Thursday, 26 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


காதலை மட்டும் அல்ல.... நட்பை தொலைத்தவனுக்கும் தெரியும்..... பிரிவின் வேதனை.....

Posted: 26 Feb 2015 08:54 PM PST

காதலை மட்டும் அல்ல....

நட்பை தொலைத்தவனுக்கும் தெரியும்.....

பிரிவின் வேதனை.....


ஐல்லிக்கட்டுக்கு தடை வேண்டி போராடும் மிருக வதை தடுப்பு ஆர்வர்லர்களே! இதெல்லாம்...

Posted: 26 Feb 2015 08:31 PM PST

ஐல்லிக்கட்டுக்கு தடை வேண்டி போராடும்
மிருக
வதை தடுப்பு ஆர்வர்லர்களே!

இதெல்லாம்
உங்கள் கண்களில் படாதா?....

காளைகள் மற்றும் பசுக்கள்
அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும்போது உறங்கி விழுந்தால்
எழுப்பி நிறுத்துவது கடினம்
என
பச்சை மிளகாயை கண்ணில்
திணிக்கும்
கொடூரர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குன வெண்ணைகள் பதில் சொல்லவும்?


Posted: 26 Feb 2015 10:40 AM PST


வித் அவுட் அடிக்கிற வட இந்தியர்களை தண்டிச்சாலே இந்திய ரயில்வே லாபத்தில் இயங்கும்...

Posted: 26 Feb 2015 09:32 AM PST

வித் அவுட் அடிக்கிற வட
இந்தியர்களை தண்டிச்சாலே இந்திய
ரயில்வே லாபத்தில்
இயங்கும்!!

# அமைச்சர் மறந்த
வருவாய்

எக்காலத்திலும் இவள் நம்மை விட்டு விலகமாட்டாள் என்று உறுதியாக தெரிந்த பின்னர்தான்...

Posted: 26 Feb 2015 08:06 AM PST

எக்காலத்திலும் இவள்
நம்மை விட்டு விலகமாட்டாள்
என்று உறுதியாக
தெரிந்த பின்னர்தான்
ஆண்களின் அலட்சியம்
தொடங்குகிறது...

@காளிமுத்து

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்க...

Posted: 26 Feb 2015 06:40 AM PST

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன்.எனக்கு வேலை கிடைத்த புதிதில்--நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம்--8000 ரூபாய்.அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும்,தலைகால் புரியவில்லை-வீட்டிற்கு போன் செய்தேன்,அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை.மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,

"உங்களுக்கு எதாச்சும் வேணுமா"

அப்பா பதில் சொல்லவில்லை."அம்மாட்ட பேசு.."என்றவாறே போனை அம்மாவிடம் தந்துவிட்டார்.நானும் அம்மாவிடம்,

" பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல..இவரெல்லாம்..." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு,மற்ற கதைகளை--அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும்--எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா--பேசிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

ஓரிரு நாட்கள் கழித்து-என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன்.அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்துவது.என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார்.பணியில் சேர்ந்த தகவலும்,சம்பள விவகாரங்களும் அப்பாவிற்கும் தெரியும்,அதனால் இனி மாதச் செலவுக்காக அதில் பணம் போடமாட்டார் என நினைத்திருந்தேன்.அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக்கொண்டதால்-அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.முதல் மாதச் சம்பளம் வாங்கி-அது தீரும் நிலை வந்து-பழைய அக்கவுன்டில் ஏதாவது இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால்,

அதில் வழக்கம் போல,அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார்.அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது.அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும்,பொங்கலுக்கும்--என் பிறந்தநாளுக்கும்--நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்துவைக்கப்பட்டிருந்தது.கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை.

@G Durai Mohanaraju


Posted: 26 Feb 2015 05:38 AM PST


நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துர...

Posted: 26 Feb 2015 03:55 AM PST

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.

2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.

3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.

4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.

6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.

8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.

9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.

10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.


அழகு தமிழ்நாடு! உதகை! படம் : Mutharasan Photography

Posted: 26 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! உதகை!

படம் : Mutharasan Photography


ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' ந...

Posted: 26 Feb 2015 02:39 AM PST

ஆபாசமாக
உடையணிவதை 'நாகரீகமென'
நினைக்கும்
பெண்களும்,

பொறுக்கித்தனத்தை 'வீரமென'
நினைக்கும் ஆண்களும்
இருக்கும்
வரை குற்றங்கள்
குறையப்போவதில்லை...

@indupriya

அழகியல்! சேரன்மாதேவி!

Posted: 26 Feb 2015 02:11 AM PST

அழகியல்! சேரன்மாதேவி!


0 comments:

Post a Comment