Tuesday, 7 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு! இடம்: ராஜாவூர், குமரி மாவட்டம்

Posted: 07 Oct 2014 01:39 PM PDT

அழகு தமிழ்நாடு!

இடம்: ராஜாவூர்,
குமரி மாவட்டம்


அம்மா சொத்துல பாதியை என் பெயருல மாத்தினா 4 வருசம் சிறை தண்டனையே நானே அனுபவிக்கிற...

Posted: 07 Oct 2014 08:47 AM PDT

அம்மா சொத்துல
பாதியை என் பெயருல
மாத்தினா 4 வருசம்
சிறை தண்டனையே நானே
அனுபவிக்கிறேன். :P

ஆரிய ,திடாவிடத்தின் துரோகம்;- மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது கூர்க் மக்கள்,...

Posted: 07 Oct 2014 08:10 AM PDT

ஆரிய ,திடாவிடத்தின் துரோகம்;-

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது கூர்க் மக்கள், 'நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்' என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதையும் செய்யத் தவறியது இந்த ஆரிய திராவிட அரசுகள். தமிழர் தமிழ்நாட்டை ஆளாததே அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் 'தமிழகத்திலேயே' உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான ஈனப்பயலுங்க என்பதைக் காட்டுகிறது.

ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.

ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள்?
அதுவும் ஆரிய திராவிட வந்தேறி பார்ப்பனனின் கையில்.

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

@சிவப்பிரகாசம். கு

கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கும் மூடர்களே..கர்நா டகாவில...

Posted: 07 Oct 2014 06:14 AM PDT

கர்நாடக பதிவெண்
கொண்ட வாகனங்கள்
மீது கல்லெறிந்து தாக்கும்
மூடர்களே..கர்நா
டகாவில் உள்ள
இலட்சக்கணக்கான
தமிழர்களின்
பாதுகாப்பை கொஞ்சமாவது நினைத்துப்
பார்தீர்களா? கன்னட
இனவெறியர்களிடம்
காலகாலமாக
அடிவாங்கொண்டிரு
க்கும் தமிழர்களின்
வாழ்வை ஏன் மேலும்
அவலத்திற்குள் தள்ள
நினைக்கிறீர்கள்?
காவிரியை வைத்துக்கொண்டு அம்மாவை அனுப்பு என்று சொன்னவர்கள்தானே
நீங்கள்..அம்மாவின்
மீது உள்ள பாசத்தில்
ஒரு சிறு துளியை உங்கள்
சொந்த சகோதர
தமிழன்மீது வையுங்கள்.

@மனுஷ்ய புத்திரன்

பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின...

Posted: 07 Oct 2014 05:35 AM PDT

பட்டாசு வெடித்ததில்
சிவகங்கை மாவட்டம்
காளையார்கோயில்
கோபுரத்தில் தீ
பற்றி எரிகின்றது.

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க
பட்டதாக
இன்று அதிமுகவினர்
பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின...

Posted: 07 Oct 2014 05:20 AM PDT

பட்டாசு வெடித்ததில்
சிவகங்கை மாவட்டம்
காளையார்கோயில்
கோபுரத்தில் தீ
பற்றி எரிகின்றது.

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க
பட்டதாக
இன்று அதிமுகவினர்
பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


ஜூஸ் குடுச்சவங்க எல்லாம் வாந்தி எடுங்கப்பா... ஜாமீன் கேன்சலாம்... -உண்ணாவிரதம்...

Posted: 07 Oct 2014 03:57 AM PDT

ஜூஸ் குடுச்சவங்க
எல்லாம்
வாந்தி எடுங்கப்பா...
ஜாமீன் கேன்சலாம்...

-உண்ணாவிரதம்
கண்டினியூ

@சதீஷ் குமார்
தேவகோட்டை

Posted: 07 Oct 2014 03:53 AM PDT


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட் டது.

Posted: 07 Oct 2014 03:42 AM PDT

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
மனு நிராகரிக்கப்பட்
டது.

எப்பெல்லாம் இந்த ஆளு படம் வருதோ அப்பதான்யா இவரு அரசியல்; தமிழ் நாடு பத்தி பேசுரத...

Posted: 06 Oct 2014 11:00 PM PDT

எப்பெல்லாம் இந்த
ஆளு படம்
வருதோ அப்பதான்யா இவரு அரசியல்;
தமிழ்
நாடு பத்தி பேசுரதும்; அத
பத்திரிக்கை காரனுங்க
ஏதோ இவரே செவ்வாய்
கிரகத்துக்கு மங்கள்யான்
விட்ட
ரேங்சுக்கு எழுதுரதும்
வாடிக்கை தானே:::

இதுக்கு போய் ரொம்ப
அலட்டிக்க வேணாம்::
விடுங்க


Posted: 06 Oct 2014 10:59 PM PDT


Posted: 06 Oct 2014 10:40 PM PDT


Posted: 06 Oct 2014 07:07 PM PDT


Posted: 06 Oct 2014 11:39 AM PDT


பணம் கொடுத்து அதிமுகவினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர் - விஜயகாந்த். #...

Posted: 06 Oct 2014 11:00 AM PDT

பணம்
கொடுத்து அதிமுகவினர்
போராட்டம்,
உண்ணாவிரதம்
நடத்துகின்றனர் -
விஜயகாந்த்.

#ஆமா கேப்டன்... காலையில
எந்திரிச்சி 'உண்ணாவிரத
வேலைக்கு'
போறேன்னு சொல்லிட்டு போறாங்க... அதாவது ஒரு மறைமுக
'வேலை வாய்ப்பை'யே உருவாக்கிருக்கா
ங்க..

@பிரகாசம் பழனி

Posted: 06 Oct 2014 10:05 AM PDT


10 ரூபாய் நெல்லிக்காய்க்கு வீதியோர கிழவியிடம் பேரம் பேசும் நமது "யோ யோ" இளைஞர்கள...

Posted: 06 Oct 2014 09:57 AM PDT

10 ரூபாய்
நெல்லிக்காய்க்கு வீதியோர கிழவியிடம்
பேரம் பேசும்
நமது "யோ யோ"
இளைஞர்கள் படித்தவர்கள்,
இன்று மட்டும் Flipkart
க்கு 600 கோடி ரூபாய்
அளவிற்கு எந்த
விசாரணையும்
இன்றி சம்பாதித்து கொடுத்துள்ளனர்

@Agazhvaan GGanesh

ஜாமீன் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். பிணையம் என்பதே தமிழ்ச் சொல்லாகும். ஜ...

Posted: 06 Oct 2014 09:40 AM PDT

ஜாமீன் என்பது பிற
மொழியிலிருந்து வந்த
சொல். பிணையம்
என்பதே தமிழ்ச்
சொல்லாகும். ஜாமீனில்
விடுவிக்கபட்டார்
என்பதை விட,
பிணையத்தில்
விடுவிக்கபட்டார்
என்பதே நல்ல தமிழ்
வாக்கியமாகும்.

#தெரிந்துகொள்வோம்

@தஞ்சை தேவா

பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்தவனுக்கு அழகாகவும் அதுல நின்னுட்டு வருபவனுக்கு கடுப்பாகவ...

Posted: 06 Oct 2014 09:19 AM PDT

பஸ்சில் ஜன்னலோரம்
அமர்ந்தவனுக்கு அழகாகவும்
அதுல
நின்னுட்டு வருபவனுக்கு கடுப்பாகவும்
இருப்பதுதான்
வாழ்க்கை!!

@குரு பிரபாகரன்

ஒரு காலத்துல ஜாக்கெட் போடாம மார்பை காண்பிச்சபடிதான் இருக்கனும்ன்னு சொன்ன கூறுகெட...

Posted: 06 Oct 2014 09:14 AM PDT

ஒரு காலத்துல
ஜாக்கெட் போடாம
மார்பை காண்பிச்சபடிதான்
இருக்கனும்ன்னு சொன்ன
கூறுகெட்ட
சமுதாயம்தான் நம்ம
சமுதாயம் ..

சும்மா இந்த
ஜீன்ஸ்க்கெல்லாம்...
கலாச்சாரம்
கவிதாச்சாரம்ன்ன
ு பொங்கிக்கிட்டு ....

பெண்கள் என்ன
உடை போட்டு தங்களை மூடனும்ன்னு நாம
சொல்லாம
மூடிட்டுருந்தாலே போதும்...

@விக்ராந்த்

தமிழகத்தில் மாற்று அரசியல் ஏற்பட ரஜினியும் கமலும் அரசியலுக்கு வர வேண்டும் - தமிழ...

Posted: 06 Oct 2014 09:08 AM PDT

தமிழகத்தில்
மாற்று அரசியல் ஏற்பட
ரஜினியும் கமலும்
அரசியலுக்கு வர
வேண்டும் -
தமிழிசை செளந்தர்ராஜன்

#தமிழ் திரையுலகில்
மாற்றம் ஏற்பட
தமிழிசை சௌந்தர்ராஜன்
ரஜினி கமல் படத்தில் '
குத்துவிளக்கு குத்துவிளக்கு'
போன்ற குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும்.

நீங்க
கஸ்தூரி மாதிரி குத்துபாட்டுக்கு ஆடுன பாக்க
எவ்ளோ கண்ராவியா கேவளமா இருக்குமோ அதவிட
கேவலமா இருக்கும்
அவனுங்க
அரசியலுக்கு வந்தா.

@துருவன்

ரஷ்யா, சீனாவ தாக்கிப்பேசுனா அமெரிக்க திரைப்படம். பாகிஸ்தான தாக்கிப்பேசுனா இந்தி...

Posted: 06 Oct 2014 08:35 AM PDT

ரஷ்யா, சீனாவ
தாக்கிப்பேசுனா அமெரிக்க
திரைப்படம்.

பாகிஸ்தான
தாக்கிப்பேசுனா இந்திய
திரைப்படம்.

தமிழன
தாக்கிப்பேசுனா இந்திப்படம்.

#அம்புட்டுதான் உலக
சினிமா.

@கிருஷ்ணா கிட்டு

இணையதளம் மூலமாக பல்வேறு பொருட்களை வாங்க வகைசெய்த ஒரு தளம் Flipkart. இணையத்தில் ப...

Posted: 06 Oct 2014 07:23 AM PDT

இணையதளம் மூலமாக
பல்வேறு பொருட்களை வாங்க
வகைசெய்த ஒரு தளம்
Flipkart. இணையத்தில்
பொருட்கள்
வாங்குபவர்கள்,
படிக்காத பாமரர்கள்
அல்ல.
படித்தவர்கள். இணையம்
பயன்படுத்தத்
தெரிந்தவர்கள். அவர்கள்
அத்தனை பேரையும்
ஒரே நாளில் முட்டாள்
ஆக்கிய தளம்
ஒன்று உண்டென்றால்,
அது FlipKart தான்.

அடிமாட்டு விலைக்கு பொருட்களை தருகிறோம்
என்று கூறி,
ஏற்கனவே இருந்த
விலையை விட,
நான்கு அல்லது ஐந்து மடங்கு விலையேற்றி,
ஏற்றப்பட்ட
விலையிலிருந்து தள்ளுபடி என்று FlipKart
தளம் செய்த மோசடி,
வன்மையாக
கண்டிக்கத்தக்கது.


நோக்கத்தை இழந்த மதங்கள் மனிதத்தையும் இழந்துவிட்டது ! இந்துவா கொள்கையை தீவிரமாக...

Posted: 06 Oct 2014 07:10 AM PDT

நோக்கத்தை இழந்த மதங்கள் மனிதத்தையும் இழந்துவிட்டது !

இந்துவா கொள்கையை தீவிரமாக முன்னெடுக்கும் மோடியும், கிறுத்துவ மதத்தின் உலகப் பிரதிநிதியாக விளங்கும் போப் ஆண்டவரும் இனப்படுகொலை செய்தவனோடு கைகுலுக்கி தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். ஒரு சிறிதும் இனப்படுகொலை குறித்து இவர்கள் இருவரும் கவலைப்படுவதாக, கண்டிப்பதாக தெரியவில்லை. இதைத் தான் இவர்கள் சார்ந்த மதங்கள் போதிக்கின்றனவா ?


இன்னைக்கு அனுப்புனா தமிழக முதல்வராம்.. நாளைகழிச்சு அனுப்புனா கர்நாடக முதல்வராம்....

Posted: 06 Oct 2014 06:50 AM PDT

இன்னைக்கு அனுப்புனா தமிழக முதல்வராம்..
நாளைகழிச்சு அனுப்புனா கர்நாடக முதல்வராம்...

எவனோ புல் போதைல போஸ்டருக்கு வசனம் எழுதிருக்கான் ...

இன்னொருத்தன்... காவிர் நீர் வேண்டாம்..காவிரி தாய் வேண்டும்..
சீக்கிரம் வாருங்கள்ன்னு அழைப்பு விடுக்குறான்...

அவங்க என்ன மரு வீட்டுக்காடா போயிருக்காங்க...ஜெயிலுக்குயா.. ஜெயிலுக்கு...

@Vikkranth Uyir Nanban

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு.. வடிவுக்கரசி : அதுக்கு பெரி...

Posted: 06 Oct 2014 06:30 AM PDT

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு..

வடிவுக்கரசி : அதுக்கு பெரிய
படிப்புலாம் படிச்சியிருக்னும்.

கவுண்டர் : எதுக்கு, அந்த
கருமத்துக்கு படிப்பே தேவயில்லை க்கா..

வடிவுக்கரசி : என்ன சொல்லுற நீ?

கவுண்டர் : 'ஊறு-ல நொண்டி நொசக்கன், வெந்தது வேகாதது, பெட்டி கடையில
கடன் சொன்னது, பீடி-யை கிள்ளி குடிச்சது, சந்தை கடையில கருப்பெட்டி திருடிட்டு ஓடுனது'..
இந்த மொத்த கும்பலும் அங்க
தான்க்கா இருக்குது..!

#கவுண்டர்_டயலாக்ஸ்


Posted: 06 Oct 2014 06:03 AM PDT


1) விருப்பமான உடை அணியலாம். 2) விருப்பமான உணவினை வெளியிலிருந்து தருவித்துக் கொள்...

Posted: 06 Oct 2014 05:50 AM PDT

1) விருப்பமான உடை அணியலாம்.
2) விருப்பமான உணவினை வெளியிலிருந்து தருவித்துக் கொள்ளலாம்.
3) 3 ஆங்கிலம், 3 தமிழ் நாளிதழ் படிக்கலாம்.
4) வண்ண சேட்டிலைட் தொலைக்காட்சி 24 மணி நேரமும் பார்க்கலாம்.
5) யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
6) குடும்ப டாக்டர் தினம் மூன்று முறை வரலாம்.
7) அரசாங்க டாக்டர் தினம் 3 முறை வந்து நலம் விசாரிப்பார்.
8) அட்டாச்டு பாத்ரூம், லெட்ரின்.
9) One Lady assistant (Woman Police) of Jaya's Choice
10) ....
11) ....
.
.
....அடே...டே...ய்....!!!!

இதுக்குப்பேரு சிறை தண்டனையாடா....????
.
.
.
...மை லார்டு குன்ஹா! நானும் ரௌடிதான், என்னியையும் அந்த ஜெயில்ல போட்ருங்க...!

@Venkatesh Angaisnet

Posted: 06 Oct 2014 05:39 AM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கூரை வீடு ! வீட்டு வாசலில் கோலம்... வாசலின் இருபுறமும் திண்ணைகள்... வெயில் காலத்...

Posted: 07 Oct 2014 07:30 AM PDT

கூரை வீடு !
வீட்டு வாசலில் கோலம்...
வாசலின் இருபுறமும் திண்ணைகள்...
வெயில் காலத்தில் சூரிய ஒளியும்,
மழைகாலத்தில் மழைத்துளியும்
வசிக்கும்...
வீட்டின் பின்புறம் சமயகட்டு...
விறகடுப்புள் வெந்த சோறு...
பருக மோரும்,கூழும்...
வீட்டின் அருகில் வேப்ப மரம்...
மரத்தடி கயத்து கட்டிலில்
நிம்மதியான உறக்கம்...
இரவில் ஒளிரும் நிலவே எங்கள்
வீட்டு விளக்கு...
ஆடம்பரம் இல்லாவிட்டாலும்
அழகான, நிம்மதியான
வாழ்க்கை கிராமத்து வீட்டில்
மட்டுமே கிடைக்கும்.

நந்தமீனாள


வண்ண முட்டைகளை வேண்டி இந்த பூச்சி இனத்திற்காக ஊர் முழுவதும் அலைந்தது இன்னமும் மற...

Posted: 07 Oct 2014 07:30 AM PDT

வண்ண முட்டைகளை வேண்டி இந்த பூச்சி இனத்திற்காக ஊர் முழுவதும் அலைந்தது இன்னமும் மறக்க முடியவில்லை.......

ஞாபகம் வருதே.........

பா விவேக்


மறந்த இனிப்புகள்! மறக்க முடியாத சுவை! ஞாபகம் வருதே....... பா விவேக்

Posted: 07 Oct 2014 05:30 AM PDT

மறந்த இனிப்புகள்!

மறக்க முடியாத சுவை!

ஞாபகம் வருதே.......

பா விவேக்


திருச்செந்தூர் கோயில் : ஒரு வரலாற்று உண்மை திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அ...

Posted: 07 Oct 2014 03:30 AM PDT

திருச்செந்தூர் கோயில் : ஒரு வரலாற்று உண்மை

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி,
அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள்
எடுத்துச் சென்றனர். அதைக்
கொடுத்துவிடுமாறு அப்போது தென்
தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம்
ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.
இது நடந்தது, 1648ஆம் ஆண்டு வாக்கில்.
ஆனால் இதற்கு மாறான கட்டுக்
கதை ஒன்றுதான் இன்று வரலாறாக
பேச்சுவழக்கில் உள்ளது.
திருமலை நாயக்கர் (1623-1659), 1646ஆம்
ஆண்டு டச்சுக்காரர்கள்
தனது ஆட்சிக்கு உட்பட்ட காயல்பட்டணம்
நகரில் கோட்டை கட்டிக்கொள்ள
அனுமதி அளித்தார். அந்தக் காலகட்டத்தில்
திருமலை நாயக்கர் போர்த்துகீசியருடனும்
வணிகத் தொடர்பு வைத்திருந்தார்.
அதனால் டச்சுக்காரர்கள்
கோட்டை கட்டுவதை போர்த்துகீசியர்கள்
விரும்பவில்லை.
அதனால் டச்சுப் படையின் படகைப்
பொருட்களுடன் கைப்பற்றி, அதைப்
போர்த்துகீசியர் அழித்தனர். டச்சுப்
படை அப்போது மலபார், கொழும்பு போன்ற
இடங்களில் கோட்டைகள் கட்டி, வலுவான
படைகளுடன் இருந்தது. அவர்கள்
கொழும்பில் உள்ள தங்கள்
தலைமையகத்திற்கு உதவி கேட்டனர்.
தலைமையகம் காயல்பட்டணத்தில் இருந்த
டச்சுப் படைகளுக்காக 10 படகுகளில்
படைகளை அனுப்பிவைத்தது. அந்தப்
படகுகள்
மணப்பாடு அருகே தரையிறங்கியது.
அவர்கள் வீரராமபட்டணத்தில் இருந்த
போர்த்துகீசியர்களின் தேவாலயத்தைக்
கைப்பற்றினர். மேலும் அந்தப் படைகள்
முன்னேறி திருச்செந்தூர் முருகன்
கோயிலையும் துப்பாக்கி முனையில்
கைப்பற்றியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
கோயில் கைப்பற்றப்பட்டதால் தெய்வ பயமும்
அவர்களிடம் சேர்ந்துகொண்டது.
இது குறித்து, மன்னர்
திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர்.
திருமலை நாயக்கர், டச்சுப் படைகளுக்குக்
கடிதம் அனுப்பினார்.
கோயிலை விட்டு உடனடியாக
வெளியேற வேண்டும் எனவும்
காயல்பட்டணத்தில் அவர்கள்
கோட்டை தாக்கப்பட்டதற்கு ஈட்டுப் பணம்
தருவதாகவும் அவர் உறுதி தந்தார்.
மன்னரின் கோரிக்கையை அவர்கள்
கண்டுகொள்ளவில்லை. அவர்கள்
தூத்துக்குடியை நோக்கி முன்னேறி அதைக்
கைப்பற்றினர் (தென்னிந்திய அரசிதழில்,
1658இல் டச்சுப் படைகள் தூத்துக்குடியைக்
கைப்பற்றியதாகக் குறிப்பு உள்ளது). 40, 000
ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.
அது மிகப் பெரிய தொகை. இந்த இழுபறிகள்
ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க,
இதற்கிடையில் திருச்செந்தூர் மக்கள்
தங்களாகவே ஒன்றிணைந்து ஒரு படையைத்
திரட்டுகின்றனர்.
600 பேர்கள், 60 குதிரைகள், 4 யானைகள்
கொண்ட
ஒரு படையை உருவாக்குகிறார்கள்.
டச்சுப் படைகளை எதிர்த்துப்
போரிடுகிறார்கள். ஆனால் அந்த
முயற்சி வெற்றி பெறவில்லை. 50 வீரர்கள்
இறந்து விடுகிறார்கள். 1648இல் டச்சுப்
படையினர் திருச்செந்தூர் கோயிலில்
உள்ள சிலைகளுடன்
திருச்செந்தூரை விட்டுக் கிளம்பிச்
செல்கிறார்கள். சிலைகளுக்குப் பிணயமாக
அவர்கள் ஒரு லட்சம் ரியால்கள் கேட்டனர்.
திருமலை நாயக்கரும் அவரது முகவரான
வடமலைப் பிள்ளையனும் டச்சுப்
படைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த
ஒரு நால்வர் குழுவை அனுப்பினர்.
பாட்டவியாவில் உள்ள
டச்சு கவர்னருக்கு இவர்களின்
கோரிக்கை தெரிவிக்கப்படுகிறது. அவர்கள்
திருமலை நாயக்கர் கொடுக்கும்
தொகையை ஏற்றுக்கொண்டு சிலைகளைத்
திருப்பிக்கொடுக்க ஆணையிடுகிறார்.
1651ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீட்கப்பட்ட
சிலைகள் மீண்டும்
பிரதிஷ்டை செய்யப்படுகின்றன


விளையாடப் போகலாமா? ஞாபகம் வருதே.... பா விவேக்

Posted: 07 Oct 2014 03:00 AM PDT

விளையாடப் போகலாமா?

ஞாபகம் வருதே....

பா விவேக்


ஞாபகம் வருதே... பா விவேக்

Posted: 07 Oct 2014 02:30 AM PDT

ஞாபகம் வருதே...

பா விவேக்


தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்!....................... இந்தியா என்ன...

Posted: 06 Oct 2014 08:24 AM PDT

தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்!.......................

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.

''M130'' எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமை யானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் தொலைக்காட்சியில் இந்தத் தகவலை வெளியிட் டுள்ளார்.

உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது.

நன்றி : விடுதலைபேப்பர்

பா விவேக்


உணவில் கீரைவகை சேர்ப்போம்..!!!

Posted: 06 Oct 2014 07:30 AM PDT

உணவில் கீரைவகை சேர்ப்போம்..!!!


ஆயிரம் வீரர்களைப் பார்த்தாலும், என் இதயத்தில் தோன்றுவது இவர் உருவம் மட்டுமே.......

Posted: 06 Oct 2014 05:30 AM PDT

ஆயிரம் வீரர்களைப் பார்த்தாலும், என் இதயத்தில் தோன்றுவது இவர் உருவம் மட்டுமே....

ஷாட் விளையாட்டில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் அடிக்காத சிக்சர்கள் இல்லை.......

பா விவேக்


இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பாலம்! திருவள்ளுவர் இரண்டடுக்கு பாலம் திருநெல்வே...

Posted: 06 Oct 2014 03:30 AM PDT

இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பாலம்!

திருவள்ளுவர் இரண்டடுக்கு பாலம்

திருநெல்வேலி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் இரண்டடுக்கு பாலம். இந்த இரண்டடுக்கு பாலத்தை 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இரண்டடுக்கு மேம்பாலத்தின், மொத்த நீளம் மட்டும் 800 மீட்டர் ஆகும். இங்கு பாதசாரிகள் பாலத்தைக் கடக்க வசதியாக இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் அடியில் ரயில்கள் சொல்லவும் வசதி உள்ளது. இரண்டடுக்கு பாலத்தில் மேல் தளத்தில் மொத்த 25 spans, மற்றும் 13 bow string arch உள்ளன. மேலும் இதனுடைய மொத்த அகலம் 30.30 மீட்டர் ஆகும். மேலும் இதின் கீழ பாலத்தின் அகலம் 11.72 மீட்டர், 12 single tier R.C.C girder மூலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலம் போக்குவரத்து நேரிசல் கட்டுபடுத்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது .

பா விவேக்


....திருவண்ணாமலை திருகோவில்....

Posted: 05 Oct 2014 10:53 PM PDT

....திருவண்ணாமலை திருகோவில்....


அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்... திருநெல்வேல...

Posted: 05 Oct 2014 10:22 PM PDT

அருள்மிகு நெல்லையப்பர்,
அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்...

திருநெல்வேலி நகரம்...


Nellai Appar Kovil
அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்... திருநெல்வேலி நகரம்...

படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு...

Posted: 05 Oct 2014 07:30 AM PDT

படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின்
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..


மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்... #அழகு

Posted: 05 Oct 2014 07:11 AM PDT

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்...

#அழகு


தஞ்சை பெரிய கோவில்... #கம்பீரம்

Posted: 04 Oct 2014 10:11 PM PDT

தஞ்சை பெரிய கோவில்...
#கம்பீரம்


கப்பல் ஓட்டிய தமிழன் - சிதம்பரம் பிள்ளை.

Posted: 04 Oct 2014 09:50 PM PDT

கப்பல் ஓட்டிய தமிழன் - சிதம்பரம் பிள்ளை.


சிதம்பர ரகசியத்தின் உண்மை ---- !! கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சித...

Posted: 04 Oct 2014 07:30 AM PDT

சிதம்பர ரகசியத்தின் உண்மை ---- !!

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?

எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....

இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது........

அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..

பலவற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...

அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,

இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

பா விவேக்


தெரியாத ஆலய தகவல்: வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாத...

Posted: 04 Oct 2014 07:30 AM PDT

தெரியாத ஆலய தகவல்:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.


உலகம் முழுவதும் பரவிய தமிழ் வணிகம்: பழந்தமிழர்கள் உலகம் முழுக்க பரவியிருந்ததற்க...

Posted: 04 Oct 2014 06:40 AM PDT

உலகம் முழுவதும் பரவிய தமிழ் வணிகம்:

பழந்தமிழர்கள் உலகம் முழுக்க பரவியிருந்ததற்கான தடையங்கள் இருக்கிறதா?

ஆம் நிறைய இருக்கிறது. உண்மை. பசிபிக் பெருங்கடலில் வால்கோனாத் தீவு என்றொரு பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் ஓர் இடத்திற்கு தீமைத் தீவு என்று பெயர். அந்த இடம் அடிக்கடி எரிமலை பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இடம். ஆக, அந்த இடத்திற்கு தீமைத் தீவு என்று சரியான பொருள் படும்படி தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். ராசேந்திர சோழன் காலத்தில் அங்கு தமிழர்கள் குடியேறியி ருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி பல சான்றுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

- கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ('டில்லி தமிழ்ஸ்' என்ற இணையதளத்தை உருவாக்கி முல்லைப் பெரியாறு பிரச்சனையை உலகம் முழுக்கப் பரப்பியவர். மேற்கு வங்க -ஹவ்ரா மாவட்டம், மட்நாபூர் மாவட்டம் என வெளிமாநிலத்தில் பணிபுரிந்தாலும் அந்த மக்களுக்கு என்ன தேவையோ அதைப் பெற்றுத் தருவதில் நேர்மையாக இருந்தவர்)

பா விவெக்


திருநீறு ஏன் அணிய வேண்டும்? திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண்....

Posted: 04 Oct 2014 06:27 AM PDT

திருநீறு ஏன் அணிய வேண்டும்?

திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி
திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.

திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்

மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.

கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.

நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து
நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.

பா விவேக்


இடதுபக்கம் - நேரு வலதுபக்கம் - நேர்மை என்ன நான் சொல்றது? சரிதானேன்னேன்?

Posted: 04 Oct 2014 06:17 AM PDT

இடதுபக்கம் - நேரு
வலதுபக்கம் - நேர்மை
என்ன நான் சொல்றது? சரிதானேன்னேன்?


திருப்பூர் குமரன்...

Posted: 03 Oct 2014 09:31 PM PDT

திருப்பூர் குமரன்...


இந்த இடத்துல நின்னு பாக்கும் போது சரியாக 90 டிகிரி இருக்கு, கொஞ்சம் என் பொறியியல...

Posted: 03 Oct 2014 07:30 AM PDT

இந்த இடத்துல நின்னு பாக்கும் போது சரியாக 90 டிகிரி இருக்கு, கொஞ்சம் என் பொறியியல் Brain வச்சி பாத்தேன் ஒரு வேல Mini Drafter use பண்ணி இருப்பாங்களோ????? - நெல்லை அப்பர் கோவில்


தவமிருக்கிறேன் மீண்டும் உன்னை தலைவனாய் பெற... :'(

Posted: 02 Oct 2014 08:51 AM PDT

தவமிருக்கிறேன் மீண்டும் உன்னை தலைவனாய் பெற...

:'(


பச்சை தமிழர் காமராஜர் கல்வி எண்ணம் கல்வி என்ற கற்கண்டை கனிவாய் நீயும் பயில்வாய...

Posted: 02 Oct 2014 02:30 AM PDT

பச்சை தமிழர் காமராஜர் கல்வி எண்ணம்

கல்வி என்ற கற்கண்டை
கனிவாய் நீயும் பயில்வாயே
வாழ்வின் வழிகாட்டி கல்வியை
கசடறக் கற்க முனைவாயே
கல்வி என்ற கலங்கரையை
கரை சேரக் கற்பாயே
பண்பை உயர்த்தும் கல்வியை – நல்ல
பாரதத்தில் சேர்ப்பாயே
வாழ்வில் முடிவில்லை கல்வியே
நம்மை வளம் சேர்க்கும் கல்வியே
என்றென்றும் வேண்டும் கல்வியே
என் ஒளி விளக்கே கல்வியே...


ஒருசமயம் காமராஜர் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தமிழக முதல் அமை...

Posted: 02 Oct 2014 01:30 AM PDT

ஒருசமயம் காமராஜர் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தமிழக முதல் அமைச்சராக இருந்தார்.
பத்திரிகை நிருபர்கள் அவரைப் பேட்டி காணச் சென்றபோது காமராஜரிடம் ஒரு மாற்றத்தைக் கண்டனர். எப்போதும் அவர் மேல் துண்டை தன் வலது தோளின் மீதுதான் போட்டுக் கொள்வார். தற்போது வழக்கத்திற்கு மாறாக இடது தோளின் மேல் போட்டுக் கொண்டிருந்தார்.
அதைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது, "ஒன்றுமில்லை சும்மாதான்...' என்றார் காமராஜர். நிருபர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கும் என நினைத்து மீண்டும் மீண்டும் பல தடவை துருவித் துருவிக் கேட்டபோது காமராஜர் கோபத்துடன், "எனது இடது தோள் பகுதியில் சட்டை கிழிந்துள்ளது. அதை மறைக்கத்தான் எனது துண்டை இடது தோளின்மீது போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்,,..


"கர்மவீரர்" என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு,அனவருக்கும் ஒரு பாட...

Posted: 02 Oct 2014 12:30 AM PDT

"கர்மவீரர்" என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு,அனவருக்கும் ஒரு பாடம்:1903 ஜூலை 15: இன்று விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.

1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.

1919 : ரவுலட் சட்டத்தை எதிர்த்துகாந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.

1920 : ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

1922 : சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.

1923 : நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில்கள்ளுக்கடை மறியலில்ஈடுபட்டார்.

1925 : கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927 : சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே அகற்றியது)

1928 : சைமன் குழுவை எதிர்த்து,மதுரையில் காமராஜர் போராட்டம்.

1930 : வேதாரண்யத்தில் நடந்தஉப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1931 : காந்தி-இர்வின் ஒப்பத்தம்காரணமாக காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழுவுக்கு

தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1932 : போலீஸ் ஸ்டேஷன் மீதுவெடிகுண்டு வீசியதாக சதி வழக்கு, காமராஜர் மீது சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.

1933 : பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.

1935 : டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

1936 : காரைக்குடியில் நடந்தகாங்கிரஸ் கமிட்டித் தேர்தலில்சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937 : சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலரும் வேண்டியும் மறுத்து விட்டார்.

1940 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.

1941 : யுத்த நிதிக்கு பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருது

நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 : ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

1945 : இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்..

1946 : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

1947 ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.

1954 : குலக்கல்வி திட்ட எதிர்ப்புகாரணமாக ராஜாஜி முதல்வர்பதவியை ராஜினாமா செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

1954, ஏப்.13: காமராஜர் முதல்வரானார்.

1956 : மொழிவாரி மாநில பிரிவினையின் படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார்.

1957 : பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.

1960 : ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.

1962 : பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.

1963 : எல்லோருக்கும் இலவசகல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமாசெய்தார்.

1964 : அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1966 : இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.

1967 : பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.

1969 : நாகர்கோவில் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.

1971 : பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமென்ட்உறுப்பினராக காமராஜர் தேர்வு.

1975: அக்.2ம் தேதி எதிர்பாராமல் காமராஜருக்கு உடல் வியர்த்தது. டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.


பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு * இனம் காட்டும் நிறம்...

Posted: 02 Oct 2014 12:16 AM PDT

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு
* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!
* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!
* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

பா விவேக்


காமராஜருக்கு அஞ்சலி செலுத்த, அவரின் உறவினரோ, ஜாதிக்காரராகவோ இருக்கவேண்டுமென்ற...

Posted: 01 Oct 2014 11:50 PM PDT

காமராஜருக்கு அஞ்சலி செலுத்த,
அவரின் உறவினரோ,
ஜாதிக்காரராகவோ
இருக்கவேண்டுமென்ற
அவசியமில்லை.

அரசு பள்ளியில் படித்திருந்தால் போதும்...!

பா விவேக்