Relax Please: FB page daily Posts |
- :)
- இப்படி ஒரு கலெக்டரை கண்டதுன்டா ??? சாலை ஒரத்தில் கொடிகம்பத்தின் கீழ் கைலியுடன்...
- டீ குடிப்பதற்காக சாலையோரத்திலுள்ள கடையொன்றிற்குச்செல்கிறீர்கள். அங்கே, பிச்சைக்...
- ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள். சிங்கப்பூரில் நபர் ஒருவர...
- கடைசி தலைமுறை 1.சைக்கிள் டையர் வண்டி ஓட்டின கடைசி தலைமுறையும் நாமதான் .. 2.கிரி...
- நீங்கள் வெற்றியாளரா? இல்லை தோல்வியாளரா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொரு...
- அப்பாவின் அணைப்பிலும், அண்ணனின் மடியிலும், நான் உணர்ந்தேன் பாதுகாப்பை.. #பெண்
- :)
- நேரு பிரதமராக இருந்த சமயம், டெல்லியில் உலகக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்ற...
- பொற்கோவில் , அமிர்தசரஸ்
- :)
- டிராஃபிக் ராமசாமி BY பத்ரி சேஷாத்ரி தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு ந...
- தன்னம்பிக்கையை அதிகரிக்க !!! 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரி...
- :)
- கருப்பட்டியின் பயன்கள்:- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும...
- என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள்...
- நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் ! போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக்...
- உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை! 1) உங்...
- உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்ப...
- சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வ...
- Relaxplzz
- நாராயணசாமி நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு...
- //படித்து பகிரவும்// சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்...
- *மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பா...
- இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ‘‘வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திர...
- இது சரியா நீங்களே சொல்லுங்க!!! ஒரு டிவீயிலே ஹெல்த் புரோக்ராம்லே ஒரு டாக்டர் நம்...
- மெளனம் என்பது என்ன? சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று...
- பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது......
- :) குழந்தைப்பருவத்தில் வரையறுக்கப்பட்ட அனுபவங்கள் :) ......கலர் பென்சில் வண்ணத்...
Posted: 14 Nov 2014 09:30 AM PST |
Posted: 14 Nov 2014 09:10 AM PST இப்படி ஒரு கலெக்டரை கண்டதுன்டா ??? சாலை ஒரத்தில் கொடிகம்பத்தின் கீழ் கைலியுடன் படுத்துகிடந்து மணல் கடத்தல் மற்றும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை மடக்கிபிடித்தார். நாமக்கல் மாவட்டத்தில் திரு. சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருந்த பொழுது மணல் திருட்டுகளை தடுக்கவும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை பிடிக்கவும் முடிவு செய்தார்... மாறு வேடம் அணிந்து கைலி பனியனுடன் சாலையின் ஓரத்தில் படுத்துக்கொண்டு நோட்டமிட்டார் இரவு 1 மணிக்கு அந்த வழியாக வந்த லாரிகளை திடீரென மடக்கிப்பிடித்தார் .... அருகில் தான் காவல் நிலையம் ஆனால் அவர்களுக்கு இது தெரியாது .... அத்தனை லாரிகளையும் பறிமுதல் செய்த பின்புதான் அவர்களுக்கு தெரிந்தது ...காரணம் அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.... இரவு நேரத்தில் கலெக்டரை கண்டதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் தினறினர். மொத்தம் 13 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன ... மேலும் பல இடங்களில் இரவு நேரந்தில் சாதாரண மனிதர்போல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு கையில் பேட்ரிலைட் கைலி சகிதமாக ஒரு சில பகுதிகளில் நடந்து செல்வாராம் ... அடுத்த நாள் காலையில் காவல் துறையினர் எங்கெங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற பட்டியலை சோதனை செய்வாராம் . அப்படி தவறு செய்யும் காவலர்களுக்கு உடனே சஸ்பென்ஷன் தானாம் ... நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் இவரை எப்போது இடமாற்றம் செய்வார்கள் என்று தவமாய் தவமிருந்தனர்... மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே ஆட்சியர் ... திரு.சகாயம் அவர்கள் ... Relaxplzz ![]() |
Posted: 14 Nov 2014 08:50 AM PST டீ குடிப்பதற்காக சாலையோரத்திலுள்ள கடையொன்றிற்குச்செல்கிறீர்கள். அங்கே, பிச்சைக்காரர் போன்ற தோற்றத்திலுள்ள வயது முதிர்ந்தவரொருவர் உங்களையணுகுகிறார். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். அவரவர் அவரவரரின் வேலையைப்பார்க்கின்றனர். "எப்பா தம்பி.. ஒரு டீ வாங்கித்தாயா.." உங்களின் மனம் இளகுகிறது. டீமாஸ்டரிடம், "அண்ணே, இன்னொரு டீ போடுங்க.." என்று சொல்கிறீர்கள். அப்போது சட்டென்று அந்த பிச்சைக்காரர் டீ மாஸ்டரிடஞ் சொல்கிறார். "சக்கரை கொஞ்சந்தூக்கலா.. மேல கொஞ்சம் நுரைபோட்டு போட்டுக்கொடுப்பா.." கட். இப்போது உங்களின் மனநிலை என்னவாயிருக்கும்? அடுத்து இதேசூழல். பிச்சைக்காரருக்கு பதிலாக நீண்ட நாட்களாய்க் காணாத உங்களது பழைய நண்பர். கொஞ்சநேரம் பேசிவிட்டு டீ மாஸ்டரிடம் ரெண்டு டீ சொல்லப்போகிறீர்கள். அதற்குள்ளாக நீங்களே உங்கள் நண்பரிடங் கேட்கிறீர்கள்.. டீ எப்படி? லைட்டா மீடியமா ஸ்ட்ராங்கா? அவரும் ஏதோ சொல்கிறார். கட். இப்போது முதற்காட்சிக்குவாருங்கள். பிச்சைக்காரரின் டீபருகும்வழக்கத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை? பதிலில்லைதானே? மூன்றாமவர்களிடமும் நம்மவர்களிடமும் நாம் எப்படி உண்மையில் நடந்துகொள்கிறோமென்பது விளங்குகிறதுதானே? - ஃபீனிக்ஸ் பாலா Relaxplzz |
Posted: 14 Nov 2014 08:30 AM PST ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள். சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார். பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார். இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம், கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள் பணம் சேர்ந்துவிட்டது. அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர். தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். Relaxplzz ![]() |
Posted: 14 Nov 2014 08:10 AM PST கடைசி தலைமுறை 1.சைக்கிள் டையர் வண்டி ஓட்டின கடைசி தலைமுறையும் நாமதான் .. 2.கிரிக்கெட்ல தென்னமட்டைய பேட்டா யூஸ் பண்ண கடைசி தலைமுறையும் நாமதான் .. 3.பென்சில் கூர்மையாக்க பிளேடு பயன்படுத்திய கடைசி தலைமுறை நாம்தான்.. 4.கூட்டஞ்சோரு செய்து சாப்பிட்ட கடைசி தலைமுறை நாம்தான் 5.ஆரஞ்சு மிட்டாய் ,சூட மிட்டாய் ,சாப்பிட்ட கடைசி தலைமுறை நாம தான் 6.பெண்கள் இடுப்பில் குடம் தூக்கி , வாசலில் சாணம் தெளித்து , கோலம் போட்டதை பார்த்த கடைசி தலைமுறை நாம் தாம். 7.கிணற்றில் நீச்சல் பழகி தண்ணிருக்கு அடியில் தரையில் மண் எடுத்த கடைசி தலைமுறையும் நாம் தான் 8.திருவிழா சமயங்களில் திரை கட்டி சினிமா பார்த கடைசி தலைமுறையும் நாம் தான் 9.டைனமோ வைத்து சைக்கிள் ஓட்டிய கடைசி தலைமுறையும் நாம் தான் 10.கில்லி, கோலி, பம்பரம், ஐஸ் நம்பர், உயிர் குடுத்தல், பாண்டி, ஆடு புலி ஆட்டம், தாயம் போன்றவற்றை விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான் 11.வீடு கட்ட குவித்திருக்கும் மணலில் மணல் வீடு கட்டிய கடைசி தலைமுறையும் நாம்தான்.. 12.கரை புரண்டோடும் ஆற்றில் நீந்தி விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான் 13.சுகப்பிரசவத்தில் பிறந்த கடைசி தலைமுறையும் நாம்தான்.. 14.படிக்கும் போது உணவு நேரத்தில் மாங்காய் கீற்று, அண்ணாச்சி பழம், 1 ரூபாய் ஐஸ் , எழந்த பழம், நாவல் பழம், சாப்பிட்ட டைசி தலைமுறையும் நாம்தான்.. 15.அம்மா கையால் நிலா சோறு சாப்பிட்ட கடைசி தலைமுறை நாமதான்.. நன்றி - களவாணி பய Relaxplzz |
Posted: 14 Nov 2014 07:53 AM PST நீங்கள் வெற்றியாளரா? இல்லை தோல்வியாளரா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொருவரின் மனதில் எழும் எண்ணங்களை பொறுத்தது. அனைவருமே வெற்றியாளராக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளராக முடிசூட்டுகின்றனர். இதற்கு தோல்வியாளர்களிட மிருந்து, வெற்றியாளர்கள் சில விஷயங்களில் தனித்து நிற்பதால் தான் வெற்றியாளர்களாக உருவாகின்றனர். * தோல்வியடைபவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் அல்லது எதை செய்யக்கூடாது என நினைக்கிறார்களோ, அதனை செய்வார்கள். வெற்றியாளர்கள் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை செய்து முடிப்பார்கள். அதே போல செய்ய வேண்டாம் என முடிவெடுத்தால் கண்டிப்பாக அதை செய்யமாட்டார்கள். * தோல்வியாளர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்னையை பார்ப்பார்கள் ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்னைகளையே வாய்ப்பாக பார்ப்பார்கள். * தோல்வியாளர்கள் மனதில் தோன்றுவதை செய்வர். ஆனால் வெற்றியாளர்கள் நன்கு திட்டமிட்டு செயலாற்றுவர். * தோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை நிராகரிப்பார்கள். ஏனெனில் ஏற்றுக்கொண்டால் அவர்களை விட நாம் தாழ்ந்தவராகி விடுவோம் என்று எண்ணுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதிலிருந்து அவர்கள் புதிதாக கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். * தோல்வியாளர்கள் முதல் தோல்வியிலேயே அம்முயற்சியிலிருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றுவார்கள். * தோல்வியாளர்களிடம் விடாமுயற்சி இருப்பதில்லை. வெற்றியாளர்கள் தங்களது கனவு நனவாகும் வரை முயற்சி செய்வார்கள். * தோல்வியாளர்கள் வெற்றியாளர்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள், வெற்றி பெற்ற ஒவ்வொருவரையும் பாராட்டுவார்கள். * தோல்வியாளர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பர். வெற்றியாளர்கள் வேலையையும், ஓய்வையும் சரி சமமாக எடுத்துக்கொள்வார்கள். * தோல்வியாளர்கள் கனவு காண்பர். ஆனால் அதனை செய்யமாட்டார்கள். வெற்றியாளர்கள் தங்களது கனவு நிறைவேற என்னவெல்லாம் தேவையோ அதனை செய்து முடிப்பதிலேயே எப்போதும் குறியாக இருப்பர். * தோல்வியாளர்கள் அடுத்த அடிக்கு நகர மாட்டார்கள். ஏனெனில் அடுத்தது என்னாகுமோ என்ற பயம் அவர்களை சூழ்ந்திருக்கும். வெற்றியாளர்கள் தங்களது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விட்டு அடுத்த கட்டத்துக்கு செல்வதையே சிந்தித்து கொண்டிருப்பார்கள். * தோல்வியாளர்கள் ஒரு விஷயத்தை முடியாது என்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் சாத்தியத்திற்கு முடிவே இல்லை என்பார்கள். * தோல்வியாளர்கள் வாழ்க்கையில் தங்களை சுற்றி எவ்வித எதிர்ப்போ, துன்பமோ இருக்கக் கூடாது என நினைப்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் தங்களது எண்ணம் நிறைவேறுவதற்கு என்னவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதனை முறியடித்து முன்னேறுவதையே விரும்புவர். என்ன நீங்கள் வெற்றியாளரா இல்லை தோல்வியாளரா என்பதை தெரிந்து கொண்டீர்களா… வெற்றியாளர்களாக இருப்பின் உங்களது செயலை தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள், இல்லை யென்றால் வெற்றியாளர்களாக மாறுவதற்கு முயற்சியுங்கள். Chandrasekaran Vembu Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 14 Nov 2014 07:30 AM PST |
Posted: 14 Nov 2014 07:26 AM PST |
Posted: 14 Nov 2014 07:10 AM PST நேரு பிரதமராக இருந்த சமயம், டெல்லியில் உலகக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சிலரும், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் சென்றனர். கண்காட்சியைத் திறந்து வைத்து உள்ளே நுழைந்தபோது, அப்போது புதிதாக அறிமுகம் ஆன எடை பார்க்கும் இயந்திரம் தென்பட்டது. நேரு ஆர்வத்துடன் அதில் காசு போட்டு எடை பார்த்தார். அமைச்சர்களும் அவ்வாறே செய்தனர். காமராஜர் எங்கே என்று பார்த்தபோது, அவரோ சற்று விலகி, ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். "வாருங்கள் - எடை பாருங்கள்' என்று நேரு அழைக்க, காமராஜர் தயங்கினார். பிரதமர் அழைத்தும் மறுக்கிறாரே என்று அமைச்சர்கள் எண்ணிய வேளையில் நேருவே அதற்கான காரணத்தைக் கூறினார். "தலைவர் ஏன் தயங்குகிறார் என்று எனக்குத் தெரியும். இந்த எடை மெஷினில் போடக்கூட அவரிடம் காசு இருக்காது' என்று கூறிக்கொண்டே காமராஜரை அருகில் அழைத்து, தானே காசு போட்டு எடைபார்க்க வைத்தார் நேரு.. #என்னவென்று_சொல்வது_இவரை... Relaxplzz |
Posted: 14 Nov 2014 07:03 AM PST |
Posted: 14 Nov 2014 06:29 AM PST |
Posted: 14 Nov 2014 06:17 AM PST டிராஃபிக் ராமசாமி BY பத்ரி சேஷாத்ரி தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன். டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது. இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது., இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது. படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை. பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார். போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு 'டிராஃபிக்' என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். "போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்" என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி. 1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன. எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் "வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்" என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார். இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார். ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் "எனக்கு பெயில் கொடுங்கள்" என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார். இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர். கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார். இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது. விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை 'ஒன் மேன் ஆர்மி' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது. 82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி. அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது. முழுமையாகப் பாருங்கள். Relaxplzz ![]() "முகங்கள்" |
Posted: 14 Nov 2014 05:45 AM PST தன்னம்பிக்கையை அதிகரிக்க !!! 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும். 4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும். 5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 14 Nov 2014 05:34 AM PST |
Posted: 14 Nov 2014 05:00 AM PST கருப்பட்டியின் பயன்கள்:- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோ க்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. Relaxplzz |
Posted: 14 Nov 2014 04:26 AM PST என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் ! இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் ! கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் ! காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் ! என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !! காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !! மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !! பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !! கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !! மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !! எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !! நீச்சல் கற்றுத் தந்தவள் !! கால்சட்டை போட்டு விட்டவள் !! எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து என் கண்ணே பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !! உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !! கண்ணீரில் கவலையில் தலையணை நனைத்தவள் ! வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !! நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !! திரும்பிப் பார்க்கிறேன் ... அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை; விண்மீன் கணக்கானவை .! ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!.. நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ... ( I love you amma ) இவண் - கமல் Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 14 Nov 2014 04:00 AM PST நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் ! போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது. நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் ! Relaxplzz |
Posted: 14 Nov 2014 03:00 AM PST உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை! 1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும் 2) அதை இரண்டால் பெருக்கவும்.. 3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும் 4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும் 6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண். மற்ற (2 digit) எண் உங்களின் வயது..! Relaxplzz |
Posted: 14 Nov 2014 02:33 AM PST உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில் இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று ஆணையிட்டார்.. முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்.. இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்... இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்... முதல் வரிசையில் பல மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்.. கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்... "பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல? உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க. எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி".. சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில வார்த்தைல விளக்கம் சொன்னாரு.. "அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே, என் பொண்டாட்டி இரண்டாவது வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்" :P :P Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 14 Nov 2014 01:56 AM PST சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் : சென்னை: - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும்அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது. மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது மற்றொரு பெயர் காரணம். மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய கிருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது. சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது. கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது. பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது). சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு. எழும்பூர் : இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழும்பூர் . பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம். ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம். சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அளவிலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை. தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை. புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம். அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை. செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு. பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர். பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம். பரங்கிமலை:- பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது. பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி. நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம். ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம். போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர். குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க). ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர். சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம். நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது. யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம். ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யான கவுணி. மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்- விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும். ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா....... முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி. முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம். அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம். யப்பா!! என்னங்க?? வரலாற்றை படிக்கும் போது ஆச்சர்யமா இருக்கா??? Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 1 |
Posted: 14 Nov 2014 01:30 AM PST |
Posted: 14 Nov 2014 01:00 AM PST நாராயணசாமி நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விரிந்து படைச்சுட்டாரு...) காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி... உள்ளே சென்று மனைவியிடம்.. நாராயணசாமி : (தயங்கிக்கொண்டே...) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ? மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்? நாராயணசாமி : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..) மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க.... நாராயணசாமி : :O :O :P :P Relaxplzz |
Posted: 14 Nov 2014 12:30 AM PST //படித்து பகிரவும்// சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீரை காக்க ஒரு நிறுவனத்தை எதிர்த்து போராடி வென்ற கதையை பார்த்து நம்மில் பலர் உணர்வுபூர்ணமாக அந்த படத்தின் இயக்குனரை பாராட்டினோம். அதை போன்ற ஒரு போராட்டம் தமிழகத்தில் திருச்சியை சேர்ந்த சூரியூரில் நடந்து கொண்டு இருப்பதை நம்மில் பலர் அறிந்து இருக்க மாட்டோம். ஆம், நம் உடல் நலத்தை கெடுக்கும் பெப்சி குளிர்பானம் தயாரிக்க சூரியூர் தண்ணீர் வளம் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலை எந்த வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து கிராம மக்கள் போராடினால் வழக்கம் போல தவறு செய்த தொழிற்சாலையை காப்பாற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் தற்பொழுது திருவெரும்பூர், ஏ.எஸ். மஹாலில் (சாந்தி தியேட்டர் அருகில்) அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை அனைவரும் முடிந்த அளவு பகிரும்படிகேட்டுக் கொள்கிறோம். இயக்கத்தில் இருந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளோம். வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக உள்ளோம். மேலும் அவர்களுக்கு உதவ விரும்புவோர் 8190849055, 9629093144, 9791702630, 9976163444, 9715940745, 9500189319 ஆகிய எண்களில் போராட ஒருங்கிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். via சட்ட பஞ்சாயத்து இயக்கம் நன்றி:- Raja Ilaya Marudhu Relaxplzz ![]() |
Posted: 14 Nov 2014 12:00 AM PST *மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். *மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். *பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். *பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். *தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். *அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம். *தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம். பாசம் நிறைந்த குடும்பம்... 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.... Relaxplzz |
Posted: 13 Nov 2014 11:29 PM PST இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ''வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நிறைவேறுவதற்கான தருணம் திருமணத்தில்தான் தொடங்குகிறது. "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வரமுடியும்" என்கிற மனநல ஆலோசகரான வாசுகி சிதம்பரம் சொல்லும், மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே... 1. காதலை விட மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும். 2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும். 3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும். 4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அந்யோன்யம் அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல. 5. உன் சம்பளம் 'உனக்கு, எனக்கு' எனப் பிரித்துக் கொள்ளாமல் 'நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறாயா?' என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம். 6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல். 7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள். 8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும். 9. உயர் படிப்புப் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் 'குடும்பக் கல்வி' என்பது இருவருக்குமே பொதுவானது. 10. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்னை பெரிதாகாமலும் தடுக்க முடியும். 11. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 12. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. 13. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும். கவனம்! 14. தீய / நெகடிவ்வான குணங்களை ஒரு தாளில் எழுதி அதை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம். 15. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்னைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது. 16. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணத்துக்கு அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும். 17. வாழ்க்கை முறை, மன பக்குவம், பிரச்னைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம். 18. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும். 19. ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்னைகளில் வளைந்து கொடுங்கள். 20. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம். நன்றி விகடன்/சாம் மகேந்திரன் Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 13 Nov 2014 11:00 PM PST இது சரியா நீங்களே சொல்லுங்க!!! ஒரு டிவீயிலே ஹெல்த் புரோக்ராம்லே ஒரு டாக்டர் நம்பர் குடுத்து நம்ம சம்தேகங்களுக்கு விளக்கம் தர்றதா சொன்னாங்க. நானும் என்னோடோ ரொம்ப நாள் கால் வலிக்கு ஒரு வழி தேடலாமேன்னு போன் போட்டேன். டாக்டர் : ஹலோ சொல்லுங்க சார் நான் : சார் எனக்கு ரொம்ப நாளா எனக்கு கால் வலி சார் டாக்டர் : சரியா கேக்கல்லை நான் : எனக்கு ரொம்ப நாளா எனக்கு கால் வலி சார் டாக்டர் : கொஞ்சம் டீவீ சத்தத்தை கம்மி பண்ணுங்க. நான் : தாங்க யு டாக்டர் சுத்த அக்கெனப்பய டாக்டர்னு நினைக்கிறேன். டீவீ சௌண்டை கம்மி பண்ணினா வலி போயிருமா? நீங்க சொல்லுங்க :O :O Relaxplzz |
Posted: 13 Nov 2014 10:27 PM PST மெளனம் என்பது என்ன? சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம். ஒரு மனிதனால் எண்ணங்கள் இல்லாமல் மெளனமாக இருக்க முடியுமா? உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் ஏன் பிறந்தது முதல் இறப்பு வரையிலும் இதயம் துடித்து கொண்டே இருக்கிறது ரத்தமும் அப்படியே ஓடிகொண்டே இருக்கிறது. நாம் நினைத்தாலும் அவைகளை நிறுத்தி விட முடியாது. நிறுத்தி விட்டால் மரணம் சம்பவிக்கும் எண்ணங்கள் என்பது அப்படி அல்ல நினைவிலும் கனவிலும் அவைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருந்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியும். ஒன்றையே நினைத்து ஒன்றிலே கரைந்து ஒன்றிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த ஒன்றும் மறைந்து எதுவுமற்ற மோன நிலை சித்திக்கும் மோன நிலை அடைய என்ன செய்ய வேண்டும்? அறிவு, ஆராய்ச்சி, கேள்விகள், பதில்கள் எல்லாவற்றையும் காலணிகளை கழற்றி போடுவதை போல் போடுங்கள் இப்படி சொல்வது எளிது செய்வது கடினம் கடினமானது என்றால் அதை விட்டு விடலாமா? விட்டு விட்டால் மோன நிலையை அடைய முடியாதே என்று கேட்பது புரிகிறது. அறிவும் ஆராய்ச்சியும் எதற்க்காக? எதோ ஒன்றை தெரிந்து கொள்வதற்காக. அந்த எதோ ஒன்று எது என்பதில் தான் போராட்டம் இருக்கிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிய முயல வேண்டும். அறிந்த பிறகு மோன நிலை தானாக கிடைக்கும். எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம்? பூமி சுற்றுவது எதனால்? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஒழுங்கு முறைப்படி இயங்குவது எதனால்? கண்ணுக்கு தெரியாமல் கருத்துக்கு புலப்படாமல் எங்கோ இருந்து இயக்குவிக்கும் ஒரு மூலபொருளே அதற்கு காரணம். அந்த மூல பொருளை அறிந்தால் அறிய முயற்சித்தால் எல்லாவற்றையும் அறியலாம். இதற்கு எளிய விளக்கம் என்ன? கண்ணுக்கு தெரியாத கடவுளை காண முயலுங்கள் கருத்துக்கு அகப்பாத கடவுளை அகப்படுத்த அதாவது உள்ளத்திற்குள் உணர துவங்குங்கள் அறியாதது எல்லாம் அறியப்படும். அறிந்த பிறகு ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் வராது. கேள்விகள் இல்லை என்றால் சிந்தனை குளத்தில் அலைகள் இல்லை அதாவது எண்ணங்கள் இல்லை எண்ணங்கள் இல்லாத போது மெளனம் வரும். மெளனத்தின் உள்ளே மோன வடிவமாக கடவுள் இருப்பான். கடவுளை கண்டவன் கடவுளே ஆவான். அப்படி என்றால் மனிதனும் கடவுள் ஆகலாமா? கடவுள் இருக்கிறார் அவர் இல்லை என்பதை வாதங்களால் எண்ணங்களால் வார்த்தைகளால் நிரூபிக்க முடியாது உணர்வுகளால் மட்டுமே நிரூபிக்க முடியும். கடவுள் உணர்வு மிக ஆழமானது அது உனக்குள்ளே புதைந்து கிடக்கிறது. உன்னை தோண்டி பார்த்தால் கடவுள் கிடைப்பார் அதாவது உனக்குள்ளே கிடைப்பார். அப்படி என்றால் நீயும் அவரும் வேறு வேறல்ல வேறு வேறாக தெரிகிறீர்கள் அவ்வளவே. Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 13 Nov 2014 10:00 PM PST பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது... அமைதி வேணும் அதிகாரம் பண்ண கூடாது... கட்டுபாடு வேணும் இப்படி கத்த கூடாது... பயபக்தியா இருக்கணும் இப்படி பஜாரித்தனம் பண்ண கூடாது.... மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்.... இந்த டயலாக்கை ரஜினி பேசுனா கை தட்டி ரசிக்குதுங்க பொண்ணுங்க.... புருசன் பேசுனா கையை முறுக்கி நெஞ்சுலையே குத்துதுங்க.... :P :P படித்ததில் ரசித்தது Relaxplzz |
Posted: 13 Nov 2014 09:29 PM PST :) குழந்தைப்பருவத்தில் வரையறுக்கப்பட்ட அனுபவங்கள் :) ......கலர் பென்சில் வண்ணத்தை தேர்ந்து எடுப்பதில் இருந்த குழப்பத்திற்கு பெயர் கடினமான வேலை . ......பஸ்சில் ஜன்னலோர சீட்டில் ஓடி வந்து அவசரமாக உட்காரும்அந்த செயலுக்கு பெயர் ஆவேசம்/வேகம் . .......பிறந்த நாளன்று கிடைக்கும் அந்த ஒரு toffeeக்கு பெயர் சந்தோசம் .......வகுப்பில் முதலில் போர்டில் இருந்து பாடத்தை எழுதி முடித்ததும் கிடைக்கும் அந்த நொடிக்கு பெயர் பெருமை . .....பரீட்சையில் கைவைத்து மறைத்து கொண்டு யாரும் காப்பி அடிக்க விடாமல் எழுதுவதற்கு பெயர் சுயனலம். .......வீட்டு பாடம் (homework) ஒரு கொடுமை என்று கருதப்பட்டதை சீக்கிரம் முடித்து விட்டால் கிடைக்கும்மீதி நேரத்தின் பெயர் விளையாட்டு நேரம் . நேரத்தோடு உறங்கி நேரத்தோடு எழுந்திரு என்ற வார்த்தைகள் வாழ்கையின் மந்திரம். இன்னும் சொல்லிகொண்டே போகலாம் ...... இது எனது அனுபவம்..உங்களுடயதும் இதனுடன் பொருந்தும் என நினைக்கிறன். எல்லோரும் ரிலாக்ஸ் ப்ளீஸ் - யில் குழந்தைகள் தான்.. எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதனால் ...... ;-) HAPPY CHILDREN`S DAY ;-) குழந்தைகள் தின வாழ்த்துக்கள் .... - Chitra Chari Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment