Wednesday, 30 July 2014

Relax Please: FB page daily Posts (30/07/2014)

Relax Please: FB page daily Posts

Posted: 30 Jul 2014 09:15 AM PDT
நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

"இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!" என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

"அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?"

"சிறையிலே இருந்தேன்!"

"ஏன்?"

"போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!"

"உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!"

"அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்."

"அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?"

"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!" (y)

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

குழந்தைகள்,வீடு வரைந்தால் பக்கத்திலே ஒரு மரத்தையும் வரையறாங்க, ஆனா பெரியவனாகி வீ...
Posted: 30 Jul 2014 09:11 AM PDT
குழந்தைகள்,வீடு வரைந்தால் பக்கத்திலே ஒரு மரத்தையும் வரையறாங்க, ஆனா பெரியவனாகி வீடு கட்டும் போது,மரம் வைக்க மறந்துடுறாங்க...

- Ilayaraja Dentist.



"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 1
:)
Posted: 30 Jul 2014 08:59 AM PDT
:)


"தத்துவம்ஸ்" - 1
மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா? நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்த...
Posted: 30 Jul 2014 08:48 AM PDT
மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா?

நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து அவசர அவசரமாக புறப்படுகிறீர்கள்.

வாசற்படியிலோ அல்லது கீழே கிடக்கும் ஏதாவது பொருளிலோ இடித்துக்கொள்கிறீர்கள்.

இந்த நேரம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், "புறப்படும்போதே சகுனம் சரியில்ல. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ" என்பார்கள்.

"போயா இன்னும் அந்த காலத்திலியே இருக்க" என்று ஏளனம் செய்ய வேண்டாம்.

இதல் மூடநம்பிக்கை என எதுவுமே இல்லை.

நீங்கள் அவசரமாக புறப்படும் போதே நீங்கள் நிதானத்தில் இல்லை என தெளிவாகிறது.
நிதானத்தோடு புறப்பட்டு இருந்தால் இடித்து கொள்ள மாட்டீர்கள்தானே?

அப்படி நிதானம் இல்லாமல் செய்யப்போகும் காரியமும் வெற்றி பெறாது.அந்த நேரத்தில் நமது மூளையும் சரியாக சிந்திக்காது.

அதனால்தான் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்தால் மூளை அமைதி பெறும். பிறகு நம் சிந்தனையும் சரியான விதத்தில் செயல்படும்.

எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள்..


"தெரிந்து கொள்வோம்" - 2
பனிகட்டியில் செய்த அழகிய குதிரை
Posted: 30 Jul 2014 08:40 AM PDT
பனிகட்டியில் செய்த அழகிய குதிரை

:)
Posted: 30 Jul 2014 08:30 AM PDT
:)

ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளி...
Posted: 30 Jul 2014 08:19 AM PDT
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது.

அவரது சாதனைகளில் சில:

1. 43 படங்களில் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார், எந்த படத்திலும் இரண்டாம் கதாநாயகனாக நடித்து இல்லை.

2. ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நாயகன் (கரகட்டகரன் வெற்றிக்கு பிறகு) இவர் மட்டுமே.

3. 1989 முதல் 1992 வரை கால்ஷீட் full என மூன்று வருடத்திற்கு book செய்யப்பட்ட ஒரே ஹீரோ.

4. கமலை விட கௌதமியுடன் அதிகம் சேர்ந்து நடித்த ஹீரோ (6 படங்கள்).

5. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவரை எல்லோருக்கும் தெரியும்.

6. 1990 களில் 6.6% ரசிகர்களை பெற்று தமிழ்நாட்டில் 5ம் இடத்தில இருந்த ஹீரோ இவர்தான்.

7. ஒரு வருடம் தொடர்ந்து (இழுத்தடிக்காமல், இவரே ஓட்டாமல்) தானாக ஓடிய படத்தின் கதாநாயகன் (கரகாட்டக்காரன்)

8. இவரே சொந்தமாக 4 படத்தினை இயக்கியது யாருக்கும் தெரியாது.

9. ஒரு MP யாக மிகபெரிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கதை யாருக்கும் தெரியாது.

10. வாய்ப்பு இல்லாத நாட்களில் தனது உடையை iron பண்ண சென்ற மேனேஜரை பார்த்து கடைக்காரர், யார் என்று கூட தெரியாமல் "இது என்ன ராமராஜன் சட்டையா?" என்று கேட்டாராம். அந்த அளவுக்கு அவரது சட்டைகள் பிரபலம்.

11. இவரால் எந்த producerஉம் நஷ்டப்பட்டது கிடையாது.

Hari Kutty BA BL


"தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்க...
Posted: 30 Jul 2014 08:10 AM PDT
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"

வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"

வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"

வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
'
'
'
'
'
'
'
'
'
'
வாடிக்கையாளர்;"இது வேற ஒரு பத்தாயிரம் சார்"

:O :O
:)
Posted: 30 Jul 2014 08:02 AM PDT
:)


"சில யதார்த்தங்கள்" - 2
மனைவி கணவனிடம் சொன்னாள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று, அதற்கு கணவன் அவளை அணைத...
Posted: 30 Jul 2014 07:45 AM PDT
மனைவி கணவனிடம் சொன்னாள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று, அதற்கு கணவன் அவளை அணைத்து முத்தமிட்டபடியே சொன்னான் 'நாம் கர்பமாக இருக்கிறோம்' என்று சொல்...

உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில் பாதி, உன் கருவை என்னால் சுமக்கமுடியாது தான் ஆனால் கர்பத்தில் இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும் நான் இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...

இப்போது சொல் "நாம் கர்ப்பமாக இருக்கிறோம்" என்று...
இது தான் உண்மையான காதல்...! ♥

கர்ப்பமாக இருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..

:)
Posted: 30 Jul 2014 07:30 AM PDT
:)

அருமையான ஐடியா..
Posted: 30 Jul 2014 07:00 AM PDT
அருமையான ஐடியா..

மனிதரை மதிக்க தெரிந்தவர் காமராஜர் காமராஜர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர். இந்த...
Posted: 30 Jul 2014 06:45 AM PDT
மனிதரை மதிக்க தெரிந்தவர் காமராஜர்

காமராஜர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர். இந்திய பாகிஸ்தான் போர் மூண்ட நேரம் எல்லையோரத்தில் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் காமராசர் ஒருமுறை கலந்து கொண்டார்.

அப்போது ஓர் ராணுவ வீரர் தமிழில் அய்யா வணக்கம் என்று கூறினார். தமிழ்க்குரலை கேட்டதும் காமராஜர் உருகிப்போனார். அவரை தனியே அழைத்து கனிவாகப் பேசினார். தைரியமூட்டினார்.

உங்கள் ஊர், முகவரி, குடும்பத்தார் விவரங்களைச் சொல்லுங்கள் நான் தமிழ் நாட்டுக்கு போனதும் அவர்களை சந்தித்து தைரியம் சொல்கிறேன் என்று அவர் கூறியதும் அந்த ராணுவ வீரர் மெய்சிலிர்த்துப்போனார்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வைகூட மதித்து கவுரவிக்க நினைக்கும் அந்த மாமனிதரை மீண்டும் கைகூப்பி வணங்கினார் அந்த வீரர்.


"காமராஜர் ஒரு சகாப்தம்"
அப்பாவும் பையனும் 1964 : டேய் ..பொண்ணு பார்த்துட்டோம்..அடுத்த மாசம் உனக்கு கல்ய...
Posted: 30 Jul 2014 06:16 AM PDT
அப்பாவும் பையனும்

1964 : டேய் ..பொண்ணு பார்த்துட்டோம்..அடுத்த மாசம் உனக்கு கல்யாணம்..ஆமாம்

1974 : டேய் மகனே ..காதலிச்சாலும் ,நம்ம சாதி ,குலத்துல ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுடா..போதும்

1984 : டேய் மகனே ..நம்ம சாதி இல்லாட்டியும் நம்ம மதத்துல ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுடா..போதும்..

1994 : டேய் மகனே ..நம்ம சாதி மதம் இல்லாட்டியும் நம்ம சோசியல் ஸ்டேடஸ்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுடா..போதும்.

2004 : டேய் மகனே .சாதி மதம் ஸ்டேட்ஸ் இதெல்லாம் கூட வேணாம் டா நம்ம நாட்டு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுடா.. போதும்

2014 : டேய் மகனே எதுவுமே வேணாம்...ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுடா..ப்லீஸ்ஸ்ஸ்ஸ்

#டிஸ்கி : இது பெண்களுக்கும் ஆப்(பு)ளிக்கபில்..

via Chelli Sreenivasan
Photo Aa Photography.


குசும்பு... 2
தைரியமங்கை அனிதா..! கடினமான வேலைகளை பெண்களால் பார்க்க முடியாது என்ற கற்பிதத்தைத...
Posted: 30 Jul 2014 05:50 AM PDT
தைரியமங்கை அனிதா..!

கடினமான வேலைகளை பெண்களால் பார்க்க முடியாது என்ற கற்பிதத்தைத் தகர்த்திருக்கிறார் அனிதா.

பார்த்தாலே நெஞ்சம் தடதடக்கச் செய்யும் ரயிலை தனியொரு மனுஷியாக இயக்கப் போகிறார். பழங்குடி சமூகத்தில் பிறந்து பெண் சமூகத்துக்கே முன்மாதிரியாக வளர்ந்திருக்கிற இவர் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர்.

இப்போது அனிதா, உதவி லோகோ பைலட். இன்னும் சில மாதங்களில் லோகோ பைலட் ஆகிவிடுவார். அப்பா ராஜேந்திரன் ரயில்வேயில் சிக்னல் ஃபிட்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா ஜெயலட்சுமி மெக்கானிக்கல் ஃபிட்டராக இருக்கிறார். கணவர் சரவணக்குமாரும் ரயில்வே ஊழியர்தான்.

நாகர்கோவில்-கொச்சுவேலி பயணிகள் ரயிலில் பணியாற்றும் அனிதா, இந்த சவாலான பணியை எட்டிப் பிடித்தது எப்படி? ''எங்க அம்மா எந்தப் பிரச்னை வந்தாலும் மனம் தளராம தைரியமா எதிர்கொள்வாங்க. அப்பாவும் நல்ல கான்ஃபிடண்ட் உள்ளவர். நான்தான் மூத்தவ. தங்கை போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்றா. தம்பி டிப்ளமோ படிக்கிறான்.

தொடக்கத்துல என் ஆர்வமெல்லாம் கம்யூனிகேஷன் லைன்லதான். அதனால பாலிடெக்னிக்ல அதையே படிச்சேன். படிப்பு முடியுறதுக்கு முன்னாடியே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. கணவர் சரவணக்குமார். அவங்க அப்பாவும் ரயில்வேலதான் வேலை செஞ்சார். திருமணத்துக்குப் பிறகு, குடும்பத்துல ஐக்கியமாகிட்டேன். 8 வருஷம் வீட்டுலதான். இரண்டு குழந்தைகள். மூத்த பொண்ணு லாபரண்யா, பையன் ஸ்ரீசபரிநாதன்.

'திருமணமான பெண்ணின் வாழ்க்கை குடும்பம்கிற வட்டத்துக்குள்ளயே முடங்கிடும்'னு எல்லாரும் நம்புறாங்க. என்னோட வாழ்க்கை அப்படி ஆகலே... கணவர் என்னை சுயத்தோட செயல்பட அனுமதிச்சார். சுதந்திரமான சிந்தனையை அவர் எப்பவும் தடுக்க மாட்டார். அப்போ அவர் ஆட்டோ வச்சு ஓட்டிக்கிட்டிருந்தார். கொஞ்சம் சிரமமான நேரம்தான். அப்பாவுக்கு எங்களப் பத்தி கவலை அதிகம். எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தா கஷ்டம் தீரும்னு நினைச்சார்.

அதனால ரயில்வே தேர்வுகள் எது வந்தாலும் எழுதச்சொல்லி வற்புறுத்துவார். இதுக்கிடையில கணவருக்கு ரயில்வே வேலை கிடைச்சுச்சு. குடும்பத்தோட மதுரை வந்தோம். ரயில்வே தேர்வு நாலைஞ்சு பிரிவுல நடக்கும். டிக்கெட் கலெக்டர், அசிஸ்டெண்ட் லோகோ பைலட், அசிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவுக்கு 'குரூப் சி' எழுதணும். அப்பா என்னை லோகோ பைலட் தேர்வு செய்யச் சொன்னார். பொதுவா பெண்கள் அதை தேர்வு செய்ய மாட்டாங்க. வேலையின் தன்மை அப்படி.

தேர்வு எழுதுற வரை லோகோ பைலட்னா என்ன, வேலை எப்படி இருக்கும்னு எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா, அப்பா ரொம்பவே உற்சாகப்படுத்தினார். ஆர்வமா படிச்சேன். முதல்கட்டமா 500 பேர் தேர்வு செய்யப்பட்டோம். அதுல 85 பேர் மட்டும்தான் ஃபைனல். அதுல என் பெயரும் இருந்துச்சு! இதெல்லாம் பொண்ணுங்களுக்குச் சரியா வராதுன்னு பலரும் பயமுறுத்தினாங்க. இதை தேர்ந்தெடுத்த சில பெண்களும் வேறு பிரிவுக்கு மாற்றல் வாங்கிட்டுப் போயிட்டாங்க.

தொடக்கத்துல நானும் போயிடலாமான்னுதான் நினைச்சேன். அந்தத் தருணத்துல அம்மாதான் என் கண் முன்னாடி வந்தாங்க. ஒரு விஷயத்துல முயற்சி பண்ணிப் பாக்கிறதுக்கு முன்னாடி என்னால முடியாதுன்னு சொல்லிட்டு ஒதுங்குற மாதிரி கோழைத்தனம் வேறெதுவும் இல்லைன்னு அம்மா சொல்வாங்க. தைரியத்தோட டிரெயினிங் போனேன். வேலை ரொம்பவே பிடிச்சுப் போச்சு!
'லோகோ'ன்னா இன்ஜின். லோகோ பைலட் ரயிலை ஓட்டறவர். பைலட்டுக்கு பல வகைகள்ல உதவி செய்றவர் 'உதவி லோகோ பைலட்'.

லோகோ பைலட் வேலை சாதாரணமில்லை. பல நூறு பயணிகளோட பாதுகாப்பு நம்ம கண்ணுலயும் கையிலயும் இருக்கு. அதிகபட்ச பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் இருக்கணும். சிக்னல்களை கண் கொட்டாம பார்க்கணும். ரயில்வே நிர்வாகம் கொடுக்கிற அதிகபட்ச பயிற்சியில இந்த பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் தானாகவே வந்திடும். உதவி லோகோ பைலட்டுக்கும் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கு. பைலட் வர்றதுக்கு முன்னாடியே லோகோவை சார்ஜ் எடுக்கணும்.

முதல்ல பிரேக் அப்ளிகேஷன் சரியா இருக்கான்னு செக் பண்ணணும். டிராக் செக் பண்ணணும். கோச்சையும் லோகோவையும் இணைக்கிற கப்ளிங் சரியா இருக்கான்னு பார்க்கணும். ஆயில் லெவல் செக் பண்ணணும். பேக் லைட், ஃப்ரண்ட் லைட் எரியுதான்னு பார்க்கணும். ரயில் கிளம்பின பிறகு, சிக்னலை ஃபாலோ பண்ணி டிரைவருக்குச் சொல்லிக்கிட்டே வரணும். ஒரு நொடி கூட அசர முடியாது... - பணிச்சூழலின் கடுமையை விவரிக்கிறார் அனிதா.

முதலில் சரக்கு ரயிலில் பணியாற்றிய அனிதா இப்போது பயணிகள் ரயிலுக்கு மாறி இருக்கிறார். ''நாகர்கோவில் - கொச்சுவேலி தடத்துல 12 ஸ்டாப் இருக்கு. ரயில் நுழையும்போது ஸ்டேஷன்ல இருந்து காஷன் ஆர்டர் வரும். எந்த ட்ராக்ல போகணும்னு சிக்னல் தருவாங்க. 'கிரீன்' போட்டா ரன் த்ரூ... வர்ற லைன்ல அப்படியே போகலாம். 'யெல்லோ' போட்டா, உள்ளே ஒரு ரயிலை வாங்கி வச்சிருக்காங்கன்னு அர்த்தம். ஸ்லோவாகி லூப் லைன்ல மாறணும்.

'ரெட்' போட்டா சிக்னலுக்கு 2 மீட்டர் முன்னாடியே உடனடியா நின்னுடணும். இதை ஃபாலோ பண்ணி பைலட்டுக்கு தகவல் சொல்லணும். ஸ்டாப்ல பயணிகள் இறங்கிட்டாங்களான்னு கவனிக்கணும். கடைசிப் பெட்டியில இருந்து கார்டு ரைட் கொடுப்பார். அதைப் பாத்து டிரைவருக்கு இன்ஃபார்ம் பண்ணணும். பணி நேரம் முழுவதும் இப்படி இடைவிடாமல் வேலை இருக்கும். பாதுகாப்பு... பாதுகாப்பு... பாதுகாப்பு... இதுதான் ரயில்வே எங்களுக்குக் கத்துத் தந்த முதன்மை பாடம்.. என்கிறார் அனிதா.

'' என் பெற்றோர் என்னை உருவாக்கின மாதிரி என் பிள்ளைகளை நான் உருவாக்குவேன். எனக்கு தன்னம்பிக்கை தந்து, தைரியம் தந்து பின்புலமா இருந்து உற்சாகமா செயல்படத் தூண்டுறது கணவர்தான். அவருக்குத்தான் உரியது இந்த பெருமையெல்லாம்... என்று முடிக்கிறார் அனிதா. அனிதாவின் பயணம் சிகரத்தை எட்டட்டும்!

நன்றி குங்குமம் தோழி

:)
Posted: 30 Jul 2014 05:30 AM PDT
:)

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள். 1...
Posted: 30 Jul 2014 05:15 AM PDT
ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
பாட்டி உனக்கு நான் பெரியவனாகி என்ன செய்யட்டும்? "ஒண்ணும் வேண்டாண்டா கண்ணு.. உங...
Posted: 30 Jul 2014 05:00 AM PDT
பாட்டி உனக்கு நான் பெரியவனாகி என்ன செய்யட்டும்?

"ஒண்ணும் வேண்டாண்டா கண்ணு..
உங்க அம்மா அப்பாவை உன்னோட
நல்லபடியா பார்த்துக்கோ" என்றாள்
தெரு ஓர குடிசையில் தனியாய் இருந்த தாய்க்கிழவி..

- Vaduvur Rama

உக்காந்து யோசிப்பாய்களோ...?! ;-)
Posted: 30 Jul 2014 04:45 AM PDT
உக்காந்து யோசிப்பாய்களோ...?! ;-)

:)
Posted: 30 Jul 2014 04:30 AM PDT
:)

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல ம...
Posted: 30 Jul 2014 04:10 AM PDT
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்" ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!"

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் "தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?"

பையன் சொன்னான்"தங்கம்"

அவர் கேட்டார் "பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?"

பையன் சொன்னான்" தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் "இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ".

"நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…" அறிஞர் திகைத்தார்!

நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது ,ஆய்வில் தகவல்! தமிழகத்தின் பாரம...
Posted: 30 Jul 2014 03:50 AM PDT
இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது ,ஆய்வில் தகவல்!

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது; இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்கத்தை பிரதிபலிப்பதற்காக அல்ல; உணவில் குறிப்பாக காலை உணவில் நாம் சாப்பிடும் முறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கானதாகும்; உணவு தொடர்பாக நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வில் அதிகப்படியாக மக்கள் காலை உணவை தவிர்ப்பதும், உணவு சாப்பிட்டாலும் குறைந்த அளவு சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது; தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கோல்கட்டாவின் பாரம்பரிய காலை உணவில் மைதா அதிக சேர்க்கப்படுகிறது; இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்; மிகக் குறைந்த அளவே புரோட்டீன் சேர்க்கப்படுகிறது; நார்சத்து கிடையாது; டில்லி உணவில் எண்ணெய் மிகவும் அதிகம்; மும்பையில் முறையற்ற உணவு சாப்பிடப்படுகிறது; இங்குள்ளவர்கள் வெறும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள். இவ்வாறு மும்பை நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் 79 சதவீதம் மக்கள் போதிய சத்துக்கள் அற்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். டில்லியில் 76 சதவீதம் பேரும், கோல்கட்டாவில் 75 சதவீதம் பேரும் சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் பேர் மட்டுமே போதிய சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்களாம். மற்றவர்களை விட தென்னிந்திய கிராமப்புறங்களில் வாசிப்பவர்களின் உணவில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் ராகியை அதிகம் பயன்படுத்துவதால் அதில் வைட்டமின் பி, நார்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதாக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்துள்ளார். பிரபலமான இட்லி, சாம்பார் தான் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய முழுமையான உணவு எனவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு உணவில் முழுமையான சத்துக்களை அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்பு சரிவிகித அளவில் சேர்க்கப்படுவதால் சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால் சென்னையில் காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகவும் குறைவு. சத்துக்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களும் சென்னையில் குறைவு. சென்னையில் 50 சதவீதம் குடும்ப பெண்களும், 30 சதவீதம் வயதானவர்களும், 20 சதவீதம் வேலைக்கு செல்பவர்களும் காலை உணவாக ஆற்றல் தரும் பானங்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.

(y)
Posted: 30 Jul 2014 03:30 AM PDT
(y)

சுடாத தீர்ப்பு:- மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்யும் வழக்குகள் அனைத்துமே ஒர...
Posted: 30 Jul 2014 03:10 AM PDT
சுடாத தீர்ப்பு:-

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்யும் வழக்குகள் அனைத்துமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை தருவது இயல்பாகி போய்விட்டது. போபால் விஷ வாயு குற்றவாளி தப்ப விட்டதில் தொடங்கி கும்பகோணம் தீ விபத்து வரை தொடர்கிறது அநீதி.

இந்த நீதி மன்றம் பல விசித்திரமான வழங்குகளை கண்டுருக்கிறது என்பது சினிமா வசனம். ஆனால் இந்திய நீதிதுறையே விசித்திரம் என்பதே நியதி.
பள்ளிகூடங்களின் கட்டிடம் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களால் எளிதில் சரிந்து விழாத இயற்கை அசாம்பாவிதத்தில் பாதிக்கப்படாத இடங்களில் அமைய வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விதி. இதை யாருக்கும் விதிமுறை புத்தகத்தை நீட்டி சொல்லி தரவேண்டிய அவசியமில்லை. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பள்ளிகளுக்கு விதிமுறைகள். அதை சரிவர செய்து கொடுத்து இருக்கிறார்களா சோதனை செய்வது கல்வி அலுவலர்களின் கடமை.

கும்பகோண தீ விபத்து பள்ளியில் எந்த அடிப்படையும் இல்லை என்பது நிதர்சனம். அதை கண்காணிக்காத அலுவலர்கள் கடைமை மீறல். அலட்சியம். வேறு கை யூட்டு காரியமாக கூட இருக்கலாம். இதை முறைப்படியாக விசாரிக்க பத்து ஆண்டுகள். அதில் அரசு அலுவலர்களை குறிப்பிட்டு தப்ப விடும் அரசாங்கத்தின் வாதம்.

இதில் நீதி எங்கே இருக்கிறது. பிறர்க்கான பாடம் எங்கே இருக்கிறது.

நாம் எல்லாம் கோவில் வளாகத்தில் கொல்லப்பட்ட வழக்கில் சாமியாரை தப்பவிடும் தந்திரம் தெரிந்தவர்கள்.

ஒரு முன்னாள் அமைச்சரை தீர்த்துவிட்டு வாக்கிங் செல்பவர்கள்.

சொத்து குவிப்பில் சம்மன் நீட்டுபவர்கள். ஏதோ ஒரு கடிகார பேட்டரி அதை எதற்கு என்றே தெரியாமல் வாங்கி கொடுத்தவனுக்கு மரண தண்டனை அளித்தவர்கள்.

இங்கே நீதியெல்லாம் மனுநீதிச்சோழன் கதையுடன் முடிந்து விட்டது. :(

- Venkatesan Balakrishnan.
ஐந்து பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது... ஏற்கனவே 5 ஆயுள் தண்டனைய அனுப...
Posted: 30 Jul 2014 03:07 AM PDT
ஐந்து பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது...

ஏற்கனவே 5 ஆயுள் தண்டனைய அனுபவிக்கரவன இப்போ கைது பண்ணி விடுதலை வாங்கி குடுக்குறாங்கே...

மாத்தி யோசி. ;-)

- போட்டோக் கார்
சிறு நெல்லி ... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted: 30 Jul 2014 03:00 AM PDT
சிறு நெல்லி ... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

நாகரிகமயமாக்கப்பட்ட சமூகத்தில் இயற்கைக்கு என்ன வேலை என்றாலும் கிடைத்த இடத்தில் த...
Posted: 30 Jul 2014 02:45 AM PDT
நாகரிகமயமாக்கப்பட்ட சமூகத்தில் இயற்கைக்கு என்ன வேலை என்றாலும் கிடைத்த இடத்தில் தன்னை தக்க வைத்திருக்கின்றன இந்த மரங்கள். மரத்தை காக்க வேர்கள் எங்கெல்லாமோ சென்று நீரை எடுக்கின்றன என்பதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி.

:)
Posted: 30 Jul 2014 02:30 AM PDT
:)

அதிசயம் ஆனால் உண்மை. ஆச்சரியம் ஆனால் அட்டகாசம். பேஸ்புக்கில் ஒவ்வொரு செல்ஃபோன்...
Posted: 30 Jul 2014 02:15 AM PDT
அதிசயம் ஆனால் உண்மை.
ஆச்சரியம் ஆனால் அட்டகாசம்.

பேஸ்புக்கில் ஒவ்வொரு செல்ஃபோன் நம்பருக்கும்
ஒரு பெயர் உண்டு.

உங்கள் செல்ஃபோனின் கடைசி மூன்று எண்களை
மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை இந்த பதிவின்
கமெண்ட் பாக்ஸில் இந்த பார்மட்டில் பதிந்து போஸ்ட்
செய்யுங்கள்.

@[***:0]

உதாரணத்திற்கு உங்கள் மொபைலின் கடைசி மூன்று
எண்கள் 387 எனில் கமெண்டில் இப்படி டைப் செய்து
போஸ்ட் செய்யவும், ஸ்டார் இருக்கும் இடங்களில் உங்கள்
மொபைலின் கடைசி மூன்று எண்களை நிரப்பி.
என் நம்பருக்கு வந்திருக்கும் பெயர்

Timothy Li

போஸ்ட்டை எண்டர் செய்த உடன் முதலில் ஒரு கறுப்பு
பூஜ்யம் வரும்.. பின்னர் தான் அந்த அதிசயம்..

உங்கள் செல்நம்பருக்கு மார்க் கொடுத்திருக்கும் பெயர்
வெளிவரும் அட்டகாசமாக. முயற்சியுங்கள்.

~ ஜெய்ஜி

0 comments:

Post a Comment