Relax Please: FB page daily Posts |
- கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள் குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில்...
- படித்தால் மட்டும் போதாது படித்ததின் பிரயோகங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையை செம்மை பட...
- அப்போல்லாம் பள்ளிக்கூடக்காலத்துல வாத்தியார் வரலைன்னா எங்களுக்கு பொழுதுபோக்கு நிற...
- ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம...
- தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தூய்...
- 'கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்'- இந்த ஒரு,'பஞ்ச்' 'டயலாக்'கில் மட்டும்...
- ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் அவனுடைய நாக்கைச்சார்ந்தே உள்ளது.
- படித்ததில் பிடித்தது... பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்த...
- தமிழன் ! விடியற்காலை, பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ... ஏர் பூட்டி உழுது...
- சின்ன வயசு கிரிக்கட் விதிகள்: 1. நாணயசுழற்சியில் வெற்றி பெறுவது முதலில் Batting...
- நம் பாரம்பரிய அறிவை திருடி அதை நமக்கே விற்கும் பன்னாட்டு நிறுவனம் ! இன்று காலை...
- புதுப் பழமொழிகள் 1. எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்... 2. ஊர் செல்லுக்...
- ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...
- "உனக்கு என்னமா வாங்கிட்டு வர"... "எதாச்சும் நீங்களா பார்த்து வாங்கிட்டு வாங்க.....
- மனித மூளையும் அதன் செயல்திறனும். 1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நி...
- # மகளெனும் தேவதை # உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்...
- :)
- இளைய சமூகமே !! இதயத்தைக் கடன்கொடு ஈரமாக்கித் தருகிறேன் !! கண்ணிலென்ன ஈரம் காற்...
- "தாயுமானவன் என் தந்தை" 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில்...
- மொபைல் போன் உபயோக அறிவுரை...! 1..முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவல...
- தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் <3
- :) Relaxplzz
- #படித்ததில்_நெஞ்சைத்_தொட்டது!! ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக...
- ஒரு ஆணின் உடலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவன் பிணமாவான்!, ஒரு பெண் ஒருத்தி...
- அன்று 20 பைசாவுக்கு கடலைமிட்டாயும், 10 பைசாவுக்கு தேன்மிட்டாயும், 5 பைசாவுக்கு ப...
- :)
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் :- இரத்தத்தில் உள...
- கண்ணுக்குள் இருக்கும் கருவிழி கருப்பு, கண்ணை பாதுகாக்கும் இமைமுடி கருப்பு,! இரவ...
- பிரியம் என்பது புரிதல் தானே <3 - Geeta Ilangovan.
Posted: 16 Nov 2014 09:14 AM PST கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள் குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தம்பதி களின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே குறித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், அவை கருவுறும் திறனை மேம்படுத் தும். குளிர்ச்சியான சூழல் ----------------------------- ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சியான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப் பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்துக்களின் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்டநேரம், வெந்நீரில் குளிப்ப தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்நீரில் குளித்தவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மடங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப்பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர்த்து, தொளதொள வென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளை அணிய வேண்டும். சூரிய வெளிச்சத்தில் குளிக்கவும் ----------------------------------------------- சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார் மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் ----------------------------------------------- பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன. பால் பொருட்களை சாப்பிடவும் ---------------------------------------------- முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்க ப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட் டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன. மல்டி வைட்டமின் மாத்திரைகள் ------------------------------------------------ கருவுறுதலுக்குத் தேவை யான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவைஅடங்கிய மல்டி வைட்ட மின் மருந்து மாத்திரைகளை தினமும் உட் கொள்வதால், கருவுறும் திறன் இரண்டு மடங்கு அதிகமாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதை நிறுத்தவும் ------------------------------------------ புகைப்பிடிக்கும் ஆண்கள் மலட் டுத்தன்மை அடைய 50% வாய்ப் பு உள்ளது. மேலும் அவர்களது உயிரணு எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருக்கும். புகைப்பிடிக்கும் பெண்க ள் புகைப்பிடிக்காத பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர். ஏனெனில் புகைப்பது, கருப்பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது. மது அருந்தும் முன் யோசிக்கவும் ------------------------------------------------- குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிகளவு மது அருந்துவது கருமுட்டை உற்பத்தியையு ம், விந்தணு உற்பத்தியையு ம் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்டறியப்பட் டுள்ளது. மென்பொருட்கள் --------------------------- தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நாட்காட்டி, கருத்தரிக்க வழிகாட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உடல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதியில், தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொ ருட்களைப் பயன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது. அக்குபஞ்சர் முறைகள் --------------------------------- உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அக்குபஞ்சர் முறைகளை பயன்படுத்துங்கள். அது முட்டை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதாகவும், கருப்பைக்கு போகும் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது. அதனால், கருத்தரித்த முட்டைகள், கருப்பையில் சென்று தங்கும், வாய்ப்பை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது. தாம்பத்திய உறவு ------------------------- வாரத்தில் ஒரு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியருக்கு கருவுறும் வாய்ப்பு 15% அதிகரிப்பதாகவும், அதுவே வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியர்க்கு கருவுறும் வாய்ப்பு 50 % அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாம்பத்திய உறவானது ஆண் உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆண்களின் உயிரணுக்களானது மூன்று நாட்களுக்கு மேல் உடலிலேயே தங்கியிருந்தால், அதன் தரம் குறைகிறதாம். ஓவுலேசன் கால்குலேட்டர் --------------------------------------- பெண்களது மாதவிலக்கு சுழற்சியின் அடிப்படையில், குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளுங்கள். சராசரியாக 28 நாள்கள் மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு, 10 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள் வரையான காலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களாகும். இத்தகையநாட்களின் கணக்கீட்டை ஓவுலேசன் கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் உறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம். எடையைக் குறைக்கவும் ------------------------------------ உடல் கொழுப்பானது ஈஸ்டிரோஜென் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்கி றது. இது கருமுட்டை உற்பத்தி முறையை குழப்பிவிடும். குறைந்த எடை உடைய பெண்களை விட அதிக எடையுள்ள பெண்கள் சீரற்ற மாதவிலக்கு சுழற்சியைக் கொண்டிருப்பார்கள். என வே எடையை 5% குறைத்தால், அது கருவுறும் திறனை 20% அதிகரிக்கும். மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டாம் --------------------------------------------------------- எடையைக் குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடந்து ஒல்லியாக ஆகி விடக்கூடாது. மேலும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் நன்கு சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பற்றுடன் இருக்க முயல வேண்டும். ஏனெனில், கருவுறு தலுக்கும் கருவுற்ற பின், சிசுவைப் பாதுகாக்கவும் கொழுப்பு தேவை. அத்தகைய கொழுப்பு தேவையை விடக் குறைவான அளவுஇருக்குமேயானால், அது கருவுறும் வாய்ப்பை அடைத்து விடும். கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்கவும் -------------------------------------------------------------------- அதிகளவு கார்போஹைட்ரேட் கொண்டுள்ள உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பிஸ்கட்டுகள் ஆகியவை கருத்தரித்தலைப் பாதிக்கின்றன என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். இவ்வுணவுப் பொரு ட்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டி, அதன் காரணமாக இன்சுலின் தேவையை அதிகரிக்கச் செய்து விடுகின்றன. அதிகமான இன்சுலின் கருவுறுதலைப் பாதிக்கலாம். போதை மருந்துகளைத் தவிர்க்கவும் ----------------------------------------------------- கொக்கைன், மரிஜுவானா போன்ற போதை மருந்துகள் ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கையைக் குறைக்கின்றன. இயல்பு மீறிய உயிரணுக்களை உற்பத்தி செய்கின்றன. பெண்களுக்கு கருமுட்டைப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. மீன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் ------------------------------------------------------- எண்ணெய்நிறைந்த மீனான சால்மன் மற்றும் ஆளி விதையில் காணப்படும், ஒமேகா 3s கொழுப்பானது, கருச்சிதைவிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும், ஆண்களுக்கான உயிரணுவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமா ன ஹார்மோன் செயல்பாட்டிற்கு, இக் கொழுப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் பலர் இதைப் போதிய அளவு எடுத்துக் கொள்வதில்லை. காபியைக் குறைக்கவும் ----------------------------------- ஒரு நாளைக்கு ஒரே ஒரு காபி அருந்துவது கருவுறும் திறனைப் பாதியாகக் குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன. காபியிலுள்ள காஃப்பைன், சினைப்பைகளிலிருந்து கருப்பைக்கு கருமுட்டைகளை எடுத்துச் செல்லும் வழி யான ஃபெலோப்பியன் குழாய் த் தசைகளின் செயல்பாட்டைக் குறைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வலி நிவாரணி மருந்துகளைக் குறைக்கவும் ---------------------------------------------------------------- கருமுட்டை உற்பத்தியாகும் தருணங்களில், மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பாராசிட்டமல், ஆஸ்பி ரின் போன்றவற்றினை வாங்கி உட் கொள்ளுதல், கருவுறுதலைப் பாதிக்கும். ஏனெனில் அது ஃபெலோப்பியன் குழாய்களிலிருந்து கருமுட்டைகளை விடுவிக்க உதவும் ஹார்மோனான, ப்ரோஸ்டாகிளாண்டினை மட்டுப்படுத்திவிடும். அதிகம் தண்ணீர் குடிக்கவும் ---------------------------------------- உடலின் முக்கிய பாகங்களுக்குத் தேவையான தண்ணீர் செல்கிறதா என்று உடல் கவனிக்கும். எனவே பெண்கள் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், இனப்பெருக்க மண்டலம் தனது பணியை சரிவர செய்யாமல் இருந்துவிடும். மேலும் கருமுட்டைக்கும், கருப்பையைச் சுற்றிலும், அதிக அளவு இரத்த ஓட்டத்தை தண்ணீர் தான் உருவாக்கும். ஆனால் உடலில்போதியஅளவு தண்ணீர் இல்லையெனில், ஆண் உயிரணுக்கள் மிதந்து சென்று கருமுட்டையை அடைய பயணிக்க உதவும், செர்விக் திரவம், செயலற்றதாகி விடும். வீட்டு வேலைகளைச் செய்யவும் ------------------------------------------------- வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் அல்லது சிறு சிறு உடற்பயிற்சிகள் ஆகியவற்றைச்செய்து கொண்டேயிருக்கும் பெண்கள், ஒரு உடல் உழைப்பும் இல்லாத பெண்களை விட, IVF மூலம் கருத்தரிப்பதற்கு, மூன் று மடங்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் என்று புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. ஏனெனில், உடற்பயிற்சியின் விளைவாக அதிகமான இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகமான இன்சுலின் சுரப்பது ஆரோக்கியமான கரு முட்டைகள் உருவாவதற்குக் கேடுவிளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. Relaxplzz ![]() "இனிய இல்லறம்" |
Posted: 16 Nov 2014 09:00 AM PST |
Posted: 16 Nov 2014 08:41 AM PST அப்போல்லாம் பள்ளிக்கூடக்காலத்துல வாத்தியார் வரலைன்னா எங்களுக்கு பொழுதுபோக்கு நிறைய. வெள்ளைத்தாள்ல இங்க்கை கன்னாபின்னானுதெளிச்சி அந்த தாளை அப்படியே ரெண்டாமடக்குவோம். கொஞ்சநேரங்கழிச்சி பிரிச்சிப்பாத்தா, அதுல செம்மையா ஒரு படம்வந்திருக்கும். எங்கவூரு மகமாயி, மாதா, சிலுவை, வித்தியாசமானவிலங்கு.. இப்படி எதாச்சும் வந்திருக்கும். (இதுபத்தி மேசாக்காகூட ஒரு உளவியல்கட்டுரையெழுதுனநெனப்பு) இதுமாதிரிவிளையாடுற பசங்களுமுண்டு. பொம்பளப்பசங்ககூடசேர்ந்து ஒடஞ்சிபோனவளையலையெல்லாம்வச்சி "டிக்ளேர்"ஆடுற பசங்களுமுண்டு. அப்புறம், தாள்லயே கூர்ராக்கெட்செய்யுறது, கேமராசெய்யுறது, முட்டைதட்டுசெய்யுறது, திருடன்போலீஸ்விளையாடுறது.. இப்படி எக்கச்சக்கவெளையாட்டுங்க.. அதுல அடுத்ததா இந்தப்பூவைப்பறிக்குறதுதான். கிட்டதட்ட அனிச்சமலர்மாதிரியேயிருக்குற இதுக்கு சரியானபெயர் தெரியல. ஆனா நாங்கவச்சபெயர், அச்சுப்பூ. பெயர்க்காரணஞ்சொல்றேன். இதை பறிச்சி என்னாசெய்வோம்னா, நோட்டுப்புஸ்தகத்துல நிறையபக்கங்கள்ல அப்படியே அழகா வச்சிடுவோம். ஒரு நாலஞ்சிநாள்கழிச்சிப்பார்த்தா, இந்தப்பூ அப்படியே பதிஞ்சிருக்கும். அவ்வளோ அழகாயிருக்கும். சிலபேரு என்னாபண்ணுவோம்னா, இதாலயே புஸ்தகத்தோட ரெண்டாவதுபக்கத்துல இனிஷியல்போட்டுப்போம். வயசு ஏறயேற விளையாட்டுங்களும் மாறிப்போகும். ஆனா, ஒன்னாவது ரெண்டாவதுலவிளையாடின இதுமாதிரிவிளையாட்டுங்களை மறக்கவேமுடியாது. வாய்ப்புகிடைச்சா ஒருமுறையாச்சும் நீங்கபடிச்சபள்ளிக்கூடத்துக்கு போய்ட்டுவாங்க. நிச்ரயமா நிறையமாற்றங்களிருக்கும். நாம்படிச்சபள்ளிக்கூடமே எவ்வளவோமாற்றங்களோடதானிருக்கு. பள்ளிப்படிப்புமுடிஞ்சி பதினாறுவருஷமாகிட்டாலும், அப்பப்போ பள்ளிக்கூடமே எங்களுக்கு விளையாட்டுத்திடல்ன்றதால எங்க பள்ளிக்கூடத்தோட ஒவ்வொருமாறுதலையும் அனுபவிச்சிருக்கேன். ஆனா, பலருக்கு இந்த வாய்ப்புகிடைக்காது. அதனால, ஒருமுறையாவதுபோய்ட்டுவாங்க. அப்போ, உங்களோட பால்யகாலத்தை அசைபோடவைக்குற ஏதோவொன்னு காலமாற்றத்தை சந்திக்காம அப்படியே உங்களுக்காகக்காத்திருக்கும். அது.... நீங்க நிழல்லவுட்கார்ந்துபடிச்ச வேப்பமரமாகவோ வரிசையிலநின்னு சோறுவாங்குன இடமாகவோ, ஏன், இந்தமாதிரி சின்னப்பூபூக்குற இண்டு இடுக்காகவோகூட இருக்கலாம். இது இந்தப்பூமாதிரி சின்னப்பதிவுதான். ஆனா, இதை உங்ககூடபகிர்ந்துகிட்டதுல ரொம்பசந்தோஷம். :) :) - ஃபீனிக்ஸ் பாலா ![]() "அனுபவம்ஸ்" |
Posted: 16 Nov 2014 08:11 AM PST ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. 'என்னப்பா பண்ண லாம்?'னு கேட்டார். 'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்'னான். பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?'னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு. 'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!'னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்! நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!! Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 16 Nov 2014 07:50 AM PST தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பிரபலங்கள் முன்வந்து தங்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்று மோடி முதல் தமிழிசை வரை தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. கமல்ஹாசனும் ஹேமமாலினியும் அவர்களைப் போன்ற பிரபலங்களும் ஒருநாள் இரண்டு நாள் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு கூட்டிப் பெருக்க வருவார்கள். ஆனால் இது தொடருமா? இப்படிப் பிரபலங்களுக்குப் பின்னால் அலைவதை விட்டுவிட்டு உள்ளூர் பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் உட்பட ஒவ்வொருவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே தெருவும் ஊரும் நாடும் சுத்தமாகிவிடுமே..! அதை ஊக்கப்படுத்தலாமே...! via - சிராஜுல்ஹஸன் Relaxplzz ![]() |
Posted: 16 Nov 2014 07:40 AM PST 'கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்'- இந்த ஒரு,'பஞ்ச்' 'டயலாக்'கில் மட்டும்தான்.. சறுக்குறீங்க, ரஜினி..! - Michael Amalraj |
Posted: 16 Nov 2014 07:35 AM PST |
Posted: 16 Nov 2014 07:35 AM PST |
Posted: 16 Nov 2014 07:15 AM PST படித்ததில் பிடித்தது... பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். "தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான். "சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்" "தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு" "ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு" "என்ன?" "மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??" -நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ? ;-) ;-) Relaxplzz |
Posted: 16 Nov 2014 06:44 AM PST தமிழன் ! விடியற்காலை, பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ... ஏர் பூட்டி உழுது வரும் உழவன் நல்ல தமிழனடா விழாக்காலங்களில், பொங்கல் வச்சு படைக்க, பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ... காப்பு கட்டி, மஞ்சள் வேட்டி கட்டி கோயில் வேலைகளை எடுத்து செய்பவன் நல்ல தமிழனடா மஞ்சு விரட்டன்று கண்ணாடி வளையல், வெள்ளி கொலுசு, மல்லிகை பூ, காதுல ஜிமிக்கி, கழுத்தில் முத்துமாலை, தாவணி அணிந்து, காத்திருக்கும் கன்னி பெண்கள் இருக்க ... காளைகளை அடக்கி வீரத்திருமகனாக வருபவர் நல்ல தமிழனடா வீட்டிர்க்கு வருகின்ற அனைவருக்கும் சுவையான சமையல் செய்து, வாழை இலையில் பரிமாறி, நவரசமாக பேசும் பெண்மணிகள் இருக்க ... கறைப்படாத வெள்ள வேட்டி கட்டி அன்பு மழை காட்டி வருபவர் நல்ல தமிழனடா - கண்ணன் Relaxplzz ![]() "தமிழ் - தமிழர் பெருமை" - 1 |
Posted: 16 Nov 2014 06:15 AM PST சின்ன வயசு கிரிக்கட் விதிகள்: 1. நாணயசுழற்சியில் வெற்றி பெறுவது முதலில் Batting செய்வதற்கே. 2. மரத்தில் பட்டு பிடித்தால் அவுட். 3. வெற்றி பெறும் அணி அடுத்த மேட்ச்சில் Batting செய்யும். 4. பந்தை அடுத்த வளவிற்குள் அடித்தால் அவுட் என்பதோடு அடித்தவரே எடுத்துவர வேண்டும். 5. பந்து வீச்சாளரின் உடல் பலத்தை பொறுத்தே Noball தீர்மானிக்கப்படும். 6. Opening Batting செய்தவர் First Over போட முடியாது. 7. ஜன்னலில் பட்டால் அவுட். 8. இருட்டியதும் Fast Bowl போட முடியாது. 9. முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl. 10. Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக அனுப்பப் படுவார். Relaxplzz |
Posted: 16 Nov 2014 05:50 AM PST நம் பாரம்பரிய அறிவை திருடி அதை நமக்கே விற்கும் பன்னாட்டு நிறுவனம் ! இன்று காலை பலசரக்கு கடைக்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோது பையில் பல் துலக்கும் ப்ரஷ் ஒன்று இருந்தது, நான் தான் இரண்டு ப்ரஷ் கேட்டிருந்தேன், ஆனால் இவைகளை எடுத்து பார்த்த போது யாரோ தலைக்கு டை அடித்து விட்டு போட்ட - அல்லது சலூன்களில் பார்த்த ப்ரஷ்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது, உடன் கடைக்காரரை தொலைபேசியில் அழைத்து கேட்ட போது - 'இது நயம் ப்ரஷ் தான் என்றார்'. ப்ரஷின் அட்டையில் கரித்துண்டு (மரக் கரி) அடங்கியது என்று அச்சிடப்பட்டிருந்தது. எங்கள் கிராமத்தில் உப்பு, நுணுக்கிய கரித்துண்டு, சாம்பல், செங்கப்பொடி வைத்து தான் பல்துலக்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பெரு முதலாளிகள் நமக்கு உப்பின் மகிமையை உணர்த்திவிட்டார்கள்.. அடுத்து கரித்துண்டிருக்கு நகர்ந்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வரும் காலத்தில் சாம்பல் பிரஷ், செங்கல் கலர் பிரஷ் எல்லாம் வரும், " நம் பாரம்பரிய அறிவை நம்மிடன் திருடி, நமக்கே விற்பது"என்று பன்பாட்டு அறிஞர் தொ.பரமசிவம் அடிக்கடி கூறும் வரிகள் தான் மனதில் வந்து நிலைகொண்டது - முத்துக்கிருஷ்ணன் Relaxplzz ![]() |
Posted: 16 Nov 2014 04:15 AM PST புதுப் பழமொழிகள் 1. எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்... 2. ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்... 3. ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்... 4. ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்... 5. கார் ஓட டயரும் தேயும்... 6. சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு... 7. சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை... 8. தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்... 9. தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்... 10. பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல... 11. மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்... 12. முடியுள்ள போதே சீவிக்கொள்... 13. மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி... தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி... 14. ஹெல்மெட் இல்லாதவன் பின்னே... எமன் வருவான் முன்னே... Relaxplzz |
Posted: 16 Nov 2014 03:15 AM PST ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...! இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!! இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்.., அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...??? "இரண்டாம்தாரம்"...!!!??? நல்ல சமுதாயம்..!!! ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே... சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக் கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!! - Nancy Jeyakumar Relaxplzz |
Posted: 16 Nov 2014 02:15 AM PST "உனக்கு என்னமா வாங்கிட்டு வர"... "எதாச்சும் நீங்களா பார்த்து வாங்கிட்டு வாங்க..." "எதாச்சும்ன்னா...??" "அதான் எனக்குப் புடிச்சதைப் பார்த்து நீங்களா எதாச்சும் வாங்கிட்டு வாங்க..." "உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லு... வாங்கிட்டு வாரேன்..." "எனக்கு என்ன பிடிக்கும்ன்னு கூட உங்களுக்குத் தெரியல..." "எனக்குப் பிடிச்சதா பார்த்து நீங்களா வாங்கிட்டு வாங்க... இல்லைன்னா எனக்கு ஒன்னும் வேணாம்..." -இப்பலாம் அடிக்கடி சன்யாசம் போகிறலாம்ன்னு தோணுது... :O :O - சதீஷ் குமார் தேவகோட்டை Relaxplzz |
Posted: 16 Nov 2014 02:15 AM PST மனித மூளையும் அதன் செயல்திறனும். 1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும். 3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை. 4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது. 5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது. 6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும். 7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும். 8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும். 9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள். 10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம். 11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு. 12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபகபடுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும். 13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்க முடியும். 14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot)வாய்ப்புகள் அதிகம். Relaxplzz |
Posted: 16 Nov 2014 12:53 AM PST # மகளெனும் தேவதை # உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!! உன் உளறல்கள் ஒவ்வொருன்றும் கவிதை !! நீ இறைவனின் மொழிப் பேசும் இறைவன் !! உன் எச்சில் துளி தேன் துளி !! உன் நடையில் ராணுவப் படையும் தவிடுபொடி !!! உன் பொம்மைத் துப்பாக்கி அணுகுண்டுகளை விஞ்சும் !! உன் அழுகை மேகத்தை மிஞ்சும் !! மரங்களில் ஏறும் பாம்பைப் போல ஏறுகிறாய் என் மேல் !! கதவருகே ஒளிந்து கொண்டு தேட வைக்கிறாய் !!! ஊருக்காக உதட்டு புன்னகையை உடுத்தி திரிபவர்கள் நாங்கள் !!! நியோ உளமாற சிரிக்கிறாய் உண்மையாய் அழுகிறாய் !! தவறி விழுகிறாய் தாய்க்கண்டு அழுகிறாய் தானே எழுகிறாய் !! உன் தூக்கம் உலகின் இரவு !!! உன் விழிப்பு உலகின் பகல் !! உன் வாசனைக்கு உலக வாசனைத் திரவியங்கள் ஒரு பொருட்டே அல்ல !! உன் பாதச்சுவடுகள் அழியாதபடிக்கு என் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றன ..... # மகளெனும் தேவதை # - கமல் ![]() # மகளெனும் தேவதை # |
Posted: 16 Nov 2014 12:30 AM PST |
Posted: 15 Nov 2014 11:55 PM PST இளைய சமூகமே !! இதயத்தைக் கடன்கொடு ஈரமாக்கித் தருகிறேன் !! கண்ணிலென்ன ஈரம் காற்றுக்கேது தூரம் ? இரவுகள் கருப்பானதற்கு யார்தான் பொறுப்பு -அது இயற்க்கையின் சிறப்பு . இருட்டுக்கு இனி டார்ச்லைட் கேட்காதே... இருகண்களின் ஒளிபோதும் இகத்தை ஒளிமயமாக்கு .. முயலாக இருந்தாலும் முயலாமல் இருந்தால் தோல்வி நிச்சயம் ; ஆமைகள் காத்திருக்கின்றன !.. சிகரத்தின் பாதையில் சிக்கல்களின் வாதையில் சிறிதும் பதறாதே ; வாதையில்லா பாதை வாழ்க்கை பாதை ; முன்பே வாழ்ந்தவர் பாதை !! .. மயிலிறகு பட்டு மாய்ந்தவர் யார் ?.. சிறு நிழல் தடுக்குமா சூரியச் சூட்டை?. காம்புக்கு வலிக்காமல் பூப்பறிப்பது எப்படி பூவுக்குத் தெரியாமல் தேனெடுப்பது எப்படி ?.. காலுக்கு முள் காத்திருக்கிறது செருப்பு சுமையென்போர்க்கு. சலவைக்குக் சம்மதிக்கா சட்டையின் ' முகவரி ' அழுக்கு !!.. தேன் சுமப்பதில்லை ஈக்களின் இன்னல் தாங்கா தேன்கூடு ... போரில் பூமழை பொழியுமா ; தேரில் வெற்றிகள் வருகுமா ?.. சூரியன் இங்கு சுருகுமா ; சுற்றும் கோள்கள் உறங்குமா ?.. நீரில் நிழலும் மூழ்குமா ;நீ நீரா நிழலா தெரியுமா ?.. சோலைவனம் நிரந்தரமல்ல பாலைவனத்தில் நடக்கவும் பாதங்கள் பழகட்டும் !!. புருவங்களுக்கும் உருவங்களுண்டு ... காகிதங்கள் கவிதைகளாய் கருங்கற்கள் சிற்பங்களாய் மூங்கில்கள் புல்லாங்குழல்களாய் மாறியது எப்படி ?. விசும் காற்றுக்கு முகவரி எதற்கு ; பேசும் மழலைக்கு மொழிகள் எதற்கு ?.. இதழ்கள் விரிந்தால்தான் வார்த்தை ; இமைகள் விரிந்தால்தான் பார்வை .. நிலை கண்டு வருந்தாதே இலைகொண்டு மலைசுமப்போம் வா .. நினைத்தால் முடியும் இமைகளின் இடுக்கில் இமயங்கள் சாத்தியமே ; விரல்களின் சொடுக்கில் விஞ்ஞானம் வசப்படுமே .. புருவ அசைவுகளில் புயலை அடக்கிடு ; அச்சத்தீவின் மிச்ச வீரம் நீ ; கண்ணீர்த்துளியின் கடைசிப்புன்னகை நீ ; கைரேகைத் தேய்ந்தாலும் கனவைத் தேய்க்காதே ; கண்பார்வை மாய்ந்தாலும் இலட்சியம் மாய்க்காதே .. எரிமலைத் தொட்டு தெரிந்து கொள் ; நெருப்பு சுடுமாம் சுனாமியில் நீச்சல் பழகு நெருப்புக் கிண்ணத்தில் நீர் பருகு .. புருவங்கள் இரண்டையும் கடிகார முள்ளாக்கிடு ; புலனாய்வு செய்து புது மொழி காண் -அதற்கு இளமையெனப் பெயரிடு .. கடல் நீரைக் குடி நீராக்க கடுகில் கருவி செய் ; மின்சாரம் கண்டுபிடி சம்சாரத்தின் கோபத்தில் .. பூச்செடிகள் நடு புளுட்டோ சென்று ; விஞ்ஞானத்தைச் சிறைபிடி விரல் நகச் சிறையில் .. நிலாச்சோறு வேண்டாம் நிலாவில் சென்று சோறுண்... நினைத்தால் நிச்சயம் முடியும் அணைத்தால் எரிமலை அணையும் எதையும் தாங்கும் இதயம் உன்னில் ஆகட்டும் உதயம் இமயம் உட்பட எதையும் உன்னால் பெயர்த்திட முடியும் .. ஆணையிடு ஆதவன் மேற்கே உதிக்கும் வீணையெடு விண்வெளியில் இசைத் தெறிக்கும் .. தோற்றுப்போன புனிதர்க்கும் தோற்க்கப்போகும் மனிதர்க்கும் சேர்த்தே வென்றிடுவாய் சிங்கமாய் நின்றிடுவாய் இளைய சமூகமே !! - கமல் Relaxplzz ![]() "தன்னம்பிக்கை வரிகள்" |
Posted: 15 Nov 2014 11:15 PM PST "தாயுமானவன் என் தந்தை" 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார். 2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார். 3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார். 4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். 5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார். 6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார். 7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார். இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை! -ஆதிரா. Relaxplzz |
Posted: 15 Nov 2014 11:00 PM PST மொபைல் போன் உபயோக அறிவுரை...! 1..முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும் 2.நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. 3.குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். 4.பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும். 5.போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது ![]() |
Posted: 15 Nov 2014 10:45 PM PST |
Posted: 15 Nov 2014 10:30 PM PST |
Posted: 15 Nov 2014 10:15 PM PST #படித்ததில்_நெஞ்சைத்_தொட்டது!! ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா அவளையே சுத்தி சுத்தி வரான், வேலை வெட்டி இல்லாத பயல்ன்னு மட்டம் தட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு ஒதுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழுறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு சொல்லுவாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க.. ?"அப்படின்னு ஒரு நக்கல். ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா"ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்.. ஒரு குறிக்கோளோடு உழைச்சா வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"ன்னு ஏச்சு. சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு புலம்பல்.. இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க. இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க. Relaxplzz |
Posted: 15 Nov 2014 10:00 PM PST |
Posted: 15 Nov 2014 09:45 PM PST அன்று 20 பைசாவுக்கு கடலைமிட்டாயும், 10 பைசாவுக்கு தேன்மிட்டாயும், 5 பைசாவுக்கு புளிப்பு மிட்டாயும், வாங்கும் போது தெரியவில்லை இப்பொழுது இந்த பைசா இருக்காது என்று... Relaxplzz ![]() |
Posted: 15 Nov 2014 09:30 PM PST |
Posted: 15 Nov 2014 09:15 PM PST இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் :- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோன்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை 'ஹைப்பர் கிளைசீமியா' என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை 'ஹைப்போ கிளைசீமியா' என்றும் சொல்வார்கள். பொதுவாக உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். தாகம் அதிகம் எடுக்கும் ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்று தான் தாகம். உங்களுக்கு வாயானது எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பது தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக உள்ளது என்று அர்த்தம். சோர்வு, தலைவலி போன்றவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும். பசி அதிகரிக்கும் உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும். உடல் வறட்சி போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். எடை குறைவு திடீரென்று உடல் எடை குறைவது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று. சிறுநீரில் குளுக்கோஸ் சிறுநீரில் குளுக்கோஸ் இரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளுக்கோஸை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருந்தால், குளுக்கோஸானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். அப்படி டாய்லெட்டில் சிறுநீரை வெளியேற்றிய பின், டாய்லெட்டில் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தால், சிறுநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது என்று அர்த்தம். Relaxplzz |
Posted: 15 Nov 2014 09:00 PM PST கண்ணுக்குள் இருக்கும் கருவிழி கருப்பு, கண்ணை பாதுகாக்கும் இமைமுடி கருப்பு,! இரவில் வானம் கருப்பு, சாமி சிலை கருப்பு,! இத்தனையும் கருப்பு ஆனால் அழகு வெள்ளையா,?. கண் வெண்விழியில் கருவிழிதான் அழகு, கூந்தல்முடியில் கருங்கூந்தல் தான் அழகு, இரவு என்ற கருப்பு நிறத்தால் பெருமை கொள்கிறது வெண்நிலவு, இப்பொழுது கூறுங்கள் கருப்பு அழகுதானே... Relaxplzz ![]() |
Posted: 15 Nov 2014 08:45 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment