Wednesday, 15 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று!! கனவுகளால் விண்ணைத் தொட்ட வித...

Posted: 15 Oct 2014 03:53 AM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று!!

கனவுகளால் விண்ணைத் தொட்ட வித்தகர், இளைஞர்களின் இதயம் நிறைந்த எளியவர்!

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாக சிலாகிப்பார் கலாம்.
உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார்.

எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்கு போட்டு பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.

கல்லூரியில் உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ''இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்'' என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.

விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி 'இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை' என அழைக்கப்பட்டார்.

புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ''என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே'' என கலாம் சொல்ல, ''வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!' என மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.

இந்தியா முழுக்க மாணவர்களை சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காக தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.
ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்கு சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்த பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.

இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
(பூ.கொ.சரவணன்)

விண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம். www.facebook.com/fbtamil

1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....

படித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.

4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.

5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.

இந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்
நோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.

இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.

1.எவையெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.
2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.
3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.
4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.
5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.

நமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.

குறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

பூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.

சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்' என்று கூறினார்.

இதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து'

நோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.

இந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன் அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.

- மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

- டாக்டர் அப்துல் கலாம் -
www.facebook.com/fbtamil


நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட க...

Posted: 15 Oct 2014 03:02 AM PDT

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும்
விஷயங்கள்...
1. சாலையில் எச்சில் துப்புதல்.
கண்ட கண்ட இடத்தில் சிறுநீர்
கழித்தல்.
{இதில் கண்டிப்பாக
பெரும்பாலானோருக
்கு பங்கு உண்டு.}
2. சிக்னலை மீறுவது, தவறான
பாதையில் ஓட்டுவது :
{இது இந்தியாவை பொறுத்தவரை மிக
சர்வ சாதாரணமான விஷயம்
ஆகிவிட்டது. இவற்றை தடுக்க
கண்டிப்பாக மாற்றம் வர
வேண்டும். தேவையில்லாமல்
ஒலி எழுப்புவதுமே தவறான
ஒன்று. போக்குவரத்து நெரிசல்
தான் இங்கே மோசமான ஒன்று.}
3. குப்பைகளை கொட்டுவது :
{நம்மவர்களுக்கு அழகான
இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட
தோன்றுகிறது.
இதற்கு படித்தவர் படிக்காதவர்
என்ற பாகுபாடே இல்லை.
இதனாலே பல கலைகளையும்,
நிலைகளையும்
இழந்து நிற்கிறோம்.}
4. வரிசையை முந்தியடித்தல் :
{இந்த இடத்தில வீரத்தை சிலர்
தப்பாக புரிந்துவிட்டனர்
போலும். எதற்கு எடுத்தாலும்
அவசரம்.
பொறுமை என்பது எள்ளளவும்
இங்கே இல்லை. நிற்கிற
ஒருவனும் முன்னும்
பின்னுமாய்
தள்ளிக்கொண்டு தான்
நிற்கிறான்.}
5. விட்டு கொடுக்காத பழக்கம் :
{அனைத்திற்கும்
விட்டுகொடுக்க
சொல்லவில்லை, சில
காரணங்களுக்கு மட்டும் கூட
இங்கே இறங்க மறுக்கின்றனர்.
ஒரு பொது மின்தூக்கியில்
ஒரே முறையில் முன்னூறு பேர்
ஏற நினைத்தால் அது எப்படி...?
அவசர ஊர்தி கூட சாலைகளில்
வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}
6. நடுத்தர
நிலையை ஏற்றுகொள்வது :
நடுத்தர நிலையில்
இருந்து முன்னேற
நினைப்பது சரியான விஷயம்
தான், ஆனால் அதற்காக
இங்கே எவ்வளவு பொய்
புரளிகள், பித்தலாட்டங்கள்,
லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....
இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில்
கரையும் உப்பு தான்.
இங்கே உண்மை தொண்டனாய்
இருக்க யாருக்கும்
ஆசை இல்லை, தலைவன்
பதவிக்கே முந்தியடிகின்றனர்.
7. மனிதனை மனிதன்
மதிப்பது இல்லை:
{முன்னுக்கு வருபவனை அழிக்க
மட்டுமே நினைப்பது. நம்
மக்களை நாமே மதிக்காத
போது எப்படி முன்னேற
முடியும்.}
8. ஜாதி வெறி - மத வெறி – இன
வெறி:
நம் நாட்டின்
சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......
!!
குறிப்பு:- இதை பதிவதன்
நோக்கம், நம்முடைய
அவலங்களை நாமே பதிந்து,
நமது மேல்
நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க
்காக அல்ல....
தனி மனிதன் திருந்தினால் தான்,
நாடு திருந்தும். இதை படித்த
பிறகு ஓரிருவர் திருந்தினால்
கூட போதும்... இந்த பதிவின்
நோக்கம் முழுமை பெரும்..
-மு.மன்சூர் அலி

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது...

Posted: 14 Oct 2014 10:07 PM PDT

ஹாலிவுட் சூப்பர்
ஸ்டார்களை உலகமே தலையில்
தூக்கி வைத்துக் கொண்டாடிய
காலகட்டம் அது.
ஆனால்,
அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர்
ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச்
செய்தவன், நம் தமிழ்மண்ணின்
தவப்புதல்வன் சிவாஜி கணேசன்.
சிவாஜியின்
நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன்
சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு
தங்கள்
வீடுகளுக்கே அழைத்துச்
சென்று உபசரித்தார்கள் அந்த
ஹாலிவுட் ஸ்டார்கள்.
"காட்பாதர்" கதாநாயகன் மார்லன்
பிராண்டோ,
"பென் ஹர்" நாயகன், சார்டன்
ஹெஸ்டன், டென்
காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய
"பூல்பிரன்னர்"
உள்பட ஹாலிவுட் பஞ்ச
பாண்டவர்கள் மத்தியில்,
எவ்வளவு கம்பீரமாய்
அமர்ந்திருக்கிறது நமது தமிழ்
சினிமா..
SHARE it to the Maximun...,


முன்னெல்லாம் வெளியே கிளம்புமுன் சகுனம் பார்ப்பார்கள்.. இப்போது மொபைல்ல சார்ஜ் ஃப...

Posted: 14 Oct 2014 09:50 PM PDT

முன்னெல்லாம்
வெளியே கிளம்புமுன் சகுனம்
பார்ப்பார்கள்..
இப்போது மொபைல்ல சார்ஜ்
ஃபுல்லா இருக்கா என
பார்க்கிறார்கள்..

0 comments:

Post a Comment