Friday, 29 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அரசாங்கம் இந்த ஆட்டோகாரனுங்கல மதிய வெயிலில் சொட்டர் போட்டு வண்டி ஓட்டனும்ன்னு சொ...

Posted: 29 May 2015 06:18 PM PDT

அரசாங்கம் இந்த
ஆட்டோகாரனுங்கல மதிய
வெயிலில் சொட்டர்
போட்டு வண்டி
ஓட்டனும்ன்னு சொன்னா
கூட கேப்பாய்ங்க போல,

மீட்டர் போட்டு வண்டி ஓட்ட
சொன்னா அவ்ளோ கோபம்
வருது...

@பூபதி முருகேஷ்

புடவை கடைக்குள் நுழைந்ததும் பெண்களோட முதல்வேலை... மத்தபொண்ணுங்க எடுத்து வச்சிருக...

Posted: 29 May 2015 05:49 AM PDT

புடவை கடைக்குள்
நுழைந்ததும்
பெண்களோட
முதல்வேலை...
மத்தபொண்ணுங்க
எடுத்து வச்சிருக்க
சேலையை பார்ப்பது
தான்...

@விவிகா சுரேஷ்

நம்ம முறைப்பொண்ணுங்க கூட நமக்கு (வேறிடத்தில்) கல்யாணம் ஆனபின்னாலதான் ஆசையா 'மாமா...

Posted: 29 May 2015 05:45 AM PDT

நம்ம
முறைப்பொண்ணுங்க
கூட நமக்கு
(வேறிடத்தில்)
கல்யாணம்
ஆனபின்னாலதான்
ஆசையா 'மாமா,
மச்சான்'னு கூப்பிடுதுங்க...

@விவிகா சுரேஷ்

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 29 May 2015 08:30 AM PDT

கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன்,...

Posted: 29 May 2015 07:50 AM PDT

கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன், பெண் குழந்தை பிறந்தது..

#பபி


அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்... ஒட்டகசிவிங்கிய...

Posted: 29 May 2015 04:10 AM PDT

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.

கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.

நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்

Relaxplzz

சல்மான் கான் வழக்கு பைல்கள் தீ விபத்தில் நாசம்: மகாராஷ்ட்ர அரசு தகவல்.. வாழ்க ஜ...

Posted: 29 May 2015 03:38 AM PDT

சல்மான் கான் வழக்கு பைல்கள் தீ விபத்தில் நாசம்: மகாராஷ்ட்ர அரசு தகவல்..

வாழ்க ஜனநாயகம்


ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு..!! 40 நாட்...

Posted: 29 May 2015 01:10 AM PDT

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு..!!

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும்மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு,
டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".

🐓பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .𾰟
🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது ....

அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 29 May 2015 12:37 AM PDT

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெ...

Posted: 29 May 2015 12:31 AM PDT

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?

காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

வாவ்...

Posted: 28 May 2015 11:24 PM PDT

வாவ்...



இப்படியும் சில... 1. Facebookல நல்ல பதிவுகள் போடறவங்க கண்டிப்பா நல்லவங்களா தான்...

Posted: 28 May 2015 11:10 PM PDT

இப்படியும் சில...

1. Facebookல நல்ல பதிவுகள் போடறவங்க கண்டிப்பா நல்லவங்களா தான் இருப்பாங்கனு முட்டாள்தனமா நம்பறது.

2. ervamatin use பண்ணின வழுக்கை தலையில வாழமரம் கூட வளரும்னு நம்பறது.

3. புடவை கட்டின பொண்ணுங்க எல்லாம் அடக்க ஒடுக்கமானவர்கள். ஜீன்ஸ் மிடி போட்ட பொண்ணுங்க பஜாரிங்கனு நினைக்கிறது.

4. SSLC/+2 ல ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்தவங்க ஈஸியா வாழ்க்கைல முன்னேறிருவாங்கனு அபத்தமா நினைக்கிறது.

5. தம், தண்ணி அடிக்கறது ஆம்பளைக்கு அழகுனு அசட்டுதனமா நினைக்கிறது.

6. அழகும் பணமும் இருந்தா போதும், எந்த பையனையும் அல்லது பொண்ணையும் மடக்கி விடலாம்னு மனக்கோட்டை கட்டறது.

7. பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிற புள்ளைங்க தான் நல்லா படிப்பாங்கன்னு புளுகறது.

8. காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாம கண்மூடித்தனமா love பண்ணி நாசமா போறது.

9. பெண்மை பெண்மைனு வெளில பெனாத்திட்டு, கட்டுன பொண்டாட்டிய கொடுமைப்படுத்துறது.

10. கடைசியா...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி ஒரு வெத்து போஸ்ட் போட்டுட்டு, எதுவுமே பண்ணாம சும்மா உக்காந்து விட்டத்த வேடிக்கை பாக்கறது (வேற என்ன பண்ண முடியும்?!?).

;-) ;-)

Relaxplzz

குடிநீரை வீணாக்காதீங்க........!

Posted: 28 May 2015 10:30 PM PDT

குடிநீரை
வீணாக்காதீங்க........!


நிலக்கரி ஃபைல்ஸ்... காக்கா தூக்கிட்டு போயிருச்சி... அம்மா வழக்கு... கால்குலேட்ட...

Posted: 28 May 2015 10:10 PM PDT

நிலக்கரி ஃபைல்ஸ்... காக்கா தூக்கிட்டு போயிருச்சி...

அம்மா வழக்கு... கால்குலேட்டர் காப்பாத்திருச்சி....

சல்மான்கான் வழக்கு ஆவனங்கள்... எரிஞ்சி போச்சி...

ஆனா.. நான் வேண்டாம்ன்னு எழுதிக்கொடுத்து சரண்டர் பண்ணிய !?

ரிலையன்ஸ் டேடா கார்ட்க்கு பணம் கட்டலைன்னு, வக்கீல் நோட்டிஸ் வந்திருக்கு..

அதுவும் பெனால்ட்டி போட்டு கட்டணுமாம்..!

இல்லைன்னா.. ரெண்டு வருஷம் ஜெயிலாம்....!

பார்ப்போம்.. ஒருநாள் என்னோட டாக்குமெண்ட்ஸ் எரிஞ்சி போகாமலா இருக்க போகுது..!

- Bala Salem @ Relaxplzz

என் கண்களுக்கு, ட்ராபிக் ராமசாமி ஹீரோவாக தெரிகிறார்...! அவர் ஒரு ஓட்டு வாங்கினா...

Posted: 28 May 2015 10:03 PM PDT

என் கண்களுக்கு, ட்ராபிக் ராமசாமி ஹீரோவாக தெரிகிறார்...!

அவர் ஒரு ஓட்டு வாங்கினாலும், அது ஜனநாயக முறையில், நேர்மையாக வாங்கியதாகவே இருக்கும்..! கூழை கும்பிடு போட்டும், பயந்தும் பின்வாங்கும் ஆட்களின் மத்தியில், தன் எதிர்ப்பை ஆண்மையோடு பதிவு செய்திருக்கும் அந்த கிழவனின் துணிச்சல் வியக்க வைக்கிறது...!

வாழ்த்துக்கள் தாத்தா...... (y)

- Bala Salem @ Relaxplzz

இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஏங்கிகொண்டிருக்கலாம் நாம் வாழும் இந்த வ...

Posted: 28 May 2015 09:58 PM PDT

இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஏங்கிகொண்டிருக்கலாம் நாம் வாழும் இந்த வாழ்க்கைக்காக...


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

மின்கம்பத்தைக் கட்டித் தழுவி முழுப்பூவுருவாய் மகிழ்ந்து நிற்கிறது இம்மரம் !

Posted: 28 May 2015 09:50 PM PDT

மின்கம்பத்தைக் கட்டித் தழுவி முழுப்பூவுருவாய் மகிழ்ந்து நிற்கிறது இம்மரம் !


சும்மா... சும்மா... 4

Posted: 28 May 2015 09:26 PM PDT


சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?...

Posted: 28 May 2015 09:03 PM PDT

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?

சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர்
அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி)
சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது
யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம்

1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்

2.தொழிலாளர் அமைச்சகம்(ministroy of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம்

3.இந்திய தூதரகத்தில் (embassy of india)முறை இடலாம்

4.இந்திய இனை தூதரகத்தில் (consulate of general of india)முறை இடலாம்

5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும்

6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல
ministry of் labor
வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
ஆன்லைன் புகார் தெறிவிக்க
http//portal.mot.gov.sa/en/pages/
complaints.aspx

2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும்
1.riyadh:01-4039857/kharj:01-4548231
duwadmi:01-6420920
majmaa:06-4321724
wadi addawasir:01-7840264
zulfi:06-4220235
sahqra:01-6221342
makkah:02-5420745
jeddah:02-6311687
taif:01-7461616
qun fudah:07-7320761
madinah:04-8654416
yanbu:04-3222688
al ula:04-8840380
onaizah:06-3640285
qassim(buraidah):06-3250387
al rass:04-3333502
hail:06-5321139
dammam:03-8261419
ahsa:03-5822801
hafralbatin:03-7220220
knobar:03-8641541
abqaqiq:03-5661324
jubail:03-3620150
khafji:03-7660380
ras tannurah:03-6670424
aseer(abha):07-2224128
bisha:07-6226718
baha:07-7253240
najran:07-5224995
jazan:07-3213671
jauf:04-6421108
qurrayat:04-6421108
tabuk:04-4221181
al wahj:04-4421970
arar:04-6627128
turaif:04-6521029

3.இந்திய தூதரகத்தில் மறைஇடலாம்
தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும்
9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்
labor-complain form
http//www.scribd.com/mobile/
doc/227679439?width=320

4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்
தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும்
labor complaint-consulte
http//www.scribd.com/mobile/doc/227681763?width=320

5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court
கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம்
makkah:02-5420745
jeddah:02-6311687
taif:02-7495200
qunfudah:07-7321250
madina:04:8654417
yanbu:04-3222488
alula:04-8840830
abha:07:2242128
bishan:07-6226718
al bahan:07-7253240
najrah:07:5221431
jazan:07-3226446
tabuk:04-4421181
al wahj:04-4421970

அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்

6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு
தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம்
உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர்

முகவரி:-
office of the domestic workers committee
the director of welfer&guidance
consultant of training&social reserch
near al harama(formerly sofitel)
hotel jeddah
tel:6616688 fax:6653238
cell:0504658803

நண்பர்களே படித்ததை இங்கே பதிவு செய்துள்ளேன் நண்பர்களுக்கு பகிரவும்

நன்றி - Mohammed Yusuf'

Relaxplzz


"விழிப்புணர்வு"

:) Relaxplzz

Posted: 28 May 2015 08:34 PM PDT

திருப்பதி வரலாறு !!! கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிரு...

Posted: 28 May 2015 07:24 PM PDT

திருப்பதி வரலாறு !!!

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார்.

லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.

தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு "பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது

http://devotional-hints.blogspot.in/


இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். =================== அப்பா கட்டிய வீடா...

Posted: 28 May 2015 10:10 AM PDT

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது நமக்கு
அம்மா வீடுதான் !

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !

===================

காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !

===================

இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
===================

டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
'சமைக்க முடியவில்லையே'
என்கிற கவலை !

===================

'அம்மா தாயே'
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !

===================

எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================

அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்களை தேய்த்துக்கொண்டே
நகர்ந்து விடு்கிறார்கள்
அம்மாக்கள் !

===================

வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !

===================

பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !

===================

வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !

===================

அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !

===================

அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள
பசி தாங்காது! "

Relaxplzz

உலகத்திலேயே முதல்முறையாக கொசு மருந்து அடிக்கும் பேருந்தை மதுரையில் அறிமுகப்படுத...

Posted: 28 May 2015 09:50 AM PDT

உலகத்திலேயே முதல்முறையாக
கொசு மருந்து அடிக்கும் பேருந்தை
மதுரையில் அறிமுகப்படுத்திய
தமிழ்நாடு அரசுக்கு நன்றி...! நன்றி...!!


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!! சுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்க...

Posted: 29 May 2015 09:03 AM PDT

மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!!
சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
*******************************************************************
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
*********************************************************************
அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
*********************************************************************
ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
**********************************************************************
அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
************************************************************************
பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
************************************************************************
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
*********************************************************************
ஆப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
*********************************************************************
ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
*********************************************************************
சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
***********************************************************************


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ

Posted: 29 May 2015 07:40 AM PDT

தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ


தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ
www.indiasian.com

Posted: 29 May 2015 07:30 AM PDT


மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன்...

Posted: 29 May 2015 07:03 AM PDT

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!
முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!
மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!
சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!
பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!
தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!
கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!
படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!
இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!
எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும் உன்னிடம் இல்லாமல்
இருந்தது இதயம்..!


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 06:23 AM PDT


தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2) 1.ஹீரோ Opening song...

Posted: 29 May 2015 05:03 AM PDT

தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2)
1.ஹீரோ Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.
2.பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்
3.நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும்.
4.ஹீரோ 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.
5.மார்க்கெட்ல பத்து ரூவா மாமுல் கேட்டதுக்கு ஹீரோ வில்லன அடிப்பாரு , வில்லன் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுந்து கடையையே நாசம் பண்ணுவாங்க ..
6.தீர்ப்பு எழுதறதுக்கு முன்னாடி நொடி ஹிரோ கொலகாரன ஜட்ஜுக்கு முன்னாடி நிறுத்தி,தீர்ப்பை மாத்தி எழுத சொல்றது.
7.கோயில் மணி அடிச்சதும் புறா எல்லாம் பறக்கும்
8.ஹீரோயின் வழுக்கி விழறப்போ ஹீரோ தாங்கி பிடிச்சு தரையில உருளுறது.
9.ஹீரோயின் குளிச்சிட்டு வர்ர நேரமா பாத்து ஹீரோ கட்டிலுக்கு அடில ஒளிஞ்சிருக்குறது.
10.பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு எல்லாம் தமிழ் தெரியறது
11.பாலத்தில் இருந்து, வைக்கோல் நிறைந்த லாரியில் பத்திரமாக குதிப்பது
12.முதல் இரவு காட்சியில் ஹீரோயின் சொம்பு கொண்டுவருவது
13.ஹீரோயினை குழந்தைத்தனமாக காண்பிப்பது, அதைப் பார்த்து ஊருல பாதிப்பொண்ணுங்க லூசு மாதிரி இமிட்டேட் பன்றது
14.ஒரே பாட்டுல அம்பானி ஆவுறது
15.தண்ணிகுள்ளேர்ந்து ஹீரோயின் எந்திருக்கும்போது முடியால தண்ணிய வாரி அடிக்கிறது
16.முதலிரவுல லைட்ட அமத்துறது. விடிஞ்சதும் சூரியன காட்டுறது.
17.யதார்த்தப்பட இயக்குனர்கள் தாடி வளர்த்திருப்பது அவசியம். கண்ணாடியும் இருந்தால் கூடுதல் அழகு. தொலைக்காட்சி பேட்டிகளின்போது பதில் சொல்லமுதல் தாடியை சொறிபவரே அறிவுஜீவி.
18.கிளைமாக்ஸ் க்ரூப் போட்டோ வித் அசட்டு சிரிப்பு சிரிப்பாங்க
- களவாணி பய.

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!

Posted: 29 May 2015 04:40 AM PDT

அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!


அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!
www.indiasian.com

Posted: 29 May 2015 04:30 AM PDT


கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

Posted: 29 May 2015 03:36 AM PDT

கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ


கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Kareena Kapoor without Makeup at the Airport

Posted: 29 May 2015 03:23 AM PDT


நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது வரவேற்பறையில் காத்திருந...

Posted: 29 May 2015 03:03 AM PDT

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க
சென்ற போது வரவேற்பறையில் காத்திருந்த நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் .
இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்ததாக கூறியிருக்கிறார்கள் '.
இறுதியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாதே? " என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர
போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றராம் ...

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 02:41 AM PDT


அன்றும் இன்றும்..

Posted: 29 May 2015 02:40 AM PDT

அன்றும் இன்றும்..


10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்

Posted: 29 May 2015 02:10 AM PDT

10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்


10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்
www.indiasian.com
just ten Hours of Walking in NYC as a Woman

Posted: 29 May 2015 01:40 AM PDT


சல்மான்கான் கேஸ் பைல் எரிந்துவிட்டதாக மகாராஷ்டிரா கோர்ட் அறிவிப்பு -செய்தி #அது...

Posted: 29 May 2015 01:21 AM PDT

சல்மான்கான் கேஸ் பைல் எரிந்துவிட்டதாக மகாராஷ்டிரா கோர்ட் அறிவிப்பு
-செய்தி
#அது எப்படி(டா) ???
சங்கராச்சாரி பேசிய ஆடியோ டேப் தானா அழிஞ்சு போகுது ???
ஜெயாவுக்கு மட்டும் கொமார சாமி கால்குலேட்டர் தப்பா கணக்கு போடுது ???
13 வருஷமா இருந்த கூத்தாடி சல்மான் கானில் பைல் தானா பத்திகிட்டு எரிஞ்சு போகுது ???
இப்படியே போனா இந்தியா நாசமா போய்டும்...
அதுக்கும் முன்னாடி உங்களோட வம்சம் வேண்டாம்...
>>> "நல்லா இருங்கடா" "நல்லா இருங்க"...


தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இண...

Posted: 29 May 2015 01:15 AM PDT

தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இணைப்பு


தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Tamanna Bhatia new delete video from movie

நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர...

Posted: 29 May 2015 01:03 AM PDT

நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க.
அப்ப பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா. பயங்கர கைத்தட்டல்.
இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். #நல்ல தம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.
ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்ல தம்பி 'என்னைய என்னா நினைச்சீங்க...?
சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.
எப்புடி...?

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 12:19 AM PDT


ஒரு மனிதனின் இதயம் சராசரியாக நிமிடத்திற்கு 72 முறையும், தனது மொத்த வாழ்நாளில்...

Posted: 28 May 2015 11:39 PM PDT

ஒரு மனிதனின் இதயம்
சராசரியாக நிமிடத்திற்கு
72 முறையும், தனது மொத்த வாழ்நாளில் 250 கோடி முறையும் துடிக்கிறது, அத்தனை முறை சுருங்கி விரிந்தாலும் ஒரு ஒரே நிமிடம் கூட ஒய்வு எடுத்ததில்லை, நாம் தூங்கும் போது கூட
அது தன் கடமையிலிருந்து தவறியதே இல்லை,
அது தவறிட்டால்
நாம் தவறிவிடுவோம் !
அந்த இதயத்தின் கடமை உணர்வை என்றாவது நினைத்து பார்த்திருக்கிறோமா?
Chicken, mutton,
Brandy, whisky என
நாம் விரும்பிய உணவை உண்கிறோம், cholesterol அதிகமாகி ரத்தக்குழாயில் அடைத்துக்கொள்கிறது, நம்மை காப்பாற்ற அது கஷ்டப்பட்டு போராடி ரத்தத்தை அனுப்புகிறது, மூச்சுத்திணறி முடியாதபோது போது first attack என warning கொடுக்கிறது,
நாம் உணர்ச்சி வசப்படும் போதும், கோபப்படும் போதும் அது கூடுதலாக உழைக்க வேண்டி வருகிறது, சராசரியாக
70 வருடங்கள்,
25550 நாட்கள்,
613200 மணிநேரங்கள்,
36792000 நிமிடங்கள்,
தொடர்ந்து தன் வேலையை செய்துகொண்டே இருக்கிறது!
என்றாவது ஒருநாள்
ரொம்ப tired டா இருக்கு ரெண்டு நிமிஷம் rest எடுத்துக்கறேன் என்று சொன்னால் நம்முடைய நிலமை என்ன?!
நமக்காக அடிக்கப்படுகின்ற தாரைதப்பட்டையை கூட
நம்மால் கேட்கமுடியாது!
இப்படி நமக்கு தெரியாமல் நம் வாழ்க்கைக்காகவும் வெற்றிக்காகவும் மறைமுகமாக துணைநின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இதயத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் மேலும் மேலும் துன்புறுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்திடுங்கள்,
தனிமையில் இருந்தால் இதயத்தோடு கொஞ்சம் பேசுங்கள், அப்போது கூட தன் வேலையை செய்துகொண்டே தான் உங்களிடம் பேசும்,
உங்கள் அம்மாவைப்போல!


பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு

Posted: 28 May 2015 11:10 PM PDT

பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு


பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு
www.indiasian.com
supper robery in front of house

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர் ?! உலக வரலாற்றிலேயே...

Posted: 28 May 2015 11:03 PM PDT

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்:
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல:
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 28 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


டாட்டியானா குயேரா, பிரேசிலைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணிப் பெண். கருவில் 5 மாதக்...

Posted: 28 May 2015 10:00 PM PDT

டாட்டியானா குயேரா, பிரேசிலைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணிப் பெண். கருவில் 5 மாதக் குழந்தையுடன் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்கிறார். அல்ட்ரா சவுண்ட் முறையில் கருவில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்கிறார் டாக்டர். குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றாக சுவாசிக்கிறது, கைகால்களை லேசாக அசைக்கிறது.

டாக்டர், நர்சுகள், டாட்டியானாவின் கணவர் என சுற்றியிருந்த அனைவரும் அந்த காட்சியை கம்ப்யூட்டர் மானிட்டரில் காண்கின்றனர். ஆனால், டாட்டியானாவின் முகத்தில் ஏனோ ஒரு சோகம். கருவில் இருக்கும் தன் வாரிசை காண முடியாத ஏக்கம். ஆம், டாட்டியானா பார்வையற்றவர்.

டாட்டியானாவின் ஏக்கத்தை போக்க நினைத்த மருத்துவர்களுக்கு கைகொடுத்தது 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம். முப்பரிமாண முறையில் ஒரு கைக் கடிகாரத்தை வடிவமைத்து 3டி பிரண்டருக்கு சாதாரண பேப்பர் முறை பிரிண்டருக்கு கொடுப்பது போல், இன்புட் கொடுத்தால் போதும். கையில் அணியும் வகையில் ஒரு கைக் கடிகாரம் தயாரகி விடும். இது தான் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் செயல்பாடு.

இதே தொழில் நுட்பத்தை தான் மருத்துவர்களும் பயன்படுத்தினார்கள். ஸ்கானிங்கில் தெரிந்த குழந்தையின் அந்த படத்தை 3டி ஃபார்மட்டுக்கு மாற்றி அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்தனர். கையையும், காலையும் மடக்கியபடி கருவறையில் இருப்பதுபோல் தத்ரூபமாக இருக்கும் அந்த குழந்தையை தொட்டு உணரும் அவர், பிரேயில் முறையில் 'Iam your son' என்று எழுதப்பட்டிருந்ததை படித்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மனித உணர்வுகளை கிரகிக்கும் தன்மை இயந்திரங்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால் நல்ல முறையில் டெக்னாலஜியை பயன்படுத்தினால் அது மனித உணர்வுகளோடு இணைப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டாட்டியானாவின் கண்ணீர் சாட்சி.

டெக்னாலஜியின் உதவியால் ஒரு தாயின் ஏக்கம் துடைக்கப்பட்ட நெகிழ்வான நிகழ்ச்சி Meeting Murilo என்ற தலைப்பில் குறும்படமாக வெளியாகிருக்கிறது


Posted: 28 May 2015 09:21 PM PDT