Friday, 27 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?” என்றது. “...

Posted: 27 Feb 2015 09:10 AM PST

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது.

"என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்."

"அப்புறம்..?"

"அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது."

"அப்புறம்?"

"அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது."

"அப்புறம்..?"

"அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்."

"அப்புறம்..?"

" அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது."

"அப்புறம்..?"

"எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்."

"அப்புறம்..?"

"அவ்வளவுதான்."

உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு
'ஐ
போன்' ஆக மாற்றியது!

:O :O

Relaxplzz

SHARE MUST சமுதாய சீரழிவை உருவாக்கும் ஊடகங்களை அடையாளம் காண்போம்.. வக்கிரம் நம...

Posted: 27 Feb 2015 09:00 AM PST

SHARE MUST

சமுதாய சீரழிவை உருவாக்கும் ஊடகங்களை அடையாளம் காண்போம்..

வக்கிரம் நம்மிடையே துவக்கம்
============================
1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்...

2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.

3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது...

4. VIJAY, SUN, Zee டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்...

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி டிவிகளோ அல்லது பெற்றோர்களோ சிறிதும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்...

சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம். உங்கள் குழந்தைகளையோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் குழந்தைகளையோ இதுபோன்ற நிகழ்சிகளை பார்க்க மற்றும் பங்கேற்க விடாதீர்கள்.

இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில..
1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா..

இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை - வாட்ஸ் அப் தகவல்

(Nantri- Babugee )

I REPEAT..
வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும் கூட பாலியல் வன்முறைதான்.

இதைதான் தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள அந்நிய ஊடகங்கள், தொலைகாட்சிகள் முன்னெடுத்து செல்கின்றன..

SHARE MUST

Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 08:55 AM PST

மலை ரயிலில் இருவர் : எஞ்சின் டிரைவருக்கு போதிய அனுபவம் இல்லைன்னு நெனைக்கிறேன். எ...

Posted: 27 Feb 2015 08:50 AM PST

மலை ரயிலில் இருவர் :
எஞ்சின் டிரைவருக்கு போதிய அனுபவம் இல்லைன்னு நெனைக்கிறேன்.
எதை வச்சு சொல்லறே ?

வரும் போது, நேராத்தான் ஓட்டிட்டு வந்தார். திரும்பும் போது வண்டியை திருப்பி நேரா ஒட்டாமே, ரிவர்சிலேயே ஓட்டிட்டு வரார். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் விடுமோ ?

தமிழகத்தில் பாஜக வுக்கு என்று தனி கவுரவம் இருக்கிறது - தமிழிசை அப்பிடியே அந்த ப...

Posted: 27 Feb 2015 08:45 AM PST

தமிழகத்தில் பாஜக வுக்கு என்று தனி கவுரவம் இருக்கிறது - தமிழிசை

அப்பிடியே அந்த பேப்பர வச்சு மூஞ்ச மறைச்சிட்டு ஓடிருங்க மேடம்..

- சிவ சிவா சிற்றவை


அருமையான க்ளிக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Feb 2015 08:38 AM PST

அருமையான க்ளிக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 08:30 AM PST

அன்பு ஒற்றை சொல் மந்திரம் <3

Posted: 27 Feb 2015 08:25 AM PST

அன்பு
ஒற்றை சொல் மந்திரம் ♥


உண்மைதான :(

Posted: 27 Feb 2015 08:18 AM PST

உண்மைதான :(


இது நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி : 10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த த...

Posted: 27 Feb 2015 08:10 AM PST

இது நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி : 10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த தக்காளி ஏன் ரூ.35 முதல் வரை ரூ.45 வரை விற்கிறது.

இதற்கு அப்பாவி விவசாயிகளா காரணம்..? இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் தான் காரணம்.. படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்..!! இதன் பின்னணி என்ன.?

தக்காளி 10 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தது,நல்ல உற்பத்தி. தட்டுபாடு இல்லை. அதனால் மலிவு விலைக்கு விற்பனை ஆனது. இதை பொறுக்க முடியாத நமது அருமைமிகு கொள்ளை கூட்டம் விவசாயிகளிடம், " நான் உங்களுக்கு 1 கிலோ தக்காளிக்கு 12 ருபாய் தருகிறேன், அனைத்து தக்காளியையும் நானே வாங்கிகொள்கிறேன்" என்று கூறி விலை பேசி "ஆனால் நான் கேட்கிற போதுதான் நீங்க செடியில் இருந்து பறித்து தர வேண்டும், அது வரை தக்காளி, செடியிலேயே இருக்கட்டும்" என்று ஒரு நிபந்தனையும் போட்டார்கள். விவசாயிகள் என்ன செய்வார்கள், அவர்கள் ஏதோ லாபம் கிடைகின்றது என்று ஒப்புக்கொண்டனர். இது ஒரு வித்தியாசமான தக்காளி தட்டுப்பாட்டை உருவாக்கும் முறை. பல குடோன்களிலும் தக்காளியை கொண்டுபோயும் பதுக்கினார். பிறகு, தக்காளி தட்டுபாடு வராமல் என்ன செய்யும்.?

உடனே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் ப்ரெஷ், காய்கறி கடைகளிலும் தக்காளி 45 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த கொள்ளையர்கள் கொத்து எடுத்து வயலுக்கு போய் சம்பாதிச்சார்களா ..? நீர் பாசனம் செய்து உற்பத்தி செய்தார்களா ..? பிறகு ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை லாபம்..? நமது நாட்டிலே ஒரு நாளைக்கு 30 நொடிக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்வதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இப்படிப்பட்ட கொள்ளையர்களால் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்..!! இங்கே உழைக்கும் விவசாயிகளுக்கு உண்மையான உரிய பணம் போய் சேருவது இல்லை..!!

இப்படிபட்ட முதலாளித்துவ சமுதாய கொள்ளையர்களுக்கு யார் இடம் கொடுத்தது..? நாம் தான். தவறுகளை தட்டி கேட்க பெரிதாக யாரும் இல்லாதால்தான் அவர்கள் மட்டும் வளர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு காரணமாயிற்று.
இப்படி அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே போனால், நாம் இதை கவனிக்காமல் இருந்தால், நமக்கு கையில் பணம் இருக்கும், ஆனால் அரிசி, காய்கறிகள் வாங்க கடைகள் இருக்காது. உற்பத்தி செய்ய விவசாயிகள் இருக்க மாட்டார்கள், இறந்து விடுவார்கள்...!!!
இங்கே அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கே அவை அனைத்தும் கிடைப்பதில்லை.

30 நொடிக்கு ஒரு விவசாயி இறக்கிறார் என்பது ஒரு தகவல் மட்டும் அல்ல.. இது ஒரு வலி. படித்து "உணர்ந்து" கொண்டவர்களுக்கு அந்த வலி தெரியும்.

கருத்துகளை பதிவு செய்யவும்...!!

Relaxplzz

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?? கொத்தமல்லி கீரை- மூளை, மூ...

Posted: 27 Feb 2015 08:00 AM PST

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

Relaxplzz


கோவிலுக்கு போலான்னு விட்ட வீட்டு வெளியே வந்தேன் #சாமியே, எதிரில் வந்து எங்க பே...

Posted: 27 Feb 2015 07:50 AM PST

கோவிலுக்கு போலான்னு விட்ட வீட்டு வெளியே வந்தேன் #சாமியே,
எதிரில் வந்து எங்க போறேன்னு கேட்குது, #அம்மா,

- தினேஷ்


அளவுக்கு அதிகமாக. லைக் வாங்குற ஆம்பளையும் அளவுக்கு மீறி கமெண்ட்ஸ் வாங்குற பொம்பள...

Posted: 27 Feb 2015 07:45 AM PST

அளவுக்கு அதிகமாக. லைக் வாங்குற ஆம்பளையும்
அளவுக்கு மீறி கமெண்ட்ஸ் வாங்குற
பொம்பளையும் ஃபேஸ்புக்க விட்டுப்
போனதா சரித்திரமே இல்லைங்ஙே,,

:P ;P

- கவினோள் விஜி

சர்பத் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Feb 2015 07:40 AM PST

சர்பத் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 07:30 AM PST

இது போன்ற செயல்களை தயவுசெய்து தவிர்க்கவும் நண்பர்களே..

Posted: 27 Feb 2015 07:20 AM PST

இது போன்ற செயல்களை தயவுசெய்து தவிர்க்கவும் நண்பர்களே..


மச்சான்...சின்ன help da... என்னடா ..உனக்கிலாத help ஆ? அது ஒண்ணுமில்ல மச்சான்.....

Posted: 27 Feb 2015 07:10 AM PST

மச்சான்...சின்ன help da...

என்னடா ..உனக்கிலாத help ஆ?

அது ஒண்ணுமில்ல மச்சான்... ஒரு status போடுறேன்..நீ லைக் கமெண்ட போட்டு encourage பண்ணனும்...கதை கவிதை ன்னு முன்னேறி..அறிஞர் அண்ணா மாதிரி ஆகணும்னு கொள்கை யோட இருக்கேன்டா ....

அட டா...நான் செம busy மச்சி .புதுசா 3galfrnd புடிச்சிருக்கேன்..அதுங்களோட ஒரே லவ்வு ...எப்ப பாரு என்கூட chat ...அழகா பொறந்தாலே இப்படிதான் .பொண்ணுகளோட ஒரே தொல்ல..

நீ நம்ம மாப்பிள ட்ட சொல்லேன்...அவரு நல்லா encourage பண்ணுவாரு..

இல்லடா மாப்ளே ....அவரு கொடும் busy.....

அப்படியா ...அப்படி என்னடா வேலை அந்தாளுக்கு?

அதுவா மச்சான்...இப்ப நீ சொன்னீல்ல 3galfrnd ...அந்த 3 id யும் அவரோடது தான்.....

#என்னது :O :O

இதயம் நொறுங்குற சத்தம் உங்களுக்கு கேக்குதா...? ;-) ;-)

Relaxplzz

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...!! (திருமணத்திற்கு முன்) 1) காத...

Posted: 27 Feb 2015 07:00 AM PST

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...!!
(திருமணத்திற்கு முன்)

1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள்.

2) வேலை தேடி அலையும் போதும் , பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்வீர்கள்.

3) மல்லிகை பூவையும் , கண்ணாடி வளையலையும் ,
சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும் , வேலைக்கென ஒரு வேடம் போட்டுக் கொள்வீர்கள்.

4) பேசாவிட்டால் உம்மனாமூஞ்சி என்று பெயர் எடுப்பீர்கள். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டாலும் படித்த திமிர் என்ற பட்டம் வாங்குவீர்கள்.

5) சமையலறை பக்கம் கூட சென்று இருக்கமாட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள்.

6) முகப் பருக்களை கிள்ளுவதையே பகுதி நேர வேலையாக வைத்திருப்பீர்கள்.

7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருப்பதாய் உணர்வீர்கள்.

8)அடிக்கடி ச்சே ஊரா இது, எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சுகளில் , மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்பன்னு கேட்டா , அத்தைமார்கலெல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கிங்கன்னு ? கேட்பார்கள்.

10) அம்மாவையும் , அப்பாவையும் உங்கள் இரு சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள்.

11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பீர்கள்.ஒரு ஆணைப் போல் நடந்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வீர்கள்.

12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும் , மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விடமாட்டீர்கள். தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என எண்ணுவீர்கள். www.puradsifm.com

13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா? என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்கமாட்டார்களா என ஏங்குவீர்கள்.
14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் , நம்பிக்கையும் நிறைந்து இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் பெண் என்பதால் வந்த வாய்ப்பு என்றுச் சொல்ல வாய்கள் அதிகம் காத்திருக்கும்.

15) எத்தனை சோகம் கண்ட போதிலும் , பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்வீர்கள்.

16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள் , அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கி விட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் நீலிக்கண்ணீர் என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள்.

எத்தனை பெண்களுக்கு பொருந்தும் பதிவு எனத் தெரியாது.
யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் மங்கையர்களே..! அவ்வ்வ்வ்

Relaxplzz


இளிச்சவாயன்கள் இந்தியாவில்தான் அதிகம் எனவே உலக கழிவுப்பொருட்களின் மாபெரும் வியாப...

Posted: 27 Feb 2015 06:50 AM PST

இளிச்சவாயன்கள் இந்தியாவில்தான் அதிகம் எனவே உலக கழிவுப்பொருட்களின் மாபெரும் வியாபாரம் இந்தியாவில் ஜோராக நடக்கின்றது.

காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு கொடு பார்ப்போம்!

ஏழு வாரங்களில் சிகப்பழகு எங்கே ஆப்பிரிக்காகாரனுக்கு போடு பார்ப்போம்!

Relaxplzz


அவன்: நீங்க பார்த்தா என் பொண்டாட்டி மாதிரியேஇருக்கீங்க! அவள்: அப்படியா உங்க மன...

Posted: 27 Feb 2015 06:45 AM PST

அவன்:
நீங்க பார்த்தா என் பொண்டாட்டி
மாதிரியேஇருக்கீங்க!

அவள்:
அப்படியா உங்க மனைவி
பெயர் என்ன?

அவன்:
இன்னும் எனக்கு
கல்யாணம் ஆகல்லே

New way to propose

;-) ;-)

Relaxplzz

இதை நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 27 Feb 2015 06:40 AM PST

இதை நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 06:30 AM PST

என் மகன் பள்ளியில் மாறுவேட போட்டியில் கிருஷ்ணனாக என் மகன் சேக் முகமது.. இந்த ஒற...

Posted: 27 Feb 2015 06:20 AM PST

என் மகன் பள்ளியில் மாறுவேட போட்டியில் கிருஷ்ணனாக என் மகன் சேக் முகமது..

இந்த ஒற்றுமை தான் இந்தியாவின் பலம் (y) (y)


நன்றி... நன்றி.... :) 1) என் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைத்த...

Posted: 27 Feb 2015 06:10 AM PST

நன்றி... நன்றி.... :)

1) என் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைத்து என்னையும் ஒரு பொம்மையைப் போல் வளர்க்காததற்கு நன்றி..

2) நான் கேட்டதை விட அதிகமாக என் கையில் திணிக்காமல் ஏனைய நேரங்களில் இல்லை என்ற பதில் தந்ததற்கு நன்றி..

3) நான் எங்கு செல்கிறேன்... யாருடன் பேசுகிறேன் என்று கவனித்து வளர்த்ததற்கு நன்றி..

4) என் முகம் கொஞ்சம் சுருங்கிட்டால், உடனே அதன் காரணம் அறிய முயர்ச்சித்ததற்கு நன்றி..

5) பள்ளி முடிந்து வந்தால் படி படி என்றென்னை கொடுமை செய்யாமல் இருந்ததற்கு நன்றி..

6) டிவி பார்க்க கூடாது , யாருடனும் பேசக் கூடாது என்றென்னை சிறையில் அடைத்து பத்தாம், பனிரெண்டாம் பொதுத்தேர்விற்கு தயார் செய்யாததற்கு நன்றி..

7) படிப்பு விடயத்தில் என்னை என் போக்கிற்கு விட்டு வளர்த்ததற்கு நன்றி..
ஒன்றாய் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தந்ததற்கு நன்றி..

9) நீ இதை கற்றுக் கொள் அதைக் கற்றுக் கொள் என்று எப்போதும் ஆலோசனை சொல்லி சொல்லி எனக்கு வெறுப்பை உண்டாக்காமல் வாழ்க்கைப் பாடத்தை மட்டுமே கற்றுத் தந்ததற்கு நன்றி..

10) சைக்கிள் முதல் scooty வரை ,சமையல் முதல் வீட்டு வேலை வரை எல்லாவற்றையும் நானே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளுவதை தூரமாய் நின்று ரசித்ததற்கு நன்றி..

11) என் விருப்பம் போல் உடையணிய என்னை அனுமதிக்காததற்கு நன்றி..

12) ஒரு வயது வரை என்னை அடித்து உதைத்து வளர்த்ததற்கு நன்றி..

13) நான் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரை என் கைகளை இறுக்கப் பிடித்திருந்தமைக்கு நன்றி..

# உங்களின் இல்லை என்ற பதிலால் இன்று எது கிடைக்காவிட்டாலும் நான் அழுவதில்லை.இன்று நான் எதுவாய் இருக்கிறேனோ அது உங்கள் வளர்ப்பினால் தரப்பட்டது....

நன்றி..அப்பா.

Relaxplzz

மவுஸ் பிடித்து உன்னை செழிக்கவைக்காமல், ஏர் பிடித்து எங்கள் ஊரை செழிக்க வைத்தாய்,...

Posted: 27 Feb 2015 06:00 AM PST

மவுஸ் பிடித்து உன்னை செழிக்கவைக்காமல்,
ஏர் பிடித்து எங்கள் ஊரை செழிக்க வைத்தாய்,,

#விவசாயி


சொல்வதற்கு ஒன்றுமில்லையென பிரிந்து செல்ல எத்தனிக்கிறாய் இறுதியாக ஒரு முத்தமிட்...

Posted: 27 Feb 2015 05:35 AM PST

சொல்வதற்கு ஒன்றுமில்லையென
பிரிந்து செல்ல எத்தனிக்கிறாய்
இறுதியாக ஒரு முத்தமிட்டேன்
அதன்பின் தான்
சொல்வதற்கு நிறைய இருந்தது !!

- ராஜசேகரன்


"காதல் கவிதைகள்" - 3

:) Relaxplzz

Posted: 27 Feb 2015 05:27 AM PST

:) Relaxplzz

Posted: 27 Feb 2015 05:19 AM PST

"மொக்கையோ மொக்கை" மொக்கை 1 ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்; கிரிக்கெட் பிளே...

Posted: 27 Feb 2015 05:09 AM PST

"மொக்கையோ மொக்கை"

மொக்கை 1

ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;

கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;

சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?
------------------------------------------------------------
மொக்கை 2

தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.

வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.

சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?
------------------------------------------------------------
மொக்கை 3

டிவியை
வாட்ச் பண்ணமுடியும்.

வாட்ச்சை
டிவி பண்ண முடியுமா?
------------------------------------------------------------
மொக்கை 4

ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.

ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?
------------------------------------------------------------
மொக்கை 5

கையால் போட்டால் கையெழுத்து;
காலால் போட்டால் காலெழுத்தா?

கைவெட்டு என்றால்
கைதுண்டாகும்

கால்வெட்டு என்றால்
கால்துண்டாகும்

மின்வெட்டு என்றால்
மின்சாரம் துண்டாகுமா?
------------------------------------------------------------
மொக்கை 6

முட்டை போடுற கோழிக்கு
ஆம்லெட் போடத் தெரியாது.

ஆம்லெட் போடுற நமக்கு
முட்டை போடத் தெரியாது.
------------------------------------------------------------
மொக்கை 7

மனிதனுக்கு வந்தால் அது
யானைக்கால் வியாதி!

யானைக்கு வந்தால்
அது மனிதக்கால் வியாதியா?
------------------------------------------------------------
மொக்கை 8

குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது

கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!

;-) ;-)

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

:) Relaxplzz

Posted: 27 Feb 2015 05:02 AM PST

0 comments:

Post a Comment