்களாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழுக்கும் தொடர்வண்டியில் இடமளிக்க வேண்டும் என்று தொடர்வண்டித் துறைக்கு நாம் கோரிக்கை வைத்தும் இதற்கு இந்த நாள் வரை எந்த பதிலும் கொடுக்காமல் தட்டிக் கழித்து வருகிறது தொடர்வண்டித்துறை ![]() |
Posted: 16 Nov 2014 02:51 AM PST எது கலாச்சாரம் என்று தெரியாமலே பெண்களின் உடை குறித்து பேசுபவர்கள் எல்லாம், "திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் வரும் போது கண்களை மூடிக்கொள்வார்கள் என்று .நம்புவோம்.......?" @நல்ல சிவம் |
Posted: 16 Nov 2014 01:24 AM PST |
Posted: 16 Nov 2014 01:23 AM PST |
Posted: 16 Nov 2014 01:10 AM PST ![]() Aathichoodi (ஆத்திசூடி) Do you know? The medievaal period Avvaiyar was the court poet of the Chola monarch and was the contemporary of Kambar and Ottakkuttar. She found great happiness in the life of small children. Her works, Aathichoodi and Konraiventhan written for young children, are even now generally read and enjoyed by them. Her two other works, Mooturai and Nalvali were written for older children. All the four works are didactic in character – they explain the basic wisdom that should govern mundane life. http://www.youtube.com/watch?v=3WaCp9BQq1s A collection of single-line quotations written by Avvaiyar and organized in alphabetical order. There are 108 of these sacred lines. It teaches good habits,discipline and good works for all.CLICK HERE FOR PLAYLIST (Avvaiyar Aathichchudi Kathaigal) : http://www.youtube.com/watch?v=MF9AXO |
Posted: 16 Nov 2014 12:59 AM PST கோழிக்கோடு காபி ஷாப்பில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கங்கள் அங்கிருந்த இளைஞர்கள் மேல் நடத்திய வன்முறைதான் Back fire ஆகி, #KissOfLove என உருவெடுத்தது. ஏதோ வேண்டுமென்றே இந்த 'போராட்டம்' நடத்தப்படுவதாக நிறுவ முயல்கிறார்கள் நம்மூர் கலாச்சார காவலர்கள். மேலும் இவர்களின் கண்டன(!)க் குரல்களில் வக்கிர, சிற்றின்ப, கிளுகிளுப்பை தாண்டி எதுவும் அகப்படவில்லை. இந்த 'போராட்ட' முறை சரியா தவறா என்ற கேள்விக்கு வரவில்லை. ஆனால் நீங்கள் கூப்பாடு போடும் அளவுக்குலாம் வொர்த்தான விஷயம் இல்லை இது என்பதே என் கருத்து. மேலும் நீங்கள் எதிர்க்க எதிர்க்கத்தான் ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை என பரவிக்கொண்டிருக்கிறது. • இந்தியாவில் ஒரு கணவன் தன் மனைவியை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவது தண்டனைக்குரிய குற்றமில்லை. • 20% இந்திய கணவன்கள் தன் மனைவியை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவதாக ஒப்புக்கொள்கிறார்கள். • பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பெரும்பான்மை கணவனால் நடத்தப்படுவதே. • 38% ஆண்கள் தங்கள் மனைவியை வன்முறைக்குள்ளாக்குவதாக ஒப்புக்கொள்கிறார்கள். • International Men and Gender Equality Survey (IMAGES) நடத்திய சர்வேயில் 24% ஆண்கள் தங்கள் வாழ்நாளின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பாலியல் சீண்டல், வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். • 65% இந்திய குடிமகன்கள் தங்களது குடும்ப பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையை, குடும்பம் என்ற அமைப்புக்காக பொறுத்துக்கொள்ள வேண்டுமென கருதுகிறார்கள். • ஒட்டுமொத்த பாலியல் குற்றங்களில் 70% குற்றங்கள் தன் குடும்ப உறுப்பினர்களாலேயே பெண்கள் மேல் நடத்தப்படுகிறது. (Courtesy: NCRB. (National Crime Records Bureau), Wikipedia) பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையில்தான் இந்த கணக்கு. நம் நாட்டில் பதிவு செய்யப்படும் குற்றங்களின் விகிதம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை குறிப்பிடத்தேவையில்லை. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல், ஆசிட் வீச்சு, வரதட்சணை கொடுமை & கொலைகள், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், கௌரவ கொலைகள் என நாம் பேச நெறய இருக்கு. இதெல்லாம்தான் தேசத்தின் தலையாய பிரச்சனைகள். நீங்க சொல்ற கலாச்சாரத்துக்கு இழுக்கு. கலாச்சாரக் காவலனாகவோ, குடிமகனாகவோ, சக மனிதனாகவோ நாம் கவலைப்படக்கூடிய விஷயங்கள். வெட்கப்படக்கூடியதும் கூட. @பிரபல எழுத்தாளர் ![]() |
அழகு தமிழ்நாடு! Posted: 15 Nov 2014 11:15 PM PST |
Posted: 15 Nov 2014 10:20 PM PST |
Posted: 15 Nov 2014 09:54 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |