Relax Please: FB page daily Posts |
- காதல் தோல்வியிலிருந்து விடுபட சூப்பரான வழிகள் ! ஆசையாக காதலித்தவர்களுக்கு அவர்க...
- அய்யா! தர்மம் பண்ணுங்க அய்யா குரலை கேட்டதும் வெளியே வந்தான் கோவாலு ... உடம்பி...
- கொஞ்சம் சிரிங்க பாஸ் ! :P :P 1 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக...
- மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸ...
- சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர...
- எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா ? *************** "கல்லைக் கண்...
- பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப...
- ஒரு கார்ப்பரேட் நீதி கதை ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலி...
- விந்தையான சிந்தனைகள்... 1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத...
- ;-) Relaxplzz
- ஒரு பல்லியால் முடியும்போது ஏன் நாம் செய்ய கூடாது ? இது உண்மை நிகழ்வு . ஜப்பான்...
- ஒரு திருமண வீடு களைகட்டியிருந்தது. பணக்காரன் வீட்டு திருமணம் என்பதனால் பெரிய மனி...
- "பிளேடு ஹோட்டல்" SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? CUSTOMER : தோசை வேணும்...
- ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு...
- யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...
- கிராமமும் நகரமும் .... வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகரத்...
- #ஆயக்கலைகள்_64_பற்றி_தெரிந்து_கொள்ளுவோம் !!! நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைக...
- கோடி...கோடியாக பணம் இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனமில்லா மனிதர்களின் மத்தியில் தி...
Posted: 18 Jun 2015 10:10 AM PDT காதல் தோல்வியிலிருந்து விடுபட சூப்பரான வழிகள் ! ஆசையாக காதலித்தவர்களுக்கு அவர்களது காதல் முறிந்துவிட்டால் வாழ்க்கையே இழந்துவிட்டது போல் தோன்றும். காதல் தோல்வியில் இருக்கும் போது வேறு காதல் ஜோடிகளை பார்த்தாலே பழைய நினைவுகள் வந்து தொற்றிக் கொள்ளும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காதல் தோல்வியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியானதை சிந்தியுங்கள் ஆசையாக காதலித்த நபர் நம்மை விட்டு சென்றுவிட்டாரே என்று கவலைகொள்ளாமல், அவர் நம்மை விட்டு எதற்காக சென்றார் என்று சிந்தியுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் என்றால், ஈகோ பார்க்காமல் சமாதானம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம் என்றால் மறந்துவிட்டு அமைதியாக இருப்பது நல்லது. அதோடு இல்லாமல் உங்களது பழக்கவழக்கத்தால் காதல் பிரிவு வந்தால் அதனை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எழுதுங்கள் கவலையில் இருக்கும் நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவைகளை எழுதுவதும் ஒரு வழியாகும். எண்ணங்கள் மூளையில் இருக்கும் வரையில் அது உங்களுக்கு தொந்தரவாகவே இருக்கும். அதனால் ஒருதாளில் அனைத்தையும் எழுதி உங்கள் மனபாரத்தை குறையுங்கள். பயணம் செய்யுங்கள் பயணம் என்பது கவலைகளை மறப்பதற்கு ஒரு எளிய வழி, உங்களுக்கு பிடித்த இடத்தை தெரிவு செய்யுங்கள். இதுவரை நீங்கள் சென்றிராத புதிய இடத்திற்கு உங்கள் நண்பர்களோடு சென்று வித்தியாசமான அனுபவத்தை பெற்றிடுங்கள். நண்பர்களோடு பேசுங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, வெளியே சென்று நண்பர்களை சந்தியுங்கள். ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது உங்களின் மனதில் பழைய நினைவுகளை அலைபாய தொடங்கும். இதனால் நிலைமை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் நண்பர்களிடம் பேசுங்கள், நேரத்தை அவர்களுடன் செலவழித்து கவனத்தை திசை திருப்புங்கள். புதுமையாக மாறுங்கள் காதலிக்கும் போது இருக்கும் ஒருவித உற்சாகம் காதல் முறிவிப்பிற்கு பின்னர் இருப்பதில்லை, ஆதலால் மனதுக்கு பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களோடு உரையாடுங்கள். ஒருமுறை வாழும் வாழ்க்கையை காதல் தோல்வியால் கழித்துவிடாமல், அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். அந்த மனதோடு ஒத்துப்போனால் இரு மனங்களும் திருமணத்தில் இணையுங்கள். Relaxplzz |
Posted: 18 Jun 2015 09:10 AM PDT அய்யா! தர்மம் பண்ணுங்க அய்யா குரலை கேட்டதும் வெளியே வந்தான் கோவாலு ... உடம்பில் குறை ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் அவன் முன் நிற்க கோபம் வந்தது அவனுக்கு "ஏனப்பா. உடம்பு நன்றாய் தானே இருக்கிறது உழைத்து சாப்பிட்டால் என்ன?" கேள்வியில் காட்டினான் கோவாலு அவன் எரிச்சல் கலந்த கோபத்தை கண் தெரியாத குருடன் அய்யா தன் நிலையை எடுத்துரைக்க வாய் திறந்தான் பிச்சைக்காரன் "பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை காசு எல்லாம் இல்லை.. போ..." கடுமையாய் சொல்லிவிட்டு உள்ளே கோவாலு போக நினைக்கையில் "என்னங்க எங்கப்பாவிடம் வண்டி வேண்டும்னு சொன்னீங்களே கடையில் சொல்லிட்டாராம்.. உங்களிடம் பேசணும்னு சொல்றார்" என்றபடி கையில் கைபேசியோடு வந்தாள் கோவாலுவின் மனைவி இதை கேட்டபடி நின்றிருந்த பிச்சைக்காரன் மெலிதாய் உதிர்த்த புன்னகையில் மௌனமாய் கேட்டு விட்டான் கோவாலுவிடம் "உடம்பு நன்றாய் தானே இருக்கிறது.. உழைத்து சாப்பிட்டால் என்ன?" என்ற கேள்வியை...!!! :) :) Relaxplzz |
Posted: 18 Jun 2015 08:10 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ் ! :P :P 1 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 2 போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 3 மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா 4 மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? கணவன்: அது ஒரு இறந்த காலம்.... 5. நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்'க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற? பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்.. நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா.. 6 .நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்... "இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்." 7. நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்? * J to the A to the V to the A --JAVA * கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்'லாத்தான் வரும். * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++ 8. நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை….. நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?.. நபர் – 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்…. 9. இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர் மு தலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார். சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான் 10. நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணு ம் 11. நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்" "உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க? 12. எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது? ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா. 13. ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி? என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் 14. என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க. அப்படியா... என்ன பண்ணினாங்க? எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம் 15. கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்? ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்? கோபால் : நான் home work செய்யலை சார் :P :P Relaxplzz |
Posted: 18 Jun 2015 07:00 AM PDT மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலை உயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சய பாத்திரத்தை அழிக்க விடாமல் தடுத்து அதை காக்க உறுதி எடுப்போம். Relaxplzz ![]() |
Posted: 18 Jun 2015 06:10 AM PDT சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். வெது வெதுப்பான தண்ணீர் உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர். ஜீல் தண்ணீர் வேண்டாமே ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. Relaxplzz |
Posted: 18 Jun 2015 05:10 AM PDT எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா ? *************** "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" சரியான பழமொழி : ************************* "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்". விளக்கம் : ************ இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது. கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும். மற்றும் சில பழமொழிகள்: ******************************* க) ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி. உ) படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு. ************** ************** படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி. *************** *************** ங) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு. ******* ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி. ******** ச). நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு. ***** நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி. ****** ( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். ) ரூ) . அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு. அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம். மாறுவோம்...பிறரை மாற்றுவோம். Relaxplzz |
Posted: 18 Jun 2015 04:10 AM PDT பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பசுமாட்டின் மீது கார் ஒன்று மோதி நிற்காது சென்று விட்டது. அந்த வழியே சென்ற சிலர் அந்த வழியே சென்ற சிலர் தோல் கிழிந்த தொங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக நின்ற அந்த கர்ப்பிணிப் பசுவின் தோலை தைக்க உதவினர். கூட்டத்தில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சையத் அப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து கிழிந்த தோலைத் தைத்து உதவினார். தெருவிளக்கு எதுவும் எரியாத நிலையில், இருட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இந்த ஆபரேசனைச் செய்து முடித்தனர். மகத்தான மனிதாபிமானச் செயலுக்கு நன்றி. (y) - கோவை பாலா @ Relaxplzz ![]() |
Posted: 18 Jun 2015 03:10 AM PDT ஒரு கார்ப்பரேட் நீதி கதை ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது. மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான். வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது. நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். Relaxplzz |
Posted: 18 Jun 2015 02:10 AM PDT விந்தையான சிந்தனைகள்... 1) "நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே" >>2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான். >>3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார். >>4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார். >>5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். >>6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. >>7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. >>8) "ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!" >>9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள் >>10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!! >>11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் >>12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். >>13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக *கிடை த்தே தீரும்.. Relaxplzz |
Posted: 18 Jun 2015 12:20 AM PDT |
Posted: 17 Jun 2015 11:10 PM PDT ஒரு பல்லியால் முடியும்போது ஏன் நாம் செய்ய கூடாது ? இது உண்மை நிகழ்வு . ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார். ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார். அவர் அப்போதுதான் கவனிச்சாறு. வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறதுன்னு. அவருக்கு ஆச்சரியமா இருந்தது. ''அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும்'' னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டாரு. அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு. ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா ??? Relaxplzz |
Posted: 17 Jun 2015 10:10 PM PDT ஒரு திருமண வீடு களைகட்டியிருந்தது. பணக்காரன் வீட்டு திருமணம் என்பதனால் பெரிய மனிதர்கள் வந்திருந்தனர். மணமகன் தாலி கட்டியதும் மொத்த கூட்டமும் பந்தியை நோக்கிப் பாய்ந்தது. பந்தியில் கூட்டம் குறைந்ததும் ஒரு இளைஞன் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருந்தது. கிசுகிசுப்பாக அவரிடம் "உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!" என்று கேட்டான். சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே "அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…" என்றார் அவர். அந்த இளைஞனுக்கு ஞாபகம் வந்து விட்டது. சாப்பிட்ட பின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்த நபர் கிளம்புகையில் அந்த நபரிடம் இளைஞன் "ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?" என கேட்டான். அவர் சலித்து சொன்னார், "அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?" :P :P Relaxplzz |
Posted: 17 Jun 2015 09:10 PM PDT "பிளேடு ஹோட்டல்" SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? CUSTOMER : தோசை வேணும். SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா? CUSTOMER : வெங்காய தோசை. SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா? CUSTOMER : சின்ன வெங்காயம். SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா? CUSTOMER : நாட்டு வெங்காயம். SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா? CUSTOMER : சின்னதா நறுக்குனது. SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா? CUSTOMER : அதிகமா. SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா? CUSTOMER : அறுத்துட்டே போடு. SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா? CUSTOMER : சிவப்பு. SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா? CUSTOMER : அதிகமா உள்ளது. SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா? CUSTOMER : உரம் போடாதது. SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா? CUSTOMER : கழுவிட்டு போடு. SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா? CUSTOMER : நல்லா வேகணும். SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா? CUSTOMER : நெய். SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா? CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா. SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன். (சாப்பிட்ட பிறகு) SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா. CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா? SERVER : கேஷ் CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா? SERVER : நோட்டா தாங்க. CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா? SERVER : புதியது. CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா? SERVER : காந்தி படம் போட்டது. CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா? SERVER : கண்ணாடி போட்டது. CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா? SERVER : சாதா கண்ணாடி. CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா? SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன். CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் இப்படி பண்ணுவே. :P :P Relaxplzz |
Posted: 17 Jun 2015 08:15 PM PDT ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது."அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார். அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன். சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார். ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான். கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்... அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா.. இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்! :) :) Relaxplzz |
Posted: 17 Jun 2015 07:10 PM PDT யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது. இனி யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உன் தலையினை நீயே வருடிக்கொடு உன் தோள்களை நீயே தட்டு உன் திறமைகளை நீயே பாராட்டு.. உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை தோல்விகளை கண்டு அஞ்சாதே வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே முதலில் உன்னை வென்று பின் உலகை வெல்ல வா.... உடலில் உயிரும் உணர்வில் துணிவும் இருக்குவரை போராடு... உன் எதிரிகளின் மூக்குகளை உன் நம்பிக்கைகளால் உடை நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல உன் கால்களைக்கொண்டு....! (y) (y) Relaxplzz |
Posted: 17 Jun 2015 06:00 PM PDT கிராமமும் நகரமும் .... வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகரத்தான் பச்சை குத்தினால் கிராமத்தான் டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான் மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் மெஹந்தி என்றால் நகரம் மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் Chemical பொடி தூவினால் நகரம் 90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம் மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம் கிழிந்த ஆடை போட்டால் கிராமம் நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம் உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம் கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்.. எது நாகரீகம் Relaxplzz |
Posted: 17 Jun 2015 10:10 AM PDT #ஆயக்கலைகள்_64_பற்றி_தெரிந்து_கொள்ளுவோம் !!! நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64 என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64 1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு; 3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாஸ்திரம்); 8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்); 9. அறநூல் (தர்ம சாஸ்திரம்); 10. யோக நூல் (யோக சாஸ்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்); 14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்; 15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்); 16. மறவனப்பு (இதிகாசம்); 17. வனப்பு (காவியம்); 18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்; 19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி) 20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம் 21. பாட்டு (கீதம்); 22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை); 23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை; 24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு; 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை; 26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்); 27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை); 28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை); 29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை 30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை); 31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை); 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை); 33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை); 34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்); 35. மல்லம் (மல்யுத்தம்); 36. கவர்ச்சி (ஆகருடணம்); 37. ஓட்டுகை (உச்சாடணம்); 38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை; 39. காமம் (காம சாஸ்திரம்); 40. மயக்குநூல் (மோகனம்); 41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்); 42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை); 43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்) 44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை; 45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்); 46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்); 47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்); 48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்); 49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி); 50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்); 51. உடற் (தேகப்) பயிற்சி; 52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்); 53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்); 54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்); 55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்); 56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்); 57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்); 58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்); 59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்); 60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்); 61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்); 62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்); 63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்); 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்); இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலு Relaxplzz |
Posted: 17 Jun 2015 09:30 AM PDT கோடி...கோடியாக பணம் இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனமில்லா மனிதர்களின் மத்தியில் தினந்தோறும் வயிற்று பிழைப்பிற்காக குப்பை பிறக்கும் இந்த சிறுவர்கள் நேபாள மக்களுக்கு உதவ தன்னால் இயன்ற நிதி அளிக்கும் இந்த சிறுவர்களின் மனித நேயத்தை பாருங்கள். சிறுவர்களின் மனித நேயம் புடித்தால் இந்த சிறுவர்களை நாம் பாராட்ட மறக்கலாமா....? Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |