Monday, 4 August 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 04 Aug 2014 09:30 AM PDT

:)


குட்டிக்கதை: ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று...

Posted: 04 Aug 2014 09:22 AM PDT

குட்டிக்கதை:

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! :)


"குட்டிக்கதைகள் - 2"

இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது...

Posted: 04 Aug 2014 09:02 AM PDT

இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொணடு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடனே வளர்து வந்தார்

ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ைள போல பழக ஆரம்பித்துவிட்டனர் இப்படியே வருடங்கள் உருண்டோடின அப்பொழுதுதான் அந்த துயரம் நிகழ்ந்தது
திடீரென்று ஓருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவேஇல்லை உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர்உடலை வடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்

இந்தசம்பவம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் நீரை வார்த்தது
இந்த ஜீவனுக்குஇருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல்லாதது ஏனோ??


"உலகம் இவ்வளவு தான்"

மார்ச் மாதம் 18,2009ம் ஆண்டு, டொங்கா, நுகூ அலோபா என்னும் இடத்தில் ஏற்பட்ட நீருக்...

Posted: 04 Aug 2014 08:51 AM PDT

மார்ச் மாதம் 18,2009ம் ஆண்டு, டொங்கா, நுகூ அலோபா என்னும் இடத்தில் ஏற்பட்ட நீருக்கடியிலான எரிமலை...

March 18, 2009, an undersea volcano erupts off the coast of Nuku'Alofa, Tonga.


"அபூர்வமான தகவல்கள்"

மாம்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 04 Aug 2014 08:40 AM PDT

மாம்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:)

Posted: 04 Aug 2014 08:30 AM PDT

:)


’மாத்தி யோசி’ கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்...

Posted: 04 Aug 2014 08:15 AM PDT

'மாத்தி யோசி'

கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்'"எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்" என்று எழுதி இருந்தது.

அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.

ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.

"இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை" என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.

இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.

அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது...

via Ilayaraja Dentist

சிறுநீரை பெருக்கும் வாழைத்தண்டு:- சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகி...

Posted: 04 Aug 2014 08:04 AM PDT

சிறுநீரை பெருக்கும் வாழைத்தண்டு:-

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


"உணவே மருந்து"

<3

Posted: 04 Aug 2014 07:52 AM PDT

கீழே விழுந்த பொம்மையை தடவிக் கொடுக்கும் குழந்தை அந்தக் கணத்தில் தாயாகிறாள்! <3...

Posted: 04 Aug 2014 07:43 AM PDT

கீழே விழுந்த பொம்மையை தடவிக் கொடுக்கும் குழந்தை அந்தக் கணத்தில் தாயாகிறாள்! ♥

- யாஸ்மின் பஷீர்.


அன்பியல் - 1

:)

Posted: 04 Aug 2014 07:32 AM PDT

ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந...

Posted: 04 Aug 2014 07:14 AM PDT

ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந்து விட்டனரா என்று அறிய ஒரு டெஸ்ட் வைத்தார்....

மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத ஒரு நீச்சல் குளத்தின் டைவிங் பலகைக்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்...

முதல் பைத்தியம் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டது...

இரண்டாம் பைத்தியம் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டது..

மூன்றாவது "இல்லை டாக்டர் நான் குதிக்க மாட்டேன் "
என்றது..

மகிழ்ச்சியடைந்த டாக்டர்
"வாழ்த்துக்கள் நீங்கள் குணமாகி விட்டீர்கள் போல தோன்றுகிறது....சரி ஏன் குதிக்க மாட்டேன் என்றீர்கள்?" என்று கேட்டார்...

"அது வந்து டாக்டர் எனக்கு நீச்சல் தெரியாது"

இப்போ அந்த டாக்டர் பைத்தியமா அலைவதாக கேள்வி ..

:P :P


குசும்பு... 1

90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்க...

Posted: 04 Aug 2014 06:59 AM PDT

90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம்.

உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சில விஷயங்களில் கொடுத்து வைக்காதவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு ஜாலி அலசல்.

90களில் பிறந்தவர்களும், கணினி & இணையமும்

90களில் பிறந்த இணையத்தையே இன்று இயக்குவது இந்த 90களில் பிறந்தவர்கள்தான்.

* ஏலியன் தலை போன்று இருந்த பழைய ஆப்பிள் ஐ மேக் கம்ப்யூட்டரின் மானிட்டரைப் பார்த்து, 'அதெல்லாம் பணக்காரன் வீட்டுல இருக்கரதுப்பா!' என்று வருந்தியவர்கள்.

* இன்று, அதே ஆப்பிள்-ன் ஐஃபோனில் 'டிஸ்ப்ளே சுமார்பா' என்று அலுத்துக்கொள்பவர்கள்.

* நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் கதையை, ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்த ஆப்பிள் என்ற கதையாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்போகிறவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் பென்சில் டூல் மூலம் மவுஸால் தன்பெயரை கிறுக்கி, உலகின் முதல் டிஜிட்டல் கையெழுத்தைப் போட்ட வர்க்கத்தினர்.

* ஃபோட்டோஷாப்பில் ஹீரோவின் உடலுடன் தன் தலையை சுமாரான மார்ஃபிங்கில் வெட்டி ஒட்டி தன் 'அழகில்' மயங்கியவர்கள்.

* MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டமை பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

* விண்டோஸ் 98ன் அருமையை உணர்ந்தவர்கள்.

* பக்கத்து வீட்டு அங்கிளின் ஹார்டு டிஸ்க்கை ஃபார்மட் செய்து விண்டோஸ் XP ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொடுத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் வேர்டு மென்பொருளில் தன் பெயரை WordArt மூலம் 3Dல் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

* அமெரிக்காவில் இருந்து வரும் மாமாவிடம் Palmtop இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள். கம்ப்யூட்டர் பாடத்தில் உள்ள 'பேஸிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர்' பகுதியில் வரும் அரித்மெட்டிக் அண்டு லாஜிக்கல் யூனிட் (ALU) என்றால் என்ன என்று கேட்டு ஆசிரியர்களைத் திணறடித்தவர்கள். சுருக்கமாக சொன்னால் முதல் தலைமுறை கணினி ஆசிரியர்களைக் கண்ட தலைமுறையும் 90களில் பிறந்தவர்கள்தான்.

* ஹாட்மெயில், ரெடிஃப் மெயில், யாஹூ மெயில் ஆகியவற்றில் மெயில் அனுப்பிய முதல்நாளே, வீட்டுக்கு வந்த தபால்காரரிடன் 'இன்னும் எத்தனை நாளைக்கு லெட்டர்லாம் அனுப்பிக்கிட்டு இருப்பாங்களோ?!' என அலுத்துக்கொண்டவர்கள்.

* Road Rash, Need for Speed (முதல் எடிஷன் ) போன்ற கேம்களை விளையாடிவிட்டு, கோடை விடுமுறை நாட்களை தெருவில் கழிக்காமல், வீட்டிலுள்ளேயே கழித்த முதல் தலைமுறையினர்.

* கூகுளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர்கள். யூடியூபுக்கு முன்னர் 'கூகுள் வீடியோஸ்' என்று ஒன்று இருந்ததைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள்.

* ஆர்குட்டில் தன்னுடைய 'க்ரஷ்' தன் ப்ரொஃபைலைப் பார்த்தாளா?/பார்த்தானா? என்று தெரிந்துகொள்வதற்காகவே அக்கவுண்ட் வைத்திருந்தவர்கள்.

* ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலும், ஆர்குட்டைவிட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதவர்கள்.

* ட்விட்டரை இன்றும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

* கூகுள் +, ஹிட்டாகாது என்று பயன்படுத்தாமலேயே சொல்பவர்கள்.

* இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் மூலம் டிவி சேனல்களைப் பார்த்து, 'நான்லாம் நெட்லயே டிவி பார்ப்பேனே!' என்று சொன்னவர்கள்.

* தன் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து, அதை இன்னொரு கணினியில் போட்டுப் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

மொத்தத்தில் 90களில் பிறந்தவர்கள். இன்றைய இணையத்தின் குழந்தைகள்!

90களில் பிறந்தவர்களும், டிவியும்

* 90களில் பிறந்தவர்கள்தான் ஊர்கூடி 'ஒளியும் ஒலியும்' பார்த்த கடைசி தலைமுறை.

* டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற அர்த்தமும் உண்டு என்பதை அறிந்தவர்கள்.

* இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அம்மா மடியில் தூங்கியவர்கள்

* 'ஒய் திஸ் கொலைவெறி'யைக் கேட்டுக்கொண்டே அம்மாவின் தூக்கத்தையும் கெடுத்தவர்கள்.

* ஞாயிற்றுக்கிழமைகளின் மதியங்களை டாம் அண்ட் ஜெர்ரியுடன் கழித்தவர்கள்

* பள்ளி முடிந்து வந்ததுடன் 4 மணிக்கு ஸ்வாட் கேட்ஸும் (Swat Cats), 5 மணிக்கு போக்கெமான் (Pokemon) பார்த்த பாக்கியவான்கள்.

* WWE-ஐப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு குட்டிப் பயலை ஸ்டைலாக தூக்கிப்போட்டு ரவுடியான கடைசி தலைமுறை.

* பழைய விஜய் டிவியை பார்த்தவர்கள். Solidaire, Dynora டிவியைப் பயன்படுத்திய கடைசி தலைமுறையினர்.

* வீடியோ டேப்பாக இருக்கும் தன் பெற்றோரின் திருமண வீடியோவை சிடியாக மாற்றித் தந்தவர்கள்.

* குச்சி குச்சியாக இருக்கும் பழைய மாடல் ஆன்டெனாவை மொட்டை மாடியில் அட்ஜஸ்ட் செய்யத் தெரிந்த கடைசி மனிதர்கள்.

* டிவி ரிமோட்டை முதலில் பயன்படுத்தியவர்கள்.

* காலியாக இருக்கும் பக்கத்து வீட்டின் கேபிள் கனெக்‌ஷனில் நம் டிவிக்கு திருட்டு கனெக்‌ஷன் கொடுத்து த்ரில் அனுபவித்தவர்கள்.

* ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியைப் பார்த்து வாய் பிளந்த இரண்டே வருடத்தில், சொந்த கிராமத்தில் இருக்கும் மாமாவுக்கு பிளாஸ்மா டிவிக்கும், LED டிவிக்கும் வித்தியாசம் சொல்லிக்கொடுக்கும் தலைமுறையினர்.

* டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம் பாக்ஸை வாங்கித் தராவிட்டால் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்த குழந்தைகள் இன்றைய தலைமுறையினர்

* அதே வீடியோ கேம் பாக்ஸின் கேட்ரிட்ஜ் வேலை செய்யாவிட்டால், அதில் வாயால் ஊதி திரும்ப பயன்படுத்தினால் வேலை செய்யும் என்ற சிதம்பர ரகசியத்தை அறிந்தவர்கள்.

* 'சிதம்பர ரகசியம்' தொடரை டிவியில் பார்த்துவிட்டு, நாடி ஜோசியத்தைப் பற்றி நண்பர்களிடம் பேசி மெய்சிலிர்த்தவர்கள்.

* 'மர்ம தேசம்' தொடரில் வரும் குதிரை சத்ததை கனவுகளில் கண்டு பயந்தவர்கள்.

* 'சின்ன பாப்பா, பெரிய பாப்பா' தொடரைப் பார்த்துதான் மாமியார் மருமகள் உறவையே புரிந்துகொண்டவர்கள்.

* நாலு ஸ்பீக்கர், ஒரு சப் வூஃபர் என்று இருக்கும் மியூசிக் சிஸ்டத்தை, ஹோம் தியேட்டர் ரேஞ்சுக்கு ஃபீல் செய்து, மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களை முழு வால்யூமில் ஓடவிட்டு, அதை ரசிப்பதுபோலவே நடித்து அந்த தெருவின் பீபியையே எகிறவிட்டவர்கள்.

* இடி இடித்தால் டிவியை ஆஃப் செய்யவேண்டும். இல்லாவிட்டால் பிக்சர் டியூப் போய்விடும் என்று பயந்தவர்கள்.

* நியூஸ் வருவதற்கு முன்பு, ஓடும் கவுன்ட் டவுன் டைமை வைத்து வாட்ச்சை செட் செய்தவர்கள்.

* சித்தி, மெட்டி ஓலி போன்ற சீரியல்களின் டைட்டில் மியூஸிக்கை எங்காவது கேட்க நேர்ந்தால் மெலிதாகப் புன்னகைப்பவர்கள்

* ஞாயிற்றுக்கிழமையானால் சக்திமான் பார்க்கவேண்டும் என்று 10 மணிக்கு முன், டிவி முன்னால் ஆஜரானவர்கள்.

* அதே சக்திமான் சீரியலுக்கு முன்னால், ராமாயணமும், மகாபாரதமும் ஓடும் என்றாலும் அப்போது டிவி பக்கமே எட்டிப்பார்க்காதவர்கள்.

* மியூஸிக் சானல்களுக்கு தன் பெயருடன் காதலியின் பெயரை SMS அனுப்பி, அதை டிவியில் பார்க்கும்போது உலகமே தன்னை ஆசிர்வதித்ததாக உணர்ந்த முதல் தலைமுறையினர்.

90களில் பிறந்தவர்களும், காதலும்

* இன்ஃபேச்சுவேஷன் (Infatuation) -ஐ காதல் என நினைத்துக்கொண்டு கற்பனையிலேயே குடும்பம் நடத்திய புண்ணியவான்கள்

* ஒரே காதல் ஜோடி, பேஜரில் இருந்து வாட்ஸ்அப் பயன்படுத்தி காதலித்துக்கொண்டே இருந்தால் அவர்களும் 90களில் பிறந்தவர்களே!

* மெரினா பீச்சில் இருந்து பீச் ஓரம் இருக்கும் KFC-க்கு இடம் மாறிய ஜோடியினர்.

* காதல் கடிதங்கள் அனுப்பிக் கொண்ட கடைசி தலைமுறையினர் (வரலாறு முக்கியம் அமைச்சரே!)

* ஃபோன் நம்பரை பகிர்ந்துகொள்வதன் மூலமும் காதலைத் துவக்க முடியும் என்ற முதல் தலைமுறையினர்.

* காதலர்களாக இருந்தாலும் பேருந்தில் கூட ஒன்றாக அமர்ந்து செல்ல தயங்கிய கடைசி தலைமுறையினர்.

* பைக்கில் கட்டிப்பிடித்துக்கொண்டு பறக்கும் முதல் தலைமுறை.

* காதல் தோல்வி என்றாலே தற்கொலை என்று நினைத்த கடைசி தலைமுறையினர்.

* காதல் தோல்வி என்றாலும், 'பிரேக்அப்' என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட்டு கடந்துசெல்லும் முதல் தலைமுறையினர்.

* 'நாங்கள் காதலிக்கிறோம்' என்பதை ' In a relationship ' என்று பட்டும்படாமல் சொல்லத் தெரிந்தவர்கள்.

* சாதி மூலம் காதல்கள் பிரிக்கப்படும் கடைசி தலைமுறை இவர்கள்.

* நட்பையும் காதலையும் குழப்பிக்கொள்ளும் கடைசி தலைமுறையாக இருந்தாலும், தேவைப்படும்போது காதலை நட்பாக மாற்றிக்கொள்ளும் முதல் தலைமுறையினர்.

மேலே உள்ள பாயின்ட்டுகளைப் படிக்கும்போது உங்களுக்கு உங்களையே பார்ப்பதுபோல் தோன்றினால், நீங்களும் 90களில் பிறந்த தலைமுறையினர்தான்! நானும் உங்கள் தலைமுறைதான்!


# படித்ததில் பிடித்தது # - 1

எப்பாடா எவ்வளவு பெரிய தாலி :O

Posted: 04 Aug 2014 06:43 AM PDT

எப்பாடா எவ்வளவு பெரிய தாலி :O


சும்மா... சும்மா... 5

:)

Posted: 04 Aug 2014 06:30 AM PDT

:)


"என் மகன் திறமையானவனாக இருந்தால் அவனுக்கான பணத்தை அவனே சம்பாதித்துக் கொள்வான். த...

Posted: 04 Aug 2014 06:00 AM PDT

"என் மகன் திறமையானவனாக இருந்தால் அவனுக்கான பணத்தை அவனே சம்பாதித்துக் கொள்வான். திறமை இல்லாதவனாக இருந்தால், என்னுடைய பணத்தை விரயம் பண்ணுவான்"

நடிகர் ஜாக்கி சானை சிறந்த நடிகர் வரிசையை விடவும் சிறந்த சிந்தனையாளர்கள் வரிசையில்தான் வைக்கவேண்டும்....

குழந்தைகளை உடல்-மன-அறிவு நலத்துடன் வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அதற்கு மேலாக சொத்துரிமை என்ற பெயரில் வாரிசுகளுக்கு அளிக்கப்படும் பணம் யாவும் அடுத்த தலைமுறையைச் சீரழிக்க மட்டுமே பயன்படும்.

உழைப்பில்லாமல் கிடைக்கும் பணத்தின் அருமை மனிதனுக்கு ஒரு போதும் தெரியப்போவதில்லை. அதோடு இப்படி சலுகைகளுடன் வரும் இளைஞனை, நியாயமான உழைப்பில் வரும் இளைஞன் எதிர்கொள்ளும் போது எல்லா வகையிலும் அங்கு பாதிப்பு நேருவதைக் காண முடிகிறது.

எனவே சொத்துக்களை வாரிசுக்களுக்கு கொடுப்பது எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு மன நோய் என்ற தெளிவு வரவேண்டும்.

via Ilangovan Balakrishnan.


இந்த ஓவியம் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Aug 2014 05:45 AM PDT

இந்த ஓவியம் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 04 Aug 2014 05:30 AM PDT

:)


தெரிந்துகொள்வோமா..? பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமா...

Posted: 04 Aug 2014 05:15 AM PDT

தெரிந்துகொள்வோமா..?

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல்
தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400
ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல்
தரும்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில்
இருந்து 6 லட்சம்
தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50
லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால்
கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல்
தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின்
நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக
இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத
ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின்
எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய
கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000
(எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப
முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும்
ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என
அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த
பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற
பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000
வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத
ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால்
உடனே இறந்துவிடும் ஒரே மீன் –
சுறாமீன்.

தயிராக மற்ற முடியாத ஒரே பால் –
ஒட்டகப்பால்.

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர்
இன்றி வாழும் ஒரு உயரினம்
கங்காரு எலி.

துருவக் கரடிகள்
அனைத்துமே இடது கை பழக்கம்
உடையவை.

இவை அனைத்தும் அற்புதமான உண்மைகள்... உங்கள் நண்பர்களிடம் பகிர்வது ஒரு நல்ல நண்பரின் கடமை...நீங்கள் எப்படி.???

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது ! சமீபத்தில், என் நண...

Posted: 04 Aug 2014 05:00 AM PDT

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

(எஸ்.ராமன், சென்னை. நன்றி. தினமலர்)


தம்பி என்னது இது...? :P

Posted: 04 Aug 2014 04:45 AM PDT

தம்பி என்னது இது...? :P


வாழ்க்கையின் நான்கு இன்றியமையாக் கட்டங்கள் :)

Posted: 04 Aug 2014 04:30 AM PDT

வாழ்க்கையின் நான்கு இன்றியமையாக் கட்டங்கள் :)


ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு "கட...

Posted: 04 Aug 2014 04:15 AM PDT

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும் என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை. நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்த குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்"

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

தோப்புக்கரணம்... நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு முன்னால் தோப்புக்க...

Posted: 04 Aug 2014 04:00 AM PDT

தோப்புக்கரணம்...

நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவோம்.

அப்போது எமது மூளை சுறுசுறுப்பாகவும் ஞாபக சக்தி மிக்கதாகவும் இருக்கும்.

பிள்ளையார் யானை முகத்தோன் (யானைக்கு ஞாபகசக்தி அதிகம்).அந்த சக்தியை பிள்ளையார் எமக்கு கொடுக்கிறார்.

அதே போல் வீட்டுப்பாடம் செய்ய மறந்த மாணவர் முன்பு பாடசாலையில் ஆசிரியருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவார்.

ஒரு மாணவன் தோப்புக்கரணம் போடும் போது மூளை கூர்மை அடைவதோடு ஞாபகவலிமையையும் அதிகரிக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள Dr.Eric Robins(Physician) என்பவர் தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்பாகும் என்று தனது ஆய்வில் கூறி உள்ளார் .

எமது முன்னோர்களது பல செயற்பாடுகளுக்கு அர்த்தங்கள் பல இருக்கின்றன!


இந்த பசுமையான சூழல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Aug 2014 03:45 AM PDT

இந்த பசுமையான சூழல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 04 Aug 2014 03:30 AM PDT

:)


இது ஒரு ஓவியம் என்று சொன்னால் நம்ப கொஞ்சம் கஷ்டம்தான்.. "Banana Lady" (Hanoi) o...

Posted: 04 Aug 2014 03:01 AM PDT

இது ஒரு ஓவியம் என்று சொன்னால் நம்ப கொஞ்சம் கஷ்டம்தான்..

"Banana Lady" (Hanoi) oil on canvas 2012
by Anthony Brunelli


ஓவியங்கள் - 2

:)

Posted: 04 Aug 2014 02:48 AM PDT

கர்ணன் - துரியோதனன் கண்ணன் – அர்ச்சுனன் இராமன் – குகன் இது போன்று உங்களுக்கு...

Posted: 04 Aug 2014 02:45 AM PDT

கர்ணன் - துரியோதனன்
கண்ணன் – அர்ச்சுனன்
இராமன் – குகன்

இது போன்று உங்களுக்கு தெரிந்த சிறந்த நட்புகளை சொல்லவும்... :)

0 comments:

Post a Comment