Friday, 14 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மாங்குளம், மதுரை மாவட்டம் படம் : உதய சங்கர்

Posted: 14 Nov 2014 07:36 AM PST

மாங்குளம், மதுரை மாவட்டம்

படம் : உதய சங்கர்


அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது வீண் வேலை என்றுதான் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்...

Posted: 14 Nov 2014 07:13 AM PST

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது வீண் வேலை என்றுதான் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பட்டையைக் கிளப்புகிறார்கள். சென்னை மடுமாநகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு தலைமையாசிரியர் அவ்வப்போது அழைத்து பேசுவார். சமீபத்தில் பேசிய போது 'எங்க ப்லாக் பார்த்தீங்களா?' என்றார். ஏதாவது மொக்கையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு பார்த்தேன். பள்ளி மாணவர்களே குறும்படங்களை தயாரித்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரைதான் அந்தப் பள்ளியில் இருக்கிறது. நடுநிலைப்பள்ளி. அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் போதும். அரசுப் பள்ளி மாணவர்கள் கலக்கிவிடுவார்கள்.

@Vaa Manikandan

மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும்போது மருந்தின் மூலக்கூறின் பெயரை (drugs c...

Posted: 14 Nov 2014 06:49 AM PST

மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும்போது மருந்தின் மூலக்கூறின் பெயரை (drugs compound name) எழுதாமல் பிரான்டின் பெயரையே எழுதுகிறாற்கள். இதில் வியாபார நலன் உள்ளது என நாம் அறிவோம். மருத்துவர் எழுதும் குறிப்பிட்ட பிரான்டு மருந்தைவிட விலை குறைவான அதே வீரீயம கொண்ட பல மாற்று பிரான்டுகள் உண்டு. உதாரணமாக இதய நோயாளிகள் உண்ணும் Eris நிறுவனத்தின் atorsave 40 என்ற மாத்திரையின் விலை 11.50 ஆனால் அதே தன்மையுள்ள DR.Reddys Lab நிறுவனத்தின் atocor 40 மருந்தின் விலை வெறும் 0.89 பைஸா. பிராண்டிணை மாற்றுவதால் மருந்தின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. ம்ம்.. சரி விலை அதிகமுள்ள பிரான்டிற்கு மாற்று பிராண்டு கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு தீர்வு உள்ளது,Health Cart Plus இந்த app http://app.lk/BBH?x=s உங்களுக்கு உதவும். உங்கள் மருந்தின் பெயரைக் கொடுத்தால் மாற்று பிராண்டுகளையும் அதன் விலைகளையும் காட்டும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் மருந்தின் மூலக்கூறிண் பெயர்,மருந்தின் பின் விளைவுகளையும் !! அறிந்து கொள்ள முடியும். இந்த app மிகவும் சிறியது என்பது இதன் சிறப்பு (3 mb ). எல்லோரும் ஒருவகையில் மருந்து கம்பெனிகளால் ஏய்க்கப்பட்டுள்ளோம்.இனியாவது விழிப்புடண் செயல்படுவோம்.


@முருகேசன் தனபால்


HealthKartPlus by HealthKartPlus
app.lk
Your online pharmacy and drug database. Through this app you can search for medicines and get a list of their substitutes as well. In addition, you can order medicines.

இன்று எனக்கு நேரிட்ட சம்பவம்.உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம்.இனிமேல் நடக்கலாம்....

Posted: 14 Nov 2014 06:37 AM PST

இன்று எனக்கு நேரிட்ட சம்பவம்.உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம்.இனிமேல் நடக்கலாம்.இவர்களை இப்படியே மட்டும் விட்டுவிடக் கூடாது.(I have written in English for those who can't read Tamil in the end of this post.Spread this awareness via all social networking media like What's App etc) What's App,Email ,Telegram என அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இச்செய்தியைப் பரப்புங்கள்.

KPN Travels.,இந்த நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ--கூடியமட்டிலும் நான் தவிர்த்து விடுவேன்.காரணம் : உயிர் பயம்,மற்றும் பொருள் இழப்பின் பயம்.

நேற்று மாலை சங்கரன்கோவிலில் இருந்து கோவைக்கு,என்னுடைய இருசக்கர வாகனம் ஒன்றை ஏதேனும் ஒரு பார்சல் சர்வீஸ்ல் போட்டு அனுப்புமாறு நான் கேட்க-என்வீட்டார்களோ,இந்த நிறுவனத்தைப் பற்றி தெரியாத காரணத்தால்,KPN parcel service ல் போட்டு அனுப்பி வைத்துவிட்டார்கள்.இன்று மதியம் 3 மணிக்கு உங்கள் வாகனம் கோவையில் உங்களுக்குத் தரப்படும் என்ற உத்திரவாதத்துடன்,சேவைக் கட்டனமாக ரூபாய் 1200 யும் நோகாமல் பெற்றுக் கொண்டனர்.அப்போதே அடடா இந்த நிறுவனமா என்று எனக்குப் பட்டது.இருந்தாலும் சற்றேனும் திருந்தியிருப்பார்கள் என்ற எண்ணத்தில்,அவர்கள் கூறியது போல இன்று கோவை காந்திபுரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்து வரச்சென்றேன்--அப்போது நடந்த உரையாடலை,அப்படியே தருகிறேன்.

"சார்,சங்கரன்கோவில்ல இருந்து பைக்கை நேத்து அனுப்பி வச்சாங்க,வந்துருச்சா? எடுத்துக்கலாமா"?

"இன்னும் பார்சல் வண்டி வரலை.போயிட்டு நாளைக்கு வாங்க"-அங்கிருந்த மேலாளர் என்று தன்னைக் கூறிக் கொண்டவர் கூறினார்.

"வரலையா? இன்னைக்கு மதியம் வரும்ன்னு சொன்னாங்களே"

"அப்படியா,...அப்ப அப்படி சொன்னவங்கட்ட போய் கேளுங்க.,"

"என்ன சார் இது?..இப்படி பேசுறீங்க...அதுல என் பைக் வருதுங்க"

"உங்க பைக் மட்டுமா வருது? பல லட்சக்கணக்கான பொருளும் அதோட வருது"

"வெரிகுட்...அப்ப அந்த எல்லா பொருளுக்கும் சேர்த்து நான் கேக்குறேன்...எப்பங்க பார்சல் வரும்"

"அதெல்லாம்...உங்கட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை"

"அவசியமில்லையா???...சார் அதுல வர்றது என் பைக்.எனக்கு அது முக்கியம்."

"என்ன சார் நீங்க...உங்க பைக் மட்டுமே முக்கியம்ங்றீங்க...பைக்ல்லாம் இன்னைக்கு கிடைக்காது...பார்சல் ஏத்திட்டு வந்த வண்டி பிரேக்டவுன் ஆகிருச்சுன்னு நெனைச்சுக்கோங்க..
போங்க...கிளம்புங்க"

"ஏங்க...இது முறையற்ற,பொறுப்பற்ற பதில்.,உங்க பார்சல் சர்வீஸில் போட்ட என் பைக்கைத் தான் நான் கேட்கிறேன்.எப்ப கிடைக்கும் ன்னு கேட்டா,அதுக்கு நீங்க பொறுப்பற்ற பதிலைத் தர்றீங்க.கொஞ்சம் கூட நல்லாயில்லை.அப்புறம் கன்ஸ்யூமர் கோர்..."என்று நான் முடிக்க கூட விடவில்லை.

"போங்க சார்...உங்கள மாதிரி லட்சக்கணக்கா பாத்தாச்சு...போயி நீங்க வண்டியை எங்க போட்டு விட்டீங்களோ அங்க போயி கேளுங்க...கோர்ட்..போலீஸ்ன்னு எங்க வேணும்னாலும் போங்க.." என்ற பதிலை மிக மிக அலட்சியமாகத் தந்தார்கள்.இதில் அவருடன் இருந்தவர்களின் தனிக் கூப்பாட்டைச் சேர்க்கவில்லை.இந்த இடத்தில் தான் என் பொறுமை அதன் கொதிநிலையைத் தொட்டது.நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை யிடம் புகார் செய்யலாம் என்றால்-கஸ்டமரைப் பற்றியே கவலைபடாதவர்களுக்கு,கஸ்டமர் கேர் பற்றியெல்லாமா நினைவிருக்கும்? வேறுவழியின்றி,வாக்குவாதம் நடந்து,காவல்துறை புகாரில் வந்து நின்றது.மேற்சொன்ன மொத்த களமாடலின் போதும்-அப்போதும் தங்கள் பார்சல்களை அனுப்ப வரிசையில் நின்றிருந்தவர்கள்-ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லை.நாளை நமக்கும் இது நடந்தால்? என்ற அறிவும்,எண்ணமும் வரவேயில்லை.நமக்கு நடக்கவில்லையே என்ற எண்ணத்தில் நல்ல டைம்பாஸ் என்று வேடிக்கை பார்த்தனர்.

ஒரே ஒருவர் மட்டும் நெளிந்தபடி வந்தார்,என் சண்டையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்தாராம்."சார் சென்னைல இருந்து கோவைக்கு-KPN ல நேத்து பொருட்களைப் போட்டு அனுப்பி வச்சாங்க.அதுல முக்காவாசிப் பொள்ளாச்சிக்கு போயிருச்சாம்.மீதியிருந்த பொருட்கள்ல பாதியைக் காணோம்.இங்க கேட்டா-சென்னைல கேளுங்கறாங்க,அங்க கேட்டா கோவைல கேளுங்கறாங்க.மேனஜர் போன் நம்பர்ன்னு ஒரு நம்பரைத் தந்தாங்க.அவருக்கு போன் செஞ்சேன்.முதல் தடவை மட்டுந்தான் போனை எடுத்தாரு.அடுத்து எடுக்கவேயில்லை.இப்ப என்ன சார் செய்ய? " என்று பரிதாபமாக கேட்டார்.அவரைக் காவல்துறையில் "KPN ல் அனுப்பி வைத்த என் பொருட்களை காணவில்லை என்று உங்கள் ரசீதைக் காட்டி புகார் தந்து,FIR போடச் சொல்லுங்கள்...அதான் ஒரே வழி" என்று வழிமுறையைச் சொன்னேன்.

KPN நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு,நம் நிறுவனத்தை நம்பித்தானே வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை அனுப்புகின்றனர்,பயணம் செய்கின்றனர் என்ற அக்கறை துளி கூட கிடையாது என்ற என் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் இந்நிறுவனத்தினர். பயணிகளை ஏற்றிக்கொண்டு-அவர்கள் எதிர்பார்த்த அளவில் பேருந்து நிரம்பவில்லையென்றால்,கண்ட கண்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது,ஓட்டுனருக்கு இலவசமாக உணவு தருகிறான் என்ற ஒரே காரணத்திற்காக- சாலையோர குப்பை உணவகத்தில் வாகனங்களை நிறுத்துவது,பண்டிகை காலங்களில் அநியாய விலைகளுக்கு டிக்கெட்டுகளை விற்பது,சட்ட விரோதப் பொருட்களை கொண்டு செல்வது என ஏகப்பட்ட முறைகேடுகளைத் துணிந்து செய்கின்றனர்.தனியார் துறை மட்டுமல்ல அரசுத்துறைகளில் கூட இருக்கக்கூடாத-அலட்சியம்,ஏளனம்,பொறுப்பற்றத்தன்மை போன்றவை இந்நிறுவனத்தில் மித மிஞ்சிய அளவில் காணப்படுகின்றது.நம்மை யார் கேட்பார்கள்,அப்படியே கேட்டாலும் லஞ்சம் தந்து அவர்களை சரிகட்டி விடலாம் என்ற அகங்காரம் தரும் தைரியமே அவர்களை இவ்வாறு செயல்பட வைக்கின்றது.பெரும்பாலான ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்றாலும்-KPN travels போன்ற கார்ப்பரேட் வாகன நிறுவனம் இதில் எல்லாம் ஆராய்ச்சி முனைவர் பட்டமே பெற்றுள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், சென்னையிலிருந்து கோவையை நோக்கி கிளம்பிய,இதே KPN நிறுவனத்தின் தரமற்ற குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நடுவழியில் தீப்பிடித்து எரிந்து-அதில் பயணம் செய்த அனைவரும் உடல்கருகி இறந்தது நினைவிருக்கலாம்.அதை அப்படியே மூடி மறைத்ததும் கூட நினைவிருக்கலாம்.

நாம் வாடிக்கையாளர்கள்.பணத்தை செலுத்தி சேவைகளைப் பெறுகிறோம்.குறித்த பணத்திற்கான சேவையை வழங்கா விட்டால்-அவர்களின் பிடறி மயிரைப் பிடித்து உலுப்பி கேள்வி கேட்க நமக்கு முழு உரிமையுள்ளது.துணிந்து கேள்விகளைக் கேளுங்கள்.மரியாதையான பதில் வராவிட்டால்-உங்கள் உறவினர்கள்,நண்பர்களிடம் அந்த நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.இன்றைக்கு நமக்கிருக்கும்,இந்த சமூக வலைதளங்களைப் போல ஒரு வாய்ப்பு பத்தாண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை.அதைப் பயன்படுத்தி இது போன்ற கார்ப்பரேட் நிறுவனக் கொள்ளைகளுக்கு சாவு மணி அடிப்போம்.மிக நேர்மையான,நியாயமான போக்குவரத்து சேவையைத் தரும் எத்தனையோ சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன.அவற்றை ஆதரிப்போம்.KPN Travels போன்ற கார்ப்பரேட் ஆதிக்க யானைகளின் காதில் புகுந்த எறும்பாக நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.

வாடிக்கையாளர்களுக்காத் தான் நிறுவனங்கள்.நிறுவனங்களுக்காக வாடிக்கையாளர்கள் அல்ல என்பதை உணர்த்துவோம்.

இதோ நான் சொல்கிறேன்,எவ்வளவு அவசர,அவசிய பணியாக இருந்தாலும்.இந்த KPN Travels நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள்.

Friends,Please Avoid KPN Travel company's services.Whether it may be passenger bus or parcel service better avoid them.

I received a horrible experience from them.They don't deserve to be a transport and logistics service provider company anymore.They neither don't know how to handle a Customer nor his values.

I rendered this KPN Travel's Parcel service to logistic my Bike from Sankarankovil to Coimbatore by Tuesday.I have been told that I shall receive my bike by very next day afternoon by 3 PM.But I haven't received my bike,what I received were ridiculous,irresponsible replies from them.I was so surprised and wondered how come a private Logistics operator can give a reply like this.But later came to know that it's their unique way of treating the customers.They simply told,"Where ever you want to complaint,do that.We are least bother about that.We have seen lakh of persons like this".

So friends if you are ready to buy humiliation,ignorance,arrogant service--by spending your hard earned money--then please proceed with KPN Travels else avoid this corporate looters .There are number of small transport companies who render a honest,clean service to their customers.We can make use of them.

@G Durai Mohanaraju

அணை சூழ் உலகு:- தமிழகத்திற்கு மிக நீளமான கடற்கரைகள் இருந்து என்ன பிரயோசனம்! கொச...

Posted: 14 Nov 2014 06:22 AM PST

அணை சூழ் உலகு:-

தமிழகத்திற்கு மிக நீளமான கடற்கரைகள் இருந்து என்ன பிரயோசனம்! கொசு வர்த்தி சுருள் போல உள்பிரதேசத்திலே சுருண்டு ஓடும் நதியில்லையே! அதனால்தான் பக்கத்து மாநிலங்களிடத்தில் பக்கெட் பக்கெட்டாக டிம்சி கணக்கில் கெஞ்சி கொண்டுருக்கிறோம்.

நம்முடைய நிரந்தர பங்காளி(ஒருமைப்பாடு முக்கியம் தோழர்களே) காவேரியின் குறுக்கே புதியதாக கால்வாய் எடுத்து மைசூர் மகாராஜா மக்களுக்கு குடிநீர் தேவைக்கு பள்ளம் எடுக்க தயார் ஆகிவிட்டான். நாம்தான் இன்னும் தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று வெட்டி சித்தாந்தம் பேசி கொண்டுருக்கிறோம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியம் பேசற ஒரு பயலுவங்களும் இதற்கு எல்லாம் கொதிக்க போவதில்லை. என்றைக்கு அவன் தட்டில் பொன்னி ரக அரிசி மறைந்து மண் விழப் போகிறதோ அன்றைக்குதான் நான் தமிழ்ன்டா என்று வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு வரலாம். அதுவரை பாரத மாதாவிற்கு ஜெ போடலாம்.

ஏற்கனவே நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஆயிர கணக்கில் டிஎம்சி தண்ணீர் அளவு திறந்து விட வேண்டிய தண்ணீர் கடனாளி கன்னடகாரன். இந்நிலையில் மேலும் இரண்டு நீர்தேக்கங்களை மடை கட்டி 48 டிஎம்சி அளவு நீரை சேமிக்க ஆயுத்தமாகிவிட்ட நிலையில் இதை சட்டரீதியாக தடுக்கின்ற கடமை நமக்கு உள்ளது.

மோடிஜியும் சோனியாஜியும் இதில் நடுநிலை நல்லவர்கள் ஆகிவிடுவார்கள். நம் மாநில கட்சிகள்தான் இந்த சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நம் நிலம் அணை சூழ் உலகுதான்.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

சத்தியத்தின் பிள்ளை சகாயம்! சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆ...

Posted: 14 Nov 2014 04:23 AM PST

சத்தியத்தின் பிள்ளை சகாயம்!

சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆதரவு மாநிலம் முழுவதும் பெருகிவருகிறது.தமிழகத்தின் கிரானைட், தாது மணல் கொள்ளைகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. தமிழக அரசு சகாயத்தை இன்னமும் வேலை செய்யவிடாமல் நீதிமன்ற மேல்முறையீடு, நியமனத்தில் தாமதம் என்று பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பைத் தாண்டி தண்டனைத் தொகையான 10 ஆயிரம் ரூபாயையும் கட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு சாதனை(?) புரிந்துள்ளது.

இந்த நிலையில் புதிதாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. ''சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகளை மட்டும் விசாரித்தால்போதும். மற்ற மாவட்டங்களில் விசாரிக்கத் தேவை இல்லை'' என்ற சூழலை அரசு உண்டாக்கியது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய - தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து சகாயத்துக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சகாயத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.
சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் ஆதரவுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், ''தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், வேலூர் என்று பல்வேறு பகுதிகளில் நாங்கள் ஆய்வுக்குச் சென்றபோது, மதுரையைவிட அதிகமாக பல இடங்களில் கனிமவள கொள்ளைகள் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். ராதாபுரம் என்ற ஒரு பகுதியில் மட்டுமே 55 குவாரிகள் உள்ளன. இந்தக் கொள்ளைகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் சகாயத்தை மதுரையோடு நிறுத்த நினைக்கிறார்கள். இதை முறியடிப்பது நமது ஒற்றுமையில் இருக்கிறது'' என்று பேசினார்.

மதுரையைச் சேர்ந்த நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், ''மதுரையில் பி.ஆர்.பி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகவும் குறைவு. சகாயம், அன்சுரல் மிஸ்ரா ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த காலத்தில் கனிமவளத் துறை, வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகள் என்று பி.ஆர்.பி தரப்புக்கு நெருக்கமான பலர் மாற்றப்பட்டனர். இன்று மறுபடியும் அவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டனர். சகாயம் குழுதான் இதற்கு முடிவுகட்ட வேண்டும். சத்தியத்தின் பிள்ளை சகாயம்... அதனால் நிச்சயம் இதற்கு அவர் முடிவுகட்டுவார்!'' என்றார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் முகிலன், ''இதுவரை நடந்த கனிமவள ஊழலில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. இந்தத் தொகை நமது நாட்டில் 67 ஆண்டுகளாக பட்ஜெட்டில் போட்ட பணத்தைவிட அதிகம். சகாயம் வந்தால் பல அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வி.ஏ.ஓ-க்கள் சிக்குவார்கள். அவர்கள் மறைமுகக் கூட்டணி அமைத்து சகாயத்தை முடக்கப் பார்க்கிறார்கள்'' என்று கொந்தளித்தார்.

தமிழகம் முழுவதும் சகாயம் அலை அடிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இது!

- விகடன்


தானாக தத்திதத்தி தவழ்ந்து எழுந்து பொத்தென்று கீழே விழுந்தாலும் மீண்டும் எழும் கு...

Posted: 14 Nov 2014 03:09 AM PST

தானாக
தத்திதத்தி தவழ்ந்து எழுந்து
பொத்தென்று கீழே விழுந்தாலும்
மீண்டும் எழும்
குழந்தையின்
முயற்ச்சியில் கால்
பங்குகூட வளர்ந்த நம்மிடம்
இல்லை!!!

@காளிமுத்து

இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ் கல்வெட்டு. மாங்குளம் கல்வெட்டு.

Posted: 14 Nov 2014 01:17 AM PST

இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ் கல்வெட்டு. மாங்குளம் கல்வெட்டு.


55% of All the Inscriptions found in India are in Tamil Epigraphy The word 'Ep...

Posted: 14 Nov 2014 12:33 AM PST

55% of All the Inscriptions found in India are in Tamil

Epigraphy

The word 'EpiGraphy' is derived from two Greek words, viz., "Epi" meaning on or upon and "Graphie" meaning to write. And hence, epigraphy is the study of writings engraved on stone, metal and other materials like wood, shell, etc., known as 'inscriptions' or 'epigraphs'. Though engraving is the chief characteristic of an epigraph, there are some exceptions where old writings in ink on rocks, boulders, etc., are also accepted as epigraphs. A person who is engaged in the decipherment and interpretation of the epigraphs is called an 'epigraphist'.

Epigraphy as a source of history

India is enormously rich in epigraphical wealth. It is estimated that so far more than one lakh inscriptions have been discovered from the length and breadth of the country through the collective efforts of various agencies like Archaeological Survey of India, State Departments of Archaeology and various research institutions. However, still a large number of inscriptions await to be discovered. Epigraphy forms one of the very important sources for understanding the history and culture of the period starting from the time of Mauryan Emperor Asoka (3rd century B.C.) to the late medieval period. It is only from a patient and painstaking study of a large number of connected inscriptions that a reconstruction of not only the political and dynastic history, but also the social, religious, administrative and economic history of a particular period or reign or region could be undertaken.

The Archaeological Survey of India (ASI) will be conducting summer training programmes in epigraphy for students to enable them read and understand inscriptions in Tamil. Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said. To create an interest among students in inscriptions, their richness, value and messages, the ASI would be conducting summer training programmes from 2006 onwards, Dr. Sathyamurthy said.

He was speaking after inaugurating a three-day World Heritage Photo Exhibition organised by the ASI at Shri Natesan Vidyasala Matriculation Higher Secondary School at Mannivakkam, near Tambaram, on Monday. The programme would help students read and understand Tamil inscriptions. It would also inculcate in them an interest in history and archaeology. They had planned to conduct the training programme at the school for 50 students drawn from different institutions.

He told the students that there were about 50 valuable monuments in and around Mannivakkam area.

After the addition of Gangaikonda Cholapuram and Darasuram temples to the list of UNESCO`s World Heritage Sites, the ASI was taking steps to add Kailasanathar Temple, Kancheepuram, and the Ginjee Fort to the list, he said.

Every exhibit had its own identity and had left behind several messages and was more than just a depiction of a puranic story, he told the students.

The school`s correspondent N. Ramasubramaniam said about 3,000 students from different places were expected to visit the exhibition.

Photographs of temples and Pallava period coins are on display. An inter-school painting competition for students between sixth and eight standards on the theme, `Thamizhaga panpaattu thalangal` and an essay competition on `Mamallapuram kalliley kalaivannam` will be held for students between ninth and twelfth standards on Tuesday.

http://www.thehindu.com/2005/11/22/stories/2005112215970400.htm

https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Tamil_language.html

http://asi.nic.in/asi_epigraphical_sans_about.asp

http://asi.nic.in/asi_publ_epigraphical_south.asp

இந்திய மொழிகள் அனைத்திலும் தோராயமாக 1 லட்சம் கல்வெட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.

http://tamil.oneindia.com/news/2010/06/27/world-tamil-conference-karunanidhi.html

தமிழை வாசிக்க வைப்போம்...

http://www.dinamani.com/editorial_articles/2013/07/11/தமிழை-வாசிக்க-வைப்போம்/article1677785.ece


சாவியை வைத்து அந்த சிற்பத்தின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒவ்வொரு...

Posted: 13 Nov 2014 11:42 PM PST

சாவியை வைத்து அந்த சிற்பத்தின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒவ்வொரு நடன மாதரும் மூன்று அங்குலம் மட்டுமே இருப்பர். அந்த மூன்று அங்குலத்தில் அவர்களின் நடன அசைவுகள், அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள், அவர்களின் உடை, சிகை அலங்காரம் என அத்தனையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது!.இதே கல்லில் வலது ஓரத்தில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் அமைந்துள்ளதை கவனிக்கத் தவற வேண்டாம். இந்த மொத்த வேலைப்பாட்டில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் அனைத்துமே வீணாகிவிடும் என்பதால் இதை வடிக்கும் போது உலகமே இந்த பாறையில் தான் இருந்திருக்க வேண்டும் தன் பெயரைக் கூட பதிக்காத அந்த சிற்பிக்கு. சரியான பார்வையில் அணுகினால் உங்களை ஆச்சரியப்படுத்த இது போன்ற ஏராளமான அதிசயங்களை நம் கோயில்கள் தனக்குள் புதைத்து வைத்திருக்கின்றன.

இடம்: புள்ளமங்கை, பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயம்.
1100 வருடங்கள் பழமையானது

@சசிதரன்


அழகு தமிழ்நாடு!

Posted: 13 Nov 2014 10:25 PM PST

அழகு தமிழ்நாடு!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 14 Nov 2014 04:10 AM PST


மாங்காய் மடையன்! ஒருநாள். அந்த ஆட்டு இடையன் ஆடுகளுக்கு இலைத்தழைகளைப் பறித்துப்...

Posted: 14 Nov 2014 03:54 AM PST

மாங்காய் மடையன்!

ஒருநாள். அந்த ஆட்டு இடையன் ஆடுகளுக்கு இலைத்தழைகளைப் பறித்துப் போட உயரமான மரத்தில் ஏறினான்.

திடீரென்று காற்று பலமாக வீச ஆரம்பித்தது.

மர உச்சியில் நின்றிருந்த அந்த மனிதர் காற்றின் வேகத்தால் தள்ளாடினான்.

உடனே இறங்கவும் முடியாது. அங்கேயே இருந்தால் எந்த நேரத்திலும் மரக்கிளை முறிந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவனை அறியாமலேயே அவனது கரங்கள் விண்ணை நோக்கி உயர்ந்தன. உதடுகள் முணுமுணுத்தன: "கருணையாளனான இறைவனே! இந்த பேராபத்திலிருந்து என்னை காப்பாற்று. அப்படி என் உயிரைக் காப்பாற்றினால் என் ஆட்டு மந்தை முழுவதையும் விற்று உன் வழியில் செலவு செய்வேன்!" – என்று அவர் பிரார்த்தித்தார்.

காற்றின் வேகம் சற்று தணிந்தது.

உடனே அந்த இடையன், "அப்பாடா..! காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது.." என்றவாறு, "உன் அருளுக்கு நன்றி இறைவனே..! நான் நிச்சயம் என் ஆட்டு மந்தையின் ரோமங்களை கத்தரித்து அவற்றை விற்று உன் வழியில் செலவு செய்வேன்!" – என்று கூறிக் கொண்டே உச்சிக் கிளையிலிருந்து இறங்க ஆரம்பித்தான்.

காற்றின் வேகம் நன்றாக தணிந்திருந்தது.

இடையன் மரத்திலிருந்து இறங்கியவாறு, "எல்லா ஆடுகளின் ரோமம் எதற்கு? நாலைந்து ஆடுகளின் பாலைக் கறந்து அதை விற்று வரும் தொகையில் ஏழை, எளியோர்க்கு தான – தர்மங்களைச் செய்துவிட்டால் போயிற்று!" – என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இடையன் மரத்திலிருந்து இறங்கும்போதே, காற்றின் வேகம் முற்றிலும் தணிந்து விட்டது. சூழல் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.

மரத்திலிருந்து இறங்கி தரையை அடைந்த இடையன், "அப்பாடா..!" ஒரு வழியாய் சாமார்த்தியமாய் இறங்கிவிட்டேன். என் திறமையைக் கொண்டு உயிர் பிழைத்துக் கொண்டேன். நடுவில் இறைவனின் உதவி என்ன வேண்டி கிடக்கிறது? என் சொந்தப் பொருளை இழப்பதற்கு நான் என்ன மாங்கா மடையனா?" – என்றவாறு பறித்துப் போட்ட இலைத் தழைகளை எடுத்துக் கொண்டு ஆட்டு மந்தை இருந்த இடம் நோக்கி நடந்தான்.

#ஆன்மிகச்_சிந்தனை


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!! உன...

Posted: 13 Nov 2014 10:03 PM PST

உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!!

உன் உளறல்கள் ஒவ்வொருன்றும்
கவிதை !!

நீ இறைவனின் மொழிப்
பேசும் இறைவன் !!

உன் எச்சில் துளி தேன் துளி !!

உன் நடையில் ராணுவப் படையும் தவிடுபொடி !!!

உன் பொம்மைத் துப்பாக்கி அணுகுண்டுகளை விஞ்சும் !!

உன் அழுகை மேகத்தை மிஞ்சும் !!

மரங்களில் ஏறும் பாம்பைப் போல ஏறுகிறாய் என் மேல் !!

கதவருகே ஒளிந்து கொண்டு தேட வைக்கிறாய் !!!

ஊருக்காக உதட்டு புன்னகையை உடுத்தி திரிபவர்கள் நாங்கள் !!!

நியோ உளமாற சிரிக்கிறாய்
உண்மையாய் அழுகிறாய் !!

தவறி விழுகிறாய் தாய்க்கண்டு அழுகிறாய் தானே எழுகிறாய் !!

உன் தூக்கம் உலகின் இரவு !!!
உன் விழிப்பு உலகின் பகல் !!

உன் வாசனைக்கு உலக வாசனைத் திரவியங்கள் ஒரு பொருட்டே
அல்ல !!

உன் பாதச்சுவடுகள் அழியாதபடிக்கு என் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றன .....

இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த கவிதை அனைத்து குழந்தைகளுக்கும் சமர்ப்பணம் ..

இனிய காலை வணக்கம் நண்பர்களே !!!

இவண்
- கமல்


மாற்றத்தை நோக்கி அழகான கருத்தைக் கொண்ட குறும்படம்! நீங்களும் பார்த்து பயன்பெறுவ...

Posted: 13 Nov 2014 07:30 PM PST

மாற்றத்தை நோக்கி அழகான கருத்தைக் கொண்ட குறும்படம்!

நீங்களும் பார்த்து பயன்பெறுவதுடன் நண்பர்களுக்கும் பகிரவும்!

அனுப்பியவர்:- கார்த்திக் பாரதி

காணொளி இணைப்பு:- https://www.youtube.com/watch?v=OgUR45ypL5o&feature=youtu.be


"கஞ்சன்" (Kanchan) குறும்படம்!

என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள்...

Posted: 13 Nov 2014 11:41 AM PST

என் தெய்வம் !!!

முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !

இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !

கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !

காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !

என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!

காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!

மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!

பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!

கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!

மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!

எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!

நீச்சல் கற்றுத் தந்தவள் !!
கால்சட்டை போட்டு விட்டவள் !!

எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
என் கண்ணே
பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!

உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!

கண்ணீரில் கவலையில் தலையணை
நனைத்தவள் !
வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!

திரும்பிப் பார்க்கிறேன் ...

அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
விண்மீன் கணக்கானவை .!

ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..

நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ...
( I love you amma )

இனிய இரவு வணக்கம் ..

இவண்
- கமல்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 14 Nov 2014 09:30 AM PST

:)


இப்படி ஒரு கலெக்டரை கண்டதுன்டா ??? சாலை ஒரத்தில் கொடிகம்பத்தின் கீழ் கைலியுடன்...

Posted: 14 Nov 2014 09:10 AM PST

இப்படி ஒரு கலெக்டரை கண்டதுன்டா ???

சாலை ஒரத்தில் கொடிகம்பத்தின் கீழ் கைலியுடன் படுத்துகிடந்து மணல் கடத்தல் மற்றும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை மடக்கிபிடித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் திரு. சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருந்த பொழுது மணல் திருட்டுகளை தடுக்கவும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை பிடிக்கவும் முடிவு செய்தார்...

மாறு வேடம் அணிந்து கைலி பனியனுடன் சாலையின் ஓரத்தில் படுத்துக்கொண்டு நோட்டமிட்டார் இரவு 1 மணிக்கு அந்த வழியாக வந்த லாரிகளை திடீரென மடக்கிப்பிடித்தார் .... அருகில் தான் காவல் நிலையம் ஆனால் அவர்களுக்கு இது தெரியாது .... அத்தனை லாரிகளையும் பறிமுதல் செய்த பின்புதான் அவர்களுக்கு தெரிந்தது ...காரணம் அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்....

இரவு நேரத்தில் கலெக்டரை கண்டதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் தினறினர். மொத்தம் 13 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன ... மேலும் பல இடங்களில் இரவு நேரந்தில் சாதாரண மனிதர்போல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு கையில் பேட்ரிலைட் கைலி சகிதமாக ஒரு சில பகுதிகளில் நடந்து செல்வாராம் ...

அடுத்த நாள் காலையில் காவல் துறையினர் எங்கெங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற பட்டியலை சோதனை செய்வாராம் . அப்படி தவறு செய்யும் காவலர்களுக்கு உடனே சஸ்பென்ஷன் தானாம் ... நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் இவரை எப்போது இடமாற்றம் செய்வார்கள் என்று தவமாய் தவமிருந்தனர்...

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே ஆட்சியர் ...
திரு.சகாயம் அவர்கள் ...

Relaxplzz


டீ குடிப்பதற்காக சாலையோரத்திலுள்ள கடையொன்றிற்குச்செல்கிறீர்கள். அங்கே, பிச்சைக்...

Posted: 14 Nov 2014 08:50 AM PST

டீ குடிப்பதற்காக சாலையோரத்திலுள்ள கடையொன்றிற்குச்செல்கிறீர்கள்.

அங்கே,
பிச்சைக்காரர் போன்ற தோற்றத்திலுள்ள வயது முதிர்ந்தவரொருவர்
உங்களையணுகுகிறார்.

சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.

அவரவர் அவரவரரின் வேலையைப்பார்க்கின்றனர்.

"எப்பா தம்பி..
ஒரு டீ வாங்கித்தாயா.."

உங்களின் மனம் இளகுகிறது.

டீமாஸ்டரிடம்,
"அண்ணே, இன்னொரு டீ போடுங்க.." என்று சொல்கிறீர்கள்.

அப்போது சட்டென்று அந்த பிச்சைக்காரர் டீ மாஸ்டரிடஞ் சொல்கிறார்.

"சக்கரை கொஞ்சந்தூக்கலா..
மேல கொஞ்சம் நுரைபோட்டு போட்டுக்கொடுப்பா.."

கட்.

இப்போது உங்களின் மனநிலை என்னவாயிருக்கும்?

அடுத்து இதேசூழல்.

பிச்சைக்காரருக்கு பதிலாக நீண்ட நாட்களாய்க் காணாத உங்களது பழைய நண்பர்.

கொஞ்சநேரம் பேசிவிட்டு டீ மாஸ்டரிடம் ரெண்டு டீ சொல்லப்போகிறீர்கள்.

அதற்குள்ளாக நீங்களே உங்கள் நண்பரிடங் கேட்கிறீர்கள்..

டீ எப்படி?
லைட்டா மீடியமா ஸ்ட்ராங்கா?

அவரும் ஏதோ சொல்கிறார்.

கட்.

இப்போது முதற்காட்சிக்குவாருங்கள்.

பிச்சைக்காரரின் டீபருகும்வழக்கத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

பதிலில்லைதானே?

மூன்றாமவர்களிடமும் நம்மவர்களிடமும்
நாம் எப்படி உண்மையில் நடந்துகொள்கிறோமென்பது விளங்குகிறதுதானே?

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz

ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள். சிங்கப்பூரில் நபர் ஒருவர...

Posted: 14 Nov 2014 08:30 AM PST

ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள்.

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார்.

ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.

பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார்.

இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம், கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள் பணம் சேர்ந்துவிட்டது.
அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர்.

தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Relaxplzz


கடைசி தலைமுறை 1.சைக்கிள் டையர் வண்டி ஓட்டின கடைசி தலைமுறையும் நாமதான் .. 2.கிரி...

Posted: 14 Nov 2014 08:10 AM PST

கடைசி தலைமுறை

1.சைக்கிள் டையர் வண்டி ஓட்டின கடைசி தலைமுறையும் நாமதான் ..
2.கிரிக்கெட்ல தென்னமட்டைய பேட்டா யூஸ் பண்ண கடைசி தலைமுறையும் நாமதான் ..

3.பென்சில் கூர்மையாக்க பிளேடு பயன்படுத்திய கடைசி தலைமுறை நாம்தான்..
4.கூட்டஞ்சோரு செய்து சாப்பிட்ட கடைசி தலைமுறை நாம்தான்

5.ஆரஞ்சு மிட்டாய் ,சூட மிட்டாய் ,சாப்பிட்ட கடைசி தலைமுறை நாம தான்
6.பெண்கள் இடுப்பில் குடம் தூக்கி , வாசலில் சாணம் தெளித்து , கோலம் போட்டதை பார்த்த கடைசி தலைமுறை நாம் தாம்.

7.கிணற்றில் நீச்சல் பழகி தண்ணிருக்கு அடியில் தரையில் மண் எடுத்த கடைசி தலைமுறையும் நாம் தான்
8.திருவிழா சமயங்களில் திரை கட்டி சினிமா பார்த கடைசி தலைமுறையும் நாம் தான்

9.டைனமோ வைத்து சைக்கிள் ஓட்டிய கடைசி தலைமுறையும் நாம் தான்
10.கில்லி, கோலி, பம்பரம், ஐஸ் நம்பர், உயிர் குடுத்தல், பாண்டி, ஆடு புலி ஆட்டம், தாயம் போன்றவற்றை விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்

11.வீடு கட்ட குவித்திருக்கும் மணலில் மணல் வீடு கட்டிய கடைசி தலைமுறையும் நாம்தான்..
12.கரை புரண்டோடும் ஆற்றில் நீந்தி விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்

13.சுகப்பிரசவத்தில் பிறந்த கடைசி தலைமுறையும் நாம்தான்..

14.படிக்கும் போது உணவு நேரத்தில் மாங்காய் கீற்று, அண்ணாச்சி பழம், 1 ரூபாய் ஐஸ் , எழந்த பழம், நாவல் பழம், சாப்பிட்ட டைசி தலைமுறையும் நாம்தான்..

15.அம்மா கையால் நிலா சோறு சாப்பிட்ட கடைசி தலைமுறை நாமதான்..

நன்றி - களவாணி பய

Relaxplzz

நீங்கள் வெற்றியாளரா? இல்லை தோல்வியாளரா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொரு...

Posted: 14 Nov 2014 07:53 AM PST

நீங்கள் வெற்றியாளரா? இல்லை தோல்வியாளரா?

வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொருவரின் மனதில் எழும் எண்ணங்களை பொறுத்தது. அனைவருமே வெற்றியாளராக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளராக முடிசூட்டுகின்றனர்.

இதற்கு தோல்வியாளர்களிட மிருந்து, வெற்றியாளர்கள் சில விஷயங்களில் தனித்து நிற்பதால் தான் வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.

* தோல்வியடைபவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் அல்லது எதை செய்யக்கூடாது என நினைக்கிறார்களோ, அதனை செய்வார்கள். வெற்றியாளர்கள் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை செய்து முடிப்பார்கள். அதே போல செய்ய வேண்டாம் என முடிவெடுத்தால் கண்டிப்பாக அதை செய்யமாட்டார்கள்.

* தோல்வியாளர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்னையை பார்ப்பார்கள் ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்னைகளையே வாய்ப்பாக பார்ப்பார்கள்.

* தோல்வியாளர்கள் மனதில் தோன்றுவதை செய்வர். ஆனால் வெற்றியாளர்கள் நன்கு திட்டமிட்டு செயலாற்றுவர்.

* தோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை நிராகரிப்பார்கள். ஏனெனில் ஏற்றுக்கொண்டால் அவர்களை விட நாம் தாழ்ந்தவராகி விடுவோம் என்று எண்ணுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதிலிருந்து அவர்கள் புதிதாக கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.

* தோல்வியாளர்கள் முதல் தோல்வியிலேயே அம்முயற்சியிலிருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு
தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றுவார்கள்.

* தோல்வியாளர்களிடம் விடாமுயற்சி இருப்பதில்லை. வெற்றியாளர்கள் தங்களது கனவு நனவாகும் வரை முயற்சி செய்வார்கள்.

* தோல்வியாளர்கள் வெற்றியாளர்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள், வெற்றி பெற்ற ஒவ்வொருவரையும் பாராட்டுவார்கள்.

* தோல்வியாளர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பர். வெற்றியாளர்கள் வேலையையும், ஓய்வையும்
சரி சமமாக எடுத்துக்கொள்வார்கள்.

* தோல்வியாளர்கள் கனவு காண்பர். ஆனால் அதனை செய்யமாட்டார்கள். வெற்றியாளர்கள் தங்களது கனவு நிறைவேற என்னவெல்லாம் தேவையோ அதனை செய்து முடிப்பதிலேயே எப்போதும் குறியாக இருப்பர்.

* தோல்வியாளர்கள் அடுத்த அடிக்கு நகர மாட்டார்கள். ஏனெனில் அடுத்தது என்னாகுமோ என்ற பயம் அவர்களை சூழ்ந்திருக்கும். வெற்றியாளர்கள் தங்களது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விட்டு அடுத்த கட்டத்துக்கு செல்வதையே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

* தோல்வியாளர்கள் ஒரு விஷயத்தை முடியாது என்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் சாத்தியத்திற்கு முடிவே இல்லை என்பார்கள்.

* தோல்வியாளர்கள் வாழ்க்கையில் தங்களை சுற்றி எவ்வித எதிர்ப்போ, துன்பமோ இருக்கக் கூடாது என நினைப்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் தங்களது எண்ணம் நிறைவேறுவதற்கு என்னவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதனை முறியடித்து முன்னேறுவதையே விரும்புவர்.

என்ன நீங்கள் வெற்றியாளரா இல்லை தோல்வியாளரா என்பதை தெரிந்து கொண்டீர்களா…

வெற்றியாளர்களாக இருப்பின் உங்களது செயலை தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள், இல்லை யென்றால் வெற்றியாளர்களாக மாறுவதற்கு முயற்சியுங்கள்.

Chandrasekaran Vembu

Relaxplzz


வாழ்வியல்

அப்பாவின் அணைப்பிலும், அண்ணனின் மடியிலும், நான் உணர்ந்தேன் பாதுகாப்பை.. #பெண்

Posted: 14 Nov 2014 07:30 AM PST

அப்பாவின் அணைப்பிலும்,
அண்ணனின் மடியிலும்,
நான் உணர்ந்தேன்
பாதுகாப்பை..

#பெண்


:)

Posted: 14 Nov 2014 07:26 AM PST

நேரு பிரதமராக இருந்த சமயம், டெல்லியில் உலகக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்ற...

Posted: 14 Nov 2014 07:10 AM PST

நேரு பிரதமராக இருந்த சமயம், டெல்லியில் உலகக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சிலரும், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் சென்றனர்.

கண்காட்சியைத் திறந்து வைத்து உள்ளே நுழைந்தபோது, அப்போது புதிதாக அறிமுகம் ஆன எடை பார்க்கும் இயந்திரம் தென்பட்டது.

நேரு ஆர்வத்துடன் அதில் காசு போட்டு எடை பார்த்தார். அமைச்சர்களும் அவ்வாறே செய்தனர். காமராஜர் எங்கே என்று பார்த்தபோது, அவரோ சற்று விலகி, ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.

"வாருங்கள் - எடை பாருங்கள்' என்று நேரு அழைக்க, காமராஜர் தயங்கினார். பிரதமர் அழைத்தும் மறுக்கிறாரே என்று அமைச்சர்கள் எண்ணிய வேளையில் நேருவே அதற்கான காரணத்தைக் கூறினார்.

"தலைவர் ஏன் தயங்குகிறார் என்று எனக்குத் தெரியும். இந்த எடை மெஷினில் போடக்கூட அவரிடம் காசு இருக்காது' என்று கூறிக்கொண்டே காமராஜரை அருகில் அழைத்து, தானே காசு போட்டு எடைபார்க்க வைத்தார் நேரு..

#என்னவென்று_சொல்வது_இவரை...

Relaxplzz

பொற்கோவில் , அமிர்தசரஸ்

Posted: 14 Nov 2014 07:03 AM PST

பொற்கோவில் , அமிர்தசரஸ்


இந்திய ஸ்தலங்கள்

:)

Posted: 14 Nov 2014 06:29 AM PST

டிராஃபிக் ராமசாமி BY பத்ரி சேஷாத்ரி தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு ந...

Posted: 14 Nov 2014 06:17 AM PST

டிராஃபிக் ராமசாமி BY பத்ரி சேஷாத்ரி

தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.

இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.,

இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.

பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு 'டிராஃபிக்' என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். "போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்" என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி.

1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன.

எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் "வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்" என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார்.

இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார்.

ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் "எனக்கு பெயில் கொடுங்கள்" என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார்.

இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர்.

கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார்.

இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை 'ஒன் மேன் ஆர்மி' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.

82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி.

அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது. முழுமையாகப் பாருங்கள்.

Relaxplzz


"முகங்கள்"

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!! 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரி...

Posted: 14 Nov 2014 05:45 AM PST

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன்
வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப்
பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,
தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம்
போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும்
என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது

Relaxplzz


வாழ்வின் மொழி...

:)

Posted: 14 Nov 2014 05:34 AM PST

கருப்பட்டியின் பயன்கள்:- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும...

Posted: 14 Nov 2014 05:00 AM PST

கருப்பட்டியின் பயன்கள்:-

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும்,
உளுந்தையும்
சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்
இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோ
க்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன்
சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால்
வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச்
சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல்,
நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும்
கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக்
குடித்தால் உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட
கருப்பட்டி காபி குடிக்கலாம்.

இதில்
சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும்
அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல்
அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக்
கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின்
அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,
அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

Relaxplzz

என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள்...

Posted: 14 Nov 2014 04:26 AM PST

என் தெய்வம் !!!

முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !

இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !

கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !

காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !

என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!

காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!

மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!

பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!

கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!

மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!

எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!

நீச்சல் கற்றுத் தந்தவள் !!
கால்சட்டை போட்டு விட்டவள் !!

எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
என் கண்ணே
பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!

உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!

கண்ணீரில் கவலையில் தலையணை
நனைத்தவள் !
வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!

திரும்பிப் பார்க்கிறேன் ...

அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
விண்மீன் கணக்கானவை .!

ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..

நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ...
( I love you amma )

இவண்
- கமல்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் ! போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக்...

Posted: 14 Nov 2014 04:00 AM PST

நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் !

போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம்.

லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம்.

ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி.

அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது.

சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் !

Relaxplzz

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை! 1) உங்...

Posted: 14 Nov 2014 03:00 AM PST

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.

அதிசயம் ஆனால் உண்மை!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2) அதை இரண்டால் பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்.
மற்ற (2 digit) எண் உங்களின் வயது..!

Relaxplzz

உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்ப...

Posted: 14 Nov 2014 02:33 AM PST

உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில் இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று ஆணையிட்டார்..

முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்..

இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்...

இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்...

முதல் வரிசையில் பல மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை

இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்..

கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்...
"பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல?
உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க.
எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி"..

சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில
வார்த்தைல விளக்கம் சொன்னாரு..

"அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே, என் பொண்டாட்டி இரண்டாவது வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்"

:P :P

Relaxplzz


குசும்பு... 3

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வ...

Posted: 14 Nov 2014 01:56 AM PST

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

தொடர்ந்து படியுங்கள் :

சென்னை: -
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும்
10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர்
ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :-
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால்,
மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -
கோடா பாக் : குதிரைகளும்அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய்
இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம்
இன்று மாம்பலமாகி விட்டது மற்றொரு பெயர் காரணம்.

மா அம்பலம் :-
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம்
அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய கிருஷ்ணவேணி திரையரங்கமே
ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் :
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில்
108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம்
கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப்
பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச்
சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல்
குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம்
சேற்றுப்பட்டு.

எழும்பூர் :
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழும்பூர் . பூமி மட்டத்தின் மேல்
தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது.
இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர்
என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட
மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :
சிறிய அளவிலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த
பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன்
பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட
மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்)
அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் :
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர்
இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம்.
அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர்
வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர்
உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர்
அருகிலுள்ளது.

பூந்தமல்லி :
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த
இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல்
டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:-
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம்.
இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி :
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.
ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில்
யான கவுணி.

மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-
விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7
அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள்.
எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் :
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும்
காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.
முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம்
இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

யப்பா!! என்னங்க?? வரலாற்றை படிக்கும் போது ஆச்சர்யமா இருக்கா???

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

Relaxplzz

Posted: 14 Nov 2014 01:30 AM PST

நாராயணசாமி நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு...

Posted: 14 Nov 2014 01:00 AM PST

நாராயணசாமி நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விரிந்து படைச்சுட்டாரு...)

காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி... உள்ளே சென்று மனைவியிடம்..

நாராயணசாமி : (தயங்கிக்கொண்டே...) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?

மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?

நாராயணசாமி : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)

மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....

நாராயணசாமி : :O :O

:P :P

Relaxplzz

//படித்து பகிரவும்// சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்...

Posted: 14 Nov 2014 12:30 AM PST

//படித்து பகிரவும்//

சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீரை காக்க ஒரு நிறுவனத்தை எதிர்த்து போராடி வென்ற கதையை பார்த்து நம்மில் பலர் உணர்வுபூர்ணமாக அந்த படத்தின் இயக்குனரை பாராட்டினோம்.

அதை போன்ற ஒரு போராட்டம் தமிழகத்தில் திருச்சியை சேர்ந்த சூரியூரில் நடந்து கொண்டு இருப்பதை நம்மில் பலர் அறிந்து இருக்க மாட்டோம்.

ஆம், நம் உடல் நலத்தை கெடுக்கும் பெப்சி குளிர்பானம் தயாரிக்க சூரியூர் தண்ணீர் வளம் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலை எந்த வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்த்து கிராம மக்கள் போராடினால் வழக்கம் போல தவறு செய்த தொழிற்சாலையை காப்பாற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது திருவெரும்பூர், ஏ.எஸ். மஹாலில் (சாந்தி தியேட்டர் அருகில்) அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை அனைவரும் முடிந்த அளவு பகிரும்படிகேட்டுக் கொள்கிறோம். இயக்கத்தில் இருந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளோம். வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக உள்ளோம். மேலும் அவர்களுக்கு உதவ விரும்புவோர் 8190849055, 9629093144, 9791702630, 9976163444, 9715940745, 9500189319 ஆகிய எண்களில் போராட ஒருங்கிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

via சட்ட பஞ்சாயத்து இயக்கம்
நன்றி:- Raja Ilaya Marudhu

Relaxplzz


*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பா...

Posted: 14 Nov 2014 12:00 AM PST

*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

*மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

*பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

*பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

*தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

*அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

*தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

பாசம் நிறைந்த குடும்பம்...

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'....

Relaxplzz

இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ‘‘வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திர...

Posted: 13 Nov 2014 11:29 PM PST

இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்!

''வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நிறைவேறுவதற்கான தருணம் திருமணத்தில்தான் தொடங்குகிறது.

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வரமுடியும்" என்கிற மனநல ஆலோசகரான வாசுகி சிதம்பரம் சொல்லும், மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே...

1. காதலை விட மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும்.

2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும்.

3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும்.

4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அந்யோன்யம் அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல.

5. உன் சம்பளம் 'உனக்கு, எனக்கு' எனப் பிரித்துக் கொள்ளாமல் 'நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறாயா?' என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம்.

6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல்.

7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள்.

8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும்.

9. உயர் படிப்புப் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் 'குடும்பக் கல்வி' என்பது இருவருக்குமே பொதுவானது.

10. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்னை பெரிதாகாமலும் தடுக்க முடியும்.

11. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

12. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

13. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும். கவனம்!

14. தீய / நெகடிவ்வான குணங்களை ஒரு தாளில் எழுதி அதை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

15. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்னைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது.

16. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணத்துக்கு அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.

17. வாழ்க்கை முறை, மன பக்குவம், பிரச்னைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம்.

18. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும்.

19. ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்னைகளில் வளைந்து கொடுங்கள்.

20. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம்.

நன்றி விகடன்/சாம் மகேந்திரன்

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

இது சரியா நீங்களே சொல்லுங்க!!! ஒரு டிவீயிலே ஹெல்த் புரோக்ராம்லே ஒரு டாக்டர் நம்...

Posted: 13 Nov 2014 11:00 PM PST

இது சரியா நீங்களே சொல்லுங்க!!!

ஒரு டிவீயிலே ஹெல்த் புரோக்ராம்லே ஒரு டாக்டர் நம்பர் குடுத்து நம்ம சம்தேகங்களுக்கு விளக்கம் தர்றதா சொன்னாங்க.

நானும் என்னோடோ ரொம்ப நாள் கால் வலிக்கு ஒரு வழி தேடலாமேன்னு போன் போட்டேன்.

டாக்டர் : ஹலோ சொல்லுங்க சார்

நான் : சார் எனக்கு ரொம்ப நாளா எனக்கு கால் வலி சார்

டாக்டர் : சரியா கேக்கல்லை

நான் : எனக்கு ரொம்ப நாளா எனக்கு கால் வலி சார்

டாக்டர் : கொஞ்சம் டீவீ சத்தத்தை கம்மி பண்ணுங்க.

நான் : தாங்க யு டாக்டர்

சுத்த அக்கெனப்பய டாக்டர்னு நினைக்கிறேன். டீவீ சௌண்டை கம்மி பண்ணினா வலி போயிருமா?

நீங்க சொல்லுங்க

:O :O

Relaxplzz

மெளனம் என்பது என்ன? சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று...

Posted: 13 Nov 2014 10:27 PM PST

மெளனம் என்பது என்ன?

சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம்.

ஒரு மனிதனால் எண்ணங்கள் இல்லாமல் மெளனமாக இருக்க முடியுமா?

உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் ஏன் பிறந்தது முதல் இறப்பு வரையிலும் இதயம் துடித்து கொண்டே இருக்கிறது ரத்தமும் அப்படியே ஓடிகொண்டே இருக்கிறது. நாம் நினைத்தாலும் அவைகளை நிறுத்தி விட முடியாது. நிறுத்தி விட்டால் மரணம் சம்பவிக்கும் எண்ணங்கள் என்பது அப்படி அல்ல நினைவிலும் கனவிலும் அவைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருந்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியும். ஒன்றையே நினைத்து ஒன்றிலே கரைந்து ஒன்றிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த ஒன்றும் மறைந்து எதுவுமற்ற மோன நிலை சித்திக்கும்

மோன நிலை அடைய என்ன செய்ய வேண்டும்?

அறிவு, ஆராய்ச்சி, கேள்விகள், பதில்கள் எல்லாவற்றையும் காலணிகளை கழற்றி போடுவதை போல் போடுங்கள் இப்படி சொல்வது எளிது செய்வது கடினம் கடினமானது என்றால் அதை விட்டு விடலாமா? விட்டு விட்டால் மோன நிலையை அடைய முடியாதே என்று கேட்பது புரிகிறது. அறிவும் ஆராய்ச்சியும் எதற்க்காக? எதோ ஒன்றை தெரிந்து கொள்வதற்காக. அந்த எதோ ஒன்று எது என்பதில் தான் போராட்டம் இருக்கிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிய முயல வேண்டும். அறிந்த பிறகு மோன நிலை தானாக கிடைக்கும்.

எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம்?
பூமி சுற்றுவது எதனால்? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஒழுங்கு முறைப்படி இயங்குவது எதனால்? கண்ணுக்கு தெரியாமல் கருத்துக்கு புலப்படாமல் எங்கோ இருந்து இயக்குவிக்கும் ஒரு மூலபொருளே அதற்கு காரணம். அந்த மூல பொருளை அறிந்தால் அறிய முயற்சித்தால் எல்லாவற்றையும் அறியலாம்.

இதற்கு எளிய விளக்கம் என்ன?

கண்ணுக்கு தெரியாத கடவுளை காண முயலுங்கள் கருத்துக்கு அகப்பாத கடவுளை அகப்படுத்த அதாவது உள்ளத்திற்குள் உணர துவங்குங்கள் அறியாதது எல்லாம் அறியப்படும். அறிந்த பிறகு ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் வராது. கேள்விகள் இல்லை என்றால் சிந்தனை குளத்தில் அலைகள் இல்லை அதாவது எண்ணங்கள் இல்லை எண்ணங்கள் இல்லாத போது மெளனம் வரும். மெளனத்தின் உள்ளே மோன வடிவமாக கடவுள் இருப்பான். கடவுளை கண்டவன் கடவுளே ஆவான்.

அப்படி என்றால் மனிதனும் கடவுள் ஆகலாமா?

கடவுள் இருக்கிறார் அவர் இல்லை என்பதை வாதங்களால் எண்ணங்களால் வார்த்தைகளால் நிரூபிக்க முடியாது உணர்வுகளால் மட்டுமே நிரூபிக்க முடியும். கடவுள் உணர்வு மிக ஆழமானது அது உனக்குள்ளே புதைந்து கிடக்கிறது. உன்னை தோண்டி பார்த்தால் கடவுள் கிடைப்பார் அதாவது உனக்குள்ளே கிடைப்பார். அப்படி என்றால் நீயும் அவரும் வேறு வேறல்ல வேறு வேறாக தெரிகிறீர்கள் அவ்வளவே.

Relaxplzz


வாழ்வியல்

பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது......

Posted: 13 Nov 2014 10:00 PM PST

பொம்பளைன்னா பொறுமை வேணும்
அவசர பட கூடாது.

அடக்கம் வேணும்
ஆத்திரம் பட கூடாது...

அமைதி வேணும்
அதிகாரம் பண்ண கூடாது...

கட்டுபாடு வேணும்
இப்படி கத்‌த கூடாது...

பயபக்தியா இருக்கணும்
இப்படி பஜாரித்தனம் பண்ண கூடாது....

மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்....

இந்த டயலாக்கை ரஜினி பேசுனா கை தட்டி ரசிக்குதுங்க பொண்ணுங்க.... புருசன் பேசுனா கையை முறுக்கி நெஞ்சுலையே குத்துதுங்க....

:P :P

படித்ததில் ரசித்தது

Relaxplzz

:) குழந்தைப்பருவத்தில் வரையறுக்கப்பட்ட அனுபவங்கள் :) ......கலர் பென்சில் வண்ணத்...

Posted: 13 Nov 2014 09:29 PM PST

:) குழந்தைப்பருவத்தில் வரையறுக்கப்பட்ட அனுபவங்கள் :)

......கலர் பென்சில் வண்ணத்தை தேர்ந்து எடுப்பதில் இருந்த குழப்பத்திற்கு பெயர் கடினமான வேலை .

......பஸ்சில் ஜன்னலோர சீட்டில் ஓடி வந்து அவசரமாக உட்காரும்அந்த செயலுக்கு பெயர் ஆவேசம்/வேகம் .

.......பிறந்த நாளன்று கிடைக்கும் அந்த ஒரு toffeeக்கு பெயர் சந்தோசம்

.......வகுப்பில் முதலில் போர்டில் இருந்து பாடத்தை எழுதி முடித்ததும் கிடைக்கும் அந்த நொடிக்கு பெயர் பெருமை .

.....பரீட்சையில் கைவைத்து மறைத்து கொண்டு யாரும் காப்பி அடிக்க விடாமல் எழுதுவதற்கு பெயர் சுயனலம்.

.......வீட்டு பாடம் (homework) ஒரு கொடுமை என்று கருதப்பட்டதை சீக்கிரம் முடித்து விட்டால் கிடைக்கும்மீதி நேரத்தின் பெயர் விளையாட்டு நேரம் .

நேரத்தோடு உறங்கி நேரத்தோடு எழுந்திரு என்ற வார்த்தைகள் வாழ்கையின் மந்திரம்.

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் ......

இது எனது அனுபவம்..உங்களுடயதும் இதனுடன் பொருந்தும் என நினைக்கிறன்.

எல்லோரும் ரிலாக்ஸ் ப்ளீஸ் - யில் குழந்தைகள் தான்.. எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதனால் ......

;-) HAPPY CHILDREN`S DAY ;-) குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ....

- Chitra Chari

Relaxplzz