Monday, 4 August 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஆரோக்கியமும் புண்ணியமும் .... காலைல எழுந்து வேகமாக நடை பயணம் போகிறோம் . உடல் ஆரோ...

Posted: 04 Aug 2014 07:30 AM PDT

ஆரோக்கியமும் புண்ணியமும் ....
காலைல எழுந்து வேகமாக நடை பயணம் போகிறோம் . உடல் ஆரோக்கியத்திற்காக வைற்றை குறைக்க ... பிறகு அதற்க்கு தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்ட எப்டி விறு குறையும் ... கொஞ்சம் யோசிங்க ... உடல் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் ....அதன் கூட புண்ணியமும் சேரும் ...அதெப்டி என்றுகேட்கிரீர்கள ....
உடல் ஆரோக்கியத்திற்கு .... காலை வேளையல்.சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும் அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும் , வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும் .இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன , பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து ,வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள் , புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும் .இதற்க்க்காகத்தன் வெளிபிரகாரங்களை அமைத்து இருக்கிறார்கள் , நம் முன்னோர்கள் , சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளி பிரகாரத்தில் பார்த்தல் உங்களுக்கே தெரியும் .புதுவை அதாவது பாண்டிச்சேரி அருகில் உள்ள வில்லியனூர் ,திருகாமீச்வரர் ஆலயத்திலும் காணலாம் , இதுதான் 2இன் 1 ,நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தவைகளை நாம் மறந்து போனோம், காலம் நாகரீகம் அடைந்ததால் ,எல்லாமே மாறி போச்சிபா ...சிவாலயங்கள் மட்டுமல்லாது ,மன்னர்கள் காலத்து கோவில்கள் அனைத்திலும் காணலாம்.

நன்றி : Famous Temples In Tamilnadu


கோவில் கோபுர உயரம்... 1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோப...

Posted: 04 Aug 2014 05:30 AM PDT

கோவில் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் – 236 அடி

2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

4, ஆவுடையார் கோவில் – 200 அடி

5, தென்காசி – 178 அடி

6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

9, மன்னார்குடி – 154 அடி

10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்

13, சுசீந்திரம் – 134 அடி

14, திருவாடனை – 130 அடி

15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

17, திருச்செந்தூர் – 127 அடி

18, சங்கரன் கோவில் – 125 அடி

19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்


கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும...

Posted: 04 Aug 2014 03:00 AM PDT

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர் . மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

"ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".


0 comments:

Post a Comment