ilovemynative: Facebook page wall posts in Tamil |
- Ancient and rare rock murals reflecting the pre-historic character of the distri...
- அழகு தமிழ்நாடு! சுந்தரபாண்டியபுரம்!
- சிங்கப்பூரில் தமிழ் எழுத்துக்களால் உருவான நவீனத்துவ கலைச் சிற்பம்!
- மு.வ உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், கால...
- அழகு தமிழ்நாடு! கன்னியாகுமரி!
- இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்-மத்திய அமைச்சர்! @ஹிந்தி ப...
- # படித்ததில் பிடித்தது # எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தை...
- #என்னுடைய முதல் பிரசவத்தின் பொழுது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க என்னை...
- 'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்', 'செகன்ட் ப்ளோர்' என elevator(Lift) நம்முடன் பேசும் அளவு...
- எங்கள நம்பி விவசாயக்கடன் கொடுக்க ஒரு அரசாங்க வங்கியில் எத்தனை கேள்வி கேக்குறிங்க...
- தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! 'ஆஸம் ஆஸம்’, 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்’...
- அழகு தமிழ்நாடு! இடம்: மேகமலை,தேனி மாவட்டம்.
Ancient and rare rock murals reflecting the pre-historic character of the distri... Posted: 07 Nov 2014 09:31 PM PST Ancient and rare rock murals reflecting the pre-historic character of the district have been discovered in the Tirumayyam Fort premises, an official said today. The existence of rock paintings which depict dances that existed in 5000 BC was known earlier, historian and District Chief Educational Officer N Arulmurugan said. The paintings, made with red colour painting material, were found during a study of the Fort by a team of historians, including himsef, he told reporters. "The rock paintings at the Fort reflect the pre-historic character of the district... They are older than the murals of Sithannavasal, painted between 7th and 9th AD," he said. The painting on one side of the cap shaped rock near the entrance of the fort had faded. But on the other side one can see row of paintings including one depicting man and a woman lying down in reclining posture. Another painting is a dance programme wherein a couple are playing some musical instruments and another couple dancing holding their hands. This type of dance was mentioned in ancient Tamil literature 'Tolkapiam' as "Undattu" (a dance), he said adding a spectator, probably the queen or the chief of the area, had been separately drawn in a big size. On the northern side of rock also many images had been painted. One of them showed several men following a woman in a queue. Paintings had also been found on the roof of the cave between the Shiva and Vishnu temples in the fort. Some paintings show about the use of animals as a mode of transport and use of weapons made from rock for hunting animals. Arulmurugan urged the archaeological department to protect the paintings. The district was one of home of pre-historic man. A very large number of burial sites have been found. In and around Pudukkottai, there are many vestiges of the oldest habitations of man and some of the lithic records known in the south. http://www.ndtv.com/article/south/ancient-rock-murals-found-in-tamil-nadu-s-pudukottai-district-449669 http://www.thehindu.com/news/national/tamil-nadu/ancient-rock-paintings-discovered-at-tirumayam-fort/article5380407.ece In Tamil: http://nadainamathu.blogspot.com/2013/11/blog-post_24.html http://anikartick.blogspot.in/2014/01/thirumayam-rock-arts-and-rock-paintings.html ![]() |
Posted: 07 Nov 2014 08:24 PM PST |
Posted: 07 Nov 2014 08:05 PM PST |
Posted: 07 Nov 2014 05:54 PM PST மு.வ உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். #Translation: As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power. #Explanation: At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity. ![]() |
Posted: 07 Nov 2014 08:38 AM PST |
Posted: 07 Nov 2014 08:24 AM PST இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்-மத்திய அமைச்சர்! @ஹிந்தி படிச்சா பானிபுரி தான் விக்கமுடியும். |
Posted: 07 Nov 2014 07:38 AM PST # படித்ததில் பிடித்தது # எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று : 1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும் 4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும் 8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும் 13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும் 20 வயது வந்து தோளுக்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர். ரொம்ப சத்தியமான நான் உடன்படும் வார்த்தைகள் இவை... ![]() |
Posted: 07 Nov 2014 07:04 AM PST #என்னுடைய முதல் பிரசவத்தின் பொழுது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க என்னை ஆபரேஷன் தியேட்டரில் படுக்க வைத்திருந்தார்கள் . மயக்க மருந்து கொடுக்க ஒரு அனஸ்திஷ்யன் வரவழைக்கப்பட்டார் . அவர் கூடவே குட்டி டாக்டர் அதாவது பயிற்சி டாக்டர் வந்தார் . எல்லோருக்கும் இருக்கும் அதே இனம் புரியாத ஒரு உணர்ச்சிதான் எனக்கும் . #அந்த பெரிய டாகடர் என் கையை பற்றி ஐ வியில் மருந்து செலுத்த ஆயுத்தமானார். அப்பொழுது அந்த பயிற்சி டாக்டர் , " டாக்டர் நான் போடவா" என்று கேட்க இவரும் ஊசியை அவரிடம் கொடுத்தார். மயக்க மருந்து செலுத்துவது என்பது கொஞ்சம் ரிஸ்கானது, தவறாக செலுத்தினால் மயக்கத்தில் இருந்து மீள முடியாது. சங்கு தான்... .. . அந்த குட்டி டாக்டர் மருந்து செலுத்தும் பொழுது எனது கை வீங்க ஆரம்பித்தது . பெரிய பல்ஜ் ..." சாரி டாக்டர் "என்று கூறிவிட்டு செலுத்திய மருந்தை ஊசியின் மூலம் சிரிஞ்சுக்கு இழுத்துக்கொண்டு மறுபடியும் செலுத்த எனது கை மறுபடியும் பல்ஜ் ...மூன்றாவது முறை அவர் என் கையை பற்றும் பொழுது ...நான் பெரிய டாக்டரை பார்த்து," டாக்டர் தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் பயிற்சி வகுப்பை பிரசவத்திற்கு வந்திருக்கும் என்னிடம் தான் காட்ட வேண்டுமா ?. நான் நல்லபடியாக குழந்தையொடு வருவேன் என்றும் நீங்கள் நல்ல படியாக பிரசவம் பார்ப்பீர்கள் என்று வெளியே என் உறவினர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்து இருக்கிறார்கள் என்றேன் .உடனே பெரிய டாக்டர் குட்டி டாக்டரின் கையில் இருந்த ஊசியை வாங்கி கொண்டு மருந்தை செலுத்த ஆரம்பித்தார் . #இந்த அனுபவத்தை நான் ஏன் பகிர்கிறேன் என்றால் எந்த நிலையிலும் உங்களது உடல் உங்களின் சொத்து...சில நேரங்களில் நீங்கள் தனித்து விடப்படலாம் அப்பொழுது உங்களை சுற்றி இருப்பவர்களால் உங்களை பாதுகாக்க முடியாது . நீங்கள் தான் சூதனமாக இருந்துக்கொள்ளவேண்டும் . #சொல்ல_வேண்டியதை_சொல்ல_வேண்டியவர்களிடம்_சொல்ல_தயங்காதீர்கள் . #சொல்ல_கூடாததை_சொல்லக்கூடாதவர்களிடம்_செத்தாலும்_சொல்லாதீர்கள். @D Latha Prabhu ![]() |
Posted: 07 Nov 2014 05:25 AM PST 'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்', 'செகன்ட் ப்ளோர்' என elevator(Lift) நம்முடன் பேசும் அளவு கூட பல அபார்ட்மெண்ட்களில் மனிதர்கள் பேசுவதில்லை.! #நகரங்களில் @காளிமுத்து |
Posted: 07 Nov 2014 04:34 AM PST |
Posted: 07 Nov 2014 02:52 AM PST எங்கள நம்பி விவசாயக்கடன் கொடுக்க ஒரு அரசாங்க வங்கியில் எத்தனை கேள்வி கேக்குறிங்க, நாங்க பொறுமையா பதில் சொல்றோம்... உங்கள நம்பி நாட்டையே கொடுத்துட்டு, "யாரு அக்கௌன்ட்ல எவ்வளவு கருப்பு பணம் இருக்கு?"ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டோம்... இப்படி சுத்தி வளைக்கிறிங்க... @பூபதி |
Posted: 07 Nov 2014 02:14 AM PST தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! 'ஆஸம் ஆஸம்', 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்' 'யூ கய்ஸ் ராக்' என்றெல்லாம் தமிழ் சேனல்கள் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டும்போது, ''இப்போ இந்தக் கூம்பு வடிவத் தக்கையை மிதக்கவிட்டுதான் நான் அமேஸான் காட்டிலிருந்து தப்பிப் பிழைக்கப்போகிறேன்'' என்று தமிழில் பேசுகிறார் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் க்ரில்ஸ். இது எப்படி சாத்தியமானது என டிஸ்கவரி சேனலின் தெற்கு ஆசியாபசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் ராகுல் ஜோரியிடம் கேட்டதில்... ''டிஸ்கவரி சேனல் உலகின் நம்பர் ஒன் கட்டண சேனலாக இருக்கிறது. உலகின் 220 நாடுகளில் 2.5 பில்லியன் மக்களால் பார்க்கப்படும் இந்த சேனலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முனைப்போடுதான் தெற்கு ஆசியாவில் காலடித்தடம் பதித்தது. பார்வையாளர்களின் வசதிக்கேற்ப டி.எல்.சி, அனிமல் பிளானெட், இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி அண்ட் சயின்ஸ், டிஸ்கவரி டர்போ மற்றும் டிஸ்கவரி கிட்ஸ் என சேனல்களைப் பிரித்து அளித்து வந்தோம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முழு முயற்சியாக ஒளிபரப்பலாம் என 2011ல் தொடங்க உத்தேசித்து குறிப்பிட்ட பிராந்தியங்களில் ப்ரைம் டைம் நேரத்தில் மட்டும் ஆங்கிலத்துக்குப் பதில் அந்தந்த மொழிகளில் அளித்து வந்தோம். அதற்குக் கிடைத்த வரவேற்பை வைத்து டிஸ்கவரி சேனலை பிராந்திய மொழிகளில் அளிக்க மும்பையிலும் குர்கவானிலும் விசேஷமாக ஸ்டுடியோவை உருவாக்கி ஒளிபரப்பைத் தொடங்கினோம். தமிழில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானித்த விஷயம், உலகை அவர்கள் மொழியில் காட்ட வேண்டும் என்பதுதான். உலகின் நம்பர் ஒன் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் பிரபஞ்சம் குறித்த பார்வை தமிழில் வந்ததையும் பியர்ல் க்ரில்ஸ் காடு, பாலைவனம், கடல் பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசித் திரிவதையும் வெகுவாக ரசித்தார்கள். இப்போது, 'ஹவ் டூ தே டூ இட்?' எனப்படும் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் பொருட்கள் எப்படித் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது என்ற நிகழ்ச்சிக்கும் ஏக வரவேற்பு. டிஸ்கவரி தமிழ் எங்களுக்கே ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக இன்னும் கூடுதலான புதுப்புது வீடியோக்களை எங்களது பிரத்யேக லைப்ரரிக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தருவிக்கிறோம். அதை மும்பையில் இருக்கும் எங்கள் ஸ்டுடியோவில் அழகான தமிழில் தர மெனக்கெடுகிறோம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள், ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் எல்லோரும் பல கட்டத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களை வைத்து மொழியாக்கம் செய்கிறோம். சென்னைக்கு வராமலே சென்னையைத் தொடாமலே மொழி மாற்றம் இப்படித்தான் சாத்தியமாகிறது. சென்னையில் இருந்தும்கூட ஸ்கைப் வழியாக சமயங்களில் டப்பிங் செய்து வாங்கிய சம்பவங்கள் முன்பு நடந்தன. எங்கள் நிகழ்ச்சிகள் ரிப்பீட் ஆனால், தமிழ் ரசிகர்கள் சேனல் மாற்றி விடுவார்கள் என்பது நன்கு தெரியும். அதேபோல பிடித்துப்போனால் அவர்களை எந்த சக்தியாலும் ரிமோட்டிலிருந்து மாற்ற முடியாது என்றும் நம்புகிறோம். அண்மையில் இந்திய அம்சங்களோடு பல நிகழ்ச்சிகளைத் தமிழில் வழங்கியதற்கு நல்ல ஆதரவு. 'காஷ்மீர்: லைன் ஆஃப் கன்ட்ரோல்' மற்றும் 'எப்படி இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டது?' என்ற இரண்டு நிகழ்ச்சிகளும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்து என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்காகத் தரலாம் என யோசித்து வருகிறோம்'' என்கிறார் உற்சாகமாக! - ஆர்.சரண் விகடன் ![]() |
Posted: 07 Nov 2014 01:17 AM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment