Tuesday, 11 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தூய்ம...

Posted: 11 Nov 2014 06:00 AM PST

தூய்மை இந்தியா திட்டமும் பிரபலங்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பிரபலங்கள் முன்வந்து
தங்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்று
மோடி முதல் தமிழிசை வரை தொடர்ந்து
குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை.
கமல்ஹாசனும் ஹேமமாலினியும்
அவர்களைப் போன்ற பிரபலங்களும்
ஒருநாள் இரண்டு நாள் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு
கூட்டிப் பெருக்க வருவார்கள். ஆனால் இது தொடருமா?

இப்படிப் பிரபலங்களுக்குப் பின்னால்
அலைவதை விட்டுவிட்டு உள்ளூர் பஞ்சாயத்து,
ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் உட்பட
ஒவ்வொருவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே
தெருவும் ஊரும் நாடும் சுத்தமாகிவிடுமே..!
அதை ஊக்கப்படுத்தலாமே...!

via - சிராஜுல்ஹஸன்


உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை! 1) உங்...

Posted: 11 Nov 2014 03:00 AM PST

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.

அதிசயம் ஆனால் உண்மை!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2) அதை இரண்டால் பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்.
மற்ற (2 digit) எண் உங்களின் வயது..!

VISIT >> www.fb.com/fbtamil


ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள். சிங்கப்பூரில் நபர் ஒருவர...

Posted: 11 Nov 2014 01:58 AM PST

ஐபோன் 6 வாங்கிவிட்டு கதறி அழுத நபர்; கைகொடுத்த மக்கள்.

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார்.

ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.

பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார்.
இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம், கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள் பணம் சேர்ந்துவிட்டது.
அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர்.

தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

VISIT :: www.facebook.com/fbtamil


துர்கா வாஹினியின் ஆபத்தை வெளிப்படுத்தும் ஆவணப் படம்! **************************...

Posted: 10 Nov 2014 09:00 PM PST

துர்கா வாஹினியின் ஆபத்தை வெளிப்படுத்தும்
ஆவணப் படம்!
******************************
மத துவேஷத்தையும் மத வெறுப்பையுமே
தன்னுடைய கொள்கையாகக் கொண்ட விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் ஆயுதப் பிரிவுதான் துர்கா வாஹினி எனும் அமைப்பு.

இந்த துர்கா வாஹினியின் ஆபத்தான செயல்பாடுகளை
ஓர் ஆவணப் படம் மூலம் வெளியுலகிற்குக்
கொண்டு வந்துள்ளார் கனடாவில் வசிக்கும்
இந்திய வம்சாவளி பெண் இயக்குநரான நிஷா பகுஜா.
இரண்டு ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு
துர்கா வாஹினி கேம்பில் கலந்துகொண்ட நிஷா,
அங்கு அளிக்கப்படும் பயிற்சி, பாடம் ஆகியவற்றை எல்லாம் அப்படியே சிறிதும் கற்பனை கலக்காமல்
சொல்லியுள்ளார் பிபிசியில் ஒளிபரப்பான
இந்த ஆவணப் படத்தில்.

துர்கா வாஹினியில் உள்ள பெண்கள் பெரும்பாலும் ஏழைகள், போதிய படிப்பறிவு இல்லாதவர்கள்.
முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும்
அடியோடு வெறுக்கவும் பகைமை பாராட்டவும்
இந்தப் பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.
"இந்துஸ்தான் இந்துக்களுக்கு, பாகிஸ்தான் நரகம்"
என்று இவர்கள் முழங்குகிறார்கள்.
இந்தியாவில் ஒரே ஒரு யதார்த்த மதம் இந்து மதம்தான் என்றும், இந்து மதத்திற்கு சேவை செய்வது தேச சேவை என்றும், எதிரிகளின் முதுகெலும்பை முறிக்கவும் தயங்கக் கூடாது என்றும் துர்கா வாஹினி பெண்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.

அதோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஆயினும் கணவன் எது செய்தாலும் அவனை எதிர்த்துப்
பேசக் கூடாது என்றும் கற்பிக்கப்படுகிறது என்று
அதிர்ந்து போய் சொல்லியுள்ளார் நிஷா பகுஜா.
1984-85 கால கட்டத்தில்தான்
துர்கா வாஹினி தொடங்கப்பட்டது.
ஒரு ஜனநாயக நாட்டில் மத துவேஷமும்
சகிப்பின்மையும் வளர்ந்து வருவது ஆபத்தானது
என்று கவலையுடன் கூறுகிறார் நிஷா.

துணிச்சலுடன் உண்மையை வெளிக்கொண்டுவந்த
நிஷா பகுஜாவுக்கு வாழ்த்துகள்.

BBC LINK :: http://www.bbc.com/news/world-asia-india-29798148

video trailer link :: http://www.youtube.com/watch?v=9u7WJ0XLXz8

via - சிராஜுல்ஹஸன்


0 comments:

Post a Comment