FB Posts by Araathu அராத்து |
- முன்பெல்லாம் ஆழி கார் ஓட்டிக்கொண்டே கத்துவதைப்பார்த்தால் , ஆம்புலன்ஸ் கத்துவது போலிருக்கும். இப்போதெல்லாம் சாலையில் ஆம்புலன்ஸ் கத்திக்கொண்டு செல்வதைப்பார்க்கும்போது ஆழி கத்துவது போல உள்ளது.
- மரணத்தின் நிறம் பெங்களூரில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை ஆம்புலன்ஸ் - விமானம் - ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்ததை செய்தித்தாளில் படிக்கும்போது பிரமிப்பாக இருந்தது. அசாத்தியமான சாதனை இது. இரண்டு மாநில போலீஸார் , டாக்டர்கள் , விமான நிலைய ஊழியர்கள் , பாதுகாப்புப்படையினர் , ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திய சாதனை. ஒரு உயிருக்காக இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள். இதே போல அனைத்து உயிர்களுக்கும் நாம் மெனக்கெடுகிறோமா ? மதிப்பளிக்கிறோமா என்றால் , பதில் பூஜ்யம்தான். எத்தனை லாக்கப் மரணங்கள் ? அரசாங்க மருத்துவமனைகளின் / தனியார் மருத்துவமனைகளின் அலட்சியமான சிகைச்சையால் எத்தனை மரணங்கள்? விபத்தின் போது முதலுதவி அளிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதால் எத்தனை மரணங்கள்? எத்தனை ஆழ்துளை கிணறு குழந்தைகளின் மரணங்கள் ? எத்தனை ஆளில்லா ரயில்வே கேட் மரணங்கள் ? கூலிப்படையினரை சுதந்திரமாக சுற்ற விட்டுக்கொண்டு இருப்பதால் எத்தனை கொலைகள் ? பல்வேறு அரசுத்துறைகளின் அலட்சியத்தால் கும்பகோணம் குழந்தைகள் முதல் மௌலிவாக்கம் வீடு சரிந்ததால் எத்தனையெத்தனை மரணங்கள்? ரோட்டில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் ஒருவரை ஆம்புலன்ஸில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனால் , எவ்வளவு அலட்சியமாக , எவ்வளவு நேரம் கழித்து வந்து பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துப்போகையில் அனைவரும் காட்டும் அக்கறையை ஏன் மற்ற சாதா (!) மரணமடையப்போகும் தருணங்களில் காட்ட மறுக்கிறோம் ? ஒரு உயிரை காப்பாற்றுவதில் கூட ஒரு த்ரில் , சாகசம் , ஒரு எமோஷனல் செண்டிமெண்ட் ,ஒரு சஸ்பென்ஸான திரைகதை நமக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணத்தோன்றுகிறது.
- Video - ப்ரோ இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ???
Posted: 05 Sep 2014 12:44 AM PDT முன்பெல்லாம் ஆழி கார் ஓட்டிக்கொண்டே கத்துவதைப்பார்த்தால் , ஆம்புலன்ஸ் கத்துவது போலிருக்கும். இப்போதெல்லாம் சாலையில் ஆம்புலன்ஸ் கத்திக்கொண்டு செல்வதைப்பார்க்கும்போது ஆழி கத்துவது போல உள்ளது. |
Posted: 04 Sep 2014 06:49 AM PDT மரணத்தின் நிறம் பெங்களூரில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை ஆம்புலன்ஸ் - விமானம் - ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்ததை செய்தித்தாளில் படிக்கும்போது பிரமிப்பாக இருந்தது. அசாத்தியமான சாதனை இது. இரண்டு மாநில போலீஸார் , டாக்டர்கள் , விமான நிலைய ஊழியர்கள் , பாதுகாப்புப்படையினர் , ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திய சாதனை. ஒரு உயிருக்காக இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள். இதே போல அனைத்து உயிர்களுக்கும் நாம் மெனக்கெடுகிறோமா ? மதிப்பளிக்கிறோமா என்றால் , பதில் பூஜ்யம்தான். எத்தனை லாக்கப் மரணங்கள் ? அரசாங்க மருத்துவமனைகளின் / தனியார் மருத்துவமனைகளின் அலட்சியமான சிகைச்சையால் எத்தனை மரணங்கள்? விபத்தின் போது முதலுதவி அளிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதால் எத்தனை மரணங்கள்? எத்தனை ஆழ்துளை கிணறு குழந்தைகளின் மரணங்கள் ? எத்தனை ஆளில்லா ரயில்வே கேட் மரணங்கள் ? கூலிப்படையினரை சுதந்திரமாக சுற்ற விட்டுக்கொண்டு இருப்பதால் எத்தனை கொலைகள் ? பல்வேறு அரசுத்துறைகளின் அலட்சியத்தால் கும்பகோணம் குழந்தைகள் முதல் மௌலிவாக்கம் வீடு சரிந்ததால் எத்தனையெத்தனை மரணங்கள்? ரோட்டில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் ஒருவரை ஆம்புலன்ஸில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனால் , எவ்வளவு அலட்சியமாக , எவ்வளவு நேரம் கழித்து வந்து பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துப்போகையில் அனைவரும் காட்டும் அக்கறையை ஏன் மற்ற சாதா (!) மரணமடையப்போகும் தருணங்களில் காட்ட மறுக்கிறோம் ? ஒரு உயிரை காப்பாற்றுவதில் கூட ஒரு த்ரில் , சாகசம் , ஒரு எமோஷனல் செண்டிமெண்ட் ,ஒரு சஸ்பென்ஸான திரைகதை நமக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணத்தோன்றுகிறது. |
Video - ப்ரோ இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ??? Posted: 04 Sep 2014 05:27 AM PDT |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |