Interesting Tamil Facebook posts |
- Andru 2013... Indru 2014...
- Makkal Thalapathy Siva Anna.
- செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடு...
- அக்டோபர் 31 அன்னிக்கு எல்லோரையும் நெட் off பண்ணசொல்லி அட்வைஸ் பண்ணிட்டு, கடைசில...
- :p
- Vadivel photo comments ah adichikka yentha sticker comments aaaliyum mudiyathu. .
- ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்...
- ஜாதிகள் இல்லையடி பாப்பா... இது #பாரதியார் சொன்னது ஜாதி certificate கொடுத்தா த...
- Good morning frnds. Have a great day
- Good night. . Have a Hansika dreams
- Close enough :p
- படித்ததில் பிடித்தது ....... நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வ...
- Yeppavumey thala deepavali than..
Posted: 15 Oct 2014 08:16 AM PDT |
Posted: 15 Oct 2014 06:47 AM PDT |
Posted: 15 Oct 2014 06:33 AM PDT செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடுற பழக்கத்தை நாம கைவிடவேயில்ல.... |
Posted: 14 Oct 2014 11:34 PM PDT அக்டோபர் 31 அன்னிக்கு எல்லோரையும் நெட் off பண்ணசொல்லி அட்வைஸ் பண்ணிட்டு, கடைசில அம்புட்டு பயலும் திருட்டுத்தனமா ஆன்லைன்லதான் இருக்கப்பாய்ங்க #களவாணி பய |
Posted: 14 Oct 2014 11:00 PM PDT |
Vadivel photo comments ah adichikka yentha sticker comments aaaliyum mudiyathu. . Posted: 14 Oct 2014 10:30 PM PDT |
Posted: 14 Oct 2014 10:00 PM PDT ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள் . முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை. குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது. டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான். சகோதர, சகோதரிகளே இதை நம் வீட்டு குழந்தைகள் எதிர்கால நலன் கருதி இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்தல் வேண்டும். நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் இருந்தோம் எனில் நம் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம். இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள், குத்துப் பாடல்கள், விரசா வரிகளை கேட்டு நம் இரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை. இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில... நேத்து ராத்த்தீரி அம்மா... வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள... கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா... இன்னும் நிறைய... விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது. இதை பெருமையுடன் அப்பனும், ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை. இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால்... இதை படித்ததோடு நிற்காது, பகிரவும். உங்கள் பகிர்வால், ஒருவரேனும் விழிப்புணர்வு அடையட்டும்... ![]() |
Posted: 14 Oct 2014 09:26 PM PDT ஜாதிகள் இல்லையடி பாப்பா... இது #பாரதியார் சொன்னது ஜாதி certificate கொடுத்தா தான் சீட்டு...நீ போ பா இது #பாரதியார் University ல சொன்னது.. |
Good morning frnds. Have a great day Posted: 14 Oct 2014 07:19 PM PDT |
Good night. . Have a Hansika dreams Posted: 14 Oct 2014 11:43 AM PDT |
Posted: 14 Oct 2014 11:07 AM PDT |
Posted: 14 Oct 2014 10:47 AM PDT படித்ததில் பிடித்தது ....... நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை! ''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்...'' என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. 'பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்' என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. ''நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா... இதெல்லாம் மனுசங்க வாழ்றது...''என்றது நகரத்து காக்கா. ''ஆமாமா... பார்த்தேன். ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே...''என்றது கிராமத்து காக்கா. நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றியது. ''கீழே பாரு... எவ்வளவு வாகனம் போகுது...'' ''வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு... கரும் புகை அடிச்சு அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறி காக்காவா ஆயிடப் போறாங்க!'' என்று 'கமெண்ட்' அடித்தது கிராமத்து காக்கா. நகரத்து காக்கா என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே, ''உடம்பெல்லாம் புழுதி படிஞ்சு ஒரே 'கச... கச...'ன்னு இருக்கு. குளிக்கணும்... ஆத்துக்கு கூட்டிட்டு போ...'' என்றது கிராமத்து காக்கா. ஆற்றை நெருங்க நெருங்க நாற்றம் அதிகரித்தது. ''ஆத்துலே குளிக்கணும்னு சொன்னா... இங்கே கூட்டிட்டு வந்து சாக்கடையை காட்டுறே...?'' என்றது கிராமத்து காக்கா. ''இந்த ஊருல இதுதான் ஆறு!'' ''ஆறா...? இதுல எங்க ஊரு பன்னிக்குட்டி கூட குளிக்காது. ஆமா நீ எப்படி குளிக்கிறே?'' நகரத்து காக்கா தயங்கியவாறே சொன்னது... ''மழை பெய்யும்போதுதான் குளிப்பேன்...'' ''அதுதான் உன் மேல் இவ்வளவு நாத்தமா?'' என்று முகம் சுளித்தது கிராமத்து காக்கா. ''சரி, வா கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்'' என்றது நகரத்து காக்கா. ''சாப்பிடுறதுக்காக எதுக்கு கடைத்தெருவுக்குப் போகணும்'' என்று ஆச்சர்யமாக கேட்டது கிராமத்து காக்கா. ''திருடி திங்கத்தான்''என்றது நகரத்து காக்கா. ''என்னது... திருடி திங்கவா...? கிராமத்துல 'கா...கா...'ன்னு கூப்பிட்டு சாப்பாடு போடுறாங்க. இங்கே திருட்டு பிழைப்பா இருக்கே! ச்சீ... ச்சீ... எனக்கு வேண்டாம். நான் கிராமத்துக்கே திரும்பப் போறேன். அங்கே கௌரவமாகவும், நிம்மதியாகவும் வாழலாம்'' என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது கிராமத்து காக்கா. அதை அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது நகரத்து காக்கா! |
Yeppavumey thala deepavali than.. Posted: 14 Oct 2014 10:13 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment