Saturday, 22 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பேசாமலே இருந்தாலும் மன்மோகன்சிங் நமக்கும் பிரதமர்ங்கிற உணர்வு இருந்துச்சு வாயத்த...

Posted: 22 Nov 2014 07:37 PM PST

பேசாமலே இருந்தாலும்
மன்மோகன்சிங் நமக்கும்
பிரதமர்ங்கிற
உணர்வு இருந்துச்சு
வாயத்தொறந்தாலும்
வெறும்
ஹிந்திய மட்டும் பேசுற மோடிய
பாத்தா அப்படி தோனல!

பூரிகட்டைக்கி எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறாங்கெனு தெர்ல!! பூராம் பயந்தாகோலி ப...

Posted: 22 Nov 2014 05:46 PM PST

பூரிகட்டைக்கி எதுக்கு இவ்ளோ பில்டப்
கொடுக்குறாங்கெனு தெர்ல!! பூராம்
பயந்தாகோலி பசங்க!!
அப்டிலாம் ஒன்னும்
வலிக்காது பாஸ்!!
அஞ்சு செகென்ட்
குருவி சுத்தும்
ஆறாவது செக்கென்ட்ல
நார்மலாயிரும்!!
சப்பமேட்டரு!!

@சத்தி லிங்க்

தென்னக இரயில்வேயில் தமிழனுக்கு இனி வேலை வாய்ப்பு இல்லை. திருச்சி ரயில்வே நிலையத்...

Posted: 22 Nov 2014 09:48 AM PST

தென்னக இரயில்வேயில்
தமிழனுக்கு இனி வேலை வாய்ப்பு இல்லை.
திருச்சி ரயில்வே நிலையத்தில்
இன்று (23.11.2014 )
நடைபெறும் தேர்வில்
கலந்து கொண்டு தேர்ச்சி பெற
காத்திருக்கும்
ஆயிரக்கணக்கான வட
இந்திய, கேரள இளைஞர்கள்
கூட்டம்.


காவிரியில் கர்னாடகா தடுப்பணைகள் கட்டுவது அவசியம். தமிழகம் தடுக்கக் கூடாது - கர்ன...

Posted: 22 Nov 2014 07:42 AM PST

காவிரியில் கர்னாடகா தடுப்பணைகள் கட்டுவது அவசியம். தமிழகம் தடுக்கக் கூடாது - கர்னாடக பாசகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார்.

#நம்மக்களைத் தவிர மீதி எல்லானுமே முதலில் தங்கள் இனத்தானா தான் இருக்கான், இந்தியன் என்பதெல்லாம் கூட்டுக் கொள்ளைக்கு மட்டும்தான் பயன்படுத்தறான். ஆனால் இ.வா தமிழன் மட்டும் தான் இந்தியன் என்று தன் வீட்டைத் திறந்துவைத்துள்ளான், இந்தியன் வந்து கொள்ளையடிக்க.

காந்தள்!

Posted: 22 Nov 2014 07:25 AM PST

காந்தள்!


மனம் பதை பதைக்கும் மனித உரிமை மீறல்

Posted: 22 Nov 2014 06:44 AM PST

மனம் பதை பதைக்கும் மனித உரிமை மீறல்




தமிழக கூலி தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூர தாக்குதல்....#BrutalAttack #ForestOfficials #AndhraPradesh

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வ...

Posted: 22 Nov 2014 06:31 AM PST

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்துள்ளது,

அதில் பங்கேற்ற கட்சிகள் தமிழரசுக் கழகம், தமிழரசு பொதுவுடமைக் கட்சி, தமிழரசு சோசலிசக் கட்சி,

நிராகரித்தவை எதுவென்று தெரியுமா? தீராவிடர் கழகமும், பேராயக்கட்சியுமாம்,

பார்ப்பனீய கட்சியும், பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கமும் கலந்துக்கொள்ளாதது ஏன்?

சேட்டன் பணிக்கர் வந்தார், இவ்விரண்டு ஸ்தலங்களும் மலையாளிகளுக்கே ஃசொந்தம், தமிழர்கள் இவ்விட பணிக்காரானு என்று தீராவிடரிடம் பறஞ்சதும்,

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிற்குள் தானே உள்ளது என தேசியவாதியும் சொன்னதா இருக்குமோ?

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் தமிழ்ப் பிராமியில் "தமிழ...

Posted: 22 Nov 2014 02:41 AM PST

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

தமிழ்ப் பிராமியில் "தமிழ்" என்ற சொல்
வெளிநாடுகள் (எகிப்து, தாய்லாந்து, ஓமன்)
• எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் "பானை ஒறி" என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன

• கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

• ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை
• கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன.

• தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
• கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டன.
• கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று 'சேரன்' என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு
• ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு
• கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.
• கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.
• தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் "மு-ன-க-ர" எனவும் "மு-ஹ-க-டி" எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.
• ஐந்தாம் 'வீரர்' கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர்கள், தமிழ்நாடு
• அரசலூர்
• அழகர் மலை
• ஆனைமலை
• எடக்கல் கல்வெட்டு
• கருங்காலக்குடி


நேற்று 'டிஸ்கவரி தமிழ்' தொலைக்காட்சியில் நெகிழி (Plastic) மறுசுழற்சி பயன்பாடு பற...

Posted: 22 Nov 2014 01:35 AM PST

நேற்று 'டிஸ்கவரி தமிழ்' தொலைக்காட்சியில் நெகிழி (Plastic) மறுசுழற்சி பயன்பாடு பற்றி ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன்.அதில் சில ஐரோப்பிய நாடுகள் நெகிழியை மறுசுழற்சி செய்து ரயில் தண்டவாளங்களுக்கு கீழ் இருக்கும் 'ஸ்லிப்பர்' கட்டைகளாக உருவாக்கி பயன்படுத்துகின்றன.
சாதாரணமாக மரங்களால் ஆன மரக்கட்டைகள்தான் தண்டவாளங்களுக்கு கீழ் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த மரக்கட்டைகள் வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால் குறிப்பிட்ட காலத்திற்குபிறகு சிதைந்து சேதம் அடைகின்றது. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்படும் 'ஸ்லிப்பர்' கட்டைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சேதம் அடைவதில்லை.

இதனால் இரு வகை பயன்கள் உண்டு.

1.பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க முடியாமல் தினறி வந்த பல நாடுகளுக்கும் தற்போது மாற்றுவழி கிடைத்துவிட்டது.

2.ரயில்வே துறையில் தண்டவாளங்களுக்கு கீழே பயன்படுத்தப்படும் மரக்கட்டைகளுக்கு பதில் இதுபோன்ற பிளாஸ்டிக் ஸ்லிப்பர் கட்டைகளை பயன்படுத்தினால் கோடிக்கான மரங்கள் வெட்டப்படுவது குறையும்.

இந்தியாவில் ரயில் பாதைகளின் நீளமும் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் அதிகம்.பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்திய ரயில்வே துறையும் இதுபோல பயன்படுத்தலாமே. மரக்கட்டைகளை ஒப்பிடும்போது இதன் தேய்மானம் குறைவு ஆயுள் அதிகம்.

@நம்பிக்கை ராஜ்


The Tamil Bell Tamils have long been seafarers and traders. It is believed that...

Posted: 22 Nov 2014 12:36 AM PST

The Tamil Bell

Tamils have long been seafarers and traders. It is believed that they reached northern Australia by the 14th century, and there is a suggestion that they may have got as far as New Zealand. In 1836 the missionary explorer William Colenso found this bell, which had been used by Māori as a cooking vessel for generations. Inscribed on it in Tamil are the words 'Mohoyideen Buk's ship's bell'. The bell is now held at the national museum, Te Papa. Theories abound, but the precise origins of the bell and how it got to New Zealand remain a mystery.

http://tamilnation.co/diaspora/newzealand.htm

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34830

http://www.jps.auckland.ac.nz/document//Volume_84_1975/Volume_84,_No._4/The_story_of_the_Tamil_bell,_by_Brett_Hilder,_p_476-484/p1

http://collections.tepapa.govt.nz/object/213397

http://www.teara.govt.nz/en/photograph/1135/the-tamil-bell

வெலிங்டனில் தமிழ்மணி!

நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள "ரே பாபா' தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 500 ஆண்டுகள் பழைமை மிக்கதாகக் கருதப்படும் பண்டைத் தமிழர்களின் தமிழ்மணி (ANTIQUE TAMIL BELL). இதை மிசினரி வில்லியம் கொலன்சோ (William Colenso) என்பவர் 1836-இல், நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள வங்கரே (Wangarei) என்ற நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மயோரி இனத்தைச் சேர்ந்தவர்கள். அம்மக்கள் இதை சமையல் பாத்திரமாக (குறிப்பாக உருளைக்கிழங்கு வேகவைக்க)ப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும், உடைந்த நிலையில் காணப்படும் இந்தத் தமிழ்மணி பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி என்றும், இந்த மணி பல ஆண்டுகளுக்கு முன் சூறாவளியால் தூக்கி எறியப்பட்ட ஒரு பெரிய மரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்றும் கொலன்சோ கூறியுள்ளார். "புரிரி' என அழைக்கப்படும் அந்த மரத்தில் இந்த மணி பல்லாண்டு காலம் மறைந்து கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

13 செ.மீ. உயரமும் 9 செ.மீ அகலமும் உடைய இந்த மணியைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்மணி, மயோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்தது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.


யார்கூடயாச்சும் பேசும்போது உடனே பதில் வந்தா.. அவங்களும் பேச பிரிய படறாங்கன்னும்...

Posted: 22 Nov 2014 12:08 AM PST

யார்கூடயாச்சும்
பேசும்போது உடனே பதில்
வந்தா.. அவங்களும் பேச
பிரிய படறாங்கன்னும்
லேட் ஆச்சுன்னு போர்
அடிக்காதேன்னும்
அர்த்தம்..

@கயல்விழி

கோபம் என்பது ரொம்ப உயர்ந்த விஷயம். நேசிப்பு மாதிரி உண்மையான விஷயம். @கயல்விழி

Posted: 22 Nov 2014 12:03 AM PST

கோபம் என்பது ரொம்ப
உயர்ந்த விஷயம்.
நேசிப்பு மாதிரி உண்மையான
விஷயம்.

@கயல்விழி

'நி எங்கே உருப்படப்போற' என ஆணும், 'உன்னை கட்டிக்கப் போறவன் என்ன பாடுபடப் போறானோ'...

Posted: 21 Nov 2014 11:59 PM PST

'நி எங்கே உருப்படப்போற'
என ஆணும்,
'உன்னை கட்டிக்கப்
போறவன் என்ன பாடுபடப்
போறானோ' என
பெண்ணும்
வசவு வாங்கி வளர்கிறார்கள்.

@மிருதுளா

வாய்ச்சொல் வீரன் இவன்.. (குறுந்தொகை:8) இது காதற் பரத்தையர் ஒருத்தி, தலைவனைக் கு...

Posted: 21 Nov 2014 11:51 PM PST

வாய்ச்சொல் வீரன் இவன்.. (குறுந்தொகை:8)

இது காதற் பரத்தையர் ஒருத்தி, தலைவனைக் குறித்து சொன்னது...

வாய்க்காலுக்கு அருகில் உள்ள மாமரத்திலிருந்து, விழுந்த முற்றியக் கனியை, நீரில் நீந்திவரும் வாளை மீன் எளிதில் கவ்விக்கொள்ளும்.. இத்தகைய ஊரையுடைய தலைவன் இவன். இவன் என் வீட்டிற்கு வந்தால்.."தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான்.. ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்..!! (இவனது வாய்ச்சொல் வீரமெல்லாம் என்னிடம்தான்!!)
******************************************

கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.

-ஆலங்குடி வங்கனார்

மெரினா கடற்கரை!

Posted: 21 Nov 2014 11:01 PM PST

மெரினா கடற்கரை!


0 comments:

Post a Comment