Thursday, 13 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எல்லா அரசியல்வாதிகளும் கிராமங்கள தத்து எடுத்துக்குற மாதிரி... . . . நானும்... பக...

Posted: 13 Nov 2014 09:48 PM PST

எல்லா அரசியல்வாதிகளும் கிராமங்கள
தத்து எடுத்துக்குற
மாதிரி...
.
.
.
நானும்... பக்கத்து வீட்டுக்காரனோட
ரெண்டு செண்டு... பிளாட்ட
தத்து.. எடுத்துக்கலாம்னு பாக்குறேன்
ஒத்துக்க மாட்டுறான்...

@ரிட்டயர்டு ரவுடி

நடிகர்களை விட திருட்டு விசிடி விற்பவர்களே வசதியாக வாழ்கிறார்கள். - விஷால் # அப்...

Posted: 13 Nov 2014 08:37 PM PST

நடிகர்களை விட
திருட்டு விசிடி விற்பவர்களே வசதியாக
வாழ்கிறார்கள்.
- விஷால்

# அப்றம் ஏன்
ராசா படத்துல
நடிச்சு கஷ்டப்பட்ற?
திருட்டு விசிடி வித்து வசதியா வாழ
வேண்டியதுதான?

அழகு தமிழ்நாடு! நாகர்கோயில்!

Posted: 13 Nov 2014 08:53 AM PST

அழகு தமிழ்நாடு! நாகர்கோயில்!


(இன்று காலை தெருவில் இரு சிறுவர்கள் பேசிக் கொண்டு சென்றது!) டேய்! நேத்து செம மழ...

Posted: 13 Nov 2014 08:32 AM PST

(இன்று காலை தெருவில்
இரு சிறுவர்கள் பேசிக்
கொண்டு சென்றது!)

டேய்! நேத்து செம
மழைடா! நம்ம boys high
school ground பூரா குளம்
போல
தண்ணி தேங்கி நிற்குது!

>> ஒரு காலத்தில்
குளந்தான்குளம் என்ற
குளம் சுருங்கி,
வறண்டு,
ஆக்கிரமிக்கப்பட்டு பின்
காணாமல் போன
இடத்தை ஒட்டித் தான்,
இன்று அந்த
groundடே இருக்கு என்ற
வரலாறு அவர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை!

இயற்கை சுழற்சி!

@எழிலன்

உலகத் தலைவர்களெல்லாம் எந்த பக்கம் பார்த்து நிக்கிறாங்க?.நம ்மாளு மட்டும் வித்திய...

Posted: 13 Nov 2014 08:21 AM PST

உலகத் தலைவர்களெல்லாம்
எந்த பக்கம்
பார்த்து நிக்கிறாங்க?.நம
்மாளு மட்டும்
வித்தியாசமா போஸ்
கொடுக்கிறாரு பாருங்க.
விளம்பர விஷயத்துல நம்ம
ஆள அடிச்சிக்க
ஓரமா நிற்கும்
ஒபாமாவாலகூட
முடியாது.


தலைக்கொரு கிரீடம் எனக்கெதற்கு தலையே கிரீடம் தானெனக்கு. கேட்டதில் ரசித்தது.

Posted: 13 Nov 2014 07:47 AM PST

தலைக்கொரு கிரீடம்
எனக்கெதற்கு
தலையே கிரீடம்
தானெனக்கு.

கேட்டதில் ரசித்தது.

ஆண்கள் அநியாயத்துக்கு வெட்கப்படுவது சண்டை போட்டவனோடு ஒன்னு கூடும்போது தான் @விவ...

Posted: 13 Nov 2014 07:44 AM PST

ஆண்கள்
அநியாயத்துக்கு வெட்கப்படுவது சண்டை போட்டவனோடு ஒன்னு கூடும்போது தான்

@விவிகா சுரேஷ்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மா உலக சாதனை. ஆகவே, தமிழக மீனவர்கள் ய...

Posted: 13 Nov 2014 07:37 AM PST

இலங்கைக்கு எதிரான
கிரிக்கெட்டில் ரோகித்
ஷர்மா உலக
சாதனை. ஆகவே, தமிழக
மீனவர்கள் யாரும்
கடலுக்கு செல்ல
வேண்டாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளிரும் தாய்மையடைவது தவிர்க்கப்படும் வரை மனிதனை விலங்குகள்...

Posted: 13 Nov 2014 07:30 AM PST

மனநலம் பாதிக்கப்பட்ட
மகளிரும்
தாய்மையடைவது தவிர்க்கப்படும்
வரை மனிதனை விலங்குகள்
பட்டியலிலேயே வைத்திருப்போம்.

விலங்குகள்
தடை சொல்லாதவரை..!!

@காளிமுத்து

கும்பலா குட்டி செவுத்து மேல ஏறி ஒக்காந்துட்டு கதையடிச்ச சந்தோஷம், எந்த Whatsapp...

Posted: 13 Nov 2014 07:28 AM PST

கும்பலா குட்டி செவுத்து மேல
ஏறி ஒக்காந்துட்டு கதையடிச்ச
சந்தோஷம், எந்த Whatsapp
Group-ம், Facebook-ம்,
தருவதில்லை.!!

@காளிமுத்து

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!' எனது நண்பரி...

Posted: 13 Nov 2014 02:54 AM PST

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக 'ரோலர்கோஸ்டர்' போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

"வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை 'கல்கண்டு' என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

'கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?'- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி' பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் 'கேம்பர்' (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று 'நச்சுத் தடுப்பு' துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.

அதற்காக 'சலைன்' (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த 'டிப்ரெஷன் மோடு'க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் 'டாலஸ் மெடிக்கல் சென்டரின்' குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது "அப்பா!" – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!"

கேட்டீர்களா... விபரீதத்தை?

அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.


பழந்தமிழரின் போர்க்கருவிகள் நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், க...

Posted: 13 Nov 2014 01:17 AM PST

பழந்தமிழரின் போர்க்கருவிகள்

நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள்போன்றவையே நினைவுக்கு வரும். பழைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு "கட்டாரி'என்ற போர்க்கருவியையும் கூடுதலாக தெரிந்திருக்கலாம். அதையும் நாம் நேரில்பார்த்தவர்கள் கிடையாது. ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பலஇருந்திருக்கின்றன.

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க் கருவிகளைபயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகஅமைந்துள்ளது.

பழந்தமிழரின் போர்க்கருவிகள்:-

1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6)தூண்டில் 7) ஆண்டலையடுப்பு 8) கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர்ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம் 20) சதக்களி 21)தள்ளிவெட்டி22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி 25) புலிப்பொறி 26)குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி 30) குருவித்தலை 31)பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை 35) சிறுசவளம் 36) பெருஞ்சவளம் 37)தாமணி 38) முசுண்டி 39) முசலம்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும். அவர்களின் போர்முறை வஞ்சகம்,சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது. காலை முரசறையத்தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின்போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்கவாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டுதமிழர்கள் போர் செய்துள்ளனர். அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவேபிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பதுகொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது.முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்கஎடுத்துக்காட்டாகும். எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம்வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடுகடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75). அஃறிணை உயிர்களுக்கு இரங்கும்மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது.

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள்உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப்பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில்குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலானதொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்துவரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பலசான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன


0 comments:

Post a Comment