Facebook Tamil pesum Sangam: FB page posts |
- உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!! உன...
- மாற்றத்தை நோக்கி அழகான கருத்தைக் கொண்ட குறும்படம்! நீங்களும் பார்த்து பயன்பெறுவ...
- என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள்...
Posted: 13 Nov 2014 10:03 PM PST உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!! உன் உளறல்கள் ஒவ்வொருன்றும் கவிதை !! நீ இறைவனின் மொழிப் பேசும் இறைவன் !! உன் எச்சில் துளி தேன் துளி !! உன் நடையில் ராணுவப் படையும் தவிடுபொடி !!! உன் பொம்மைத் துப்பாக்கி அணுகுண்டுகளை விஞ்சும் !! உன் அழுகை மேகத்தை மிஞ்சும் !! மரங்களில் ஏறும் பாம்பைப் போல ஏறுகிறாய் என் மேல் !! கதவருகே ஒளிந்து கொண்டு தேட வைக்கிறாய் !!! ஊருக்காக உதட்டு புன்னகையை உடுத்தி திரிபவர்கள் நாங்கள் !!! நியோ உளமாற சிரிக்கிறாய் உண்மையாய் அழுகிறாய் !! தவறி விழுகிறாய் தாய்க்கண்டு அழுகிறாய் தானே எழுகிறாய் !! உன் தூக்கம் உலகின் இரவு !!! உன் விழிப்பு உலகின் பகல் !! உன் வாசனைக்கு உலக வாசனைத் திரவியங்கள் ஒரு பொருட்டே அல்ல !! உன் பாதச்சுவடுகள் அழியாதபடிக்கு என் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றன ..... இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த கவிதை அனைத்து குழந்தைகளுக்கும் சமர்ப்பணம் .. இனிய காலை வணக்கம் நண்பர்களே !!! இவண் - கமல் ![]() |
Posted: 13 Nov 2014 07:30 PM PST மாற்றத்தை நோக்கி அழகான கருத்தைக் கொண்ட குறும்படம்! நீங்களும் பார்த்து பயன்பெறுவதுடன் நண்பர்களுக்கும் பகிரவும்! அனுப்பியவர்:- கார்த்திக் பாரதி காணொளி இணைப்பு:- https://www.youtube.com/watch?v=OgUR45ypL5o&feature=youtu.be ![]() "கஞ்சன்" (Kanchan) குறும்படம்! |
Posted: 13 Nov 2014 11:41 AM PST என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் ! இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் ! கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் ! காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் ! என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !! காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !! மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !! பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !! கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !! மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !! எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !! நீச்சல் கற்றுத் தந்தவள் !! கால்சட்டை போட்டு விட்டவள் !! எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து என் கண்ணே பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !! உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !! கண்ணீரில் கவலையில் தலையணை நனைத்தவள் ! வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !! நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !! திரும்பிப் பார்க்கிறேன் ... அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை; விண்மீன் கணக்கானவை .! ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!.. நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ... ( I love you amma ) இனிய இரவு வணக்கம் .. இவண் - கமல் ![]() |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment