Saturday, 4 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் -நீதிமன்றம். அரசாங...

Posted: 04 Apr 2015 09:25 AM PDT

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் -நீதிமன்றம்.

அரசாங்கமே வெடி மருந்து சப்ளை பண்ணுது,அவுங்க மேல ஏதாவது நடவடிக்கைஎடுங்க 'கனம் கோர்ட்டார் அவர்களே'.

- இளையராஜா டென்டிஸ்ட்

ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகளே... லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களே.. ஏழை...

Posted: 04 Apr 2015 09:20 AM PDT

ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகளே...
லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களே..

ஏழையின் நேர்மையைப் பாருங்கள்..


இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன். *******************************************...

Posted: 04 Apr 2015 09:10 AM PDT

இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன்.
*********************************************************

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.பிரபல
நடிகரை , பல
கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட
நிகழ்ச்சி அது...

அதில் ஒரு பெண் அந்த நடிகருக்கு
வீட்டிலிருத்து பொங்கல்
கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக
வேண்டும்
என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு
பெண்
நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும்
என
அடம் பிடிக்கிறார்.

நடிகர் அவர்
நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல்
ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம
சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்...

இயக்குனர் அழ சொன்னால் அழும்,
சிரிக்க
சொன்னால் சிரிக்கும், பல
பெண்களோடு பல
பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன்
மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை
பெரிய
ஈர்ப்பு? தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக
இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக
நடிக்கும்
ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு
தூக்க
வைக்கும் அளவிற்கு அன்பு?

விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே...

பணம் செலவழித்து படம் பார்த்தால்
அந்த
இரண்டரை மனி நேரம்
பொழுது போக்கு என்று உணருங்கள்
குழநதைகளே. அதை கடந்து அந்த
நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள்
உங்கள்
மனாளனை மன்மதனாக பாருங்கள்.
சிந்தியுங்கள் பெண்களே!!!

இப்படி கேவலமாக நடந்து கொள்ளும்
பெண்களும், அதைக் கண்டிக்காத,
கண்டுகொள்ளாத பெண்கள்
அமைப்புகளுக்கும்,
ஏதாவது தவறுநடநதால் மட்டும்
வரிந்து கட்டிக் கொண்டு,
பெண்ணினத்தைக்
காக்க வந்த ரட்சகர்கள் போல்
பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.

பெண்கள் தவறாக
நடத்து கொள்ளும்போது அதைக்
கண்டிக்காத,
அவர்களை சரியாக வழி நடத்த எந்த
முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும்,
பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள்
நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக
உரிமையும் இல்லை.

அப்போது மட்டும்
கொதித்து எழுபவர்கள், பாதிக்கப்பட்ட
பெண்ணை வைத்து பிரபலமாகத்
துடிப்பவர்களே.

பெண்கள் இப்படி அதுவும்,
ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்
நடநது கொள்ளும்போது பார்தது,
பெருமையடையும், பூரித்துப் போகும்
அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை
எந்த
வகையில் சேர்ப்பது..

Relaxplzz

பசுமையான நிணைவுகள் 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள்...

Posted: 04 Apr 2015 09:00 AM PDT

பசுமையான நிணைவுகள்

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF
தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.

Relaxplzz


அண்ணன் சிங்கம்டா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல பேசும்போது சொல்லிட்...

Posted: 04 Apr 2015 08:55 AM PDT

அண்ணன் சிங்கம்டா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல பேசும்போது சொல்லிட்டு கட் செய்துவிட்டார் !

அஞ்சு நிமிடம் கழிச்சு போன் போட்டு என்ன அண்ணா கட் பண்ணிட்டீங்க எங்கே இருக்கீங்க அப்படின்னு கேட்டேன் !

உங்க அண்ணி புளி வாங்க சொல்லி போன் போட்டாங்க அதுதான் கட் செய்தேன் அப்படின்னு சொல்றாரு !

சிங்கம் புளி வாங்க வந்திருக்கு :P :P

- மகேந்திரன் முத்துராமலிங்கம்

டை கட்டிய பணக்காரனை விட கை கட்டாத தன்னம்பிக்கையுள்ள ஏழை எவ்வளவோ மேல்.

Posted: 04 Apr 2015 08:49 AM PDT

டை கட்டிய பணக்காரனை விட

கை கட்டாத தன்னம்பிக்கையுள்ள ஏழை எவ்வளவோ மேல்.


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

வேறெந்த காரணமும் வேண்டாம். இளையராஜா மட்டும் போதும் பயணங்களை இனிமையாக்கிவிட.......

Posted: 04 Apr 2015 08:45 AM PDT

வேறெந்த காரணமும் வேண்டாம்.
இளையராஜா மட்டும் போதும்
பயணங்களை
இனிமையாக்கிவிட....
###தேவ சுகம்.

- ஷோபியா துரைராஜ்

விடுமுறை என்று வந்தாலே நம்மை அறியாமல் ஒரு குழந்தை மனது நமக்குள் வந்து விடுகின்றத...

Posted: 04 Apr 2015 08:42 AM PDT

விடுமுறை என்று வந்தாலே நம்மை அறியாமல் ஒரு குழந்தை மனது நமக்குள் வந்து விடுகின்றது..

உண்மை என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 04 Apr 2015 08:34 AM PDT

சிறு வயதில் இப்படி விரலில் மாட்டி சாப்பிட்டு திரிந்தை மறக்க முடியுமா :) (Y)

Posted: 04 Apr 2015 08:30 AM PDT

சிறு வயதில் இப்படி விரலில் மாட்டி சாப்பிட்டு திரிந்தை மறக்க முடியுமா :) (Y)


அந்தக் காலத்தில

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 08:17 AM PDT

:D Relaxplzz

Posted: 04 Apr 2015 08:12 AM PDT

:D Relaxplzz

Posted: 04 Apr 2015 08:02 AM PDT

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:54 AM PDT

:( Relaxplzz

Posted: 04 Apr 2015 07:45 AM PDT

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:40 AM PDT

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:31 AM PDT

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:24 AM PDT

:P Relaxplzz

Posted: 04 Apr 2015 07:17 AM PDT

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:07 AM PDT

(y) Relaxplzz

Posted: 04 Apr 2015 07:03 AM PDT

மலர்களின் மலர்ச்சி.. புன்னகைக்கும் உன் முகத்தில். நதிக் கரை செழித்த கனி திரள் கொ...

Posted: 04 Apr 2015 06:50 AM PDT

மலர்களின் மலர்ச்சி..
புன்னகைக்கும் உன் முகத்தில்.
நதிக் கரை செழித்த
கனி திரள் கொடியே
மகிழ் குமிழ் வசந்தம்
வாழ்நாள் முழுதும் பெருக..

- Isac Jcp.


நாலு நாள் கழிச்சித்தான் வருவேன்னு ஊருக்கு போன மனைவி ஒரே நாள்ல திரும்பி வந்ததுக்க...

Posted: 04 Apr 2015 03:45 AM PDT

நாலு நாள் கழிச்சித்தான் வருவேன்னு ஊருக்கு போன மனைவி ஒரே நாள்ல திரும்பி வந்ததுக்கு 'நம்ம மேலே இவ்ளோ பாசமான்னு சந்தோஷப்படறதா , இல்ல சந்தேகப்படறாளோன்னு கவலைப்படறதா..... அவ்வ்வ் :(

- சுகன் என்கிற சுகுணசீலன்

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில...

Posted: 04 Apr 2015 03:20 AM PDT

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.
மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.
அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.
கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

=== நீதி : உயர் அதிகாரிகளின் முன் நாம் முந்திரிக்கொட்டையாக இருக்கக்கூடாது!

:P :P

Relaxplzz

அந்த செல் போன் ரீசார்ஜ் கடையில மட்டும் ஏன் இப்படி கூட்டம் அதிகமாக இருக்கு .... *...

Posted: 04 Apr 2015 02:45 AM PDT

அந்த செல் போன் ரீசார்ஜ் கடையில மட்டும் ஏன் இப்படி கூட்டம் அதிகமாக இருக்கு ....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*ஒரு IDEA ரீசார்ஜ் உங்க LIFE - யே மாற்றும்னு எழுதுறதுக்கு பதிலா ...
*
*
*
*
*
*
*
*
*
ஒரு IDEA ரீசார்ஜ் உங்க WIFE - யே மாற்றும்னு தவறுதலாக எழுதிட்டாங்க.....

:P :P

எல்லைக்கல் வாங்க ஒரு கல் வியாபாரியை பார்க்க போனேன்... நல்ல உயரம் கருத்த ஒல்லியான...

Posted: 04 Apr 2015 02:20 AM PDT

எல்லைக்கல் வாங்க ஒரு கல் வியாபாரியை பார்க்க போனேன்... நல்ல உயரம் கருத்த ஒல்லியான தேகம். ரொம்ப எளிமையா இருந்த குடிசையை சுற்றி வெவ்வேறு அடி உயர கல்லை அடுக்கி வைத்திருந்தார்...

ஆட்கள் கல்லை அடுக்கிட்டு இருந்த போது தான் கவனித்தேன். அந்த குடிசை மேல போர்வை போர்த்தியது போல பச்சை இலைகளும், குட்டி குட்டியா வாடாமல்லி நிற பூக்களும் தெரிந்தது. பக்கத்தில போய் க்ரோட்டன்சான்னு பார்த்தா.... இல்லை, அவரை செடி !!

கொஞ்சம் பெரிய கண் இமைகள் போல பச்சை நிற காய்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது.. அவரிடம் அவரைக்காயான்னு கேட்டேன், கண்கள் விரிய சின்ன பையனின் குதூகலத்துடன் ஆமா என்றார்.

என் கை பிடித்து அழைத்து போய் செடியின் தண்டினை பிடிக்க சொல்லி, 'என்ன வயதிருக்கும் சொல்லுங்கள்' எவ்வளவு நாளா வளர்க்கிறேன் தெரியுமா??, ஒரு காய் போட்டாலும் சாம்பாருக்கு தனி மணம் வருமென்றார். அதோடு நிற்காமல், எப்படி வளர்த்தார் என்றும் என்னென்ன தீவனங்கள் போட்டார் என்றும் கூறி விட்டு முற்றிய காய்களையும் பறித்து வீட்டுக்கு குடுத்தார்.

அவரைக்காயா என்ற ஒற்றை கேள்விக்கு ஒரு கட்டுரையே வாசித்திருந்தார், அவரிடம் தெரிந்த பெருமிதமும் மகிழ்ச்சியும் மகள் பெற்ற பேர குழந்தையை கையில் வாங்கும் போது ஒரு தாத்தாவுக்கு வருவது போன்றது... smile emoticon

படைப்பு என்பது அளப்பறியா ஆனந்தம் தருவது. ஒவ்வொரு முறை பயிரிடும் போதும் படைப்பின் உன்னதத்தை அனுபவிக்கிறான் விவசாயி. பிள்ளை வளர்ப்பை போன்றே பிணைப்பு மிக்கது விவசாயம். அபினை அனுபவித்தவன் போல ஒரு முறை சேற்றில கால் வைத்தவன் சோறு இல்லேனாலும் விவசாயம் செய்யவே ஏங்குகிறான்...

அவரை பார்த்த பின் தீர்மானமாக தோன்றியது... "விவசாயமும் ஒரு போதை தான் அதனால் தான் குடும்பமே அழிந்தாலும் அதற்குள்ளேயே உழல்கிறான் விவசாயி".

பி.கு : அவரைக்காயும் கொடுத்து 100 ரூ தள்ளுபடியும் கொடுத்தார்.

- Sarav Urs @ Relaxplzz

போற போக்கை பார்த்தால்,நம் தேசிய விலங்கு #பசு என்று நம் பிள்ளைகள் படிக்கும் நிலை...

Posted: 04 Apr 2015 01:45 AM PDT

போற போக்கை பார்த்தால்,நம் தேசிய விலங்கு #பசு என்று நம் பிள்ளைகள் படிக்கும் நிலை வந்துடும் போல இருக்கே.

- Ilayaraja Dentist

அப்போ ... சென்னை அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்.. 5E பஸ்சில் ஏறினேன்..நின்று கொண்டு ய...

Posted: 04 Apr 2015 01:20 AM PDT

அப்போ ...

சென்னை அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்..
5E பஸ்சில் ஏறினேன்..நின்று கொண்டு யாருமில்லை..எனினும் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்..

பெண்கள் பகுதியில் இருக்கும் ஒத்தை இருக்கையில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்..

என்னைப் பார்த்ததும் அவர் எழுந்து இடம் கொடுக்க முயன்றார் "பரவால்ல உட்காருங்க" ந்னு சொல்லி விட்டேன்..

அடுத்த ஸ்டாப் வந்தது.யாரும் ஏறவில்லை..இறங்கவும் இல்லை..இவர் என்னைப் பார்த்து கொண்டே எழுந்து கொள்ள முயன்றார்..

"பரவால்ல உட்காருங்க " என்று அவரைப் பிடித்து உட்கார வைத்தேன்.

அடுத்த ரெண்டு ஸ்டாப்புகளிலும் அப்படியே அவர் எழுந்திருப்பதும் நான் சற்று அதட்டலாக உட்காருங்கன்னு சொல்வதாகவும் இருந்தது..

அடுத்த ஸ்டாப் வந்தது..அவர் எழுந்திருக்க .."பரவால்...." என்று சொல்வதைக் கேட்டு. அவர் கோபமாக "அட,போம்மா, இப்படியே என்னை எழுந்திருக்க விடாம செஞ்சா நான் எங்கேதான் இறங்கறது" ந்னு சொல்லிட்டு பர பரன்னு இறங்கி விட்டார்..

நான் #ஙே :O

ஓவர் மரியாதயும் ஒடம்புக்கு ஆவாது !!!

:P :P

- Chelli Srinivasan

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ் “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டாலே ப...

Posted: 04 Apr 2015 01:02 AM PDT

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்

"வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டாலே போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்கள்!' என்கிறார் ஒரு விவரம் தெரிந்த வித்தகர். இதோ அந்த விஷயங்கள்:

1. சமஉரிமை:

வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். (ஆகவே 'அவ்வளத்தையும்' அவங்க கையிலேயே கொடுத்து விட்டு-(அவங்க சம்பாதிப்பவங்களாக இருந்தாலும்) உங்களுக்கு தேவைப் பட்டதை மட்டும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்க! (என் நண்பர் ஒருவர் இப்படி தான் செய்வார்) இப்படி செய்வதில் ஒரு பிளசும் இருக்கு. செலவுகள் குறைய வாய்ப்பிருக்கு!

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்:

உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என புகழ்ந்து பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகுமில்லையா?? (உங்களுக்கு பாராட்டவா சொல்லிக் கொடுக்கணும்! அசத்திடுங்க!!)

3. ஊமை அல்ல:

வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா/சீரியலில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும். (ஜமாய்ச்சிடுங்க!!)

4. ஆண் மகன்:

சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.(பயந்திடாதீங்க! தைரியமா இருங்க சார்!)

5. பொறுப்பு:

காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அப்பதானே அவங்களும் பொறுப்பா நடந்துக்க முடியும்.

6. கட்டுப்பாடு:

உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே அவங்களுக்கு சிரமம் தரக் கூடாது .(அப்பதானே அவங்க சீரியல் பார்க்க முடியும்!)

7. விடுமுறை:

விடுமுறை நாட்களில் அவங்க விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. (நாமே சமையல் செய்து அசத்தலாம் என்ற விபரீத முடிவெல்லாம் ப்ளீஸ் வேணாம்ங்க! ஹோட்டலுக்கு அழைத்துப் போயோ அல்லது அங்கிருந்து வாங்கி வந்தோ அசத்தி விடுங்கள்!)

8. தொந்தரவு:

எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது. (அதுக்காக நமக்கு ஏன்யா வம்பு என்று சும்மாவும் இருந்து விடக்கூடாது!.... புரியுதா???)

9. உதவி:

சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். (இது கொஞ்சம் மனசுக்கு 'பக்' என்று பட்டாலும், வேறு வழியில்லை! முதலில் பெண் குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு வேணுமின்னா இதிலிருந்து எக்ஸ்சம்சன் கிடைக்கலாம்)

10. பாராட்டு:

"இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…' என பாராட்ட வேண்டும். (நமக்கு பாராட்டவா சொல்லிக் கொடுக்கணும். அள்ளி விடுங்க!)

11.பொழுது போக்கு:

விடுமுறை தினங்களில் இரவு உறவினர்களை பார்க்க அல்லது அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது, என்பதில் இருவேறு கருத்து கூடாது. "வேலை இருக்கிறது, "டிவி'யை பார்த்துக் கொண்டு தூங்கு!' என கணவர்கள் சொல்லக் கூடாது.

12. டிரைவிங்:

கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. (பைக்/சைக்கிள் ஓட்டும்போதும் இதே ரூல்ஸ் தான்.. ஃபாலலோ அப்!)

13. ஒத்துழைப்பு:

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு:

தினமும் ஒரு முறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். (அவங்க எடுக்கிற முடிவுதான் 'நல்ல முடிவு' என்பதை நினைவில் நிறுத்திக் கொள்க!!)

15. கொழுப்பு குறைய வேண்டும்: (வாய்க் கொழுப்பு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது!)

உங்கள் உடம்பில் சதைப் போட்டால் பிடிக்கும். ஆனால் அவங்க உடம்பில் சதை போடுவது சுத்தமாய் பிடிக்கவே பிடிக்காது. ஆகவே கொழுப்பு/சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் அது எங்கு கிடைத்தாலும் வாங்கி கொண்டுவந்து கொடுத்து விடுங்கள்.

16. அவசரம் கூடாது:

படுக்கப் போகுமுன், படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் பேசி நடந்து கொள்ளக் கூடாது. (புரியுதா??)

17. ஆச்சர்யம்:

வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும். (என்னது பரிசா? அதுக்கு என்கிட்டே ஏது காசு? எல்லாத்தையும் தான் அவங்ககிட்ட கொடுக்கச் சொல்லிட்டீங்களே என்று நீங்க கேட்பது காதில் விழுது! OT பார்த்த காசில் எல்லாம் கள்ளனா பூந்துட்டான். விடுங்க! விடுங்க!!)

18. புது டிரஸ்:

அவங்க ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. அவங்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.(அப்படியே உங்களுக்கும் புது டிரஸ் எடுத்துக் கேட்டு 'பிழைக்கத் தெரிந்த பிள்ளையாய்' நடந்துக்கணும். நீங்க நடப்பீங்க பாஸ்!)

19. குழந்தைகள்:

நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்:

நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்:

"ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!' அல்லது எவ்வளவு டாப்பப் பண்றது என்று அங்கலாய்த்து கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா:

அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்:

படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். (இதையெல்லாம் யார் செய்வது மறுகேள்வி கேள்வி கேட்காதீங்க! லீவு நாட்களில் நாமதாங்க செய்யணும்!)

24. சிக்கல்:

பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரெஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். (கூடமாட சென்று நீங்களும் உதவ வேண்டும்.)

25. இளமை:

நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றி னால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

* நாங்கல்லாம் அப்பவே இப்படியெல்லாம் செஞ்சு பார்த்தாச்சு! நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க!!

-R P Karthik

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

:) Relaxplzz

Posted: 04 Apr 2015 12:50 AM PDT

0 comments:

Post a Comment