Tuesday, 11 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


உன் கண்ணில் தூசியை ஊதி விட்ட தருணம் நாம் பிரிந்த தருணம்... இவ்வளவு அருகருகே பார...

Posted: 11 Nov 2014 09:05 AM PST

உன் கண்ணில்
தூசியை ஊதி விட்ட
தருணம் நாம் பிரிந்த
தருணம்...

இவ்வளவு அருகருகே பார்த்திருக்கக்
கூடாது நாம்.

பாவி மவளே "மெட்ராஸ் ஐ" யாடி உனக்கு

@களவாணி பய

Posted: 11 Nov 2014 08:58 AM PST


பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா....

Posted: 11 Nov 2014 04:12 AM PST

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா. ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினார் எஸ்.ஐ.
எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க.
அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க.
இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள்.
அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க.
நேத்து நீங்க என் பிரெண்டு வர்ஷினியோட அப்பாகிட்ட லஞ்சம் வாங்கினீங்களாம் பேட் அங்கிளோட பொண்ணும் பேட் பொண்ணுதான்னு சொல்லி என் கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா என்றாள் அழுதபடி.
ஒரு கணம் திடுக்கிட்டு போன எஸ்.ஐ. மனதுக்குள் நினைத்து கொண்டார். இனிமேல்
.
.
.
.
...
.
..
.
,
.
.
.
.
எது வாங்கினாலும் யாருக்கும் தெரியாமல் தான் வாங்க வேண்டும் என....

Posted: 11 Nov 2014 01:17 AM PST


சமற்கிருதம் போன்ற அந்நிய மொழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து விட்டு தமிழ...

Posted: 10 Nov 2014 11:42 PM PST

சமற்கிருதம் போன்ற அந்நிய மொழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து விட்டு தமிழர்கள் கூறும் காரண்ங்களை சகிக்க முடியவில்லை......

"சூரியன் போல் வெளிச்சம் தருபவன்" என்று பொருள் தருவதால் இந்த பெயரை என் மகனுக்கு வைத்தேன்.

"இசையை போல் இன்பமானவள்" என்று பொருள் தருவதால்
இந்த பெயரை என் மகளுக்கு வைத்தேன்"

என்று ஆளுக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.உண்மையில் இவர்களுக்கு தமிழில் பெயர் வைக்க விருப்பமில்லை என்பதே உண்மை.

"சூரியன்",பகலவன்,இசைப்ரியா,இசையரசி,இசைசெல்வி,
இளம்பிறை,இசையரசன்,தமிழ்செல்வன்,தமிழரசன்,
முழுநிலவன்,கோவேந்தன் என்று தமிழில் இல்லாத பெயர்களா....? மற்ற மொழிகளில் இருக்கப் போகிறது.

இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. "நவீனத்தை நோக்கி நகர வேண்டாமா...?, பழைமையிலேயே ஊறிக்கிடப்பதா....?" என்று இளைஞர்கள் கேட்கின்றனர்.

சமற்கிருதப் பெயர்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. அந்த மொழியும், தமிழைப் போலப் பழைமையானதுதான். அந்த மொழி யாருக்குத் தாய்மொழியோ, அவர்கள் அம்மொழியில் பெயர்சூட்டிக் கொள்ளட்டும்.

தமிழர்களே தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவில்லையென்றால், ஜப்பானியர்களா தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள்....? நம் மொழியை நாம் மறப்பது, நம் முகத்தை நாமே சிதைத்துக் கொள்வது போலத்தான்!

இதற்கெல்லாம், 'மொழி வெறி' என்றும், 'குறுகிய மனப்பான்மை' என்றும், 'பழைமை வாதம்' என்றும் இலவசப் பட்டம் வழங்கும் இளைஞர்களின் ஒரு பகுதியினரை நோக்கி நாம் உரத்துச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உள்ளன.

தன் தாயை நேசிப்பது 'தாய்வெறி' அன்று. தன் தாயிடம் அன்பு காட்டுவதால், பிற தாய்களையெல்லாம் வெறுக்கிறோம் என்றும் பொருள் இல்லை.

இது தாய்க்கும் பொருந்தும், தாய்மொழிக்கும் பொருந்தும்.

நாம் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. மொழியில் உயர்வு, தாழ்வை நாம் கற்பிக்கவில்லை. அவரவர் தாய்மொழி, அவரவர்க்கு உயர்வான ஒன்றே....!

ஆதலால், தாய் மொழி பேணுதல் அனைவர்க்கும் அழகு......!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இது எந்த மலர் என்று தெரிகிறதா? பா விவேக்

Posted: 11 Nov 2014 06:10 AM PST

இது எந்த மலர் என்று தெரிகிறதா?

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 10 Nov 2014 03:34 PM PST


கவர்ச்சியான ஆடை உடுத்துதல் பற்றி

கவர்ச்சியான ஆடை உடுத்துதல் பற்றி.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்..

இருவிதங்களில் செயல்படும் ‘நாக்கு’ ஒருநாள். தனது பணியாளை அழைத்து எஜமானர், “ஆட்டு...

Posted: 10 Nov 2014 03:33 PM PST

இருவிதங்களில் செயல்படும் 'நாக்கு'

ஒருநாள். தனது பணியாளை அழைத்து எஜமானர், "ஆட்டுக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ஆட்டுக்கறியிலேயே நல்ல சுவையான பகுதியை வாங்கிவந்து சமையல் செய்!" – என்றார்.

அந்த பணியாளும் எஜமானரின் விருப்பத்தை உடனே நிறைவு செய்யும் விதமாக ஆட்டின் நாக்கை வாங்கி வந்து நன்றாக பொறித்து உணவைப் பறிமாறினார்.

இரண்டு நாளைக்குப் பிறகு பணியாளரை அழைத்த எஜமானர், "இன்றைக்கு ஆட்டின் இறைச்சியில் மிக மோசமான பகுதியை வாங்கி வந்து சமையல் செய்!" – என்றார்.

அந்த பணியாளர் மீண்டும் ஆட்டின் நாக்கையே வாங்கி வந்து பொறித்து வைத்தார்.

சாப்பிட உட்கார்ந்த எஜமானர் தன் முன்னால் மறுபடியும் ஆட்டு நாக்குப் பொறியல் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். வியப்படைந்தார். அது குறித்து தனது பணியாளரிடம் கேட்கவும் செய்தார்.

"அய்யா, நாக்கு சுத்தமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்தால்… அதைவிட சிறந்த பொருள் ஏதுமில்லை. அதுபோலவே, அதே நாக்கு பொய்யும், பித்தலாட்டமும், நேர்மையற்ற சொற்களையும் உதிர்த்தால் அதைவிடு மோசமான பொருளும் இல்லை!"

- என்றான் அந்த அறிவாளி பணியாள்.

-Mr. Pamaran ;)


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தூய்ம...

Posted: 11 Nov 2014 06:00 AM PST

தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பிரபலங்கள் முன்வந்து
தங்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்று
மோடி முதல் தமிழிசை வரை தொடர்ந்து
குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை.
கமல்ஹாசனும் ஹேமமாலினியும்
அவர்களைப் போன்ற பிரபலங்களும்
ஒருநாள் இரண்டு நாள் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு
கூட்டிப் பெருக்க வருவார்கள். ஆனால் இது தொடருமா?

இப்படிப் பிரபலங்களுக்குப் பின்னால்
அலைவதை விட்டுவிட்டு உள்ளூர் பஞ்சாயத்து,
ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் உட்பட
ஒவ்வொருவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே
தெருவும் ஊரும் நாடும் சுத்தமாகிவிடுமே..!
அதை ஊக்கப்படுத்தலாமே...!

via - சிராஜுல்ஹஸன்


உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை! 1) உங்...

Posted: 11 Nov 2014 03:00 AM PST

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.

அதிசயம் ஆனால் உண்மை!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2) அதை இரண்டால் பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்.
மற்ற (2 digit) எண் உங்களின் வயது..!

VISIT >> www.fb.com/fbtamil


ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள். சிங்கப்பூரில் நபர் ஒருவர...

Posted: 11 Nov 2014 01:58 AM PST

ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள்.

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார்.

ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.

பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார்.
இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம், கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள் பணம் சேர்ந்துவிட்டது.
அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர்.

தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

VISIT :: www.facebook.com/fbtamil


துர்கா வாஹினியின் ஆபத்தை வெளிப்படுத்தும் ஆவணப் படம்! **************************...

Posted: 10 Nov 2014 09:00 PM PST

துர்கா வாஹினியின் ஆபத்தை வெளிப்படுத்தும்
ஆவணப் படம்!
******************************
மத துவேஷத்தையும் மத வெறுப்பையுமே
தன்னுடைய கொள்கையாகக் கொண்ட விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் ஆயுதப் பிரிவுதான் துர்கா வாஹினி எனும் அமைப்பு.

இந்த துர்கா வாஹினியின் ஆபத்தான செயல்பாடுகளை
ஓர் ஆவணப் படம் மூலம் வெளியுலகிற்குக்
கொண்டு வந்துள்ளார் கனடாவில் வசிக்கும்
இந்திய வம்சாவளி பெண் இயக்குநரான நிஷா பகுஜா.
இரண்டு ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு
துர்கா வாஹினி கேம்பில் கலந்துகொண்ட நிஷா,
அங்கு அளிக்கப்படும் பயிற்சி, பாடம் ஆகியவற்றை எல்லாம் அப்படியே சிறிதும் கற்பனை கலக்காமல்
சொல்லியுள்ளார் பிபிசியில் ஒளிபரப்பான
இந்த ஆவணப் படத்தில்.

துர்கா வாஹினியில் உள்ள பெண்கள் பெரும்பாலும் ஏழைகள், போதிய படிப்பறிவு இல்லாதவர்கள்.
முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும்
அடியோடு வெறுக்கவும் பகைமை பாராட்டவும்
இந்தப் பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.
"இந்துஸ்தான் இந்துக்களுக்கு, பாகிஸ்தான் நரகம்"
என்று இவர்கள் முழங்குகிறார்கள்.
இந்தியாவில் ஒரே ஒரு யதார்த்த மதம் இந்து மதம்தான் என்றும், இந்து மதத்திற்கு சேவை செய்வது தேச சேவை என்றும், எதிரிகளின் முதுகெலும்பை முறிக்கவும் தயங்கக் கூடாது என்றும் துர்கா வாஹினி பெண்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.

அதோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஆயினும் கணவன் எது செய்தாலும் அவனை எதிர்த்துப்
பேசக் கூடாது என்றும் கற்பிக்கப்படுகிறது என்று
அதிர்ந்து போய் சொல்லியுள்ளார் நிஷா பகுஜா.
1984-85 கால கட்டத்தில்தான்
துர்கா வாஹினி தொடங்கப்பட்டது.
ஒரு ஜனநாயக நாட்டில் மத துவேஷமும்
சகிப்பின்மையும் வளர்ந்து வருவது ஆபத்தானது
என்று கவலையுடன் கூறுகிறார் நிஷா.

துணிச்சலுடன் உண்மையை வெளிக்கொண்டுவந்த
நிஷா பகுஜாவுக்கு வாழ்த்துகள்.

BBC LINK :: http://www.bbc.com/news/world-asia-india-29798148

video trailer link :: http://www.youtube.com/watch?v=9u7WJ0XLXz8

via - சிராஜுல்ஹஸன்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


# பேஷ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியை வாழ்த்துங்கள

Posted: 11 Nov 2014 12:20 AM PST

# பேஷ்புக்
மூலம்
காதலித்து திருமணம்
செய்து கொண்ட
இந்த ஜோடியை
வாழ்த்துங்கள


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இது ரெண்டுமே பாக்குறதுக்கு ஒரே மாதிரி தானப்பா இருக்கு :P :P

Posted: 11 Nov 2014 09:00 AM PST

இது ரெண்டுமே பாக்குறதுக்கு ஒரே மாதிரி தானப்பா இருக்கு :P :P


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பத...

Posted: 11 Nov 2014 09:00 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பதினேழு வயசில் கல்விக்கடன்,
முப்பது வயசில் கல்யாணகடன்,
நாற்பது வயசில் வீட்டுகடன்,
ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன்

#ஏழை ஆணின் வாழ்க்கை

- Kali Muthu

நண்பர்களே தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போடுங்க * * * * * * * * * * *...

Posted: 11 Nov 2014 08:50 AM PST

நண்பர்களே தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போடுங்க
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இன்னைக்கு நான் பைக்ல போகும் போது ஒரு பொண்ண குறுகுறுன்னு பாத்தத அவங்க அப்பா பாத்து "ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டறா''னு சொல்லிடாரு ....

இதுவே நா ஹெல்மெட் போட்ருந்தா இந்த பிரச்சனை வந்துருக்காது...

:P :P

Relaxplzz

வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை...சின்னச் சின்ன சந்தோசங்க...

Posted: 11 Nov 2014 08:30 AM PST

வாழ்க்கை என்பது மிகப் பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை...சின்னச் சின்ன
சந்தோசங்களில் தான் உள்ளது..!


25 வருடங்களுக்கு முன் <3 செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. ஆணியில...

Posted: 11 Nov 2014 08:00 AM PST

25 வருடங்களுக்கு முன் ♥

செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..

ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.

முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.

ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

பாடல்களின் வரிகள் புரிந்தன.

காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.

திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.

- ஜான்சி

Relaxplzz

சுவிஸ் பேங்குல அக்கவுண்டு வெச்சிருந்த 859 பேருல...279 பேரு அக்கவுண்டுல சுத்தமா ப...

Posted: 11 Nov 2014 07:30 AM PST

சுவிஸ் பேங்குல அக்கவுண்டு வெச்சிருந்த 859 பேருல...279 பேரு அக்கவுண்டுல சுத்தமா பணமே இல்ல...
.
.
அப்ப மிச்சம்...580 பேரு அக்கவுண்டுல......?
.
.
அது அவங்க அக்கவுண்டுல இருந்து பணம் காலியான அப்புறம் தான் சொல்ல முடியும்.....

;-) ;-)


சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு...! புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கான...

Posted: 11 Nov 2014 07:00 AM PST

சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு...!

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான "செல்"களை தாக்குகின்றன.

இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.

இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள "மைக் ரோக்லியா" என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.

இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

Relaxplzz


(y) (y)

Posted: 11 Nov 2014 06:30 AM PST

(y) (y)


---------நட்பு--------- இது ஒரு உன்மைச் சம்பவம்..... கார்கில் போரின் போது இரண்...

Posted: 11 Nov 2014 06:00 AM PST

---------நட்பு---------

இது ஒரு உன்மைச் சம்பவம்.....

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான்,அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார்.அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

''நான் போனது தான் சார் சரி'' என்றான்.
என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும் போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான். ''என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .
அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார்.இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் உண்மையான நட்பு......

(நண்பர்கள் இதை அதிகமாக பகிறவும்)

Relaxplzz


சொக்கவைக்கும் சோலார் மோட்டார் சைக்கிள் ! மதுரை டி.வி.எஸ் பள்ளி ஒன்பாதாம் வகுப்ப...

Posted: 11 Nov 2014 04:30 AM PST

சொக்கவைக்கும் சோலார் மோட்டார் சைக்கிள் !

மதுரை டி.வி.எஸ் பள்ளி ஒன்பாதாம் வகுப்பை சேர்ந்த தியாகராஜ், ஹரிபிரசாத், அனிருத்தன் ஆகிய 3 மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான சோலார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இவர்களுக்கு நமது பாராட்டை தெரிவிப்போம் ! (y) (y)


(y) (y)

Posted: 11 Nov 2014 04:30 AM PST

(y) (y)


இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....? 1. யாரையாவது பிடிக்க போகும் போது...

Posted: 11 Nov 2014 04:00 AM PST

இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....?

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா....?

2. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...?

3. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ன்னு எழுதுறோம்..? Numberல 'O'ங்கிற எழுத்தே இல்லையே..?

4. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே… நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா...?

5. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா...?

( கண்ணெல்லாம் வேர்க்குதா...? நோ வயலன்ஸ்...ஒன்லி சைலன்ஸ்...! ) :P :P

Relaxplzz

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கை...

Posted: 11 Nov 2014 03:00 AM PST

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம்
நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய
பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது.........
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........
உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப்
பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........
காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன்,
நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

* ஒவ்வொரு நொடியும் வாழ்
* உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
* அது மட்டுமே நிரந்தரம்.......

* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது...... :) :)

Relaxplzz

அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே? இவ...

Posted: 11 Nov 2014 02:30 AM PST

அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே?

இவன் : பஸ்லே படம் போட்டாங்க. பாட்டு சீன்லே பழக்க தோஷத்திலே தம் அடியக்க பஸ்லேருந்து வெளியே வந்துட்டேன்

:P :P


தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: * * * * * * * * * * * * * * * * * *...

Posted: 11 Nov 2014 01:51 AM PST

தூய்மை இந்தியாதிட்டம்!!

தேவையான பொருட்கள்:
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
வெளக்கமாறு 1
கேமரா 4

:P :P

Relaxplzz

ஆண்கள் கவனத்துக்கு!!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசால...

Posted: 11 Nov 2014 01:33 AM PST

ஆண்கள் கவனத்துக்கு!!!

1. முட்டாள் கணவன்
மனைவியிடம்
வாயை மூடு என்பான்,
புத்திசாலிக்
கணவனோ கண்ணே உன்
உதடுகள் சேர்ந்திருந்தால் நீ
தேவதையாய் தெரிகிறாய்
என்பான் .

2.மதுவை நிறுத்துவதற்கு எளிய
வழி இது தான்.
திருமணத்துக்கு முன்
எப்போதெல்லாம் சோகமாய்
இருக்கிறாயோ அப்போது மது அருந்து.
திருமணத்துக்குப் பின்
எப்போதெல்லாம் ஆனந்தமாய்
இருக்கிறாயோ அப்போதெல்லாம்
மது அருந்து.

3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு 'இதை யாரிடமும்
சொல்லாதே' என்னும்
அடைமொழியுடன் சொல்.

4. ஒரு பொண்ண
சந்தோஷபடுத்த BEAUTIFUL
னு சொல்லனும்....
ஒரு ஆண சந்தோஷபடுத்த
ஒரு FULLனு
சொன்னா போதும்...

5. ஒரு மாபெரும்
தவறு செய்கையில்
உலகமே வாழ்த்துமெனில்
அதை திருமணம் என்க.

6.லைஃப் ல ஒரு அழகான
பொண்ண லவ் பன்றத விட நம்ம
லைஃப்ப அழகா வச்சிருக்கிற
பொண்ண லவ் பன்றது தான்
ரொம்ப நல்லது...

7.எல்லா ஆண்களுடைய
ஆசைகளில்
ஒன்று..."தன்னுடன்
மட்டுமே எல்லா பெண்களும்
பழக வேண்டும்." என்று.!!!

8.எல்லா பெண்களுடைய
ஆசைகளில்
ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும்
ரசிக்க வேண்டும்." என்று.!!

9.கல்யாணமான புதுசுல
பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட
அர்த்தம்
என்னான்னு தெரியுமா?
அய்யே தெரியலையே புருஷனை குண்டாக்கிட்டா.
அந்த சனியன எந்த பிகரும்
திரும்பி பாக்காதுங்கிறது
தான்....!!!
உசாரய்யா உசாரு.. .

10 .ஏன் அரசு ஆண்கள்
இரண்டு பெண்களைத்
திருமணம் செய்யக்
கூடாது என்கிறது ?
அடப்போப்பா…
ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில்
இல்லை !...

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை