Relax Please: FB page daily Posts |
- அருமையான குடும்பம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- எதிர்கொள்ளும் எல்லாத்தையும் மாற்ற முடியாது... ஆனால் எதிர்கொள்ளாமல் எதையுமே மாற்...
- ஹா ஹா.. மிடியல :P :P
- SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...! 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வ...
- மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :- ”’உணவே மருந்து’ என்பத...
- :) Relaxplzz
- மனைவி : என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கணவன் : இந்த 'ஈ' தொல்லை தாங்க மு...
- மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை பொறுக்க முடியும். ஆனாலும், பிரசவத்தின்...
- :P :P
- ஒரே வரியில்..... "மனிதன்" (y) (y)
- :) Relaxplzz
- நம்பலையா அண்ணாச்சி? பாருங்க இந்த பொண்ணத் தான் லவ் பண்றேன்... அண்ணாச்சி: யோவ் அத...
- கண்டுபிடிப்போம்ல... #லிங்கா ... :P :P
- நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலம...
- "முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில...
- " தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளை கவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்க...
- ஹா ஹா.. மிடியல :P :P
- இது போன்ற பசுமை சூழ் இடத்தில் வசிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரன...
- முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறான் மகன்....
- நாம் ஏன் இப்படி..??? 1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத்...
- :) Relaxplzz
- உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க, ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்... இல்லை, கடவுளாக...
- ஆண்களும் அழகாதான் இருக்கிறார்கள்.. . . . . . . . . . . . . . . . . . . . அவர்களை...
- பனங்கிழங்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
Posted: 12 Dec 2014 09:38 AM PST |
Posted: 12 Dec 2014 09:30 AM PST |
Posted: 12 Dec 2014 09:20 AM PST எதிர்கொள்ளும் எல்லாத்தையும் மாற்ற முடியாது... ஆனால் எதிர்கொள்ளாமல் எதையுமே மாற்றிவிட இயலாது !! ![]() "யதார்த்தங்கள் - தத்துவங்கள்" |
ஹா ஹா.. மிடியல :P :P Posted: 12 Dec 2014 09:15 AM PST |
Posted: 12 Dec 2014 09:10 AM PST SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...! 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய. 2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய. 3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும். 4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய. 5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock). 6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த. 7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய. 8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய. 9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண. 10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய. 11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண. 12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய. 13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய. 14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய. 15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க. 16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய. ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது. Relaxplzz |
Posted: 12 Dec 2014 09:00 AM PST மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :- "'உணவே மருந்து' என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…" பிரண்டைச் சத்துமாவு தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம். செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம். மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும். அஷ்ட வர்க்க உணவுப்பொடி தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம். செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி! மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து. இஞ்சிப் பச்சடி தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார். மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும். எள்ளு சாதம் தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்! மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும். வேப்பங்கொழுந்து துவையல் தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு. செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும். மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். Relaxplzz ![]() |
Posted: 12 Dec 2014 08:55 AM PST |
Posted: 12 Dec 2014 08:50 AM PST மனைவி : என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கணவன் : இந்த 'ஈ' தொல்லை தாங்க முடியல...அதான் அடிச்சுகிட்டு இருக்கேன்.... மனைவி : அடிச்சீங்களா இல்லீயா... கணவன் : அடிச்சேன்....3 ஆம்பிளை ஈ யும், 2 பொம்பளை 'ஈ' யும்... மனைவி : என்னது ஆம்பிளை ஈ, பொம்பிளை 'ஈ'யா அதெப்படி உங்களுக்கு தெரியும்? கணவன் : ஏன்னா...3 ஈ தண்ணி கேன் மேலே நின்னுகிட்டு இருந்துச்சு...2 ஈ போன் மேலேயே நின்னுகிட்டு இருந்துச்சு... மனைவி .- அவ்வ்வ்வவ் :P :P Relaxplzz |
Posted: 12 Dec 2014 08:45 AM PST மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை பொறுக்க முடியும். ஆனாலும், பிரசவத்தின் போது நம் தாய் 57 டெல் யூனிட் வலியை நமக்காக தாங்கிகொள்கிறார், இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படும் வலிக்கு சமம். என்னை ஈன்றெடுத்த என் தாய் தான் எனக்கு முதற்கடவுள் "தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை"... "தாய்மையை உணர்வோம்"... "பெண்மையை போற்றுவோம்" Relaxplzz ![]() |
Posted: 12 Dec 2014 08:40 AM PST |
Posted: 12 Dec 2014 08:35 AM PST |
Posted: 12 Dec 2014 08:29 AM PST |
Posted: 12 Dec 2014 08:25 AM PST |
Posted: 12 Dec 2014 08:20 AM PST |
Posted: 12 Dec 2014 08:10 AM PST நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?" "கடிக்காது..." "ஏம்பா கடிக்காது?" "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..." "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?" "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..." "கடவுள் நல்லவராப்பா?" "ரொம்ப நல்லவர்...." "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?" "அது அப்படித்தான் நீ தூங்கு..." "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?" "அதுக்கு பசிக்குது..." "கொசு இட்லி சாப்பிடுமா?" "அதெல்லாம் பிடிக்காது..." "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?" "வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..." "ஒரே ஒரு கேள்வி அப்பா ?" "கேட்டுத் தொலை" "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?" "அதுக்கு பல்லே இல்லை..." "பிறகு எப்படி கடிக்கும்?" "அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..." "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" "இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??" "நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?" முடியல... ஆனாலும் இது இன்பமே... # பெண்குழந்தைகள் வாழும் வீடு, தேவதைகள் வாழும் வீடு... ♥ ♥ Relaxplzz |
Posted: 12 Dec 2014 07:57 AM PST "முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார். ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... "சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா. இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. "விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு".... "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதாவது சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே என்று தயங்கி தயங்கியே சுத்தியலை இரவல் கேட்காமல் பல நாட்களை கழித்துவிட்டார் முல்லா. மாட்டப்படாத கடிகாரம் அடிக்கடி முல்லாவின் கண்களில் பட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முல்லா விருட்டென்று பக்கத்து வீட்டுக்குச் சென்றார். "யோவ்.. உன் சுத்தியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம்.. அத நீயே வெச்சுக்கோ" என்று சத்தம் போட ஆரம்பித்தார். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றுமே புரியவில்லை".. நகைச்சுவை கதையாகத் தெரிந்தாலும் இது தெரிவிக்கும் ஆழமான கருத்தையும் நாம் உணர வேண்டும். இதில் வரும் முல்லாவைப் போலத் தான் கணவன் மனைவி தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் பகிர்வதைத் தவிர்த்து மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்குகின்றனர். இறுதியில் உறவை அறுத்து எறியும் அளவுக்கு பெரிய சண்டை அவர்களுக்குள் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான வைத்தியமும் முக்கியம், நோயே வராதவாறு தடுப்பு முறைகளை கையாளுவதும் மிக முக்கியம்.. Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 12 Dec 2014 07:50 AM PST |
ஹா ஹா.. மிடியல :P :P Posted: 12 Dec 2014 07:46 AM PST |
Posted: 12 Dec 2014 07:40 AM PST |
Posted: 12 Dec 2014 07:29 AM PST |
Posted: 12 Dec 2014 07:20 AM PST விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரனுக்குக்கீழ் கிடைப்பதில்லை...!!! #வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கான பதிவு. ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
Posted: 12 Dec 2014 07:11 AM PST முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறான் மகன். பன்னிரண்டு மணிக்கு கதவு திறந்தால், முகத்தில் கேக் பூசிக் கத்துகிறார்கள் நண்பர்கள். அம்மா அப்பாவுக்கு எண்பதாம் கல்யாணம் நடக்கிறது. பெண்ணுக்கும் பையனைப் பிடித்திருக்கிறது. 'தாயும் சேயும் நலம்' என்று டாக்டர் சொல்கிறார். பலவருஷமாக தேடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட நண்பன் பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் அனுப்புகிறான். உச்சம் எய்திய பின் நெற்றியில் முத்தமிடுகிறான் காதலன். முகம் பார்க்கிறக் கண்ணாடியில் ரோஜாப் பூவை ஒட்டி வைத்து விட்டுச் சென்றிருக்கிறான், மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியூர் புறப்பட்டுப் போன கணவன். அடர்ச்சிவப்பு நிறக் காட்டுப்பூ ஒன்று மலர்கிறது. ஒரு விலைமகளை முதன்முதலாக ஒருவன் காதலோடுப் புணர்கிறான். கிரீட்டிங் கார்டைத் திறந்தால் பாட்டுக் கேட்கிறது. நண்பர்கள் மட்டும் அழைத்து, ஒரு மலைக்கோயிலில் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். பிரமாதமான ஒருக் கவிதையைப் படித்தவுடன் ஒருக் கண்ணீர்த்துளி எட்டிப் பார்க்கிறது. வெட்கத்துக்கு அவசியம் இல்லாமல் இன்பம் தாளாமல் வாய் விட்டு முனகுகிறாள் அவள். ஒரு மயில் தோகை விரிக்கிறது. கையில் மருதாணி வைத்திருக்கிற விடிந்தால் மணம் ஆகப் போகிறப் பெண்ணுக்கு ஊட்டி விடுகிறார் அப்பா. முதல் போட்டு சொந்தமாகப் புதுத் தொழில் தொடங்குகிறான் ஒருத்தன். ஒருக் குழந்தைத் தூக்கத்தில் சிரிக்கிறது. வானம் சட்டென்று மூடுகிறது. இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா தேவதைகளும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் இருக்கும் சந்தோஷமான தருணங்களை அனைத்தும் கண் முன்னே வந்து செல்கிறது :) :) - Sundar Srinivas. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 12 Dec 2014 07:00 AM PST நாம் ஏன் இப்படி..??? 1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுகின்றனர். 2. அயல்நாட்டில், ஒரு அதிகாரியிடம் இரண்டு நாள் பழகிவிட்டு மூன்றாவது நாள் ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து நமக்கு தேவையான காரியத்தை சுலபமாய் சாதித்துக் கொள்ள முடியாது. 3. அலுவலகத்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அருகில் ஒரு பொருள் இருக்கிறது. அதை எனக்கு எடுக்க வேண்டும் என்றால் நானே எழுந்துச் சென்று தான் எடுக்க வேண்டும். " அதை கொஞ்சம் எடுக்கறியா" என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. நமது சுய தேவைக்கு ஒருவரை தொந்தரவு செய்வது அநாகரீகம். உதவி என்பது வேறு. இது வேறு. மேலாளர் தான் என்றாலும் இதைக் கொண்டு வா. அதை அங்கு வை. என கட்டளையிடும் உரிமை எவருக்கும் இல்லை. 4. எந்த சூழ்நிலையிலும் தேவையான இடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் தன் தாய்மொழியை விட்டுத் தர மாட்டார்கள். 5. எனக்குப் பிடித்த மாணவன் என மதிப்பெண்ணை அள்ளி வழங்க மாட்டார்கள். பிடிக்காதவன் என கிள்ளியும் வழங்க மாட்டார்கள். 6. எந்த நாட்டுச் கலாச்சாரத்தில் எது பிடித்திருந்தாலும் அதை இரசிப்பார்கள், இரண்டாம் பட்சமாக மட்டுமே. இது பிடித்தது என்று மறுநாளே அதற்கு மாறிவிட மாட்டார்கள். 7. செக்யூரிட்டி வேலை செய்பவர் என்பதால், அவர் கதவை திறந்து விட்டு ஒவ்வொருவரையும் வணங்க வேண்டும் என்பதில்லை. கழிப்பறை சுத்தம் செய்பவர் எனினும், செக்யூரிட்டி எனினும் ப்ராஜெக்ட் மேனேஜர் எனினும் அனைவரும் சமமே. இன்னும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது. நம்மிடம் அவர்கள் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் அவர்கள் இரசிப்பதை அவர்களுக்கு பிடித்ததை அவர்களுக்கு உகந்ததை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கவே இந்த பதிவே தவிர அயல்நாட்டவரின் அனைத்து கலாச்சாரத்தையும் ஆதரிப்பதற்கு அல்ல. மேற்சொன்ன எதையேனும் கற்றோமா? நாகரீகம், மேலை நாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் கண்ட படி உடுத்தவும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றவும், கண்ட இடத்தில் பிசா பர்கர் என கண்டதை உண்ணவும் கற்றுக் கொண்டோமே தவிர நல்லதைக் கற்க மறந்தோம். நம் நாட்டில் அரசியல் வாதிகள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என்றல்ல. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஊழல். அவற்றை முதலில் களையெடுப்போம். அயல் நாட்டைப் பார்த்து கற்கும் ஆசை வந்தால் நல்லதை மட்டும் கற்போம். அதுவும் ஆசைக்கே. நம் திருவள்ளுவர் எழுதி வைத்ததை கற்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. சிந்தனையில் மாற்றம் கொள்வோம். அதுவே உண்மையான நாகரீக வளர்ச்சி. பி.கு : அயல்நாடு என்று நான் பார்த்த சில ஐரோப்பிய நாடுகளை மனதில் வைத்தே எழுதினேன். -ஆதிரா Relaxplzz ![]() |
Posted: 12 Dec 2014 06:55 AM PST |
Posted: 12 Dec 2014 06:50 AM PST உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க, ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்... இல்லை, கடவுளாக வேண்டும்...!!! - Kalimuthu ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 12 Dec 2014 06:45 AM PST ஆண்களும் அழகாதான் இருக்கிறார்கள்.. . . . . . . . . . . . . . . . . . . . அவர்களை வர்ணிக்க, பெண்களுக்கு தான் மனசு வருவதில்லை.. :P :P உண்மைதான..?? ;-) Relaxplzz |
Posted: 12 Dec 2014 06:40 AM PST |
Posted: 12 Dec 2014 06:30 AM PST |
Posted: 12 Dec 2014 06:23 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment