Relax Please: FB page daily Posts |
- சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...
- தங்கம் வாங்கினால் ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..! முன்பெல்...
- இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் (y) (y) இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு க...
- #நண்பர்கள்_கவனத்திற்கு வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிற...
- திருக்குறள் பற்றிய செய்திகள்..... 1)திருக்குறளின் முதல்பெயர்~முப்பால் 2)திருக்...
- ஒரு நிமிட சப்பாத்தி.... இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ்... ஐந்து நிமிடத்தில் இட்லி....
- எளிய இயற்கை மருத்துவம் :- துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து ட...
- ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.” Happy...
- இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர...
- இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... <3 1) உங்களை சந...
- மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் ! மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம்...
- 12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும...
- மக்களின் நன்மைக்காக, கடந்த ஓராண்டில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் - மோடி :>>வா...
- வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய...
- இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியா...
Posted: 26 May 2015 07:50 AM PDT |
Posted: 26 May 2015 07:10 AM PDT தங்கம் வாங்கினால் ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..! முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது? ஹால்மார்க்! சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம். அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள். யார் வழங்குகிறார்கள்? இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு' (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். தர பரிசோதனை! தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர். இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம். முத்திரையில் ஏமாற்றினால்..? நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள். எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம். Relaxplzz |
Posted: 26 May 2015 06:50 AM PDT இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் (y) (y) இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட் " ஒரு பிரபலமாக எனக்கும் சமுதாயப் பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டு இளைய சமுதாயத்துக்கு ஒரு தவறான உதாரணமாக இருக்க விரும்பவில்லை. என்னுடைய தங்கை மாநிறம்தான். ஆனால் அழகானவள். இந்த விளம்பரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டால் அவளை நானே இழிவுபடுத்துவது போலாகும். என் தங்கையை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நாட்டின் எத்தனையோ கோடி மக்களையும் அவமானப்படுத்துவது போலாகும். இது என்னுடைய முடிவு. மற்ற நடிகைகள் நடிப்பது அவர்களின் முடிவு." இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட் கூறியது. நிஜமான அழகி. . - Shan Karuppusamy @ Relaxplzz ![]() |
Posted: 26 May 2015 06:10 AM PDT #நண்பர்கள்_கவனத்திற்கு வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு.... அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... "" அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "" இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...! Relaxplzz |
Posted: 26 May 2015 05:10 AM PDT திருக்குறள் பற்றிய செய்திகள்..... 1)திருக்குறளின் முதல்பெயர்~முப்பால் 2)திருக்குறளில் உள்ள வார்த்தை~14000 3)திருக்குறளில் உள்ள எழுத்து~42194 4)திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்~நெருஞ்சிப்பழம் 5)திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை~குன்றிமணி 6)திருக்குறளில் பயன்படாத ஒரே உயிரெழுத்து~ஔ 7)திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரம் ~ பனை, மூங்கில் 8)திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து~னி(1705) 9)திருக்குறளில் இடம்பெறாத இருசொல்~தமிழ்,கடவுள் 10)திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்~ளீ,ங 11)திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்~9 Relaxplzz |
Posted: 26 May 2015 03:10 AM PDT ஒரு நிமிட சப்பாத்தி.... இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ்... ஐந்து நிமிடத்தில் இட்லி... பத்து நிமிடத்தில் புலாவ்.... ஒரு வயதில் பிரைமரிகாம்ப்ளக்ஸ்.. ஐந்து வயதில் ஆஸ்த்துமா... பத்து வயதில் பதின்ம மாற்றம்... முப்பது வயதில் முதுமைத்தோற்றம்... நாப்பது வயதில் மருத்துவ வாசம்... ஐம்பதில் முடிந்தது ஆயுட்காலம்...!! # "பண்டமாற்றுமுறை" இது தானோ..??? Relaxplzz |
Posted: 26 May 2015 02:10 AM PDT எளிய இயற்கை மருத்துவம் :- துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும். சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும். Relaxplzz |
Posted: 26 May 2015 01:32 AM PDT |
Posted: 26 May 2015 01:10 AM PDT இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி * ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே. ;-) ;-) Relaxplzz |
Posted: 26 May 2015 12:10 AM PDT இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... ♥ 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள். 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள். 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள். 5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க. 6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள். 7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள். 8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள். 9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள். 10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்... ♥ ♥ Relaxplzz |
Posted: 25 May 2015 11:10 PM PDT மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் ! மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: " மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. Thanks - Arun Dr. Kumar Vishwas Relaxplzz |
Posted: 25 May 2015 10:09 PM PDT 12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும்பத்தின் வறுமை .......! - Manikandan Alagar ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 25 May 2015 08:54 PM PDT மக்களின் நன்மைக்காக, கடந்த ஓராண்டில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் - மோடி :>>வாலு படத்தை வெளியிடாம வச்சிருக்கிறத சொல்றாரு போல - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz |
Posted: 25 May 2015 06:00 PM PDT வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இதில் சில கண்டிஷன்கள் உண்டு.அவை- 1)அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். 2)உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது. 3)அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4)ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400ரூபாய் வரவு வைக்கப்படும் 5)எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம். 6)வங்கி"முடிந்தது கணக்கு"என்று சொன்னால் அவ்வளவுதான்.வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால்- அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே? உண்மையில் இது ஆட்டமில்லை -நிதர்சனமான உண்மை ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். எனவே உங்களைப் பொன் போலபேணுங்கள் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். Relaxplzz |
Posted: 25 May 2015 10:10 AM PDT இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் புகைப்படம் எடுக்கிறார்களே.. ஜாக்கிரதை.. உஷார்.. பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்... .. இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம். பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே....! Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment