Tuesday, 14 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்! கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்...

Posted: 14 Oct 2014 09:38 PM PDT

ஐராவதீஸ்வரர் கோயில்,
தாராசுரம்!

கங்கைகொண்ட
சோழபுரம் மற்றும்
பிரகதீஸ்வரர்
கோவில்களில்
இருப்பதை விட சிறியதாக
இருந்தாலும், மிகவும்
நுணுக்கமான
வேலைப்பாடுகள்
கொண்டதாக
திகழ்கிறது ஐராவதம்
கோவில் சிற்பங்கள்.


Posted: 14 Oct 2014 06:50 PM PDT


முன் ஒரு காலத்தில்... @ஓவியர் மாருதி

Posted: 14 Oct 2014 10:31 AM PDT

முன் ஒரு காலத்தில்...

@ஓவியர் மாருதி


பிச்சை எடுக்காமல்,கோணி ப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை த...

Posted: 14 Oct 2014 08:58 AM PDT

பிச்சை எடுக்காமல்,கோணி
ப்பையில்
குப்பையை சேகரித்து சுயதொழில்
செய்து பிழைப்பவனை தான்

#பூச்சாண்டி
என்று சொல்லி குழந்தைகளுக்கு சோறூட்டுகிறோம்.
:(

@இளையராஜா

அக்கிரமம்,தெள்ளத் தெளிவாக நடக்கும் அநியாயம். ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்களின் கை...

Posted: 14 Oct 2014 08:30 AM PDT

அக்கிரமம்,தெள்ளத் தெளிவாக நடக்கும் அநியாயம்.

ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்களின் கையில் இருந்த போதெல்லாம் பற்றாக்குறை கணக்கைக் காட்டி வந்த சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்த சில காலத்திலேயே கோடிக்கணக்கான வருமானத்தைக் காட்டிய போதிலும் அந்தக் கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது என்றால் அது அக்கிரமம் அல்லாத வேறு என்ன?

தீட்சிதர்கள் கையில் கோயில் என்ற சேதி நமக்கு உணர்த்துவது என்ன?

@யுவான் சுவாங்

ஜெ விடுதலையாக அசைவம் கூடாது - அதிமுகவினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை. அதெல்லாம் கஷ்ட...

Posted: 14 Oct 2014 08:28 AM PDT

ஜெ விடுதலையாக
அசைவம் கூடாது -
அதிமுகவினருக்கு
ஜோதிடர்கள்
ஆலோசனை.

அதெல்லாம்
கஷ்டம்,ஒரு வாரம்
பார்த்துட்டு "அம்மாவ
வச்சுக்கோ, அயிரை
மீனை கொடு"ன்னு போஸ்டர்
அடிச்சுருவாங்க...

@பூபதி

டீ கடையிலும், தீப்பெட்டி ஆலையிலும், வெல்டிங் பட்டறையிலும் பார்க்கும் வரை தொழிலாள...

Posted: 14 Oct 2014 07:40 AM PDT

டீ கடையிலும், தீப்பெட்டி ஆலையிலும், வெல்டிங் பட்டறையிலும் பார்க்கும் வரை தொழிலாளர்களாகத் தெரியும் குழந்தைகள்,

விளம்பரங்களிலும், சீரியல்களிலும், சினிமாக்களிலும் பார்க்கும் போது நட்சத்திரங்கள் ஆகிவிடுகின்றனர்.

# சிறு தொழிலில் இருந்து, பணம் கொழிக்கும் பெருதொழிலுக்கு குழந்தைகளை மாற்றிவிட்டு குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்கிறோம்.

- கனா காண்கிறேன்

அறிவியலில் ஜெர்மானிய மொழி எப்படி ஓரங்கட்டப்பட்டு, ஆங்கிலம் உள்ளே புகுந்த்து என்க...

Posted: 14 Oct 2014 07:00 AM PDT

அறிவியலில் ஜெர்மானிய மொழி எப்படி ஓரங்கட்டப்பட்டு, ஆங்கிலம் உள்ளே புகுந்த்து என்கிற சிறிய கட்டுரையை சமீபத்தில் படித்தேன்.. சுவாரசியமான பல விசயங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன..

ஆரம்பத்தில் லத்தினில் தான் பல அறிவியல் கட்டுரைகள் வந்ததாம்.. ஐரோப்பிய யூனியனில் அறிவியல் ஹீரோ ஒரு காலத்தில் லத்தின் தானாம்.. பின் 1900களில் லத்தின் outdated ஆகி, உலகின் அறிவியல் கட்டுரைகளில் மூன்றில் ஒரு பங்கை ப்ரெஞ்சும், இன்னொரு பங்கை ஜெர்மனியும், இன்னொரு பங்கை ஆங்கிலமும் சரி சமமாகப் பெற்றிருந்தனவாம்.. அதாவது சென்ற நூற்றாண்டு ஆரம்பிக்கும் போது மூன்று மொழிகளும் அறிவியல் கட்டுரைகளைப் படைப்பதில் சரி சமமானப் போட்டியுடன் இருந்திருக்கின்றன.. இப்போது பார்த்தா முதல் உலகப்போர் வந்துத் தொலைக்க வேண்டும்?

முதல் உலகப்போரினால் பல நாடுகளுக்கும் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் எதிரிகள் ஆயின.. இதனால் ப்ரெஞ்சு மற்றும் ஆங்கிலேயே விஞ்ஞானிகள், ஜெர்மானிய விஞ்ஞானிகளை எந்த விதமான விஞ்ஞான மாநாட்டிலும் கலந்து கொள்ள விடாமல் தடுத்தனர்.. இந்த நேரத்தில் தான் வேதியியலுக்கென்று புதிதாக உலக அளவில் பல சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.. அவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டன.. அதுவரை வேதியியலில் கொடி நாட்டிய ஜெர்மனின் ஆதிக்கம் இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்த்து.. ஐரோப்பிய யூனியனில் இப்படி என்றால், அமெரிக்காவில் இன்னும் மோசமாக செய்தார்கள் ஜெர்மனியை ஒழிக்க..

அமெரிக்காவில் வேதியியலுக்காகவே ஜெர்மன் படித்தனர் பல மாணவர்கள்.. இதைத் தடுக்க அமெரிக்காவில் சில ஆண்டு காலம் பொது இடங்களில் ஜெர்மனியில் பேச, ஜெர்மானிய ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்க, 10வயதிற்குட்ட குழந்தைகளுக்கு ஜெர்மன் கற்றுக்கொடுக்க தடை விதிக்கப்பட்டன என்பது புதிதான, அதிர்ச்சியான தகவல்.. இதனால் பல அமெரிக்கர்களும் தங்கள் மொழியிலேயே அறிவியலைக் கற்க ஆரம்பித்தனர், ஆங்கிலத்திலேயே கண்டுபிடிப்புகளைப் பதிந்தனர்.. சில ஆண்டுகளில் அமெரிக்காவின் அறிவியலில் ஜெர்மனி இருந்த சுவடே இல்லாமல் போனது..

இப்போது ஜெர்மன் தனது கண்டுபிடிப்புகளை வீம்புக்காகவே ஜெர்மனியில் வெளியிட்டது… பிற அறிவியல் கோட்பாடுகளையும் தனது மொழியில் மெனக்கெட்டு மொழி மாற்றம் செய்தது… இது நிலைமையை இன்னமும் தான் மோசமாக்கியது… அதாவது ஜெர்மானியர்களுக்கென்று தனி அறிவியல் மொழி வந்துவிட்டதால், அவர்களால் பழையபடி உலகோடு போட்டி போட்டு வளர முடியவில்லை அறிவியல் மொழியில்.. ஏனென்றால் அமெரிக்கா இப்போது ஆங்கிலம் தான் அறிவியலுக்கான மொழி என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டிருந்தது.. பின் அமெரிக்கா ஒரு உலக ஜாம்பவனாக வளர்ந்த போது மொத்த அறிவியலும் ஆங்கிலத்தைக் கொண்டு தம்மை படைத்துக்கொண்டன..


Petroglyphs in Tamil Nadu:- அப்படினா என்னனு தெரியுமா? எனக்கும் முதலில் தெரியவி...

Posted: 14 Oct 2014 03:45 AM PDT

Petroglyphs in Tamil Nadu:-

அப்படினா என்னனு தெரியுமா?

எனக்கும் முதலில் தெரியவில்லை, அப்புறமா தான் 10000 B.C , ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்து நியாபகம் வந்துச்சி. ஆயிரத்தில் ஒருவன் உங்களில் எத்தனை பேர் பார்த்து இருகிறிர்கள்? அதில் பாறையில் இருக்கும் ஓவியத்தின் மூலமாகவே சில விஷயங்களை பார்த்திபன் கூறுவார் அது போல உலகில் பல இடங்களில் இந்த மாதிரி ஓவியங்கள் கண்டு பிடிக்க பட்டது, ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு கதையையோ, வழிதடங்களையோ, மிருகங்களையோ குறிக்கும்.

தமிழ் நாட்டுல இப்படி பட்ட கண்டுபிடிக்கப்பட்டது, பெருமுக்கல், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், என்ற இடத்தில் உள்ள மலை குகையில் கண்டுபிடிக்க பட்டது.

அந்த ஊரு தமிழ் வரலாற்றை குறிக்கும் என்று யாருக்கும் தெரியாத ஊர்.

சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊரு 6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 4000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இப்படி பட்ட ஊர் நம் தமிழர்கள் எத்தனை பேருக்கு தெரியும்???
- கிஷன்


வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா சந்தோசமா இருக்கலாம்னு சின்ன வயசுல நினைச்சது...

Posted: 14 Oct 2014 01:32 AM PDT

வேலைக்கு போய்
சம்பாதிக்க ஆரம்பிச்சா
சந்தோசமா இருக்கலாம்னு சின்ன
வயசுல
நினைச்சது தான்..

#சின்னபுள்ளைத்_தனம்!!

@சாமுவேல் ராஜா

உங்கள் வாழ்க்கையில் இப்படிபட்ட கெட்ட செயல்கள் நடக்க போகிறது, அதை தவிர்க்க இன்னின...

Posted: 14 Oct 2014 01:23 AM PDT

உங்கள் வாழ்க்கையில்
இப்படிபட்ட கெட்ட
செயல்கள் நடக்க
போகிறது,
அதை தவிர்க்க இன்னின்ன
பரிகார பூசைகள் செய்ய
வேண்டும் என
பரிந்துரை செய்யும்
சோதிட சிகாமணிகள்,
புயல் போன்ற பெரும்
ஆபத்துகளை முன்னமே கூறாமல்
தவிர்ப்பது ஏன் ?...சரி கணிப்பதில்
ஏதேனும் டெக்னிகல்
பால்ட் இருக்கலாம் என
அதை தவிர்த்தாலும்,
வரப்போகும் புயலை,
தடுக்கவும்
அல்லது வேறு பக்கம்
திருப்பவுமாவது சிறிது பரிகாரங்கள்
கூறினால் மக்கள்
ஆபத்தின்றி வாழலாம்
அல்லவா ...சோதிடர்கள்
எதிர்காலத்தில் இந்த
வாய்ப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க
வேண்டுமாறு தாழ்மையுடன்
கேட்டு கொள்கிறேன் ....

Posted: 14 Oct 2014 01:16 AM PDT


லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்...

Posted: 14 Oct 2014 12:45 AM PDT

லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச்

1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க, நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த கவனிச்சோம்.

2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட் நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின உடனே முன்னாடி கொண்டு போய் வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன் காப்பி அடிச்சிட்டு கொடுக்கற வரை காத்திருப்போம்.

3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க யோசிச்சிட்டு இருக்கப்ப, பரிட்சையே வராமா இருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க யோசிச்சிட்டு இருந்தோம்.

4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ் கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னு டிப்ஸ் கொடுத்து உதவி செஞ்சோம்.

5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க சாதனை செஞ்சிங்க. நாங்க நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற சாதனையை செஞ்சோம்.

6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா, ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க. எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட்.

7. நீங்க பாடம் புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க எங்களுக்கு போர் அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.

8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம் வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க அதுக்காகவே வருசம்பூரா வெயிட் பண்ணோம்.

9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம் டேபிள் வந்த உடனே படிக்க ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ் ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான் புக்கையே எடுப்போம்.

10. வாத்தியார் பனிஸ்மென்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டா, அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட் எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப் படுவோம்.

11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ் தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க. சீட்டிங் அரெஞ்ச்மென்ட் தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம்

# மொத்தத்துல நீங்க வாழ்க்கைய தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம்.

- ஆதிரா


ஜெயலலிதாவுக்கு விரைவில் ஜாமின் கிடைக்க...மஞ்சள் நிறத்தில் வஸ்திர தானம் செய்யலாம்...

Posted: 13 Oct 2014 11:15 PM PDT

ஜெயலலிதாவுக்கு விரைவில்
ஜாமின்
கிடைக்க...மஞ்சள்
நிறத்தில் வஸ்திர தானம்
செய்யலாம். மஞ்சள் நிற
உணவை, அன்னதானமாக
வழங்க வேண்டும். மஞ்சள்
நிற சுண்டல்,
புளி சாதம்
போன்றவற்றை,
அன்னதானமாக வழங்க
வேண்டும் - ஜோதிடர்
ஷெல்வி. :P

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ச் சாதகமா...

Posted: 13 Oct 2014 11:01 PM PDT

உயிர் காக்கும் மருந்துப்
பொருட்களின்
விலைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு
ச் சாதகமாக,
பதினான்கு மடங்கு விலை உயர்த்திய
மக்கள் விரோத
மோடி அரசை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.


0 comments:

Post a Comment