Relax Please: FB page daily Posts |
- இந்த வித்தியாசமான கட்டிடம் New york city-ல் அமைந்துள்ளது. பிடித்தவர்கள் லைக் பண...
- மூளைக்கொரு வேலை
- :)
- மாத கடைசி!.. :) 5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி . 50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி மா...
- மக்கள் மருத்துவர்! 'டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கே இருக்கிறது?’ என்று கேட...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அறிவாளி முயற்சி செய்கிறான், முட்டாள் தன்னை அறிவாளியாக நினைத்...
- ;-)
- (y) (y)
- கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓ...
- இனிமேலாவது இந்த ஹீரோக்களுக்கு சொம்புதூக்குவதை நிறுத்துங்கள் மக்களே... இதுதான...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவ...
- "இவர்கள் சொன்னவை" இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்த...
- :)
- கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம...
- வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்ப...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பீா் கூலிங்காக இல்லையி...
- "நான் உனக்கு என்ன செய்யல" என்று கேட்காத தந்தையும், "நீங்க எனக்கு என்ன செஞ்சிங்க...
- :)
- மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள்...
- இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்? ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்ம...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அவகிட்ட பிடிச்சது என்ன தெரியுமா, அவ எனக்கு அடங்கவே மாட்டா மச்...
- இப்படி Bubble விட்டு விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y) Photo cou...
- :)
- ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்.. நான் உள்ள போய் பணம் எடுத்திட்...
- போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும்...
- அறிவாளி புள்ள.. :P
- :)
- ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர்...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து உட்கார்ந்தால் நானும் வருவேன்! விஜய...
Posted: 29 Oct 2014 09:50 AM PDT |
மூளைக்கொரு வேலை Posted: 29 Oct 2014 09:40 AM PDT |
Posted: 29 Oct 2014 09:30 AM PDT |
Posted: 29 Oct 2014 09:15 AM PDT மாத கடைசி!.. :) 5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி . 50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி மாத கடைசி என்றால் மாத்திரை விழுங்க பயப்படும் குழந்தை போல தான் நாம்!! மளிகை, வீட்டு வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி என எல்லாம் போக மாதத்தின் முதல் வாரம் மட்டுமே கையில் பணமிருக்கும் மற்ற மூன்று வாரமும் எதையும் தாங்கும் மனமிருக்கும். கையேந்தி பவனும் கடவுளாய் தெரியும் என்றோ காணமல் போன சில்லரை அருமை அன்று புரியும் கடவுள் பக்தி அதிகம் இல்லை ஆனாலும் வெள்ளி,சனி,திங்கள் என ஒரு வாரத்தில் பல ஒரு பொழுதுகள் இருக்கும் மாத கடைசி.. :) பிறந்த நாள் கூட பிடிக்கவில்லை மாத கடைசியில் வருவதால்! நண்பனின் திருமணத்திற்க்கு அழைப்பு இருந்தும் போகவில்லை வெறும் கை வலி தருவதால்!! பசித்த வயிற்றை சில நேரத்தில் தேநீரும் பல நேரத்தில் தண்ணிரும் நிரப்பும் பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுசமையலில் ரசமே அதிகம் இருக்கும் மாத கடைசி வீட்டில் முதலில் காபியில் சர்க்கரை அளவு குறையும்! பின் காபியின் அளவு குறையும் மாத கடைசியில் விலை கேட்டு விட்டு அடுத்த மாதம் வாங்கி கொள்ளலாம் என விட்டு வந்த ஆசை பட்ட அந்த சட்டையை வழியில் யோரோ அணிந்து செல்லும் போதுதான் வலியின் ஆழம் தெரிகிறது இல்லை என்று சொல்லமாட்டான் என நம்பி கடன் கேட்கும் நண்பனிடம் எப்படி நான் சொல்வேன் மாத கடைசி என்று மாலை நேரத்தில் அப்பா எதையாவது வாங்கி வருவார் என வாசலில் ஏங்கி காத்திருக்கும் என் பிள்ளையிடம் எப்படி சொல்வேன் மாத கடைசி என்று. அம்மா ஆசைபட்ட புடவையும தங்கை கேட்ட கைபேசியும் வழக்கம் போலவே அடுத்த மாதத்திற்க்கு இலக்கு நகர்ந்தது மாத கடைசி இறைவா ஆடம்பர வாழக்கை வேண்டாம்! அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்! ஆடியும்,BMWயும் வேண்டாம் உழைப்புக்கு ஏற்ற பிழைப்பு கொடு! மாத கடைசியில் யாரிடம் உதவி கேட்காமல் உதவி செய்யும் அளவுக்கு உயர்வை கொடு.. இப்படிக்கு.. #மிடில் கிளாஸ் மேன்.. :) Relaxplzz |
Posted: 29 Oct 2014 09:00 AM PDT மக்கள் மருத்துவர்! 'டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கே இருக்கிறது?' என்று கேட்டால் 'நம்பர் 21, வெங்கடாசலம் தெரு' என்று முகவரியோடு உற்சாகமாகச் சொல்கிறார்கள் சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள். ஜெயச்சந்திரன் தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் ஃபீஸ் என்று எதுவும் கேட்பது இல்லை. 5, 10 ரூபாய் என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிறைவான வைத்தியம் செய்துவருகிறார். ''கல்பாக்கம் கொடைப்பட்டினம்தான் சொந்த ஊர். எங்கு பார்த்தாலும் புதர், காடு என மண்டிக் கிடக்கும் பூமியில் பாம்பு, தேள் கடிக்கு வைத்தியம் பார்க்கக்கூட 30 கி. செல்ல வேண்டிய, அடிப்படை வசதிகள் அற்ற கிராமம். எங்க அப்பா சுப்பிரமணி, ஒரு விவசாயி. போதுமான வசதி இல்லாத சூழல். கிராமத்தில் யாருமே பள்ளிக்கூடம் போக அக்கறை காட்டியது இல்லை. அந்த ஊரில் முதன் முதலில் பள்ளிக்கூடம் போக ஆசைப் பட்டது நான்தான். அப்பாவால் என்னைப் படிக்கவைக்க முடியவில்லை. என் மாமா வேணுகோபால்தான், 'பையன் கண்டிப்பா படிக்கணும்'னு முத்தியால்பேட்டை ஸ்கூல்ல சேர்த்தார். லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்சது. பி.எஸ்சி-யை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு எம்.பி.பி.எஸ். சேர்ந்தேன். 'இந்த மருத்துவக் கல்வி வாய்ப்பை எக்காலத்திலும் வணிகமாக்கிவிடக் கூடாது. நம் கிராமம் போன்றே பின்தங்கிய பகுதியில்தான் கிளினிக் தொடங்க வேண்டும்' என்ற எண்ணம் படிக்கும்போதே என் மனதில் உறுதியாக இருந்தது. படிப்பு முடிஞ்ச கையோடு 1971-ல் இதே இடத்தில் கிளினிக் தொடங்கினேன். இலவசமா மருத்துவம் பார்க்கலாம் என்பதுதான் என் அப்போதைய மனநிலை. இலவசம் என்றால் மதிப்புஇருக்காது என்பதற்காக ஒரு ரூபாய், 2 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 10 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு மருத்துவம் செய்துவருகிறேன். ஆரம்பத்தில் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று சொல்லி சிரித்தவர்களே காலப்போக்கில் என்னிடம் சிகிச்சை பெற வரிசையில் காத்திருந்தனர். ஜெயின் அசோசியேஷன், ஓரிரு தொழிலதிபர்கள், தெரிந்த நண்பர்கள்னு மருந்து மாத்திரைகள் வாங்க உதவி செய்து வரும் நல்ல உள்ளங்களை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களின் உதவி மூலம் வரும் மருந்துகளை இலவசமாகக் கொடுக்கிறேன். மாரடைப்பு, கண் பிரச்னை, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்னு பெரிய பிரச்னைகளுடன் வருபவர்களைப் பக்கத்து அரசு மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அனுப்பிவைப்பேன். இப்படி அறிமுகமான சித்தா, ஹோமியோபதினு மாற்று முறை மருத்துவர்கள் 100 பேர் ஒரே டீமாக இணைந்து 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளோம். வட சென்னையை வளர்ச்சி மிக்க ஆரோக்கியமான பகுதியா மாற்ற வேண்டும் என்பதற்காக, 'நேதாஜி சமூக சேவை இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்கு உதவிகள்னு பல சேவைகளைச் செய்துவருகிறோம்'' என்கிறார் ஜெயச்சந்திரன். சென்ட்ரல் பொது நல மருத்துவமனையில் மெடிக்கல் சூப்பரின்டெண்டென்ட் ஆக இருந்து ஓய்வுபெற்ற இவரது மனைவி டாக்டர் வேணி, ''எங்க பையனும், பொண்ணும்கூட டாக்டர்கள்தான். அன்பானவங்க மத்தியில் வைத்தியம் செய்யும்போது எங்களுக்கு வேற என்ன சொத்து சுகம் வேணும்?'' என்கிறார். சமூக மருத்துவருக்கு ஹேட்ஸ் ஆஃப்! Relaxplzz ![]() |
Posted: 29 Oct 2014 08:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அறிவாளி முயற்சி செய்கிறான், முட்டாள் தன்னை அறிவாளியாக நினைத்து நடிக்கிறான் - Rockét Märéés |
Posted: 29 Oct 2014 08:40 AM PDT |
Posted: 29 Oct 2014 08:30 AM PDT |
Posted: 29 Oct 2014 08:15 AM PDT கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். 'போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்' என்று முடிவுசெய்தான் அவன் ... பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் . "ஹாய்.. ஐ ம் அருண்.." என்றபடி அவளிடம் கையை நீட்டினான் .. "ம்.." என்றாள் கேள்வித் தோரணையில். " ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்" " அதற்கும் "ம்.." என்றே பதில் தந்தாள்.. "ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே.." என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து... " ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா..." எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி... இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்.. கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் .. "ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?" இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்.. "என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்" என்ரான் ".............." அப்போது அங்கு வந்த அவனது மனைவி "ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா" என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள். எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட... அவ்வ்வ்வ் :P :P Relaxplzz |
Posted: 29 Oct 2014 08:00 AM PDT இனிமேலாவது இந்த ஹீரோக்களுக்கு சொம்புதூக்குவதை நிறுத்துங்கள் மக்களே... இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும். லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும். இந்த வாரம் மரணம் அடைந்த தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் கடைசி பயணம். இதில் ஒரு சினிமாகாரர்கள் கூட இல்லை என்பது நிதர்சனம். வெட்கம் கெட்டவர்கள். கலைக்கு செய்யும் மரியாதை இதுதானா? கடைசி காலத்தில் தன்னந்தனியே அடையாளம் கூடத் தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்த பாகவதர் நினைவில் வந்தார். தன் படங்களுக்கு பணியாற்றிய சக கிரியேட்டரை கடைசியில் பார்க்க கூட இயக்குனர் மகேந்திரனாவது வந்திருக்கலாம். இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும். லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும். ரஜினிக்கு பெயர் வாங்கித் தந்த ஜானி திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக் ஜி தான்.அதில் அழகாக காட்டினர் ரஜினியை. காலேஜ் ரோட்டில் இருக்கும் ஒரு ஶூடிங்க் ஹவுஸில் ஜானி படத்தின் போதுதான் முதன் முதலில் எனக்கு ரஜினியை அறிமுகப் படுத்தினார் யார் கண்ணன். ரஜினிக்கு செய்தி கிடைக்கவில்லை போல் இருக்கிறது. - Suprajaa Sridaran Relaxplzz ![]() |
Posted: 29 Oct 2014 07:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வதைக் கேட்டு முடிவு செய்ய கூடாது # எல்லோருக்கும் நல்லவன், வையகத்தில் இல்லை |
Posted: 29 Oct 2014 07:40 AM PDT |
Posted: 29 Oct 2014 07:30 AM PDT |
Posted: 29 Oct 2014 07:15 AM PDT கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும் 6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது 7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து. 8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது. 9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது 10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது... 11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது... 12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும் 13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது.. 14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது. 15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது . #களவாணி பய Relaxplzz |
Posted: 29 Oct 2014 07:00 AM PDT வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு... வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்... வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள். அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா?? மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல். மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர். நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி ஸ்டோன். நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன். அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ், அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள், அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம். ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க. உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! Relaxplzz ![]() |
Posted: 29 Oct 2014 06:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பீா் கூலிங்காக இல்லையினு பதிவு போடுவாங்க, பெண்கள் வீட்டில ஆயிரம் பொய் சொன்னாலும் புருஷனுக்கு சோறு வைக்கலைனு உண்மைய சொல்லி பதிவு போடுவாங்க //குடும்ப எத்தீஸ் - Rockét Märéés |
Posted: 29 Oct 2014 06:40 AM PDT |
Posted: 29 Oct 2014 06:30 AM PDT |
Posted: 29 Oct 2014 06:15 AM PDT மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள் தேய்த்ததும்.. ஒரு பூதம் வெளிப்பட்டு உங்களுக்கு என்ன வேண்டும்..?? என்று கேட்டது..! முதல் பெண்;- " நான் இப்போது இருப்பதை விட.. பத்து மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..! பூதம் அப்படியே செய்தது..!! இரண்டாவது பெண்;- "அவளை விட நான் நூறு மடங்கு.. அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..! பூதம் அவள் சொன்னது போலவே செய்தது..! மூன்றாவது பெண்;- " நான் அவர்கள் இருவரையும் விட.. ஆயிரம் மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!! பூதம் ஒரு நிமிடம் யோசித்தது..!! பின் அவளை ஆணாக மாற்றியது..! அவள் ஒரு ஆணாகி விட்டாள்..! பெண்களை விட ஆண்கள் தான்.. ஆயிரம் மடங்கு அழகானவர்கலாம்.. ! இதை சொன்னால்.. அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்..?? #பெண்கள் சும்மா சண்டைக்கு வரக்கூடாது.. ஒத்துக்கணும் உண்மைய :P :P Relaxplzz |
Posted: 29 Oct 2014 05:57 AM PDT இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்? ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள். அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள். செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் "இந்தக் காசு எதற்குமே பயன்படாது நீயே வைத்துக்கொள்" என திருப்பித்தர துயரத்துடன் வாங்கிக் கொண்டாள் சிறுமி. சில நாட்களுக்குப் பின் இறைவன் திருவுருவை உருவாக்கம் செய்தபோது சிலையில் ஒரு விரிசல் எவ்வளவு சரி செய்தும் உருவாகிக்கொண்டே இருந்தது. குரு " இன்னொரு சிலையை உருவாக்குங்கள் " எனக் கூறி தானே நேரில் பார்வையிட்டும் சிலையில் விரிசல் விழுந்தது. திகைத்துப்போன குரு சீடர்களிடம் விசாரிக்க சிறுமியின் செல்லாக்காசு விவரம் அறிந்தார். உடனே சென்று அந்த சிறுமியிடமிருந்து செல்லாக்காசை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட தலைமைச் சீடன் அவ்வாறே வாங்கி வந்தான். பிறகு அதையும் சேர்த்து உருக்கி அச்சில் ஊற்றச் சொன்னார் குரு. அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அச்சை நீக்கிப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. எவ்வித விரிசலும் இன்றி இறைவனின் திருவுருவச்சிலை பொன் எழில் பூத்தது. அத்துடன் இறைவனின் இதயப்பகுதியில் ஏதோ பதிந்திருப்பது போல் தெரிய எல்லோரும் உற்றுப்பார்த்தார்கள். அது அச்சிறுமி மனதார இறைவன் திருப்பணிக்கு அளித்த செல்லாக் காசு. குரு அர்த்தபுஷ்டியுடன் தலைமைச் சீடனைப் பார்க்க தலை கவிழ்ந்தான் அவன். Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 3 |
Posted: 29 Oct 2014 05:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அவகிட்ட பிடிச்சது என்ன தெரியுமா, அவ எனக்கு அடங்கவே மாட்டா மச்சி..!! #Guys_Talks - Sheila Chowdry |
Posted: 29 Oct 2014 05:40 AM PDT |
Posted: 29 Oct 2014 05:30 AM PDT |
Posted: 29 Oct 2014 05:15 AM PDT ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்.. நான் உள்ள போய் பணம் எடுத்திட்டு வர்றத பார்த்த அவரு வெளிய வரவும் பொளேர் என் கன்னத்தில அடிச்சிட்டு யாரு ரூவாயட களவாண்டு வர்றேன் கேட்டாரு.. அதற்கு நான் தாத்தா இது என் காசுதான்னு சொல்ல திரும்ப ஒரு அறை..:O வீட்டில அம்புட்டு பெரிய இரும்பு பெட்டி இருக்கறப்ப இப்பிடி ஊருக்கு நடுவால இருக்கிற இப்பிடி தொறந்த வீட்டிலயாட ரூவாய வைப்பே! :O :O - Ashok kumar. |
Posted: 29 Oct 2014 05:02 AM PDT போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லலலா ... ஓஓ .. ம்ம் ... ரரரர ... ரே லலலா ... ஓஓ .. நெஞ்சு ம்ம் ... பொண்ணு நனனனனே போ இன்று நீயாக வா நாளை நாமாக தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு மெதுவா மெதுவா நீ பேசும் போது சொகமா சொகமா நான் கேக்குறேன் இது சார காத்து என் பக்கம் பாத்து எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து லலலலா ... ஓஓ ....ம்ம் .... ரரர ரே லலலலா ...ஓஓ ... ம்ம் .... ரரர ரே போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லலலலா .. http://www.youtube.com/watch?v=rlLI1X6z1Yk ![]() தமிழ் பாடல்கள் |
Posted: 29 Oct 2014 04:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும் பேச வேண்டும் - முருகதாஸ். சார் எங்களயெல்லாம் காப்பத்த எதோ ப்ளான் பண்றிங்க... புரியுது...பண்ணுங்க பண்ணுங்க - Boopathy Murugesh |
அறிவாளி புள்ள.. :P Posted: 29 Oct 2014 04:41 AM PDT |
Posted: 29 Oct 2014 04:30 AM PDT |
Posted: 29 Oct 2014 04:11 AM PDT ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் "எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி விட்டார். வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து "நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள். எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்" என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் "கப்சிப்" ஆகிவிட்டனர். மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உண்மையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர். அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும். எளிமையோடு இருங்கள் எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது. மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் "நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்" என்றார். வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் "நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்" என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார். Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 29 Oct 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து உட்கார்ந்தால் நானும் வருவேன்! விஜயகாந்த் பேச்சு அது என்ன வண்டலூர் உயிரியல் பூங்கா வா ? டைம் பாஸ் செய்றதுக்கு? - திவ்யா ராஜன் |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment