Relax Please: FB page daily Posts |
- :)
- நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. ! -...
- போட்டோவுல இருக்க இந்த இடம் சென்னை கலெக்டர் ஆபீஸுக்கும், கஸ்டம்ஸ் ஆபீஸுக்கும் இரு...
- ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தாஒரே டிராபிக் சரின்னு அ...
- 1 ரூபாயில் உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தலாம். விபத்து மற்றும் தீயின...
- :)
- ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்தி...
- இந்த வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே!கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாதா...
- நண்பர் அய்யனார் என்னிடம் சொன்னது. " சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிரு...
- சமைக்கத் தெரியாதுன்னு சொல்ற மார்டன் கேர்ல்ஸ் யாராச்சும் அழுகத் தெரியாதுன்னு சொல்...
- :)
- ஆண்கள் பாவம்தான்... தோசைக்கு அரைத்திருப்பாள் ஆனால் சப்பாத்தி சுடுவாள் - கேட்டா...
- புகை பழக்கத்தை விட வேண்டுமா..?? உலர் திராட்சையின் மகிமை தினமும் ஒரு பாக்கெட் சி...
- " ஹால்ஸ் மிட்டாய்ல இன்னும் அசோக சக்கரம் பிரிண்ட் பண்ண வேண்டியது மட்டும்தான் பாக்...
- (y)
- ஆசிரியர்கள் என் தெய்வங்கள்" ----------------------------------------------------...
- # மகளெனும் தேவதை # என் மகள் டீச்சராக மாறியபோது மாணவர்களாக வேடமிட்டன பொம்மைகள்!...
- சாப்பிடுடி ராசாத்தி அப்படி என்ன மாமன்கிட்ட உனக்கு பொல்லாத கோபம்..
- :)
- ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து.... - உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா. - உல...
- ஒரு மரத்தின் நிழலில் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தவன் அந்த மரக்கிளையை கூட உடைக்க மாட்...
- மதுரைன்னு சொன்னாலே மல்லிகை , தமிழ் , இலக்கணம் , அருவாள் முதல்கொண்டு நிறைய சிறப்ப...
- :)
- புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது...
- எதிர்பார்புகள் நிறைந்த வீடு... பல சலனப் பார்வைக்கு மத்தியில், உன்னை எனக்காய் என...
- முடிந்தவரை வேகமாக இழுத்தபோதும் முதுகில் விழுந்துகொண்டேதானிருக்கின்றன அடிகள்..
- :)
- "ஆபீசில் நேரத்தை கொல்ல அட்டகாசமான வழிகள் ." 1. வெளியில் போய் நின்று கொண்டு பே...
- "நீதிக்கதை" சுமைதாங்கி மரம். ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்.காலையிலே அவருடைய த...
- சிரிக்க தெரியாதவனின் பகல் நேர வாழ்க்கையும் இருட்டாகத்தான் இருக்கும்..
Posted: 08 Nov 2014 09:30 AM PST |
Posted: 08 Nov 2014 09:15 AM PST நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. ! --------------------------------------------------------------------------- சென்னையின் ஜன நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி (sales girl) ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல்லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொதுகழிப்பறைகள் எதுவும் கிடையாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை. ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும்போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட்டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன்பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது ஆத்திரமாக விவரித்தார். அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத்தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமானகரமாக உணர்ந்திருப்பார். சென்னையில் ஜன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ? பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத்திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொதுகழிப்பறைகளை திறந்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? மேலோட்டமாக பார்த்தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க டாய்லெட்டை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மனநிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்னை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு டாய்லெட் அறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக சாக்குதான் இருக்கும். அதே மும்பையில் பணக்கொழுப்பெடுத்த அம்பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் டாய்லெட்டும். (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !) இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக்களுக்கு டாய்லெட் கட்டிக்கொடுங்கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்.. எப்போதாவது செல்லும் இறைவழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவசியமான கழிவறைகளுக்கு இடமில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்கமுமில்லை.. -கார்ட்டூனிஸ்ட்.பாலா Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 09:00 AM PST போட்டோவுல இருக்க இந்த இடம் சென்னை கலெக்டர் ஆபீஸுக்கும், கஸ்டம்ஸ் ஆபீஸுக்கும் இருக்கிற சந்து. 'சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம்' போஸ்டர எந்த கட்சி சார்பாக பார்த்தாலும் அந்தப்போராட்டம் இந்த சந்துலதான் நடக்கும். இந்த கஸ்டம்ஸ் பில்டிங்ல தான் என் 20 வருஷ அலுவலக வாழ்க்கையே ஓடிடுச்சி. எனக்கு தெரிஞ்சி எல்லா தமிழக அரசியல் தலைவர்களும் இங்க (அம்மா தவிர) போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினவங்க தான். நிற்க.... இந்த ரெண்டு பில்டிங் காம்பவுண்ட் ஓரமாகவும் சுமார் நாப்பது அம்பது குடும்பங்க இருக்கு. இவங்க சமையல், துணி துவைக்கறது, குளியல் எல்லாமே இந்த ரோட்டுல தான். இவங்க குடிசைகளோட கூரை அரசியல் கட்சி வைக்கிற பேனர்ங்க தான். சிலர் அரசியல் கட்சிகளுக்கு ஆள் பற்றாக்குறை வந்த இவங்கத்தான் திடீர் உறுபினர்கள் ஆயிடுவாங்க. வந்தது வெச்சி வெந்தத தின்னு சதா சண்டை, நா கூசும் வார்த்தை பிரயோகம்ன்னுவாழுற இந்த மக்களோட வாழ்க்கை சிலசமயம் கோபப்பட வெச்சாலும் , யோசிச்சு பார்த்தால் வெறும் பரிதாபம் மட்டுமே மிஞ்சும். ஆண்டாண்டு காலமா எல்லா அரசியல் கட்சி பார்வையில இவங்க இருந்தாலும் , இவங்களோட பரிதாபமான வாழ்க்கைக்கு மாற்று தர எந்த அரசியல் கட்சியும் முன்வரல என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை..... - சுகன் என்கிற சுகுணசீலன் Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 08:50 AM PST ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தாஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக. போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ? மங்கு : சார் மரியாதையா கேளுங்க ? போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ? மங்கு : லைசென்ஸ் இந்தாங்க போலிசு : ஆர்சி புக் எங்க சார் ? மங்கு : ஆர்சி புக் இந்தாங்க போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ? மங்கு : இன்சூரன்ஸ் இந்தாங்க போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ? மங்கு : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன் சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ? மங்கு : பைக் ஆபிசுல இருக்கு சார் சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு !!!!!!! மங்கு : @#@$!@$!$#!$ (எப்படித்தான் நம்மள கரக்ட்டா கண்டு புடிக்கிறாங்களோ ??? அவ்வ்வ்வவ்வ்வ்வ் ) :P :P - மங்குனி அமைச்சர் Relaxplzz |
Posted: 08 Nov 2014 08:43 AM PST 1 ரூபாயில் உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தலாம். விபத்து மற்றும் தீயினால் நம் உடலில் ஏற்பட்ட காயங்களை, கண்களுக்கு இடும் டீயுப் ஆயில்மெண்ட் (eye ointment) மருந்து கடையில் ₹1க்கு வாங்கி காயத்திற்கு ஏற்ப இரண்டு மூன்று முறை காயம் உள்ள இடத்தில் மருந்தை தேய்த்தால் போதும் ![]() "வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS" |
Posted: 08 Nov 2014 08:30 AM PST |
Posted: 08 Nov 2014 08:15 AM PST ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான். அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்"உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை" மனைவி கேட்டாள்"என்ன மிக ரொமாண்டிக் மூட் போல! நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?" கனவன் சொன்னான்"நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!" :P :P Relaxplzz |
Posted: 08 Nov 2014 08:11 AM PST இந்த வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே!கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாதா? இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?யாராவது வயதான கிழவன்கிட்ட கேளுங்க. இந்த பதிலைச் சொல்லும் போது பெர்னாட்ஷாவுக்கு வயது 90. வயது என்பது உடலுக்குத்தானே ஒழிய மனதுக்கல்ல,அதன் சிந்தனைக்கல்ல. Relaxplzz ![]() "இவர்கள் சொன்னவை" |
Posted: 08 Nov 2014 07:50 AM PST நண்பர் அய்யனார் என்னிடம் சொன்னது. " சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஒரு வயதான பாட்டி காசு வேண்டிக் கொண்டு வந்தார்.. அவரிடம் இரண்டு ரூபாய் கொடுத்தேன் . வாங்கிக் கொண்டு நகர்ந்த அவர் பின் சில மணித்துளிகளில் திரும்பி வந்தார். ஒருமாதிரி பார்த்தவர் " தண்ணீர் கிடைக்குமா ? " என்றார். கொடுத்தேன். நான் ஜன்னலோரம் , என் பக்கத்தில் ஒருவர் என்று மூன்று பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அந்த பாட்டிக்கு இடம் விடலாம் என்று அவரை கொஞ்சம் தள்ளி வாங்க என்று சொன்னேன். அவரோ என்னை ஒரு மாதிரி பார்த்து இடம் கொடுத்தார். அந்த பாட்டி தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்க அவரின் கை என்னிடம் நீளும்போதெல்லாம் இவர் தவியாய் தவிக்க ஆரம்பித்து விட்டார் . அந்த பாட்டி தொட்டு விடுமோ என்று அருவெறுப்பின் காரணமாக.இதை கவனித்த நான் அவரை ஜன்னலோரம் வரச் சொல்லி அந்த பாட்டிக்கு அருகில் அமர்ந்து கதை கேட்கத் தொடங்கினேன். அவர் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு என்று சொல்ல தோசை வாங்கித் தந்தேன். தோசை வாங்கும்போது சிறிய அளவு சட்னி கீழே கொட்டியது . அங்கிருந்த செருப்பில் கொஞ்சம் படிந்தது. உடனே பக்கத்து சீட்டு நபர் எழுந்து முன் இருக்கைக்கு செருப்பை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். இப்போது அவன் ***** அறுத்து விட வேண்டும் என்று ஆத்திரம் தோன்றியது. இருந்தாலும் 90 வயதான அந்தப் பாட்டி தனது கதையை சொல்ல சொல்ல மிகவும் வருத்தமாக கேட்கத் தொடங்கினேன். காசு வேண்டுபவர் என்றால் கேவலமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கீழ் நடுத்தர வர்க்க மனிதரான இவருக்கும் தோன்றியது வருத்தத்தைத் தந்தது. இருந்த போதிலும் அந்த நபரின் **** யை நசுக்காமல் சென்றால் அது மாபெரும் தவறு என்று உணர்ந்து அவரிடம் காதருகில் " அந்த பெரியவங்களை நம்மைப் பெத்த அம்மா, ஆயா மாதிரி நினைச்சுக்கோங்க. அருவெறுப்பாக நகர்ந்து அவமானப்படுத்தீங்க. நாளைக்கு உங்களுக்கு வயசான அப்படி செய்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும் ? இனிமே அப்படி செய்யாதீங்க . " என்று சொல்லி நகர்ந்தேன். அவர் முகத்தில் ஈ ஹிப் ஹாப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது " . என்று முடித்தார். நான் " சூப்பர் நண்பா " என்று சொல்லி நகர்ந்தேன். - சாத்தப்பன் நா Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 07:40 AM PST சமைக்கத் தெரியாதுன்னு சொல்ற மார்டன் கேர்ல்ஸ் யாராச்சும் அழுகத் தெரியாதுன்னு சொல்றிங்களா... எம்புட்டு மார்டன் ஆனாலும் இந்த அழுகையை மட்டும் விட மாட்டேங்கிறிங்களேம்மா... #ஏம்மா_இப்படி_பண்றிங்களேம்மா - சதீஷ் குமார் தேவகோட்டை |
Posted: 08 Nov 2014 07:30 AM PST |
Posted: 08 Nov 2014 07:15 AM PST ஆண்கள் பாவம்தான்... தோசைக்கு அரைத்திருப்பாள் ஆனால் சப்பாத்தி சுடுவாள் - கேட்டால் மருமகளுக்கு பிடிக்கும் என்பாள்... மருமகளை பிடிக்காவிட்டால் அவளையே கேட்டுக்கு வெளியே நிறுத்திவிடுவாள்... உங்க தங்கச்சிக்கு வரன் பார்த்து கட்டி வச்சது போதாதா அவ பெண்ணுக்குமா என்பாள் 'அண்ணி' என்ற அன்பு குரலில் அவளுக்கு நம்மளை விட்டா யாரு என்று இவளே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாள்... தங்கம் விக்கிற விலைக்கு இனி தங்கமே வாங்க மாட்டேன் இருப்பதே போதுமென்பாள் மறுநாளே டிவியில் பார்த்த தள்ளுபடிக்காக ஒரு காது தோடாவது எடுத்து வருவாள் 'மூட்டுவலி யார் காதில் விழுது' என்பாள் டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வந்தால் 'நேத்துதானே எண்ணெய் போட்டேன் ஒன்னையும் கவனிக்கிறதில்லை' என்பாள் ஆண்கள் பாவம்தான்... தனக்குத்தானே அவள் பேசிக்கொள்வதை எல்லாம் தன்னிடம்தான் சொல்கிறாள் போல என்றெண்ணி அவளை அசத்த முயற்சி செய்ய, அவளோ அவ மனசில என்ன நினைக்கிறாளோ அதை மட்டுமே அவன் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவாள் என்பது இவர்களுக்கு தெரியவா போகிறது.... உண்மையிலேயே ஆண்கள் பாவம்தான்.... -- நன்றி Ahila Puhal Relaxplzz |
Posted: 08 Nov 2014 07:00 AM PST புகை பழக்கத்தை விட வேண்டுமா..?? உலர் திராட்சையின் மகிமை தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் . மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி... Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 06:45 AM PST |
Posted: 08 Nov 2014 06:30 AM PST |
Posted: 08 Nov 2014 06:15 AM PST ஆசிரியர்கள் என் தெய்வங்கள்" ---------------------------------------------------------------------- நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே! என் தெய்வமே!! கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே! என் தெய்வமே!! 'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா காலேஜை விட்டே வெளிய போய் டீ கடைல இருப்போமே தெய்வமே! என் தெய்வமே!! உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே! என் தெய்வமே!! எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே! என் தெய்வமே!! இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே!என் தெய்வமே!! நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா தெய்வமே! யோசி என் தெய்வமே! Relaxplzz |
Posted: 08 Nov 2014 06:00 AM PST # மகளெனும் தேவதை # என் மகள் டீச்சராக மாறியபோது மாணவர்களாக வேடமிட்டன பொம்மைகள்! டாக்டராக மாறியபோது நோயாளிகளாகி வைத்தியம் பார்த்தன! அம்மாவாக மாறியபோது குழந்தைகளாகி சொன்ன பேச்சு கேட்டன! விளையாடிய களைப்பில் தூங்கி விட்டாள் மகள்! சுற்றிலும் விழித்தபடி பொம்மைகள்... அடுத்து என்னவாக ஆவதெனத் தெரியாமல்! ♥ - Gauthaman DS Karisalkulaththaan. ![]() |
Posted: 08 Nov 2014 05:45 AM PST |
Posted: 08 Nov 2014 05:30 AM PST |
Posted: 08 Nov 2014 05:15 AM PST ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து.... - உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா. - உலகின் மிகவும் ஏளனப்படுத்தப்பட்ட கணவன் தன் சகோதரன். - உலகின் மிக அழகான மனிதன் தன் மகன். - உலக அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் தனது சகோதரியின் கணவர். - உலகின் மிக நன்றியுள்ள மனிதன் தன் மருமகன். - மேலும் உலகின் மோசமான நடத்தை கொண்ட , மிகவும் மோசமான சுயநலவாதி, இதயமற்ற, மொத்தமும் முட்டாள்தனமான மனிதன் அவளுடைய கணவன்.. Relaxplzz |
Posted: 08 Nov 2014 05:00 AM PST ஒரு மரத்தின் நிழலில் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தவன் அந்த மரக்கிளையை கூட உடைக்க மாட்டான். நாளைய தினம் ஞாயிற்று கிழமை தானே,உங்கள் தோட்டத்திலோ அல்லது தோட்டம் இல்லாதவர்கள்,மரம் நட ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து அந்த இடத்திலோ ஒரு அழகன செடியை நடுங்கள். செடி நடுவது என்றால் க்ரோட்டன்ஸ் அல்லது மனி ப்ளாண்ட் நடாதீர்கள்.பசுமையாக வளரக்கூடிய பெரிய மரச் செடியாக வையுங்கள். நீங்கள் அந்த செடிக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து நாளை ப்ரொபைல் பிக்ச்சராக வையுங்கள். வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! நாளை ஒரு நாளில் நம் முகநூல் சொந்தங்கள் மூலம் எத்தனை செடிகள் நடப்பட்டு நாட்டுக்கு பயன் அளிக்கப் போகிறது என்று பார்ப்போம்.இது மழை காலம் என்பதால் இந்த சீசனில் செடி நடுவது நல்லது.செடி நட்டு,புகைப்படம் எடுத்து முகநூலில் போடுவதோடு நிறுத்திவிடக் கூடாது.அந்த செடியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். முடிந்தவரை இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்,நீங்களும் உங்கள் டைம்லைனில் பதிவிடுங்கள். - Ilayaraja Dentist. Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 04:45 AM PST மதுரைன்னு சொன்னாலே மல்லிகை , தமிழ் , இலக்கணம் , அருவாள் முதல்கொண்டு நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லைங்களா. அந்த வகையில் சிலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும் மதுரைக்கு உண்டு. தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக பேருந்து ஓடியது நம்ம மதுரையில் தான், 1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியது. Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 04:30 AM PST |
Posted: 08 Nov 2014 04:15 AM PST புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன். ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன். "என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன். :P :P Relaxplzz |
Posted: 08 Nov 2014 04:00 AM PST எதிர்பார்புகள் நிறைந்த வீடு... பல சலனப் பார்வைக்கு மத்தியில், உன்னை எனக்காய் என் குடும்பம் கண்டெடுத்த நாள் அது.. எனக்கு முகவரி கொடுத்த தந்தையின் முதல் எழுத்தும் மாற்றியாகிவிட்டது, என் தந்தையின் இடத்தில் உன்னை சுமந்து எதிர்பார்ப்புகள் நிறைந்த நான் வாழ்ந்த வீட்டில் இருந்து வாழப் போகும் வீட்டுக்கு வந்த கணம் அது.. சுமக்க முடிய மனச்சுமை என்னை பயமுறுத்த, புதிதாய் கிடைத்த சொந்தகளின் சிரிப்பும் அன்னியமாய்த் தெரிய, ஆறுதல் என்னவோ ஆழப் பொதிந்திருந்த உன் மீதான நம்பிக்கை மட்டும் தான். உயிர் கொடுத்த உறவில் தொடங்கி, அடித்து விளையாடும் என் உடன்பிறந்தவரில் இருந்து , விரும்பிக் குடித்த தேநீர் குவளை, அணைத்துறங்கும் என் செல்ல பொம்மையென, அனைவரையும் நீ சூடிய ஒற்றை கயறோடு பிரிந்து வந்தாகிற்று... உன் பிரமாண்டம் என்னை பயமுறுத்த, அம்மாவின் இடத்தில் அத்தையும், அப்பாவின் இடத்தில் மாமாவையும், தம்பியின் இடத்தில் கொழுந்தனையும், தங்கையின் இடத்தில் நாத்தனாரையும், என் இஷ்ட தெய்வத்தின் இடத்தில் உன் குலதெய்வத்தையும், வைக்கையில் உணர்ந்தேன் ஆணாய் பிறந்திருக்கலாம் என்று.. வேரோடு பிடிங்கிய மரமாய் நான் நிற்க, மரத்தாலான ஜன்னலும், கதவும், உன் வீட்டின் பிரமாண்ட வரவேற்பறையும், இனி என் கனவுகளின் கூடாரம் இது என்று விமர்சிக்க, எதார்த்தங்களின் வாசிகியாய் என் முதல் அடியை வைக்கின்றேன். விமர்சனங்கள் நிறைந்த வீடு என்னை வரவேற்க காத்திருக்க, என் கனவுக்கு உயிர் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் முதல் அடியை வைக்கின்றேன்.. - ரேவா பக்கங்கள் ![]() |
Posted: 08 Nov 2014 03:45 AM PST |
Posted: 08 Nov 2014 03:30 AM PST |
Posted: 08 Nov 2014 03:15 AM PST "ஆபீசில் நேரத்தை கொல்ல அட்டகாசமான வழிகள் ." 1. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம். 2.. உங்கள் எதிரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம். 3. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம்மிச்சம். 4. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது. 5.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம். 6.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார். 7 கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம். 8.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம். 9. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம். 10.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.) 11.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம். 12.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும். 13. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம். 14. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம். 15. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 16. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம். 17. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம். 18.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும். 19.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும். . 20.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம். 21. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம். 22..உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம். Relaxplzz |
Posted: 08 Nov 2014 03:00 AM PST "நீதிக்கதை" சுமைதாங்கி மரம். ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்.காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் ரிப்பேராகி நின்றது. அதை தள்ளிக்கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுதுபார்த்து ,ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார்.முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதணையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது.காயத்துக்கு துணியால் கட்டு போடுகொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக்கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.முதலாளியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப தயாரானார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.இருட்டி போய் விட்டது இனி உன் வண்டியை ரிப்பேர் பண்ணி எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னதும் முதலாளியுடன் கிளம்பினார். போகும்வழியில் பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு சோதனையாகவே நடந்துகிட்டு இருக்கு என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே கூட்டிகிட்டு போனார். தச்சர் வீடு வந்ததும் யோவ்! தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயா என்று முதலாளி சொன்னார்.வீட்டுக்குள்ள வாங்க முதலாளி என்று அவரை உள்ளே அழைத்தார்,முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்துவிட்டு உள்ளே சென்றார்.முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது,குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்திவிட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.காலையில் நடந்த எந்த பிரிச்சணையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்கமுடிகிறது என்று முதலாளி வியந்தார்.தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிகொண்டு இருந்தார்.தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்ப தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம் கேட்டார் இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்றார்.அதுவா முதலாளி இது என்னுடைய சுமைதாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தை தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு தான் செல்வேன்.வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும் அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது காலையில் வண்டி பழுதானதற்கும் நான் லேட்டாக வந்ததற்கும்,என் கையில் காயம் ஆனதற்கும்,உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்.நான் அவர்கள் மேல் கோவப்படுவது எந்த விதத்தில் நியாயம். காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்து கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்.தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார். நண்பர்களே நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்... Relaxplzz ![]() |
Posted: 08 Nov 2014 02:45 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment