Relax Please: FB page daily Posts |
- சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை ஆசியாவில் முதலில் (1819) துவங்கப்பட்ட பழமையான க...
- உங்களுக்கு உங்களை பற்றி தெரியுமா? இப்போ நீங்களே தெரிஞ்சிக்க போரீங்க. .. . . ....
- இதில் ஒன்னு பையன் , அது யாருன்னு சொல்லுங்கள் பார்க்கலாம்
- :) Relaxplzz
- உச்சியை தொட செவிடாய் இரு :) சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்...
- இரவு 12 மணி இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே...
- :P :P
- "கர்ப்பமா இருக்க பொண்டாட்டிக்கு குங்குமப்பூ வாங்கித் தந்தா குழந்தை செகப்பா பிறக்...
- (y) Relaxplzz
- கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு...
- "காணாமல் போனவைகள்" - பவுனு மிட்டாய் .... ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்ட...
- விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல..!! வெறுத்தாலும் விடாமல் இருப்பது தா...
- பசுமையான சூழலில் இருக்கும் இது போன்ற வீட்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- Female ல் male இருக்கு Lady ல் lad இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்...
- இந்த ஜென்மத்தில் ஒன்னரை கிலோ அளவுக்கு சேவை செய்தால் மறுமையில் ஒன்னரை டன் அளவுக்க...
- :) Relaxplzz
- தர்மன் உருட்டிய தாயம் யூதாஸ் கொடுத்த முத்தம் புத்தர் பார்த்த மரணம் காந்தி கண்ட...
- :) Relaxplzz
- ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எத...
- முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி...
- MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா... நண்பன்: இல்லைப்பா... நாங்க கற...
- :) Relaxplzz
- விமானம் பறந்து கொண்டிருந்தது மதுபான சேவை தொடர்ந்தது ஐந்தாறு peg ஆன பிறகு .......
- அந்தக் காலத்தில....
- உங்கள் தாய் மொழி தவிர்த்து உங்களுக்கு பிடித்த மொழி ஏது??
- :) Relaxplzz
- பொது அறிவு வினா-விடைகள் :- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அ...
- இப்படித்தானொருநாள்.. வாணியுடன் ஃபோனில்பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று அவளது கேள...
Posted: 23 Nov 2014 09:07 AM PST |
Posted: 23 Nov 2014 08:50 AM PST உங்களுக்கு உங்களை பற்றி தெரியுமா? இப்போ நீங்களே தெரிஞ்சிக்க போரீங்க. .. . . . . 1.நம்மால் ஒரே நேரத்துல ரெண்டு கண்களையும் சிமிட்ட முடியாது. . . . . . . . . . . . . . . . . .,., 2. உடனே அதை முயற்சி செய்ஞ்சு பார்த்துருப்பீங்க. 3. பல்ல காட்டாதீங்க, ஒரு நல்ல டாக்டரா பார்த்து செக் பண்ணிக்குங்க. இப்போ தெரிஞ்சிசச்சா ? :P :P Relaxplzz |
Posted: 23 Nov 2014 08:40 AM PST |
Posted: 23 Nov 2014 08:30 AM PST |
Posted: 23 Nov 2014 08:15 AM PST உச்சியை தொட செவிடாய் இரு :) சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் "இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! சாத்தியமே கிடையாது!" என கூறினார். கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன. "இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது" கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர். இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது. எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது. அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள். அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று. "முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ, செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது," (y) (y) Relaxplzz |
Posted: 23 Nov 2014 08:01 AM PST இரவு 12 மணி இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்து விட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது, தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்! இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்! வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது, Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?! மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்! வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள், உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன! பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது, பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது! அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்! ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை இந்த கனவும் அப்படித்தான கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்! பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது. -Arivumani https://www.facebook.com/joshua.arivumani Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 23 Nov 2014 07:50 AM PST |
Posted: 23 Nov 2014 07:40 AM PST "கர்ப்பமா இருக்க பொண்டாட்டிக்கு குங்குமப்பூ வாங்கித் தந்தா குழந்தை செகப்பா பிறக்குமாம்,ஆனா குங்குமப்பூ அநியாய விலை விக்குதே" என்று நண்பன் வருத்தப்பட்டான். "பேசாம கேசரி பௌடர் வாங்கி கொடுடா,விலையும் குறைவு,குழந்தை இன்னும் செகப்பா பிறக்கும்"ன்னு ஐடியா கொடுத்துருக்கேன். :O :O - Boopathy Murugesh @ Relaxplzz |
Posted: 23 Nov 2014 07:30 AM PST |
Posted: 23 Nov 2014 07:15 AM PST கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா? அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது? இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா? இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க... கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது... அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்... சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா? கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்? உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்.. எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்... அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது.. கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்... வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்... நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்... இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்... இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள். நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்... நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை... உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன் ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்.. உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்... ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..அதுதான் நம் வெற்றியின் வழி.. வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்... அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்... பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்... --"ரெளத்ரம் பழகுவோம்" இப்பதிவை பகிருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள். http://www.tamilboomi.com/2014/03/blog-post.html Relaxplzz |
Posted: 23 Nov 2014 07:09 AM PST "காணாமல் போனவைகள்" - பவுனு மிட்டாய் .... ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்டவடிவமாக்கி அதனை அழகாக பொன்னிற சரிகை பேப்பரில் சுற்றி பார்க்க பவுன் போன்று தோற்றமளிக்கும் .சுவை எண்ணவோ பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் தங்க மிட்டாய் என்று சிறுவர்கள் அள்ளிக்கொள்வார்கள். - ஸாதிகா Relaxplzz ![]() "காணாமல் போனவைகள்" |
Posted: 23 Nov 2014 06:55 AM PST விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல..!! வெறுத்தாலும் விடாமல் இருப்பது தான் உண்மையான அன்பு.!! Relaxplzz ![]() அன்பியல் - 2 |
Posted: 23 Nov 2014 06:40 AM PST |
Posted: 23 Nov 2014 06:30 AM PST |
Posted: 23 Nov 2014 06:15 AM PST Female ல் male இருக்கு Lady ல் lad இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்கு அடடா... . . . . . Mrs ல் Mr ம் இருக்கார்! கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான். எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான். அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான். அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான். தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர். அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான். ''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன். Relaxplzz |
Posted: 23 Nov 2014 06:02 AM PST இந்த ஜென்மத்தில் ஒன்னரை கிலோ அளவுக்கு சேவை செய்தால் மறுமையில் ஒன்னரை டன் அளவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று போதனை செய்யும் மத நிறுவன ஸ்டாக் புரோக்கர்களைக் கடந்து செல்லுங்கள்... ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற குருட்டு எதிர்பார்ப்பைக் கடந்து செல்லுங்கள்... "நான் இதனை விரும்புகிறேன்.... அதனால் நான் செய்கிறேன்" - என்ற மனோ நிலையை அடையுங்கள். வாழ்வு அர்த்தமடையும். (y) - Ilangovan Balakrishnan Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 23 Nov 2014 05:52 AM PST |
Posted: 23 Nov 2014 05:41 AM PST தர்மன் உருட்டிய தாயம் யூதாஸ் கொடுத்த முத்தம் புத்தர் பார்த்த மரணம் காந்தி கண்ட அரை நிர்வாணம் "இப்படி நம் வாழ்கையில் ஏதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்" - Vinoth. Relaxplzz ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2 |
Posted: 23 Nov 2014 05:30 AM PST |
Posted: 23 Nov 2014 05:15 AM PST ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம். 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) 33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை) 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்) 35. மல்லம் (மல்ல யுத்தம்) 36. கவர்ச்சி (ஆகருடணம்) 37. ஓட்டுகை (உச்சாடணம்) 38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்) 39. காமநூல் (மதன சாத்திரம்) 40. மயக்குநூல் (மோகனம்) 41. வசியம் (வசீகரணம்) 42. இதளியம் (ரசவாதம்) 43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்) 44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்) 45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்) 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்) 47. கலுழம் (காருடம்) 48. இழப்பறிகை (நட்டம்) 49. மறைத்ததையறிதல் (முஷ்டி) 50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்) 51. வான்செலவு (ஆகாய கமனம்) 52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) 53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்) 54. மாயச்செய்கை (இந்திரசாலம்) 55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்) 56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்) 57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்) 58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) 59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்) 60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்) 61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்) 63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்) 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) Relaxplzz |
Posted: 23 Nov 2014 05:02 AM PST முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு 'மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?' என்று கேட்கிறார். 'ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது' என்று கூறுகிறார் காமராசர். 'அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...' என்று நேரு கேட்க 'அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...' என்று காமராசர் மறுக்கிறார். 'நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்' என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு. 'விடமாட்டேன்னுதீகளே...' என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் 'ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...' என்று நிறுத்தச் சொல்கிறார். அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு. காமராசர் களைபறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் 'ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...' என்று கூவியிருக்கிறார். புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் 'ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...' என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார். தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார். நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் ! அவர்தான் நம் அய்யா காமராசர்! Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 23 Nov 2014 04:46 AM PST MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா... நண்பன்: இல்லைப்பா... நாங்க கறி சாப்பிட மாட்டோம்... MR ராதா: ஏன்டாப்பா... நண்பன்: நாங்க ஜீவ காருண்யம் கட்சியை சேர்ந்தவங்க. உயிரைக் கொல்ல மாட்டோம். MR ராதா: சோறு திங்கிறதுக்கெல்லாம் கட்சியா டா... நீ உயிரைக் கொல்லவே மாட்டியா... சரி நைட்டு மூட்டப் பூச்சி கடிச்சா என்னடாப்பா பண்ணுவ... #ரத்தக்கண்ணீர் Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 23 Nov 2014 04:30 AM PST |
Posted: 23 Nov 2014 04:15 AM PST விமானம் பறந்து கொண்டிருந்தது மதுபான சேவை தொடர்ந்தது ஐந்தாறு peg ஆன பிறகு .... ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன் அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன் ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன் சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன் தமிழன் .- ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன ... (y) (y) Relaxplzz ![]() குசும்பு... 1 |
Posted: 23 Nov 2014 04:00 AM PST |
Posted: 23 Nov 2014 03:40 AM PST |
Posted: 23 Nov 2014 03:30 AM PST |
Posted: 23 Nov 2014 03:15 AM PST பொது அறிவு வினா-விடைகள் :- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898 பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841. அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812. நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751. ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி. செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827. மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன். கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896. ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட். மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878. அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன். அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945. புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி) விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903 திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858. டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்) கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி) மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்) சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்) லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960. Relaxplzz |
Posted: 23 Nov 2014 03:01 AM PST இப்படித்தானொருநாள்.. வாணியுடன் ஃபோனில்பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று அவளது கேள்வியொன்று. என்னைய ஒங்களுக்கு எவ்வளவுப்பிடிக்கும்? சிலநேரங்களில் கேள்விகள் கடுகுபோல சிறியதாகவும், அவற்றிற்கானபதில்கள் பிரபஞ்சமாய் விரிந்துகொண்டேபோய்விடுவதுமுண்டு. அப்படிப்பட்டகேள்விகளில் இதுவுமொன்று. என்னசொல்லியிருப்பேன்? சும்மா போகிறபோக்கில் கவிதையெனநினைத்து ஒன்றைச்சொன்னேன். "எல்லா அன்னையும் தத்தமது உயிரை தத்தமதுவயிற்றில் சுமந்திருக்க உன் அன்னைமட்டும் என்னுயிரை" "நீதான் என் உயிர்" என்பதை நீட்டிமுழக்கிச்சொன்னேன். அவ்வளவுதான். சூப்பரு.. செம... ஐய்யோ.. இப்படி எதுவுமேயில்லை வாணியிடமிருந்து. "ஏ...பொய்யி.." இதுதான் வாணியின் பதில். ஆமாம். பொய்தானே! வாணிபோனபின்பும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேனே.. ஆம்...! கவிதைகள் பொய்! கண்ணீர்மட்டுமே நிஜம்! - ஃபீனிக்ஸ் பாலா. Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment