Tuesday, 26 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும், கடவுளே வேண்டும் என்றால் தான் பெண் குழந்...

Posted: 26 May 2015 09:03 AM PDT

கடவுளை வேண்டினால்
ஆண் குழந்தை பிறக்கும்,
கடவுளே வேண்டும்
என்றால் தான் பெண்
குழந்தை பிறக்கும்...

@காளிமுத்து


ப்ளிப்கார்ட்ல பொருள் டெலிவரி குடுக்க வந்த நபர் கிட்ட பொருள வாங்கிட்டு கையெழுத்து...

Posted: 26 May 2015 05:17 AM PDT

ப்ளிப்கார்ட்ல பொருள்
டெலிவரி குடுக்க வந்த
நபர் கிட்ட பொருள
வாங்கிட்டு
கையெழுத்து
போட்டுட்டு
இருந்தேன்....அந்த
நேரத்துல அந்த பையன்
சார் கேக்கறேன்னு தப்பா
நினைச்சுக்க
வேண்டாம்ன்னு
ஆரம்பித்தார்.... நான் கூட
எதோ டிப்ஸ் கிப்ஸ் கேக்க
போறாரோன்னு நினச்சு
என்ன தம்பி
சொல்லுங்கன்னு
சொன்னேன்....சார்
எதாச்சும் நல்ல இடத்தில
வேலை இருந்தா
சொல்லுங்க சார்
ப்ளீஸ்ன்னு சொன்னதும்
எனக்கே பாவமா
போச்சு....சரி உங்க படிப்பு
என்ன என்ன மாதிரி
வேலை வேணும்ன்னு
கேட்டேன்....அந்த பையன்
சொன்னதும் எனக்கே
ரொம்ப கஷ்டமா
போச்சு....கோவைல
இருக்கற ஒரு பெரிய
காலேஜ்ல பிஈ படிச்சு
இருக்கார்...நல்ல
மதிப்பெண்ல பாஸ் ஆகி
உள்ளார்....இப்படி
படிச்சுட்டு ஏன் டெலிவரி
பாய் வேலை
பாக்கறீங்கன்னு
கேட்டேன்....என்னை படிக்க
வைக்கவே வீட்ல ரொம்ப
கஷ்டப்பட்டாங்க....படிச்சு
முடிச்சுட்டு படிப்புக்கு
ஏற்ற வேலை தான்
வேணும்ன்னு மிடுக்கா
இருந்தேன்...போக போக
கஷ்டம் அதிகரிக்க
பணத்துக்கு வேண்டி
இப்படி கிடச்ச வேலைய
செய்யறேன்....இப்படியே
போனா நான் படிச்சா
படிப்பு கூட மறந்து
போகும் போல....அதான்
இப்படி மனசுக்கு பட்டவங்க
கிட்ட உதவி
கேக்கறேன்னு
சொன்னார்....சரின்னு
எனக்கு தெரிஞ்ச நண்பர்
மூலமா சம்பளம்
குறைவா இருந்தாலும்
அவர் படித்த படிப்புக்கு
ஏற்ற வேலையை பெற்று
கொடுத்தேன்....அந்த
பையன் ரொம்ப நன்றிங்க
அண்ணா சொல்லிட்டு
போனார்....போயிட்டு
எனக்கு போன் பண்ணி
அவங்க பெற்றோர் கிட்ட
கொடுத்து நன்றி சொல்ல
சொல்லிட்டான்.....எனக்கே
பாவமா இருந்துச்சு...இ
தை விட கொடுமை
என்னன்னா அந்த பையன்
சொன்ன இன்னொரு தகவல்
தான்....பிளிப்கார்ட்
டெலிவரி பாய்
வேலைக்கு அவனை
போலவே பிஈ முடித்த பல
பேர் உள்ளனர் என்பது
தான்...... பல லட்சம் செலவு
பண்ணி படிச்சு டெலிவரி
பாய் வேலை பாக்கறது
எவ்ளோ கஷ்டமா
இருக்கும்
படிச்சவங்களுக்கும்,
படிக்க வெச்சவங்களுக்கு
ம்.........!!!


Tamil History and Culture Facebook Posts

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


மருத்துவ பயன்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்; 1) என்...

Posted: 26 May 2015 10:03 AM PDT

மருத்துவ பயன்கள்
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்;
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ"
3) மூட்டு வலியை போக்கும் "முடக்கத்தான் கீரை."
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் "கற்பூரவல்லி" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் "அரைக்கீரை."
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் "மணத்தக்காளி கீரை".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
"பொன்னாங்கண்ணி கீரை."
8) மாரடைப்பு நீங்கும் "மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் "அருகம்புல்."
10) கான்சர் நோயை குணமாக்கும் " சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் "பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் " முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட "வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க " வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "துளசி.""
16) மார்பு சளி நீங்கும் "சுண்டைக்காய்."
17) சளி, ஆஸ்துமாவுக்கு "ஆடாதொடை."
18) ஞாபகசக்தியை கொடுக்கும் "வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் " பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் " அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் "தூதுவளை""
25) முகம் அழகுபெற "திராட்சை பழம்."
26) அஜீரணத்தை போக்கும் " புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி"
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு"


Posted: 26 May 2015 10:00 AM PDT


12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும...

Posted: 26 May 2015 09:03 AM PDT

12 மணி நேர
வேலையாக
இருந்தாலும்
முகம் சுழிக்காமல்
செய்ய வைத்து
விடுகின்றது
குடும்பத்தின்
வறுமை .......!


உங்கள் அறிவை கண்டு வியக்கிறோம்.

Posted: 26 May 2015 08:50 AM PDT

உங்கள் அறிவை கண்டு வியக்கிறோம்.


அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழு...

Posted: 26 May 2015 08:03 AM PDT

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)
-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."
படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பிவைத்தேன்..."!!
ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)
உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!
அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது.
உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!
அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!
இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!
நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."
என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!
என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!
என்னை #சுமந்துசெல்ல தென்னைஓலை இருக்கிறது..."!!
நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இதுதானென்று...!
நீ எனக்கு கற்றுத்தந்தாய் #உறவுகள் இதுதானென்று...

கால மாற்றத்தால் கைவிடப்பட்ட வண்டி.

Posted: 26 May 2015 07:03 AM PDT

கால மாற்றத்தால் கைவிடப்பட்ட வண்டி.


வயலுக்கு சென்று பெற்றோருக்கு உதவும் இந்த குட்டி விவசாயிக்கு லைக் உண்டா ?

Posted: 26 May 2015 07:00 AM PDT

வயலுக்கு சென்று பெற்றோருக்கு உதவும் இந்த குட்டி விவசாயிக்கு லைக் உண்டா ?


புரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்! இதுதான் நிஜம்

Posted: 26 May 2015 06:44 AM PDT

புரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்! இதுதான் நிஜம்


ஒரு உயர் அதிகாரி வரும் போது சல்யூட் பண்ணணும்னு அறிவு இல்ல உனக்கு..

Posted: 26 May 2015 06:03 AM PDT

ஒரு உயர் அதிகாரி வரும் போது சல்யூட் பண்ணணும்னு அறிவு இல்ல உனக்கு..


Posted: 26 May 2015 06:03 AM PDT


பென்சில் முனைகளில் ABCD செதுக்கிய அற்புத கலைஞர்..

Posted: 26 May 2015 06:00 AM PDT

பென்சில் முனைகளில் ABCD செதுக்கிய அற்புத கலைஞர்..


பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!

Posted: 26 May 2015 05:45 AM PDT

பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!


பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!
www.indiasian.com
Cow playing with ball

கருவேப்பிலையின் மருத்துவ பயன்பாடுகள் கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நி...

Posted: 26 May 2015 05:38 AM PDT

கருவேப்பிலையின் மருத்துவ பயன்பாடுகள்

கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும். கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும். கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது. கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி , சுரத்தைக் குணப்படுத்தும். கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது


'' நாட்டில எவனுக்குமே விபரம் பத்தல '' வடிவேலின் கலக்கல் காமெடி .

Posted: 26 May 2015 05:05 AM PDT

'' நாட்டில எவனுக்குமே விபரம் பத்தல '' வடிவேலின் கலக்கல் காமெடி .



Posted: 26 May 2015 05:03 AM PDT


மேகி நூடுல்ஸ் விவகாரம் - செய்தியும் பின்னணியும்

Posted: 26 May 2015 04:50 AM PDT

மேகி நூடுல்ஸ் விவகாரம் - செய்தியும் பின்னணியும்



Posted: 26 May 2015 04:47 AM PDT


Posted: 26 May 2015 04:03 AM PDT


இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்

Posted: 26 May 2015 03:21 AM PDT

இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்


இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்
www.indiasian.com
Interesting & Funny Answers!

இந்தியா வல்லரசு ஆவுறத எவனாலயும் தடுக்க முடியாது

Posted: 26 May 2015 03:10 AM PDT

இந்தியா வல்லரசு ஆவுறத எவனாலயும் தடுக்க முடியாது


அடேய் ! நீங்கெல்லாம் எங்கெருந்துடா வாரீங்க ?

Posted: 26 May 2015 02:00 AM PDT

அடேய் ! நீங்கெல்லாம் எங்கெருந்துடா வாரீங்க ?


ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.” Happy...

Posted: 26 May 2015 01:52 AM PDT

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்." Happy Birthday ஆச்சி smile emoticon நடிகர் திலகியை வாழ்த்துவோம்


Posted: 26 May 2015 01:03 AM PDT


வியர்வை சிந்த உழைப்பவன் தான் வசதிகள் குறைவாக இருந்தாலும் நோயின்றி மகிழ்ச்சியாக இ...

Posted: 26 May 2015 12:30 AM PDT

வியர்வை சிந்த உழைப்பவன் தான்
வசதிகள் குறைவாக இருந்தாலும்
நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கிறான்


கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ

Posted: 26 May 2015 12:10 AM PDT

கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ


கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ
www.indiasian.com
Aircraft Deploys Whole-Plane Parachute For Emergency Landing In Ocean

அற்புதமான க்ரியேடிவ் பெயின்டிங்.

Posted: 25 May 2015 11:10 PM PDT

அற்புதமான க்ரியேடிவ் பெயின்டிங்.


அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெர...

Posted: 25 May 2015 10:03 PM PDT

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும்,
பணக்காரனாகிவிடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது" என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்" என்றாள்.
"இது எப்போது நடந்தது?" என்று கேட்டான். "அந்தக் காசு கிடைத்த மறுநாளே" என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.' என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!

அடேய் ஏன்டா இப்படி ! ஏன் ?

Posted: 25 May 2015 10:00 PM PDT

அடேய் ஏன்டா இப்படி ! ஏன் ?


உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ

Posted: 25 May 2015 09:10 PM PDT

உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ


உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ
www.indiasian.com
Stupid People Fails Compilation

இன்று என்னை காலி செய்த உன்னை காலி செய்யாமல் விடமாட்டேன் - மதுபாட்டில்

Posted: 25 May 2015 08:30 PM PDT

இன்று என்னை காலி செய்த உன்னை

காலி செய்யாமல் விடமாட்டேன் - மதுபாட்டில்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...

Posted: 26 May 2015 07:50 AM PDT

சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம்,

ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே சுமக்கும் ஆண்களை மறந்துவிடுகிறது.. .


தங்கம் வாங்கினால் ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..! முன்பெல்...

Posted: 26 May 2015 07:10 AM PDT

தங்கம் வாங்கினால் ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..!

முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு' (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை!

தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.

முத்திரையில் ஏமாற்றினால்..?

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

Relaxplzz

இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் (y) (y) இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு க...

Posted: 26 May 2015 06:50 AM PDT

இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் (y) (y)

இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட்

" ஒரு பிரபலமாக எனக்கும் சமுதாயப் பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டு இளைய சமுதாயத்துக்கு ஒரு தவறான உதாரணமாக இருக்க விரும்பவில்லை.

என்னுடைய தங்கை மாநிறம்தான். ஆனால் அழகானவள். இந்த விளம்பரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டால் அவளை நானே இழிவுபடுத்துவது போலாகும். என் தங்கையை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நாட்டின் எத்தனையோ கோடி மக்களையும் அவமானப்படுத்துவது போலாகும்.

இது என்னுடைய முடிவு. மற்ற நடிகைகள் நடிப்பது அவர்களின் முடிவு."

இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட் கூறியது. நிஜமான அழகி.

.
- Shan Karuppusamy @ Relaxplzz


#நண்பர்கள்_கவனத்திற்கு வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிற...

Posted: 26 May 2015 06:10 AM PDT

#நண்பர்கள்_கவனத்திற்கு

வேலைக்குப் போய்
திரும்பி வந்த
தன் அம்மாவிடம்
5 வயது சிறுமி கேட்டாள் ..

நம்ம வீட்டு
பீரோ சாவியை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?

அதைப் போய்
ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?

நம்ம வீட்டு
பீரோல இருக்குற நகை,
பணம் எல்லாம்
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?

ஷ்ஷு....
அதெல்லாம் ஆயாகிட்டக்
கொடுக்கக் கூடாது...

உங்க ATM கார்டை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?

என்ன கேள்வி இது..?
நீ சொல்றதெல்லாம்
ரொம்ப முக்கியமான பொருள்.
அதையெல்லாம்
ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...

"" அப்போ ஏம்மா
என்ன மட்டும்
ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் முக்கியமில்லையா..? ""

இம்முறை
அம்மாவிடமிருந்து
பதில் இல்லை.
கண்களில்
கண்ணீர் மட்டுமே இருந்தது...!

Relaxplzz

திருக்குறள் பற்றிய செய்திகள்..... 1)திருக்குறளின் முதல்பெயர்~முப்பால் 2)திருக்...

Posted: 26 May 2015 05:10 AM PDT

திருக்குறள் பற்றிய செய்திகள்.....

1)திருக்குறளின் முதல்பெயர்~முப்பால்

2)திருக்குறளில் உள்ள வார்த்தை~14000

3)திருக்குறளில் உள்ள எழுத்து~42194

4)திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்~நெருஞ்சிப்பழம்

5)திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை~குன்றிமணி

6)திருக்குறளில் பயன்படாத ஒரே உயிரெழுத்து~ஔ

7)திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரம் ~ பனை, மூங்கில்

8)திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து~னி(1705)

9)திருக்குறளில் இடம்பெறாத இருசொல்~தமிழ்,கடவுள்

10)திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்~ளீ,ங

11)திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்~9

Relaxplzz

ஒரு நிமிட சப்பாத்தி.... இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ்... ஐந்து நிமிடத்தில் இட்லி....

Posted: 26 May 2015 03:10 AM PDT

ஒரு நிமிட சப்பாத்தி....
இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ்...

ஐந்து நிமிடத்தில் இட்லி...
பத்து நிமிடத்தில் புலாவ்....

ஒரு வயதில் பிரைமரிகாம்ப்ளக்ஸ்..
ஐந்து வயதில் ஆஸ்த்துமா...

பத்து வயதில் பதின்ம மாற்றம்...
முப்பது வயதில் முதுமைத்தோற்றம்...

நாப்பது வயதில் மருத்துவ வாசம்...
ஐம்பதில் முடிந்தது ஆயுட்காலம்...!!

# "பண்டமாற்றுமுறை" இது தானோ..???

Relaxplzz

எளிய இயற்கை மருத்துவம் :- துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து ட...

Posted: 26 May 2015 02:10 AM PDT

எளிய இயற்கை மருத்துவம் :-

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

Relaxplzz

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.” Happy...

Posted: 26 May 2015 01:32 AM PDT

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்." Happy Birthday ஆச்சி :) நடிகர் திலகியை வாழ்த்துவோம் :)


இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர...

Posted: 26 May 2015 01:10 AM PDT

இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-)

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.

;-) ;-)

Relaxplzz

இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... <3 1) உங்களை சந...

Posted: 26 May 2015 12:10 AM PDT

இப்படி ஒரு காதலி கிடைத்தால்,
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... ♥

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்.

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்.

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

♥ ♥

Relaxplzz

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் ! மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம்...

Posted: 25 May 2015 11:10 PM PDT

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

" மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும்.

இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Thanks - Arun Dr. Kumar Vishwas

Relaxplzz

12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும...

Posted: 25 May 2015 10:09 PM PDT

12 மணி நேர
வேலையாக
இருந்தாலும்
முகம் சுழிக்காமல்
செய்ய வைத்து
விடுகின்றது
குடும்பத்தின்
வறுமை .......!

- Manikandan Alagar


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

மக்களின் நன்மைக்காக, கடந்த ஓராண்டில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் - மோடி :>>வா...

Posted: 25 May 2015 08:54 PM PDT

மக்களின் நன்மைக்காக, கடந்த ஓராண்டில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் - மோடி

:>>வாலு படத்தை வெளியிடாம வச்சிருக்கிறத சொல்றாரு போல

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய...

Posted: 25 May 2015 06:00 PM PDT

வாழ்க்கை வாழ்வதற்கே

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இதில் சில கண்டிஷன்கள் உண்டு.அவை-

1)அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2)உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.

3)அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4)ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400ரூபாய் வரவு வைக்கப்படும்

5)எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6)வங்கி"முடிந்தது கணக்கு"என்று சொன்னால் அவ்வளவுதான்.வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால்- அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை -நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போலபேணுங்கள் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

Relaxplzz

இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியா...

Posted: 25 May 2015 10:10 AM PDT

இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?..

உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் புகைப்படம் எடுக்கிறார்களே.. ஜாக்கிரதை.. உஷார்..

பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்...
..
இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்....
ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.

பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே....!

Relaxplzz