Relax Please: FB page daily Posts |
- துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம். இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு த...
- “உங்களுக்கு ஒரு மணிநேரம் மகிழ்ச்சி வேண்டுமா? ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள். ஒர...
- 'பேட்' பிடித்த கையில் 'துடைப்பம்'.. மோடி அழைப்பை ஏற்று மும்பை சாலையை சுத்தமாக்கி...
- அழகு
- :)
- எது உச்சக்கட்டம்... 1. ஃபேஷனின் உச்சக்கட்டம் : ஜிப் வைத்த லுங்கி... 2. சோம்பே...
- கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வய...
- நிறைவேறுவது கடினம் என்று தெரிந்தபின்பும் சில விஷயங்களை எதிர்பார்த்து காத்திருப்ப...
- அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- ஒரே ஒரு பெண் உன்னை விரும்பும்போது , நீ ஒரு கணவன் ...... பல பெண்கள் உன்னை விரும்...
- அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன...
- மும்பையில், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் "ஆணுறுப்பை" ச...
- :P :P
- (y)
- புதுக்குறள்கள் ******************** 1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காத...
- குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம், சென்னையைச் சேர்ந்த ஒருவர், ப...
- ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து ஓடலாம் என...
- :)
- உங்கள் கைபேசி எண்னை வைத்து உங்கள் வயதை கண்டுபிடிக்கலாம்.!? 1. உங்கள் மொபைல் எண்...
- மூன்று குரங்குகள் அமைத்து, அதில் ஒரு குரங்கு காதுகளை மூடிக்கொண்டும், இன்னொரு குர...
- சில நேரங்களில் ஒரு சாதரண ஹலோவும் சிநேகப் புன்னகையும் பல மேஜிக்குகளை செய்ய வல்லத...
- :)
- ATM-ல் பணம் எடுக்க சென்று பணம் வராமல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தால்.....A...
- அப்பா: தீபாவளிக்கு எனக்கு ட்ரெஸ் வேண்டாம் அந்த பணத்தையும் சேர்த்து நீயும் குழந்த...
- மனசாட்சி உள்ள மனிதர்களே..,இவர்களை போன்ற உழைப்பாளியிடம் பேரம் பேசாதிர்கள்...
- தலைகீழ் நின்றாலும் தமிழ் எங்கள் தமிழே... (y) (y)
- :)
- ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகி விடுகிறது. அதை குணப்படுத்த மலை உச...
- சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் ந...
Posted: 15 Oct 2014 09:15 AM PDT துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம். இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர். ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது. மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி, "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?" என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான். சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர். பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது. சிறுவன் மருத்துவரை பார்த்து, "டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?" என்று சோகமான குரலில் கேட்டான். சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டாக்டர், 'ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார். "சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான். தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான் " யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.." அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும், செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர். :) :) Relaxplzz |
Posted: 15 Oct 2014 09:00 AM PDT "உங்களுக்கு ஒரு மணிநேரம் மகிழ்ச்சி வேண்டுமா? ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள். ஒருநாள் மகிழ்ச்சி வேண்டுமா? உல்லாசப் பயணம் செல்லுங்கள். ஒரு வருடம் மகிழ்ச்சி வேண்டுமா? திருமணம் செய்து கொள்ளுங்கள். சில வருடம் மகிழ்ச்சி வேண்டுமா? கோடீஸ்வரனாகுங்கள். வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி வேண்டுமா? மற்றவருக்கு உதவிக் கொண்டே இருங்கள்" - சீனப் பழமொழி. Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 08:50 AM PDT |
Posted: 15 Oct 2014 08:40 AM PDT |
Posted: 15 Oct 2014 08:30 AM PDT |
Posted: 15 Oct 2014 08:23 AM PDT எது உச்சக்கட்டம்... 1. ஃபேஷனின் உச்சக்கட்டம் : ஜிப் வைத்த லுங்கி... 2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் : காலை நடைபயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது... 3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் : வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது... 4. நேர்மையின் உச்சக்கட்டம் : பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது... 5. வறட்சியின் உச்சக்கட்டம் : பசு பால் பவுடராக கொடுப்பது... 6. நம்பிக்கையின் உச்சக்கட்டம் : 99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது... 7. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் : கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது... 8. தற்கொலை முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு குள்ளன் ரோட்டில் நடைபாதையில் குதிப்பது... 9. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் : இந்த ஸ்டேடஸ் முழுசையும் பொறுமையா படிக்கறது... எப்பூடி.... கடைசியில வச்சமில்ல ஆப்பு...!!! :P :P Relaxplzz ![]() குசும்பு... 2 |
Posted: 15 Oct 2014 08:00 AM PDT கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வயது பாட்டி...! என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - மராத்தான் போட்டியில் வென்ற 61 வயதான லதா பேக்வான #உண்மையான_அன்பு Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 07:50 AM PDT |
Posted: 15 Oct 2014 07:40 AM PDT |
Posted: 15 Oct 2014 07:30 AM PDT |
Posted: 15 Oct 2014 07:15 AM PDT ஒரே ஒரு பெண் உன்னை விரும்பும்போது , நீ ஒரு கணவன் ...... பல பெண்கள் உன்னை விரும்பும்போது , நீ ஒரு நடிகன்...... நூற்றுக்கும் மேலான பெண்கள் உன்னை விரும்பும்போது, நீ ஒரு இலட்சியமனிதன் ........ ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் விரும்பும்போது , நீ ஒரு தலைவன் ..... ஆனால் நகரத்தில் உள்ள அத்தனை பெண்களும் உன்னை விரும்புகிறார்கள் என்றால் நிச்சயமாக நீ ஒரு நல்ல .... . . . . . . . . . பானிபூரி விற்பவன்... :P :P Relaxplzz |
Posted: 15 Oct 2014 07:00 AM PDT அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்.. 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ... 2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ??? 3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் .. 4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் .. 5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் .. 6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் .. 7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் .. 8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் .. 9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் .. 10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் .. இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடல ும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ... - - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் ) Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 15 Oct 2014 06:50 AM PDT |
Posted: 15 Oct 2014 06:40 AM PDT |
Posted: 15 Oct 2014 06:30 AM PDT |
Posted: 15 Oct 2014 06:15 AM PDT புதுக்குறள்கள் ******************** 1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை... 2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க மூஞ்சியில் குத்தி விடல்... 3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கியல்பு... 4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு... 5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்... 6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்... 7.CHAT எனில் FB-CHAT செய்க.. இல்லையேல் CHATடலின் CHATடாமை நன்று... 8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே வாயினால் சுட்ட வடை... 9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது அரியவாம் கடலை போடுதல்... 10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே லேடியால் கெட்ட மனம்... 11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு... 12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக... கண்டிப்பாக சிரிக்க மட்டுமே.... Relaxplzz |
Posted: 15 Oct 2014 06:00 AM PDT குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம், சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது. கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்குவரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''என்று வாதிட்டார். ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில், 'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்' என்று தீர்ப்பானது. Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 05:45 AM PDT ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து ஓடலாம் என்று நினைப்பவனே வெற்றி பெறுகிறான்... (y) (y) Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 05:30 AM PDT |
Posted: 15 Oct 2014 05:15 AM PDT உங்கள் கைபேசி எண்னை வைத்து உங்கள் வயதை கண்டுபிடிக்கலாம்.!? 1. உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்னை எடுக்கவும் 2. அதை இரண்டால் ( X 2 ) பெருகவும் 3. அதனுடன் ஐந்தை ( + 5 ) கூட்டவும் 4. கிடைக்கும் விடையை ஐம்பதால் ( X 50 ) ஆல் பெருகவும் 5. வரும் தொகையுடன் மந்திர எண் ஆயிரத்தி எழுநூற்றி அறுபத்தி நாண்கு ( + 1764 ) ஐ கூட்டவும் 6. அத்துடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் ( உதாரணம் 1973, 1975, 2012… ) இப்போது உங்களுக்கு மூன்று இலக்க எண் கிடைக்கும். அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்.! மற்ற இரண்டும் உங்களின் வயது ஆகும்.!! முயற்சி செய்து பாருங்கள் சரியாக இருக்குதா என்று... ஆச்சரியமாக இருக்கின்றதா...!!! Relaxplzz |
Posted: 15 Oct 2014 05:00 AM PDT மூன்று குரங்குகள் அமைத்து, அதில் ஒரு குரங்கு காதுகளை மூடிக்கொண்டும், இன்னொரு குரங்கு கண்களை மூடிக் கொண்டும், மற்றொன்று வாயினை மூடியபடியும் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றின் விளக்கங்களாக, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே என்று அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் கணினி யுகத்தின் தன்மைக்கேற்ப, அதிக ஒலியைக் கேட்காதே; அதிக ஒளியைப் பார்க்காதே; துரித உணவுகளைச் சாப்பிடாதே என்றும் எடுத்துக் கொள்ளலாமே! இதன் மூலம், காதுகளும், கண்களும், உடல்நலமும் பாதுகாக்கப் படுமல்லவா? - சுபா ஆனந்தி Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 04:45 AM PDT |
Posted: 15 Oct 2014 04:30 AM PDT |
Posted: 15 Oct 2014 04:15 AM PDT ATM-ல் பணம் எடுக்க சென்று பணம் வராமல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தால்.....ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html Relaxplzz |
Posted: 15 Oct 2014 04:00 AM PDT அப்பா: தீபாவளிக்கு எனக்கு ட்ரெஸ் வேண்டாம் அந்த பணத்தையும் சேர்த்து நீயும் குழந்தைகளும் கொஞ்சம் நல்ல ட்ரெஸ்சா வாங்கிக்குங்க! காலேஜ் போறபுள்ள நல்லதா போட்டுக்க ஆசைப்படும் இல்லையா? அம்மா: எனக்கும் புடவை வேண்டாங்க அந்த பணத்துக்கு புள்ளைங்களுக்கு பட்டாசு வாங்கிடலாம்! போனமாசம் மதனி இங்க வந்தப்ப எனக்கு வாங்கிதந்த புடவை புதுசா இருக்கு அதையே கட்டிக்கிறேன்! எத்தனை காலமானாலும் எதுவும் மாறவில்லை,,,,,, கோலத்திற்குள் அடைபட்டுக்கிடக்கும் புள்ளிகளைப்போல,,,,, சம்பளத் தேதியில் பட்டியலிடப்படும் பட்ஜெட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது நடுத்தர வர்கத்தின் ஆசைகளும் தேவைகளும்! இவை அனைத்தையும் மீறிய நம் குடும்ப அன்பில் தீப விளக்குகள் பிரகாசமாக ஒளிர்கின்றன.. ♥ - Venn Nilaa. Relaxplzz ![]() |
Posted: 15 Oct 2014 03:50 AM PDT |
Posted: 15 Oct 2014 03:40 AM PDT |
Posted: 15 Oct 2014 03:30 AM PDT |
Posted: 15 Oct 2014 03:15 AM PDT ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகி விடுகிறது. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவ மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் குணமாகும். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. "நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நடப்பதை நிறுத்தக் கூடாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்கக் கூடாது" முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழி காட்டிச் சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்க வில்லை என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகி விடுகிறான். அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதி தூரம் வந்து விடுகிறான். திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பி பார்க்கிறான். அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.. அடுத்து மூன்றாமவன் வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம், சிரிப்பொலி மாறி மாறி கேட்டாலும் இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான். வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.. டிஸ்கி : பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்து விட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது. Relaxplzz |
Posted: 15 Oct 2014 03:00 AM PDT சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது. மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும். நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும். சத்துக்கள் எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment