Saturday, 15 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 15 Nov 2014 09:32 AM PST


ரெண்டு பேத்துல ஒருத்தன் சடன் பிரேக் போட்டாலும்.... சாவு உறுதி....

Posted: 15 Nov 2014 08:45 AM PST

ரெண்டு பேத்துல
ஒருத்தன் சடன் பிரேக்
போட்டாலும்....

சாவு உறுதி....


இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% ப...

Posted: 15 Nov 2014 08:22 AM PST

இந்தியாவிலேயே,
விதவைகள் மிக
அதிகமாக உள்ள
மாநிலம் தமிழ்நாடு.
மக்கள் தொகையில் 9%
பேர்
விதவை அல்லது கணவனால்
கைவிடப்பட்டவர்கள்.
இதற்கும்
குடியே முதன்மைக்
காரணம். தமிழ்நாட்டில்
தந்தையின் குடியால்
5 லட்சம் குழந்தைகள்
அனாதைகளாகக்
கைவிடப்பட்டுள்ளனர்.

காந்தள்!

Posted: 15 Nov 2014 07:25 AM PST

காந்தள்!


அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!

Posted: 15 Nov 2014 04:36 AM PST

அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!


இரண்டு நாள் பண்பாட்டு சுற்றுலா நிமித்தமாக தஞ்சை சென்ற போது தஞ்சை பெருவுடையார் கோ...

Posted: 15 Nov 2014 03:25 AM PST

இரண்டு நாள் பண்பாட்டு சுற்றுலா நிமித்தமாக தஞ்சை சென்ற போது தஞ்சை பெருவுடையார் கோவில், முள்ளிவாய்க்கால் முற்றம் ஆகிய இடங்களை பார்த்துவிட்டு கடைசியாக தஞ்சைப் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு சென்றோம். இந்தியாவில் முதன் முதலாக மொழிக்காக தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு பிறகு தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் எம்,ஜி ஆர் அவர்களால் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் தொடங்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தான். இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலமாக இருக்கும் நிலையில் தமிழ் மொழிக்கென்று ஒரு தனித்துவமான பல்கலைக்கழகம் உருவானால் அது பிற மாநிலங்களில் சிக்கல்களை உண்டுபண்ணும் என்று அவர் கருதினார். இருப்பினும் எல்லா எதிர்ப்புகளையும் மீறி இப்பல்கலைக்கழகம் 1981 ஆம் ஆண்டு உருவானது.

1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு, கலைகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர் ஆய்வை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக நிலப்பரப்பு தமிழகத்தின் நிலவரைப் படத்தை போலவே அமைந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தை வானில் இருந்து பார்த்தால் 'தமிழ்நாடு' என்ற எழுத்துக்கள் தெரியும்படி கட்டடத்தை வடிவமைத்து வருகிறார்கள். தற்போது 'மி', 'ழ' மற்றும் 'டு' ஆகிய கட்டடங்கள் தான் முடிவடைந்துள்ளன. 'த', 'நா' ஆகிய கட்டடங்களும் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிகிறது. (கூகிள் படத்தை பார்க்கவும்)

இங்கு நாம் சென்ற போது இப்பல்கலையில் முனைவர் படிப்பை மேற்கொள்ளும் கட்டடக் கலை ஆய்வாளர் தென்னன் மெய்மன் அவர்கள் நமக்கு ஒரு சில ஆய்வு மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதில் ஒருவர் தொல்காப்பியத்தின் தொன்மையை ஆய்வு செய்கிறார். மற்றொரு மாணவி பதினென்கீழ்க் கணக்கும் , மனுதர்மமும் கூறும் அறத்தை ஒப்பாய்வு செய்கிறார். இன்னொரு மாணவி வேதாத்திரி மகரிசியின் 'வாழ்க வளமுடன்' என்னும் வாசகத்தின் பயனைப் பற்றி ஆய்வு செய்கிறார். மாணவர்களை சந்தித்த பிறகு தமிழ் மெய்யியல் துறையில் பணியாற்றும் தமிழிசை முனைவர் திரு நல்லசிவம் அவர்களையும் சந்தித்து தமிழிசையும் கர்நாடக இசையும் குறித்த ஒப்பாய்வை பேட்டியாக எடுத்தோம்.

இப்படி பல மாணவர்கள் பல துறைகளில், பல கோணங்களில் ஆய்வு செய்வதற்காக சுமார் 1.5 லட்சம் நூல்களை இங்குள்ள நூலகத்தில் சேகரித்து உள்ளனர். தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான இந்த நூலகத்தில் தமிழர்களின் படைப்புகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பான நூலகத்தில் எவ்வாறு தமிழர்களின் அனைத்து வரலாற்று நூல்களும் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததோ அவ்வாறே இங்கும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பான நூலகம் சிங்கள இன வெறியர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட காரணத்தால் ஒரு லட்சம் நூற்கள் தமிழர்களை விட்டு நிரந்தரமாக மறைந்தது என்பது மிகப்பெரிய வேதனையான செய்தி.

தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை கால ஓட்டத்தில் நாம் தக்க வைக்க வேண்டுமெனில் தமிழர்கள் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளின் மூலமாகவே நாம் வரலாற்றை மீட்க் முடியும். தமிழர்களுக்கு என்று வரலாறே இல்லை, நாகரிகமும் இல்லை என்று தமிழ் மக்களை நம்ப வைத்த ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் தமிழர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமெனில் நிச்சயம் நாம் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதில் மொழியியல் , மெய்யியல், தொல்லியல் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு அமைவாகத் தான் கீழ்க்கண்ட பல துறைகள் இந்த பல்கலையில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடியில் துறை
கையெழுத்துப்படியியல் துறை
கல்லெழுத்தியல் துறை
ஆழ்கடல் தொல்லியல் நடுவத்துறை
தமிழ் மேம்பாட்டுப்புலம்
அயலக தமிழியல் துறை
மொழிபெயர்புத் துறை
அகரமுதலித் துறை
குமுகவியல் துறை
அறிவியல் தமிழ், தமிழ் மேம்பாட்டுத் துறை
கல்வியியல் துறை
மொழியியற் புலம்
இலக்கியத் துறை
மொழியியல் துறை
மெய்யியல் துறை
பழங்குடியினர் ஆய்வு நடுவத் துறை
இந்திய மொழிகள் பள்ளித் துறை
நாட்டார் வழக்காற்றியல் துறை
அறிவியற் புலம்
சித்த மருத்துவத் துறை
பண்டை அறிவியல் துறை
தொழிலக, நில அறிவியல் துறை
கணினியியல் துறை
கட்டிடவியல் துறை
சூழலியல், மூலிகையியல் துறை

இப்படி ஒவ்வொரு துறையின் கீழும் பற்பல துணைத்துறையும் இங்கே நிறுவப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் தனக்கான இனக்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனில் முதலில் அதற்கான வலுவான மெய்யியல் பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். இதை முறையாக மீட்டெடுக்க தவறிய காரணத்தால் தான் தமிழினம் மிகப்பெரிய அழிவை சந்தித்தது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் வேற்றின மக்களுக்கு கைமாறியது. தமிழ் நாட்டில் தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை இழுவுபடுத்தி நூல் எழுதியும், மேடையில் பேசியும் தமிழகத்தில் இனப்பகைவர்களால் அரசியல் செய்யவும் முடிந்தது.

இந்த கீழ்மையை நாம் காலத்தில் வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை. கற்றுத்தேர்ந்த அறிவர்களால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நிலைநிறுத்தப்படும். வீட்டிற்கு ஒருவரை பொறியாளராக , மருத்துவர்களாக உருவாக்கும் நாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை ஒரு தமிழ் ஆய்வாளாராக உருவாக்க முயல வேண்டும். அப்படியான முயற்சிக்கு தமிழக அரசால் நிறுவப்பட்ட இந்த தமிழ்ப்பல்கலைக் கழகம் நிச்சயம் துணை புரியும். தமிழ் அறிவர்களை உருவாக்கும் இந்த பல்கலைக்கு ஆபத்து இல்லாமல் இல்லை. தமிழர் அல்லாதவர்களின் ஆட்சியில் பல சிக்கல்களை இன்றுவரை சந்தித்து வருகிறது இந்த பல்கலைக்கழகம். ஜெயலலிதாவின் ஆட்சியில் பல முறை இந்த பல்கலை வளாகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது.
பல்கலைகழகத்தின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து பல போராட்டங்களும் நடைபெற்றது.

இப்படியான சூழலில், தமிழகத்தில் உண்மையான தமிழர் ஆட்சி மலரும் வரை நாம் மிகமும் கவனமாக இந்த அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இது நிலைத்திருக்க தமிழர்கள் நாம் அனைவரும் நம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளை இங்கு பயிற்றுவிக்க வேண்டும். நம் பிள்ளைகளே இந்த பல்கலைக்கழகத்தை எதிர்காலத்தில் பொறுப்புடன் நிர்வகிக்கும் நிலையை நாம் உருவாக்கிட வேண்டும்.

தமிழர்களின் ஒப்பற்ற அறிவை உலகம் தெரிந்து கொள்ள , அடுத்த தலைமுறைக்கு நம் அறிவை கடத்திச் செல்ல நிச்சயம் தஞ்சைப் பல்கலைக் கழகம் பல்லாண்டு வாழ வேண்டும். நமது அறிவுடைமையாக, தமிழர் வாழ்வியலின் ஆன்மாவாக விளங்கும் தஞ்சைப்பல்கலைக் கழகத்தை நாமே பாதுகாப்போம். தமிழர் அடையாளத்தை மீட்டு, தமிழ்த் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். வாழ்க தமிழ் !

- இராச்குமார் பழனிசாமி


வண்டலூரில் புலி'ய காணும்.. #அந்த வழியா போகும் ஆம்னி பஸ்களை சோதனை போடுங்க, சீட்...

Posted: 15 Nov 2014 03:10 AM PST

வண்டலூரில் புலி'ய
காணும்..

#அந்த வழியா போகும்
ஆம்னி பஸ்களை சோதனை போடுங்க,
சீட் காலியாக இருந்தால்,
புலியா இருந்தாலும்
இழுத்து உள்ளே போட்டுடுவானுங்க

-காளிமுத்து

"மொழியை இழந்தால் நிலத்தை இழப்போம்.மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்க...

Posted: 15 Nov 2014 02:51 AM PST

"மொழியை இழந்தால் நிலத்தை இழப்போம்.மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்குச் சொந்தம்"

-------"கவிப்பேரரசு" வைரமுத்து.

தமிழ் பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக "அடியார்க்கு நல்லார்' தெரிவித்துள்ளார்.
வட வேங்கடம் வரைக்கும் நீண்டிருந்த தமிழினம் இன்று 50,216 சதுர கிலோ மீட்டராகச் சுருங்கிவிட்டது.

மொழியை இழந்தால் இருக்கும் சின்ன பரப்பையும் இழந்து போவோம்.இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம், மொழி என இரண்டையும் இழந்து போவார்கள்.அதிகார மையங்களிலும்,கல்வி நிலையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் நிலைபெற்றால்தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம்."

"நிலத்தை,மொழியை இழக்காதே" என்று கவிஞர் சொல்ல வருவது "வெளியாரை அனுமதிக்காதே" என்பதைதான்.

ஒன்றுக்கும் உதவாதவன், உருப்பிடாதவன், தண்டச்சோறு, தடிமாடு என்று நம் முன்னால் அதிக...

Posted: 15 Nov 2014 01:55 AM PST

ஒன்றுக்கும் உதவாதவன், உருப்பிடாதவன், தண்டச்சோறு,
தடிமாடு என்று நம் முன்னால் அதிகம் திட்டினாலும்

உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு, அயர்ந்து தூங்கும் பொழுது நமக்கே தெரியாமல்

நம் கால்களை நீவிவிட்டு நமக்காக சில துளி கண்ணீர் விடுவார் நமக்கு பின்னால். 'தந்தை'...!!!

- தினகரன்


Posted: 15 Nov 2014 01:17 AM PST


The State Archaeology Department has unearthed Sangam period potteries like blac...

Posted: 15 Nov 2014 12:36 AM PST

The State Archaeology Department has unearthed Sangam period potteries like black and red ware, terracotta spout beads and red ware from Nayakar Punchai in Mangudi village in Tirunelveli district recently.

A copper coin of the early Nayak period was also found. A potsherd with a Tamil Brahmi inscription was unearthed at a depth of 1.08 metres. It was on an earthen plate broken into three pieces. Fourteen letters were found inscribed on the base of the plate in a circular shape. As the other portions were missing, the full message could not be read. The plate was donated by "Aadhan eiyanai of kurumangalam''. Palaeographically, these letters could be assigned to the second century B.C, according to an official press release.

http://www.thehindu.com/2002/08/08/stories/2002080801780500.htm

Mangudi is situated in Sankarankoil Taluk of Tirunelveli District. The author of Maduraikanchi i.e. Mangudi Marudanar was supposed to have hailed from this place. Roman pottery pieces were already collected in surface explorations conducted in this village. So with a view to bringing out the history of this place, excavation was conducted in the year 2001-2002 by the Department of Archaeology. 10 trenches were laid bare at the site called Naicker-Punchai. This excavation has brought to light two cultural periods

1. Microlithic Period
2. Early historic Period

Microlithic Tools

The significant find from this site is a black and red ware piece containing Tamil Brahmi inscription. The inscription has been deciphered as "Kurummangala Athan yi Yanai Po". This belongs to the Sangam period (2nd century BCE).

http://www.tnarch.gov.in/excavation/man.htm

மாங்குடி ஓர் இடைக்கற்கால, பெருங்கற்கால, சங்ககால வாழ்விடமாகும்.

அமைவிடம்

மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கேரவில் வட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அகழாய்வுகள்

மாங்குடியில் தமிழக அரசுத் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. இங்கு இடைக்கற்கால மற்றும் பெருங்கற்காலச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்விரண்டு காலங்களின் சான்றுகளும். அடுத்தடுத்த மண்ணடுக்குகளில் கிடைப்பது சிறப்பானதாகும். வரலாற்றுத் துவக்கக்காலச் சான்றுகளும், மணிகளும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பாறிப்புள்ள பானை ஓடுகளும் இங்கு கிடைத்துள்ளன.

இங்கு "குரும்மாங்கள ஆதன் (யி) யானை (பொ)" என்ற எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது.

தொல் தாவரவியல் ஆய்வுகள்

இங்கு அகழாய்வு செய்யப்பட்ட மண்ணிலிருந்து அக்கால மக்கள் பயன்படுத்திய தாவரங்கள் குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல்கலைக்கழகக் கல்லூரி, லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் டோரியன் ஃபூலர் பழங்காலத் தாவரங்களின் சான்றுளை இங்கு சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கண்டுபிடித்துள்ளார்.

சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் இவ்வூரைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/maakudi.htm

http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/02/16/மண்ணில்-புதைந்த-மாங்குடி-நக/article2059831.ece?service=print


அழகு தமிழ்நாடு

Posted: 14 Nov 2014 10:05 PM PST

அழகு தமிழ்நாடு


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..? 1. குட் மார்னிங் டீச்சர் என்பதை...

Posted: 15 Nov 2014 02:28 AM PST

பால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..?

1. குட் மார்னிங் டீச்சர் என்பதை குட் மார்னிங் மேம் எனும் போதே தொலைகிறது குழந்தை பருவம் .

2. பாட்டில் மூடியை வாயில் கடித்து திறக்கும்போதே தொலைகிறது நம் பால்யம்... (நான் கூல்டிரிங்ஸ் பாட்டில சொன்னேன்)

3.ரயிலுக்கு டாட்டா காமிப்பதை நிறுத்திய போது தொலைந்து போயிருந்தது பால்யம்.

4.எப்ப நான் சினிமாவுல ஹீரோவ கவனிக்காம ஹீரோயின கவனிக்க ஆரம்பிச்சனோ அப்பயே தொலைந்து போயிருந்தது பால்யம்.

5.எக்ஸாமுக்கு, என்னைக்கு படிச்சிட்டு போறத நிப்பாடினேனோ அன்னைக்கே எனது பால்யம் முடிவுக்கு வந்துவிட்டது..

6. ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை நிறுத்தியலிருந்து நின்றுபோனது எனது பால்யம்

7."இங்கிலாந்து லெட்டர்" இன்லேன்ட் லெட்டர் ஆன போது என் தொலைந்தது பால்யம்

8.சட்டை நிறத்தை கூட கவனிக்காமல் விலையை முதலில் தேட ஆரம்பித்த வயதில் தொலைந்து போயிருந்தது என் பால்யம்

9.முழுக்கை சட்டை வாங்கி அதை மெனக்கெட்டு மடிச்சிவிட்டுட்டு அரைக்கையோடு திரியும் போது தொலைந்தது என் பால்யம்

10.அப்பா கைஎழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்டில் போட்டு கொள்ளும் போதே முடிந்து விடுகிறது பால்யம்

11.என்னைக்கு டீயுசன்ல கேர்ள்ஸ் தனியா பாய்ஸ் தனியா உட்கார வெச்சாங்களோ அன்னைக்கே பால்டாயில் குடித்து மரித்து போனது என் பால்யம்

12. கோபால் பல்பொடியிலிருந்து க்ளோசப் பேஸ்ட்டுக்கு மாறும் பொழுது பால்யம் தொலைகிறது

13.இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த,
கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும்
வீடு மாறும்பொழுது தொலைந்து போனது அன்னைக்கே மரித்து போனது என் பால்யம்

14.தேசிய கீதப் பாடலை பாடாமல் முணுமுணுக்கும் போது முடிந்துவிடுகிறது

15.பெண் வலிய வந்து என் கன்னத்தை கிள்ளி சிரிப்பதை நிறுத்திய போது என் பால்யம் முடிந்திருந்தது.

என்றேனும் ஓர் நாள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தொலைத்த என் பால்யம் நோக்கி திரும்பி செல்லவே ஆசை !

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இது என்ன விளையாட்டு என ஞாபகம் இருக்கிறதா...??? விளையாடியவர்கள் லைக்கிடலாம் பா...

Posted: 14 Nov 2014 08:35 PM PST

இது என்ன விளையாட்டு என ஞாபகம் இருக்கிறதா...???

விளையாடியவர்கள் லைக்கிடலாம்

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


kalai vanakam

Posted: 14 Nov 2014 04:01 PM PST

kalai vanakam


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கண் தானம் செய்யும் சாத்தியகூறுகள்...! 1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும...

Posted: 15 Nov 2014 09:10 AM PST

கண் தானம் செய்யும் சாத்தியகூறுகள்...!

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.

2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.

- எனவே , கண் தானம் செய்வோம்...!!!

Relaxplzz

MicroSD card பற்றி தெரிந்து கொள்வோம் ...! மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போத...

Posted: 15 Nov 2014 09:00 AM PST

MicroSD card பற்றி தெரிந்து கொள்வோம் ...!

மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்!

"மெமரி கார்ட்" இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது.

வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.

முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம்.

காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.

காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.

[You must be registered and logged in to see this image.]

மெமரி கார்டின் வகைகள்:

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1. SDSC (Standard Capacity)

2. SDXC (The extended Capacity)

3. SDHC (The High Capacity)

4. SDIO

SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ்.

இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை.

முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.

SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.
மெமரி கார்டின் அளவுகள்:

பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் .

அவை.

1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)

2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)

3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)

எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.

எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும்.

காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான்.

இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும்.

இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.

அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது.

CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான்.

ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும்.

இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.

பிராண்டட் SDcards ஒருசில…

Sasmung microSD card

Sandisk Ultra microSD card

Transcend microSD card

Sandisk mobile ultra

Toshiba microSD card

Sony microSD card

இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.

இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .

சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?

(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 – 6MB per second

Class 8 – 8MB per second

Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது

இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.

Relaxplzz


(y)

Posted: 15 Nov 2014 08:30 AM PST

(y)


நண்பனுடன் அவனது வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டி...

Posted: 15 Nov 2014 08:10 AM PST

நண்பனுடன்
அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..
நண்பன் உள்ளே
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..

பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..

பாட்டி : என்ன ராசா சொல்றே..?

Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..
பிறகு வீட்டினுள்
சென்றேன்..
எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்...
வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப்பார்த்தேன்..
யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..
நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?
சரிடி..
நா வீட்ல இருக்கேன்டி..
அப்புறமா பேசுறேன்டி..

#இது தான் இங்கே யதார்த்தம்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz

'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு!' ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு...

Posted: 15 Nov 2014 08:00 AM PST

'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு!'

ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு இவையெல்லாம் மறந்து இன்றைக்கு தண்ணீர் என்றதும் சட்டென நம் நினைவுக்கு வருவது 'அம்மா குடிநீரோ' அல்லது அகுவா ஃபினோவோதான். நம் மண்ணுக்கு சொந்தமான தண்ணீரை அயல்நாட்டினர் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

இதை தவிர்த்து இயற்கை வளத்தை மக்களுக்கு இலவசமாய் தரவேண்டிய அரசு நிர்வாகமோ "நான் குறைந்த விலைக்கு தருகிறேன்" என தண்ணீரை வைத்து வியாபாரப் போட்டி நடத்துகிறது. நம்முடைய தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதை நச்சுத்தன்மையாக மாற்றுவதையும் நமக்கு சொல்வதற்கே ஒரு 'விஜய்' தேவைப்படுகிறார்.

"இந்தியா வல்லரசாக 2020 வரைக்கும் உங்களையெல்லாம் தூங்க சொல்லியிருக்கிறது அரசாங்கம். ஆம்,தூங்கும் போதுதானே கனவு வரும். மக்கள் விழிப்படைய கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது நம் அரசாங்கம். ஒருமுறை வெளிநாட்டிலிருந்து எனக்கு தெரிந்த சிலர் தமிழகம் வந்தனர். தமிழகத்தில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அவர்களில் ஒருவர் அங்கிருந்த கழிப்பிடத்தில் சிறுநீர் கழித்தார். நான் அதற்கு கட்டணம் செலுத்தியதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தவராக ஏன் அவருக்கு காசு கொடுத்தீர்கள் என்று கேட்டார். "சிறுநீர் கழித்தற்கு" என்றேன். அதற்கு அவர் "நான் யூரின் போக அவருக்கு எதுக்கு காசு தரணும்? இப்படியே கொடுத்துக்கொண்டிருந்தால் ஏழையாகிவிடமாட்டீர்களா..? என்று சாதாரணமாக கேட்டார். அது சாதாரண கேள்வி அல்ல..? அதை அப்படியே மாற்றி யோசித்துப்பாருங்கள். எனது நிலம்.. எனது தண்ணீர்.. இதை எனக்கு தாகமெடுக்கும்போது குடிப்பதற்கு எதற்கு கோகோ கோலாகாரனுக்கு காசு கொடுக்கணும். அவனென்ன அட்லாண்டாவிலிருந்தா தண்ணீர் எடுத்து நம்மிடம் விற்கிறான்? நம் மண்ணிலிருந்து எடுத்து அதை நமக்கே விற்பனை செய்கிறான்.

பொலிவியா நாட்டில் கொச்சபம்பா என்கிற மாகாணத்தின் தண்ணீரை பெக்டல் என்கிற தனியார் கம்பெனி வசம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கைக்கு போன அடுத்த மாதமே தண்ணீருக்கான விலை கூடியது. திடீர் விலை உயர்வால் மக்களிடையே சலசலப்பு உருவாகி நாளாக நாளாக 60 ரூபாய் சம்பாதிக்க கூடிய ஒருவர், அதில் 20ரூபாயை தண்ணீருக்கே தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படியான மோசமான சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகுதான் கொச்சபொம்பா மக்கள் விழித்தெழுந்தனர். போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் அரசாங்கம் மழுப்பிக்கொண்டே இருந்தது. எதிர் நடவடிக்கையாக பணம் கட்ட முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் மக்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அந்த தண்ணீரை பயன்படுத்த துவங்கினர். பெக்டல் நிறுவனம் தனது அடியாட்களை அனுப்பி, அந்தத் தொட்டிகளை உடைத்தது.

"தரையிலிருந்து எடுத்தாலும் வானத்திலிருந்து எடுத்தாலும் எத குடிச்சாலும் எங்களுக்கு நீங்க காசு கட்டணும் என்றனர். போராட்டங்களி லிருந்து பலர் ஒதுங்கி கொண்டபிறகு, ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் பின் மக்கள் ஒன்றுதிரண்டனர். அந்த நிறுவனம் எங்கெங்கெல்லாம் குழாய் இணைப்பு வைத்திருந்தார்களோ அதையெல்லாம் உடைத்தனர். இதற்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியது அரசு. பலர் உயிரிழந்தனர். குடிக்கவே தண்ணீர் இல்லை. இனிமேல் இந்த உயிர் போனால் என்ன இருந்தால் என்ன என்று ஒரு முடிவோடு மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். "பெக்டலே ஓடு" என்ற முழக்கம் ஓங்கியது. அதற்கு பிறகுதான் அந்நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறியது. அப்படி மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த நிறுவனத்தை ஆசியாவிலயே ஒரே ஒரு நாடுதான் இரு கரங்களையும் நீட்டி அழைத்துக்கொண்டது. அது நம் இந்தியா. அதிலும் தமிழ்நாடு.

- புண்ணியமூர்த்தி

Relaxplzz


தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் <3

Posted: 15 Nov 2014 07:45 AM PST

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் ♥


(y)

Posted: 15 Nov 2014 07:30 AM PST

(y)


நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்க...

Posted: 15 Nov 2014 07:10 AM PST

நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது. நடு விரல் உங்களை குறிக்கிறது மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.
உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்.

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்
இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும் அதாவது உங்களின் பிள்ளைகள்.

உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள். பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

Relaxplzz

விந்தையான சிந்தனைகள்... 1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத...

Posted: 15 Nov 2014 07:09 AM PST

விந்தையான சிந்தனைகள்...

1) "நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே"

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

8) "ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!"

9) வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

Relaxplzz


"சிந்தனைகள்"

கிடைக்கும் பொழுது பெற தவறினால் தேடும் பொழுது கிடைக்காதது.... "அன்பு" - Kali m...

Posted: 15 Nov 2014 06:46 AM PST

கிடைக்கும் பொழுது பெற தவறினால்
தேடும் பொழுது கிடைக்காதது....

"அன்பு"

- Kali muthu.


அன்பியல் - 1

தானாக தத்திதத்தி தவழ்ந்து எழுந்து பொத்தென்று கீழே விழுந்தாலும் மீண்டும் எழும் க...

Posted: 15 Nov 2014 06:30 AM PST

தானாக தத்திதத்தி தவழ்ந்து எழுந்து
பொத்தென்று கீழே விழுந்தாலும் மீண்டும் எழும் குழந்தையின் முயற்ச்சியில் கால் பங்குகூட வளர்ந்த நம்மிடம் இல்லை !!!

- Kalimuthu


மொபைல் நிறுவனங்கள் உங்களிடம் (ஆட்டைய போட்ட பணத்தை) தவறாக எடுத்த பணத்தை எளிதாக தி...

Posted: 15 Nov 2014 06:10 AM PST

மொபைல் நிறுவனங்கள் உங்களிடம் (ஆட்டைய போட்ட பணத்தை) தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்பப் பெற புது வசதி ..........

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருக்கும்.

இந்த பிரச்சி னையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப் படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்

Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் .பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும்

நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.

24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.. நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம்.

Relaxplzz

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து :- இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்க...

Posted: 15 Nov 2014 05:48 AM PST

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து :-

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.

வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம்

;-)

Posted: 15 Nov 2014 05:32 AM PST

எருமை மாட்டுத் தைலம் :D நம்ம நண்பர் ஒருத்தர் நல்ல செவப்பான ஆளு... தலையில் 81.5...

Posted: 15 Nov 2014 05:10 AM PST

எருமை மாட்டுத் தைலம் :D

நம்ம நண்பர் ஒருத்தர் நல்ல செவப்பான ஆளு... தலையில் 81.5 சதவீகிதம் முடியை இழந்து... ஒரு முழுநிலா மாதிரி ஜொலிப்பாரு... ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடி அவரை பார்க்கும் போது எர்வா மாட்டின் தைலம் தடவுறதா சொன்னாரு... சார் அந்த தைலம் எப்படி இருக்கும்... நல்லா வேலை செய்யுதான்னு கேக்கும் போது.. அவரு முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு ஜொலிக்கிறமாதிரி ஒரு சந்தோஸம் வந்துச்சு... இத்துனூண்டு ட்ராப் எடுத்துக்கணும் மோகன்... அதை இப்படி தேய்க்கணும் மோகன்... அவ்ளோ தான்.. இவ்ளோ தான்... சீக்கிரமாவே வளர்ந்துரும்னு இவருக்கு மிஸ்டு கால் கொடுத்தா எர்வாமாட்டின் டெலிமார்க்கெட்டிங் டீம் என்ன என்ன பேசுமோ அல்லாத்தையும் பேசினாரு.... அன்னிக்கி அவர்கிட்ட எருமைமாட்டுத்தைலம் பத்தி ரொம்ப நேரம் பேசின எஃபெக்ட்ல வந்து தான் ஒரு பதிவு போட்டேன்....

"எர்வோமாட்டின் வேலை செய்யும்னா ஏண்டா
எந்திரன்ல ரஜினிக்கு ஏழு லட்சத்துக்கு விக்கு செய்யுறானுக"ன்னு...

அதுக்கப்புறம் இப்பத்தான் அவரை பார்த்தேன்... இப்ப அவர் தலையில 93.4 சதவீகிதம் முடி கொட்டீருச்சு... என்ன சார் எருமை மாட்டுத் தைலம் இம்ப்ரூவ்மண்ட் இருக்குதான்னு... அட போங்க மோகன்... உள்ள முடியும் கொட்டீருச்சு...ன்னு கவலையா சொன்னாரு.... அப்பறம் எப்படி சார் இவனுக விடாம விளம்பரம் கொடுக்குறானுகன்னு கேட்டேன்.... அதுக்கு அவர் சொன்னாரு...

மோகன்... இந்தியால மொத்தம் 120 கோடி பேரு இருக்கானுக... அதுல 30 கோடி பேராவது வழுக்கைத்தலையனுகளா இருப்பானுக... ஆண் பெண் சேர்த்து 30 கோடி பேரு முடி கொட்டுற ஸ்டேஜ்ல இருப்பாங்க.... இவங்க எல்லாரும் ஒரே ஒரு முறை ஏமாந்தாலே போதும்... கோடிக்கணக்குல லாபம் பாத்துர்லாம்... ஆனா நாம தான் இந்தியன்சாச்சே... குறைஞ்சது நம்மள பத்து தடவயாவது ஏமாத்திருவான்... அதனால அவனுகளுக்கு கவலையே இல்ல.... டெய்லி வழுக்கைத் தலையர்கள் உருவாகிட்டே வர்றாங்க யில்லியா... அதனால எப்பயுமே அவனுகளுக்கு நாம மிஸ்டு கால் கொடுத்துட்டே தான் இருக்கப்போறோம்... னு...

ஹா..ஹா..ஹா... அதுவும் சரிதான் :D

- Mohana Sundaram Meenakshi Sundaram

Relaxplzz

வீழ்ந்தால் தோல்வியல்ல அது அனுபவம் வீழ்ந்தவன் எழுந்தால் அது வெற்றி..... (y) (y)

Posted: 15 Nov 2014 04:50 AM PST

வீழ்ந்தால் தோல்வியல்ல அது அனுபவம்
வீழ்ந்தவன் எழுந்தால் அது வெற்றி.....

(y) (y)


(y)

Posted: 15 Nov 2014 04:30 AM PST

(y)


ஒரு மாணவன் தன் நண்பனிடம் கேட்டான், “இந்த வாத்தியாருக்கு என்ன ஆச்சு”? “ஏண்டா”?...

Posted: 15 Nov 2014 04:10 AM PST

ஒரு மாணவன் தன் நண்பனிடம் கேட்டான்,

"இந்த வாத்தியாருக்கு என்ன ஆச்சு"?

"ஏண்டா"?

"இப்பதான் போர்டுல திருக்குறள் எழுதிட்டு, திருகுறள எழுதினது யாருன்னு கேக்குறார்"!.
*
*
*
*
*
*

மாணிக்கனார் கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியு ம், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார். மாணிக்கனார் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே எள்ளுருண்டை கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.

திருவாத்தானும் பூங்குன்றனும் வெவ்வேறு வகுப்பில் படிக்கும் நண்பர்கள். பள்ளி முடிந்ததும் இருவரும் தெருவில் உள்ள திடலில் விளையாடுவார்கள்.அந்தகாலத்தில் இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் அதிகபட்ச உடை.

ஒரு நாள் திருவாத்தான், உபாத்தியாயர் சொல்லுவதைக் கவனிக்காது, மரத்தின் மேல் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் அணில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதை மாணிக்கனார் பார்த்து விட்டார்.அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை, மரக்கிளையிலேயே தொங்கிக் கொண்டிரு! என ஏற்றிவிட்டு விட்டார். திருவாத்தான் மரக்கிளையை இரண்டு கைகளால் பிடித்த படி தொங்கிக் கொண்டே இருந்தான். அவன் காலுக்கும், மண் தரைக்கும் ஒரு அடி அளவு இடைவெளி தான் இருக்கும். அவன் இறங்காமல் இருப்பதற்காக காலுக்கு கீழே நான்கைந்து எழுத்தாணியை வேறு குத்திவிட்டார்.

தொங்கிக் கொண்டே இருப்பதால் கைகள் வலியெடுக்கிறது. குதிக்கவும் வழி இல்லை. கட்டெறும்பு வேறு உடுப்புக்குள் சென்று வெளியே வந்து கொண்டிருக்கிறது.

அரைநாழிகை கழித்து உபாத்தியாயர், எழுத்தாணிகளை எடுத்து விட்டு அவனை இறக்கி விடுங்கள் என்று மற்ற மாணாக்கர்களிடம் உத்தரவிட்டு போய்விட்டார்.

திருவாத்தான் கீழே இறக்கப்பட்டான். வெகு நேரம் கிளைகளைப் பிடித்திருந்ததால் இரு கைகளும் கீழே இறங்கவும் இல்லை, இறக்கவும் முடியவில்லை. அப்படியே வீட்டுக்கும் வந்து விட்டான். தாய், தந்தை, அக்கம் பக்கத்தவர் அனைவரும் கையை கீழே கொண்டுவர முயற்சிக்கின்றனர். முடியவேயில்லை.

மருத்துவர் வந்து ஏதேதோ, தைலம், மூலிகையின் உதவியால் முயற்சித்துப் பார்த்தார், முடியவில்லை.
விசயம் தெரிந்து திருவாத்தானின் நண்பன் பூங்குன்றன் வீட்டுக்கு வந்தான். நிலைமையை பார்த்து விட்டு, இவ்வளவு தானா விசயம் என்று கூறிவிட்டு, படாரென்று இடுப்புத் துணியை இழுத்தான். அடுத்த விநாடி திருவாத்தானின் கைகள் தன்னையறியாமல் சடாரென்று கீழே இறங்கியது.

இதைத்தான் வள்ளுவர்
"உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" என கூறுகிறார்,
அன்றும், இன்றும் நட்பு தான் இடுக்கண் களைகிறது..

Relaxplzz

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்...

Posted: 15 Nov 2014 03:45 AM PST

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .நன்றி !

Relaxplzz


மறைக்கப்படும் உண்மைகள்

:)

Posted: 15 Nov 2014 03:33 AM PST

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? நாராயணசாமி : ஆறு இட்லி சாப...

Posted: 15 Nov 2014 03:10 AM PST

ஒருவன் : வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?

நாராயணசாமி : ஆறு இட்லி
சாப்பிடுவேன்.

ஒருவன் : தப்பு! வெறும்
வயித்துல உங்களால ஒரு
இட்லிதான் சாப்பிட முடியும்.
ஏன்னா, இரண்டாவது இட்லி
சாப்பிடும்பொழுது, அது
வெறும் வயிறா இருக்காது!

நாராயணசாமி : அட, சூப்பரா இருக்கே! :D

நான் போய் என்
ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப்
போறேன்.

நாராயணசாமி: வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவே?

நண்பர் : என்னால பத்து இட்லி
சாப்பிட முடியும்.

நாராயணசாமி : சே, போடா! ஆறுன்னு
சொல்லியிருந்தா சுப்பரா
ஒன்னு சொல்லியிருப்பேன்

:P :P

Relaxplzz

#சாமி_மேல_சத்தியம் பண்ணுன்னு சொல்லும் போது தயங்காமல் சத்தியம் செய்யும் குழந்தை...

Posted: 15 Nov 2014 02:49 AM PST

#சாமி_மேல_சத்தியம் பண்ணுன்னு சொல்லும் போது தயங்காமல் சத்தியம் செய்யும் குழந்தை

,#அம்மா_மேல_சத்தியம் பண்ணுன்னு சொல்லும் போது,பின்வாங்குது பாரு அது தான் #அம்மா.

சாமிக்கு மேல உசந்தவங்க அம்மான்னு குழந்தைக்கு கூட தெரியுது

- இளையராஜா

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

:)

Posted: 15 Nov 2014 02:35 AM PST

"மனித வாழ்வை" செம்மைப்படுத்தும் "5" விஷயங்கள். 1.பொதுநலம். 2.விட்டுக்கொடுத்தல்....

Posted: 15 Nov 2014 02:10 AM PST

"மனித வாழ்வை" செம்மைப்படுத்தும் "5" விஷயங்கள்.

1.பொதுநலம்.
2.விட்டுக்கொடுத்தல்.
3.மென்மையாக பேசுதல்.
4.பொறுமை.
5.ஒழுக்கம்.

"மனித வாழ்வை" பாழ்படுத்தும் "5" விஷயங்கள் .

1.சுயநலம்.
2.பிடிவாதம்.
3.கரடு முரடாக பேசுதல்.
4.அவசரம்.
5.ஓழுக்ககேடுகள்.

Relaxplzz

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி? காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டா...

Posted: 15 Nov 2014 01:53 AM PST

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

;-)

Posted: 15 Nov 2014 01:34 AM PST

" இந்த Flat 45 லட்சம் சார்.., அது 50 லட்சம் சார் " ஒவ்வொன்னா புரோக்கர் சொல்லிட்...

Posted: 15 Nov 2014 01:10 AM PST

" இந்த Flat 45 லட்சம் சார்.., அது 50 லட்சம்
சார் " ஒவ்வொன்னா புரோக்கர் சொல்லிட்டு
இருந்தாரு..

நானு தீவிர யோசனையில இருந்தேன்..

" என்ன யோசிக்கறீங்க..?! ரேட் வேணா
உக்காந்து பைனல் பண்ணிக்கலாம்.. "

" அட ரேட் பத்தி இல்ல.., ஒரு 20 வருஷம்
கழிச்சி வீட்டை இடிச்சி கட்டணும்னா என்ன
பண்றதுனு யோசிக்கறேன்..!! "

" அந்த கவலையே உங்களுக்கு வேணாம்..! "

" ஏன்..?!! "

" 20 வருஷம் ஆனதும் வீடு தன்னாலயே
இடிச்சிடும் சார்..?!! "

# அடப்பாவிகளா..!!! :O :O

- Venkat Gokulathil Suriyan

Relaxplzz

எழுதவோ, படிக்கவோ தெரியாமலே ஓராயிரம் கவிதைகளை பொழியும் மழலையின் பேச்சுகள்.. #ரொம...

Posted: 15 Nov 2014 12:50 AM PST

எழுதவோ, படிக்கவோ தெரியாமலே ஓராயிரம் கவிதைகளை பொழியும் மழலையின் பேச்சுகள்..

#ரொம்பவே_அழகு !!


(y)

Posted: 15 Nov 2014 12:30 AM PST

(y)


சிரிக்க மட்டும்.........(No logic please..) பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர...

Posted: 15 Nov 2014 12:10 AM PST

சிரிக்க மட்டும்.........(No logic please..)

பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.

முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.

நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.

அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், ' கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.

இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.

உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.

மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.

அதுக்கு மூன்றாமவன், நான் 7-அப் கம்பெனியில
வேலை பாக்குறேன்.

:P :P

Relaxplzz