FB Posts by Araathu அராத்து |
ஆன்லைன் நாகரீகம் அந்த ப்ராடக்டே அவுட் டேட் ஆகற வரைக்கும் ரிவ்யூ படிச்சி படிச்சி கண்ணு பூத்து போனா மட்டும் பத்தாது. நீங்களும் ஒண்ணு ரெண்டு ரிவ்யூ எழுதணும். டொரண்ட் டவுன்லோடு ஆனதும் சீட் ஆக விடமால் , உடனே லிஸ்ட்ல இருந்து தூக்க கூடாது. ஆன்லைன்ல வேலை முடியும் வரை சற்று நேரம் வைத்திருக்கலாம். டிராவல் பிளாகை படிச்சா மட்டும் பத்தாது. நீங்க போன ஊர் , ஹோட்டல் , முக்கியமான விபரங்களை எதாவது பிளாகில் எழுதி வைக்கலாம். தெரிந்த கேள்விகளுக்கு யாஹூ ஆன்ஸரில் பதில் சொல்லலாம். இன்னும் வேறென்னென்ன செய்யலாம்னு போஸ்ட் போடலாம் !
|
Posted: 29 Jul 2014 09:31 AM PDT
ரயில்களில் ஒரு 2ம் வகுப்பு பொட்டியைக் கழட்டி விட்டு , 3 டயர் ஏசி பொட்டியை சேர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். * ஒரு 2ம் வகுப்பு பெட்டியைக் கழட்டாமலேயே இதைச் செய்து இருக்கலாம். * 2ம் வகுப்பில் இடம் கிடைப்பதை விட 3 டயர் ஏசியில் இடம் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது. * 3 டயர் ஏசியில் இடம் கிடைப்பதை விட 2 டயர் ஏசியில் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனால் 3 டயர் ஏசி பொட்டி சேர்ப்பதை விட முதலில் 2 டயர் பொட்டியை சேர்க்கலாம்.2ம் வகுப்பு பொட்டியை கழட்டாமலேயே ! * மொத்தமாக ஏசியாக மாற்ற விரும்பினால் , மாற்றலாம். ஆனால் இப்போதிருக்கும் 3 டயர் , 2டயர் கட்டணம் வசூலிக்கக்கூடாது. விலையேற்றத்திற்கு முன்பிருந்த கரீப் ரத் கட்டணம் வசூலிக்கலாம். எல்லா பெட்டியும் ஏசியாக்கினால் கட்டுப்படியாகும். * அந்த கரீப் ரத்திலேயே சொகுசு பெட்டிகள் நான்கோ ஐந்தோ சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.
|
![]() | |
0 comments:
Post a Comment