ilovemynative: Facebook page wall posts in Tamil |
- சீனக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்த இந்தியா எதிர்ப்புத் தெரிவிப்பதில் அர்த்தமில்ல...
- சல்லிக்கட்டும் உலக அரசியலும் : இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் ம...
- தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு, மற்றொரு வண்டிடம் கேட்ட...
- சோப்பு போடுவதும், ஆப்பு வைப்பதும் தான் முன்னேற்றத்திற்கான குறுக்கு வழிகள்..!! @...
- #காதல் நண்பர்களை நாய்க்குட்டியாக வும் நாய்க்குட்டிகளை நண்பர்களாகவும் மாற்றி விட...
- #திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #நெஞ்ச...
- சுற்றளவில் சற்றே பெரிய வடையே அடை என்றழைக்கப்படுகிறது. @வெங்கடேஷ் ஆறுமுகம்
- ???
- கட்டணம் கட்டி தான் நம் வங்கி கணக்கில் நாம் சேமித்து வைத்த பணத்தை இனி எடுக்க முடி...
- உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தா ல்.... உலகிலுள்ள விவசாயிகள் அனைவரும...
- அழகு தமிழ்நாடு!
- OLX ல. போட்டோ பிடிச்சு போட்டான் பாருங்க.... நம்ம பயடா நீ...
- இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ... கணவ...
- * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர...
- கேட்ட வாக்கில் எதையாவது ஆதாரமில்லாமல் நம்பிவிட வேண்டும்,, அந்த நம்பிக்கையை எதிர்...
- குழந்தைகள் கஷ்டப்படாதபடி அவர்களை வளர்ப்பது என்பது வேறு; அவர்கள் நமது கஷ்டத்தை அற...
- 'இது இல்லாமல் வாழ முடியாது' என்று எண்ணும் எதையும் கொஞ்ச நாள் விடுத்துப்பாருங்கள்...
- நம்மால் முடியக் கூடிய சிறு வேலைகளைப் பிறத்தியார் செய்யும்போது மகிழ்வதும், அவர்கள...
- சில நேரம், நாம் குடிக்கும் காபியில் சர்க்கரை இருக்காது.இருந் தாலும் சகிச்சிகிட்ட...
- வாசன் கட்சியை விட்டு விலகவில்லை ; நாங்கதான் அவரை கட்சியை விட்டு நீக்கினோம் - காங...
- கோவிலை விட மருத்துவமனையில் சிறிது நேரம் செலவிடும் போதுதான்... மனதில் நல்ல எண்ணங்...
- போராட்டமே வாழ்க்கையாகிறது நம் தமிழினத்திற்கு மட்டும். நாம் என்ன சபிக்கப்பட்ட இனம...
- ஏடிஎம் அட்டை பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது (5/3 முறை மட்டும் இல...
- 800 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போதே நட்பு நாடு தான்.5 எல்லாம் ஜூஜூபி அவர்களுக்கு.
- 'கத்தி' ரூ.100 கோடி வசூலை தாண்டியது :>>நாம திங்குற நாலாவது இட்லி, அடுத்தவனோடதுன...
- அங்க நம்ம சனம் கொத்து கொத்தா சாகும் போது இங்க வெத்தலையை இடுச்சுக்கிட்டு இருந்திட...
- நோக்கியா கொள்ளைக் கணக்கு. இதைத்தான் அந்நிய முதலீடு என அழைத்து வருகிறார்கள். அடிக...
- சாககெடக்கிற கெழவிகளை வெச்சு பேஷன் ஷோ நடத்துறதும்... துரு பிடிச்ச சைக்கிளை ஓவாராய...
- சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நிறுத்தி இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்க இலங...
Posted: 03 Nov 2014 09:00 PM PST சீனக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்த இந்தியா எதிர்ப்புத் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. அது இலங்கையின் இறையாண்மை-பொறுக்கிசாமி. //நாங்க எங்கப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறோம், மொத்த சீனப். டையும் இலங்கையிலும் கட்சத் தீவிலும் இறங்கட்டும் அங்கிருந்து உங்களுக்கு ஆப்படிக்கட்டும் . இந்தியாவுக்கு சீனா எதிரி. தமிழனுக்கு இந்தியா எதிரி. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா எங்களுக்கென்ன?. இப்பவும் நீ எங்களை அழிச்சிட்டுத் தான் இருக்க அவன் வந்து புதுசா என்ன செஞ்சிடப் போறான்?. ![]() |
Posted: 03 Nov 2014 08:46 PM PST சல்லிக்கட்டும் உலக அரசியலும் : இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding); இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation). இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும். சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது. தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர். தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம். எங்கள் அமைப்பில் உங்களுக்கு செயல்பட விருப்பமென்றால் 9677913233 என்ற அலைபேசி எண்ணை அழைக்கவும். "தன்தமிழ் பொதுஎன பொறான்"... தமிழர் உலகம் . ![]() |
Posted: 03 Nov 2014 07:14 PM PST தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு, மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று!!! @காளிமுத்து |
Posted: 03 Nov 2014 06:59 PM PST சோப்பு போடுவதும், ஆப்பு வைப்பதும் தான் முன்னேற்றத்திற்கான குறுக்கு வழிகள்..!! @mrithula |
Posted: 03 Nov 2014 06:42 PM PST #காதல் நண்பர்களை நாய்க்குட்டியாக வும் நாய்க்குட்டிகளை நண்பர்களாகவும் மாற்றி விடும் சக்தி கொண்டது :P #களவாணி பய |
Posted: 03 Nov 2014 06:26 PM PST #திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #நெஞ்சொடுகிளத்தல் #உரை: நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.. #Translation: O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away. #Explanation: O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.. @Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 03 Nov 2014 10:19 AM PST சுற்றளவில் சற்றே பெரிய வடையே அடை என்றழைக்கப்படுகிறது. @வெங்கடேஷ் ஆறுமுகம் |
Posted: 03 Nov 2014 09:30 AM PST |
Posted: 03 Nov 2014 09:29 AM PST கட்டணம் கட்டி தான் நம் வங்கி கணக்கில் நாம் சேமித்து வைத்த பணத்தை இனி எடுக்க முடியும்..... கொள்ளையடிப்பதில் இது ஒரு புது வகை...... @நல்ல சிவம் |
Posted: 03 Nov 2014 08:34 AM PST |
அழகு தமிழ்நாடு! Posted: 03 Nov 2014 08:16 AM PST |
Posted: 03 Nov 2014 08:04 AM PST |
Posted: 03 Nov 2014 07:39 AM PST இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ... கணவனும் வந்து ... அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ... பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ... மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் .... " நீ சாப்பிடவில்லையா ?" என்று கணவன் கேட்க .... " எனக்கு பசியாக இருந்தது . அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன் " என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்.... என்ன செய்வான் ? சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம்" இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க ? " என்று கேட்டவளுக்கு ... " ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்" என்று கூறிவிட்டு ... சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான உணவு வாங்கி வந்து ... " இந்தா சாப்பிடு... " என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய... உண்ணுவாளே.... அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை ! ![]() |
Posted: 03 Nov 2014 07:38 AM PST * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல. சாவுன்னா பயம் ல? * ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல. அவ்ளோ தைரியசாலி ல ? * யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல. எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல? * ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல. அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல? * மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்? புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ? * காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்? - யாரோ ![]() |
Posted: 03 Nov 2014 07:04 AM PST கேட்ட வாக்கில் எதையாவது ஆதாரமில்லாமல் நம்பிவிட வேண்டும்,, அந்த நம்பிக்கையை எதிர்த்து யார் பேசினாலும் காண்டாகி விட வேண்டும்,,, தனக்கு தெரிந்த/ தான் நம்பிய டேட்டாவை வைத்து, தான் நம்பியது தான் சரி என்று இறுதி வரை வாதிட வேண்டும்,, கடைசி வரை தன்னை விட்டுக்கொடுக்க கூடாது,,, (பாழாப்போன மூள இப்படித்தான் இயங்குகிறது, அது பாவம் தான், எது உண்மை என்று அதற்கும் தெரியாது தான்.) @சகலகலா ஜீன்ஸ் |
Posted: 03 Nov 2014 07:00 AM PST குழந்தைகள் கஷ்டப்படாதபடி அவர்களை வளர்ப்பது என்பது வேறு; அவர்கள் நமது கஷ்டத்தை அறியாதபடி வளர்ப்பது என்பது வேறு. பெரும்பாலும் நாம் முதலாவதைச் செய்வதாக எண்ணிக் கொண்டு இரண்டாவதைச் செய்கிறோம். @Yesses Bee |
Posted: 03 Nov 2014 06:55 AM PST 'இது இல்லாமல் வாழ முடியாது' என்று எண்ணும் எதையும் கொஞ்ச நாள் விடுத்துப்பாருங்கள். பின், எது இல்லாமலும் வாழ முடியும் என்று புரியும். இது, காபியிலிருந்து காதல் வரை அனைத்திற்கும் பொருந்துவதே. @Yesses Bee |
Posted: 03 Nov 2014 06:53 AM PST நம்மால் முடியக் கூடிய சிறு வேலைகளைப் பிறத்தியார் செய்யும்போது மகிழ்வதும், அவர்களால் முடியக் கூடிய சிறு வேலைகளை நாம் செய்து அவர்களை மகிழ்விப்பதும் அன்போ, பாசமோ ஆகாது. அது சோம்பேறித்தனத்தை சோறு போட்டு வளர்ப்பதே. @Yesses Bee |
Posted: 03 Nov 2014 06:48 AM PST சில நேரம், நாம் குடிக்கும் காபியில் சர்க்கரை இருக்காது.இருந் தாலும் சகிச்சிகிட்டு கடைசி வரை குடிப்போம். அப்புறம் பார்த்தால் சர்க்கரை எல்லாம் அடியில இருக்கும். அதே மாதிரி தான் நம்ம #வாழ்கையும், சில நேரங்களில் சரியாக கலக்கபடாமல்... @இளையராஜா |
Posted: 03 Nov 2014 04:22 AM PST வாசன் கட்சியை விட்டு விலகவில்லை ; நாங்கதான் அவரை கட்சியை விட்டு நீக்கினோம் - காங்கிரஸ் #எங்களை அடிச்சதால செருப்பு பிஞ்சு போகலை, பிஞ்ச செருப்பாலதான் நாங்க அடிவாங்குனோம். :P @தியாகராஜ் |
Posted: 03 Nov 2014 03:37 AM PST கோவிலை விட மருத்துவமனையில் சிறிது நேரம் செலவிடும் போதுதான்... மனதில் நல்ல எண்ணங்கள் அதிகம் தோன்றுகிறது.. -காளிமுத்து |
Posted: 03 Nov 2014 02:14 AM PST |
Posted: 03 Nov 2014 01:59 AM PST போராட்டமே வாழ்க்கையாகிறது நம் தமிழினத்திற்கு மட்டும். நாம் என்ன சபிக்கப்பட்ட இனமா..?? எதற்கெடுத்தாலும் யாராவுது தடை போடுகிறார்கள். நீருக்கு போராட்டம். மின்சார பகிர்விற்கு போராட்டம். மீன் பிடிக்கப்போராட்டம், நம் மொழியை காப்பாற்றவே தனிப்போராட்டம், கடைசியில் நம் உயிர்வாழவே போராட்டம். அப்படி நம் தமிழினம் செய்த தவறு தான் என்ன..?? பீர்மேடு thevikulam ன்னு 23 தமிழ் கிராமத்தை கேரளாவிற்கு பரிசளித்தோம். ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் சில பல கிராமங்களை(முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள்) வாரி வழங்கினோம். நம் தமிழ்நாட்டு சொத்தான கச்சைத் தீவை பரிசாக கொடுத்தோம். எல்லாருக்கும் நாம் தானய்யா கொடுத்தோம். அப்பறமும் ஏன் எதோ நாம் பிடிங்கின மாதிரி நம்மளையே அடிக்கிறாங்க..?? அடப்பாவிகளா கொஞ்சம் கூட நன்றி விசுவாசமே வேணாமா.?? எத்தனை தடைகள் வந்தாலும் தமிழர்ப் படை முன்னேற்ற பாதையில் செல்வதே அவர்களுக்கு நம் மீதுள்ள பொறாமையை அதிகரிக்கிறது. போராட்டத்திற்கு நடுவே வாழ்வை வாழ்பவன் தமிழன் தான். @தனபால் ஆறுமுகம் |
Posted: 03 Nov 2014 01:34 AM PST ஏடிஎம் அட்டை பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது (5/3 முறை மட்டும் இலவசம்). இது வங்கி இருப்பை சோதிப்பதற்கும் பொருந்தும். பெரும்பாலான ஆயத்த ஆடை நிறுவனங்களில் சம்பளம் ஏழாம் தேதி முதல் பத்தாம்தேதிவரைக்கும் எப்போது வேண்டுமானாலும் வரும். சம்பளம் வந்துவிட்டதா என உறுதிப்படுத்தவே மூன்று நான்கு முறை அட்டையை தேய்க்கும் நிலைதான் பலருக்கும் இருக்கிறது. அதற்கும் மேலே ஒரு குறுகியகால சேமிப்பிடமாகவே வங்கிக்கணக்கு எங்கள் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. முந்னூறும் ஐந்நூறுமாக மாத இறுதியில் எடுத்தே அவர்கள் செலவு செய்கிறார்கள். கடன் அட்டையை பயன்படுத்துகிற, இணைய வங்கிச்சேவையை பயன்படுத்துகிற ஓரளவு வசதி படைத்த மக்கள் இந்த கட்டண சுமையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே இந்த திட்டம் ஏடிஎம்மை மட்டும் நம்பியுள்ள மிகச்சாதரண மக்களையே இலக்கு வைத்திருப்பதாகத்தான் கருதவேண்டும். எல்லோருக்கும் வங்கிச்சேவை என ஆரவாரம் செய்ததன் நிஜ நோக்கம் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் சாதாரண மக்களை சுரண்டி அதில் மகிழ்ச்சிகானும் ஒரு சாடிஸ்டாக நம் அரசு எந்திரம் இருக்கிறது. அதற்கான எளிய உதாரணங்களில் இந்த ஏடிஎம் கட்டணமும் ஒன்று. இதே வேகத்தில் முன்னேறுங்கள் மோடி, செத்தவனின் நெற்றிக்காசையும் கைப்பற்றும் அளவுக்கு நிர்வாகம் வலுவாகட்டும். சுடுகாடானாலும் சுத்தபத்தமாக இருப்பது முக்கியமில்லையா... @வில்லவன் இராமதாஸ் |
Posted: 03 Nov 2014 01:14 AM PST |
Posted: 03 Nov 2014 12:09 AM PST 'கத்தி' ரூ.100 கோடி வசூலை தாண்டியது :>>நாம திங்குற நாலாவது இட்லி, அடுத்தவனோடதுன்னு சொன்னிங்களே சார்.. @நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் |
Posted: 03 Nov 2014 12:04 AM PST அங்க நம்ம சனம் கொத்து கொத்தா சாகும் போது இங்க வெத்தலையை இடுச்சுக்கிட்டு இருந்திட்டு இப்போ யாவாரம் டல்லடிக்கவும்.. மறுபடியும் சைக்கிளை தூக்கிட்டு நிக்குது ஒரு குரூப்பு... அதுக்கு நாலு பேர் வாழ்த்து சொல்லிட்டு இருக்காய்ங்க! கருமம் டே @தம்பியின்தம்பி பாபு |
Posted: 02 Nov 2014 11:32 PM PST |
Posted: 02 Nov 2014 11:27 PM PST சாககெடக்கிற கெழவிகளை வெச்சு பேஷன் ஷோ நடத்துறதும்... துரு பிடிச்ச சைக்கிளை ஓவாராயில் பார்த்து ஓட்ட நினைக்கிறதும் ஒண்ணு... நீங்க எந்த ரூபத்தில வந்தாலும் உங்க பருப்பு இனி வேகாது... #காங்கிரஸ் @தம்பியின் தம்பி பாபு |
Posted: 02 Nov 2014 11:21 PM PST சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நிறுத்தி இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்க இலங்கை திட்டம் இனி மோடி சர்க்கார் ராஜதந்திரமாக செயல்பட்டு மகிந்தா ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்காமல் டபாய்க்கும்... எப்பூடி!!!!! @நம்பிக்கை ராஜ் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |