Tuesday, 11 November 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 10 Nov 2014 03:34 PM PST


கவர்ச்சியான ஆடை உடுத்துதல் பற்றி

கவர்ச்சியான ஆடை உடுத்துதல் பற்றி.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்..

இருவிதங்களில் செயல்படும் ‘நாக்கு’ ஒருநாள். தனது பணியாளை அழைத்து எஜமானர், “ஆட்டு...

Posted: 10 Nov 2014 03:33 PM PST

இருவிதங்களில் செயல்படும் 'நாக்கு'

ஒருநாள். தனது பணியாளை அழைத்து எஜமானர், "ஆட்டுக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ஆட்டுக்கறியிலேயே நல்ல சுவையான பகுதியை வாங்கிவந்து சமையல் செய்!" – என்றார்.

அந்த பணியாளும் எஜமானரின் விருப்பத்தை உடனே நிறைவு செய்யும் விதமாக ஆட்டின் நாக்கை வாங்கி வந்து நன்றாக பொறித்து உணவைப் பறிமாறினார்.

இரண்டு நாளைக்குப் பிறகு பணியாளரை அழைத்த எஜமானர், "இன்றைக்கு ஆட்டின் இறைச்சியில் மிக மோசமான பகுதியை வாங்கி வந்து சமையல் செய்!" – என்றார்.

அந்த பணியாளர் மீண்டும் ஆட்டின் நாக்கையே வாங்கி வந்து பொறித்து வைத்தார்.

சாப்பிட உட்கார்ந்த எஜமானர் தன் முன்னால் மறுபடியும் ஆட்டு நாக்குப் பொறியல் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். வியப்படைந்தார். அது குறித்து தனது பணியாளரிடம் கேட்கவும் செய்தார்.

"அய்யா, நாக்கு சுத்தமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்தால்… அதைவிட சிறந்த பொருள் ஏதுமில்லை. அதுபோலவே, அதே நாக்கு பொய்யும், பித்தலாட்டமும், நேர்மையற்ற சொற்களையும் உதிர்த்தால் அதைவிடு மோசமான பொருளும் இல்லை!"

- என்றான் அந்த அறிவாளி பணியாள்.

-Mr. Pamaran ;)


0 comments:

Post a Comment