Thursday, 26 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


காதலை மட்டும் அல்ல.... நட்பை தொலைத்தவனுக்கும் தெரியும்..... பிரிவின் வேதனை.....

Posted: 26 Feb 2015 08:54 PM PST

காதலை மட்டும் அல்ல....

நட்பை தொலைத்தவனுக்கும் தெரியும்.....

பிரிவின் வேதனை.....


ஐல்லிக்கட்டுக்கு தடை வேண்டி போராடும் மிருக வதை தடுப்பு ஆர்வர்லர்களே! இதெல்லாம்...

Posted: 26 Feb 2015 08:31 PM PST

ஐல்லிக்கட்டுக்கு தடை வேண்டி போராடும்
மிருக
வதை தடுப்பு ஆர்வர்லர்களே!

இதெல்லாம்
உங்கள் கண்களில் படாதா?....

காளைகள் மற்றும் பசுக்கள்
அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும்போது உறங்கி விழுந்தால்
எழுப்பி நிறுத்துவது கடினம்
என
பச்சை மிளகாயை கண்ணில்
திணிக்கும்
கொடூரர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குன வெண்ணைகள் பதில் சொல்லவும்?


Posted: 26 Feb 2015 10:40 AM PST


வித் அவுட் அடிக்கிற வட இந்தியர்களை தண்டிச்சாலே இந்திய ரயில்வே லாபத்தில் இயங்கும்...

Posted: 26 Feb 2015 09:32 AM PST

வித் அவுட் அடிக்கிற வட
இந்தியர்களை தண்டிச்சாலே இந்திய
ரயில்வே லாபத்தில்
இயங்கும்!!

# அமைச்சர் மறந்த
வருவாய்

எக்காலத்திலும் இவள் நம்மை விட்டு விலகமாட்டாள் என்று உறுதியாக தெரிந்த பின்னர்தான்...

Posted: 26 Feb 2015 08:06 AM PST

எக்காலத்திலும் இவள்
நம்மை விட்டு விலகமாட்டாள்
என்று உறுதியாக
தெரிந்த பின்னர்தான்
ஆண்களின் அலட்சியம்
தொடங்குகிறது...

@காளிமுத்து

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்க...

Posted: 26 Feb 2015 06:40 AM PST

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன்.எனக்கு வேலை கிடைத்த புதிதில்--நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம்--8000 ரூபாய்.அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும்,தலைகால் புரியவில்லை-வீட்டிற்கு போன் செய்தேன்,அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை.மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,

"உங்களுக்கு எதாச்சும் வேணுமா"

அப்பா பதில் சொல்லவில்லை."அம்மாட்ட பேசு.."என்றவாறே போனை அம்மாவிடம் தந்துவிட்டார்.நானும் அம்மாவிடம்,

" பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல..இவரெல்லாம்..." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு,மற்ற கதைகளை--அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும்--எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா--பேசிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

ஓரிரு நாட்கள் கழித்து-என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன்.அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்துவது.என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார்.பணியில் சேர்ந்த தகவலும்,சம்பள விவகாரங்களும் அப்பாவிற்கும் தெரியும்,அதனால் இனி மாதச் செலவுக்காக அதில் பணம் போடமாட்டார் என நினைத்திருந்தேன்.அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக்கொண்டதால்-அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.முதல் மாதச் சம்பளம் வாங்கி-அது தீரும் நிலை வந்து-பழைய அக்கவுன்டில் ஏதாவது இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால்,

அதில் வழக்கம் போல,அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார்.அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது.அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும்,பொங்கலுக்கும்--என் பிறந்தநாளுக்கும்--நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்துவைக்கப்பட்டிருந்தது.கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை.

@G Durai Mohanaraju


Posted: 26 Feb 2015 05:38 AM PST


நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துர...

Posted: 26 Feb 2015 03:55 AM PST

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.

2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.

3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.

4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.

6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.

8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.

9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.

10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.


அழகு தமிழ்நாடு! உதகை! படம் : Mutharasan Photography

Posted: 26 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! உதகை!

படம் : Mutharasan Photography


ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' ந...

Posted: 26 Feb 2015 02:39 AM PST

ஆபாசமாக
உடையணிவதை 'நாகரீகமென'
நினைக்கும்
பெண்களும்,

பொறுக்கித்தனத்தை 'வீரமென'
நினைக்கும் ஆண்களும்
இருக்கும்
வரை குற்றங்கள்
குறையப்போவதில்லை...

@indupriya

அழகியல்! சேரன்மாதேவி!

Posted: 26 Feb 2015 02:11 AM PST

அழகியல்! சேரன்மாதேவி!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென'...

Posted: 26 Feb 2015 01:57 AM PST

ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும்,

பொறுக்கித்தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும்

இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை...

@ Indupriya MP
...


வார்த்தையே தேவையில்லை... பா விவேக்

Posted: 25 Feb 2015 06:45 PM PST

வார்த்தையே தேவையில்லை...

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 26 Feb 2015 03:50 AM PST


<3 <3 <3 <3

Posted: 25 Feb 2015 09:54 PM PST

♥ ♥ ♥ ♥


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


செடிகளால் செய்த அருமையான புத்தர்

Posted: 26 Feb 2015 09:38 AM PST

செடிகளால் செய்த அருமையான புத்தர்


:) Relaxplzz

Posted: 26 Feb 2015 09:30 AM PST

நாங்களும் பேஷன் ஷோவுக்கு போகிறோம்.. எங்கள பிடிச்சிருக்கா..

Posted: 26 Feb 2015 09:20 AM PST

நாங்களும் பேஷன் ஷோவுக்கு போகிறோம்..

எங்கள பிடிச்சிருக்கா..


நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..... 1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உண...

Posted: 26 Feb 2015 09:10 AM PST

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் ..

Relaxplzz

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?! நீங்கள் அதிகம் விலைக...

Posted: 26 Feb 2015 08:59 AM PST

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் FACEBOOK இல் பகிரவும் .

Relaxplzz


:) Relaxplzz

Posted: 26 Feb 2015 08:53 AM PST

பெண்களுக்கு முடி அதிகமாக இருக்கும்போதும், ஆண்களுக்கு முடி குறைவாக இருக்கும்போது...

Posted: 26 Feb 2015 08:50 AM PST

பெண்களுக்கு முடி அதிகமாக இருக்கும்போதும்,
ஆண்களுக்கு முடி குறைவாக இருக்கும்போதும்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
தலைவார அதிக நேரம் பிடிக்கிறது!

;-) Relaxplzz

மக்களின் முதல்வர் கூடிய விரைவில் தமிழகத்தின் முதல்வராக வேண்டி குப்பாயி அக்கா பேர...

Posted: 26 Feb 2015 08:45 AM PST

மக்களின் முதல்வர் கூடிய விரைவில் தமிழகத்தின் முதல்வராக வேண்டி குப்பாயி அக்கா பேரன் இன்று தூக்கு மாட்டிக்கொண்ட பொழுது எடுத்த படம்...!! ;-) :P

நன்றி : நாகசோதி நாகமணி


கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 26 Feb 2015 08:38 AM PST

கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 26 Feb 2015 08:30 AM PST

(y) (y) Relaxplzz

Posted: 26 Feb 2015 08:20 AM PST

(y) (y) Relaxplzz


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன...

Posted: 26 Feb 2015 08:10 AM PST

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்..

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..

Relaxplzz

என்னடா நாடு இது...? மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர...

Posted: 26 Feb 2015 08:00 AM PST

என்னடா நாடு இது...?

மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார், அவரை ஒரு ஆறுதலுக்கு கூட.சந்திக்க மனித நேயர்கள் இல்லையே. ?

பக்கத்து நாட்டில் ஒரு பிரச்சனையென்றால் வாய் கிழியே பதிவிட்டு தன் அரிப்பை தீர்த்துக்கொள்ளும்...நாம் ...?

தாய் நாட்டில் மது ஒழிக்க போராடும் இந்த பெரியவரை சந்திக்க நாதியில்லையே...?

ஏன்..? விளம்பரம் குறைவா..?
ஏன்..? மீடியா வரவு குறைவா..?

மதுவை விட கேடு...
மனசாட்சியில்லாதவனே...

#என்பார்வையில் ,,,

Relaxplzz


கடவுள் சிற்பத்தை வெறும் "கல்" என்பவர்கள், பணத்தை ஒரு "காகிதம்" என்று ஒத்துகொள்வத...

Posted: 26 Feb 2015 07:50 AM PST

கடவுள் சிற்பத்தை வெறும் "கல்" என்பவர்கள்,
பணத்தை ஒரு "காகிதம்" என்று ஒத்துகொள்வதில்லை...


விற்பனையாளா் :- அய்யா, நம்ம கடைல சேலை திருடியது கண்டிப்பா ஒரு பொம்பளை திருடியாத்...

Posted: 26 Feb 2015 07:45 AM PST

விற்பனையாளா் :- அய்யா, நம்ம கடைல சேலை திருடியது கண்டிப்பா ஒரு பொம்பளை திருடியாத்தான் இருக்கணும்...!

முதலாளி:- எதை வெச்சு இவ்வளவு உறுதியா சொல்றீங்க?

விற்பனையாளா்:- அய்யா, பத்து சேலை திருடு போயிருக்குன்னா கூடவே சேலைக்கு மேட்ச்சா பத்து ஜாக்கெட் பிட்டும், அதே கலா்ல பத்து பாவாடையும் சோ்த்துல்ல திருடு போய் இருக்கு!

முதலாளி:-????????? :O :O

Relaxplzz

மரத்தால் செய்த அருமையான பெண் உருவம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 26 Feb 2015 07:36 AM PST

மரத்தால் செய்த அருமையான பெண் உருவம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


திறமைகள்..

:) Relaxplzz

Posted: 26 Feb 2015 07:28 AM PST

உண்மை

Posted: 26 Feb 2015 07:20 AM PST

உண்மை


தமிழக சட்டமன்றம்: யார் இவர்கள்? முதல்வர் இருக்கையில் அச்சத்துடன் அமரும் முதல்வ...

Posted: 26 Feb 2015 07:10 AM PST

தமிழக சட்டமன்றம்:

யார் இவர்கள்?

முதல்வர் இருக்கையில் அச்சத்துடன் அமரும் முதல்வர்.
சட்டசபைக்கு வராமல் சினிமா படம் எடுக்கும் எதிர்
கட்சி தலைவர்.
உட்கார வசதி இல்லை என்று அறிக்கை விடும்
முன்னாள் முதல்வர்.

மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமல்
குழாயடி சண்டை போடும் உறுப்பினர்கள்.
என்ன செய்கிறார்கள்?

தங்கள் தலைவர் புகழ் பாடுதல்.
அடுத்த கட்சி தலைவர்களை வசை பாடுதல்.
மேஜை தட்டுதல்.
சட்டசபை உணவகத்தில் வயிறு முட்ட சாப்பிடுதல்.
எம்எல்ஏ விடுதியில் உல்லாசமாக
பொழுதை கழித்தல்.
நீதிமன்றத்தில் அபராதம் கட்டுதல்.

என்ன செய்யவில்லை?

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரில் ஒளிபரப்பவில்லை.
லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரவில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதி செலவு பற்றிய எந்தத்
தகவலையும் அளிக்கவில்லை.
தகவல் உரிமை ஆணையத்தின்
ஆண்டு அறிக்கை கடந்த 6 வருடங்களாக
சமர்ப்பிக்கவில்லை.
அரசாங்கமே சாராயம் விற்று மக்களை கொல்லும்
கேவலத்தை பற்றிய எந்த விவாதமும் இல்லை.
தமிழகத்தின் ஆற்று மணலை, கனிம
வளங்களை திட்டமிட்டு கொள்ளை அடிக்கும்
கும்பல்கள் பற்றிய எந்த விவாதமும் இல்லை.
20 மாநிலங்களில் அமலில் உள்ள
சேவை உரிமை சட்டம் வேண்டும் என்ற
ஒரு கோரிக்கையும் இல்லை.
தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்
என்று மூச்சு கூட விடுவதில்லை.

இவர்கள் கோமாளிகளா?
இல்லை ஓட்டு போட்ட மக்களை கோமாளியாக
நினைக்கிறார்களா?

இதற்க்கு பதில் நமக்கு என்றுமே கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.. :(

Via மதியரசன்

Relaxplzz

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதில...

Posted: 26 Feb 2015 06:56 AM PST

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில்
ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10%
அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.

ஆனால் ஆண் என்பவன், மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.

கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
ஆண்.

ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,

பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக
இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்..

- Jaya Rani

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

இந்த கோவிலோடு சேர்ந்த வயல்வெளியை பிடிக்கவில்லை என்று எந்த மதத்தவரும் சொல்ல மாட்ட...

Posted: 26 Feb 2015 06:50 AM PST

இந்த கோவிலோடு சேர்ந்த வயல்வெளியை பிடிக்கவில்லை என்று எந்த மதத்தவரும் சொல்ல மாட்டார்கள்...

உங்களுக்கு பிடிச்சிருக்கா ?


ஆர்யபட்டா என்றால் என்ன...? . ''இது கருணாநிதியால் ஏழைகளுக்கு கொடுக்கப்பட் ஒரு பட்...

Posted: 26 Feb 2015 06:45 AM PST

ஆர்யபட்டா என்றால் என்ன...?
.
''இது கருணாநிதியால் ஏழைகளுக்கு கொடுக்கப்பட் ஒரு பட்டா''..
.
இப்படி ஒரு பதிலை ஒரு TNPSC பரிட்சையில் ஒருவர் எழுதியதாக படித்தேன்.
.
.
(# நல்லவேளை..., மதராஸபட்டினம் படத்துல ஆர்யா குடுத்ததுன்னு சொல்லல..)

- Prem Kumar

இதை விளையாடிய அனுபவம் உல்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 26 Feb 2015 06:40 AM PST

இதை விளையாடிய அனுபவம் உல்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 26 Feb 2015 06:34 AM PST

:) Relaxplzz

Posted: 26 Feb 2015 06:23 AM PST

தொலைகிறது நம் பால்யம்... 1. குட் மார்னிங் டீச்சர் என்பதை குட் மார்னிங் மேம் எனு...

Posted: 26 Feb 2015 06:10 AM PST

தொலைகிறது நம் பால்யம்...

1. குட் மார்னிங் டீச்சர் என்பதை குட் மார்னிங் மேம் எனும் போதே தொலைகிறது குழந்தை பருவம் .

2. பாட்டில் மூடியை வாயில் கடித்து திறக்கும்போதே தொலைகிறது நம் பால்யம்... (நான் கூல்டிரிங்ஸ் பாட்டில சொன்னேன்)

3.ரயிலுக்கு டாட்டா காமிப்பதை நிறுத்திய போது தொலைந்து போயிருந்தது பால்யம்.

4.எப்ப நான் சினிமாவுல ஹீரோவ கவனிக்காம ஹீரோயின கவனிக்க ஆரம்பிச்சனோ அப்பயே தொலைந்து போயிருந்தது பால்யம்.

5.எக்ஸாமுக்கு, என்னைக்கு படிச்சிட்டு போறத நிப்பாடினேனோ அன்னைக்கே எனது பால்யம் முடிவுக்கு வந்துவிட்டது..

6. ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை நிறுத்தியலிருந்து நின்றுபோனது எனது பால்யம்

7."இங்கிலாந்து லெட்டர்" இன்லேன்ட் லெட்டர் ஆன போது என் தொலைந்தது பால்யம்

8.சட்டை நிறத்தை கூட கவனிக்காமல் விலையை முதலில் தேட ஆரம்பித்த வயதில் தொலைந்து போயிருந்தது என் பால்யம்

9.முழுக்கை சட்டை வாங்கி அதை மெனக்கெட்டு மடிச்சிவிட்டுட்டு அரைக்கையோடு திரியும் போது தொலைந்தது என் பால்யம்

10.அப்பா கைஎழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்டில் போட்டு கொள்ளும் போதே முடிந்து விடுகிறது பால்யம்

11.என்னைக்கு டீயுசன்ல கேர்ள்ஸ் தனியா பாய்ஸ் தனியா உட்கார வெச்சாங்களோ அன்னைக்கே பால்டாயில் குடித்து மரித்து போனது என் பால்யம்

12. கோபால் பல்பொடியிலிருந்து க்ளோசப் பேஸ்ட்டுக்கு மாறும் பொழுது பால்யம் தொலைகிறது

13.இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த,
கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும்
வீடு மாறும்பொழுது தொலைந்து போனது அன்னைக்கே மரித்து போனது என் பால்யம்

14.தேசிய கீதப் பாடலை பாடாமல் முணுமுணுக்கும் போது முடிந்துவிடுகிறது

15.பெண் வலிய வந்து என் கன்னத்தை கிள்ளி சிரிப்பதை நிறுத்திய போது என் பால்யம் முடிந்திருந்தது.

என்றேனும் ஓர் நாள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தொலைத்த என் பால்யம் நோக்கி திரும்பி செல்லவே ஆசை !

#ரசித்தது

Relaxplzz

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்:- இந்த செய...

Posted: 26 Feb 2015 05:59 AM PST

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்:-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது. இயற்கையான முறை என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை உண்ணுவது. இந்தக் கட்டுரையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் குறித்து கவனம் செலுத்தலாம் வாங்க. பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!! நம் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி வலுவுடன் இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா? அப்ப இதெல்லாம் சாப்பிடுங்க! சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம். இவை நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கக்கூடியவை.

பூண்டு:-

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

இஞ்சி:-

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்:-

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி:-

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:-

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்கள்:-

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

முட்டை:-

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

அவகேடோ பழம்:-

இவை அருமையான பழங்கள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

டீ மற்றும் காபி:-

டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

தேங்காய்:-

தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.

பெர்ரி பழங்கள்:-

பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன.

முட்டைக்கோஸ்:-

இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சம் பழம்:-

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

பச்சைஇலைக் கீரைகள் மற்றும் காய்கறிகள்:-

பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன.

மாட்டிறைச்சி :-

உடல் நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மற்றுமொரு உணவு இதோ. மாட்டிறைச்சியில் இரத்த வெள்ளையணுக்களை உற்பத்தி செய்து பெருக்கும் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. நோய்களுடன் போராடுவதில் நமக்கு உறுதுணையாக இருப்பது இந்த இரத்த வெள்ளையணுக்களே என்பது நாம் அறிந்த விஷயம் தானே! எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்...


Relaxplzz


"நலமுடன் வாழ" - 3

:) Relaxplzz

Posted: 26 Feb 2015 05:51 AM PST

கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங...

Posted: 26 Feb 2015 05:45 AM PST

கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங்களும் ஏம்ப்பா சிவப்பா இருக்கற பொண்ணையே ரசிக்கறீங்க?

- கலாநிதி

ஊஞ்சல் விளையாட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 26 Feb 2015 05:40 AM PST

ஊஞ்சல் விளையாட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)