Friday, 19 June 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை...! சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையி...

Posted: 19 Jun 2015 11:20 AM PDT

பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை...!

சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண
தொலைபேசிவாடிக்கையாளர்களுக்கு
புதிய சலுகையை பிஎஸ்என்எல்
அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் சாதாரண
தொலைபேசிகளின்எண்ணிக்கையைஅத
ிகரிக்கவும்,வாடிக்கையாளர்களை
ஊக்குவிக்கவும்
பிஎஸ்என்எல் தொலைபேசியில்
இருந்து எந்த நிறுவனத்தின்
செல்போன் அல்லது சாதாரண
தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம்.

இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும்
உயர்த்தப்படுகிறது.

இந்த மாற்றங்கள் கடந்த மே 1 ம் தேதி
முதல் அமலுக்கு வந்துள்ளது.


இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? - தெரிந்து கொள்ளுங்க...

Posted: 19 Jun 2015 10:20 AM PDT

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? - தெரிந்து கொள்ளுங்கள்......!!

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.


செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்......

Posted: 19 Jun 2015 09:20 AM PDT

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்...!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் பண்ணிகொங்க
லிங்க் : http://goo.gl/8K4a3O
கூகுளில் தேடுவது எப்படி?
கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும் வரும் திரையில் தொலைந்து போன ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் தெரிந்துவிடும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் 'ரிங்' என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்
#ஷேர் செய்ய மறந்துவிடாதிகள்
நீங்க ஷேர் செய்வதால் யாருகாவது உதவியாக இருக்கும்.


Posted: 19 Jun 2015 08:20 AM PDT


Posted: 19 Jun 2015 07:57 AM PDT


Respect hashim amla grin emoticon :D AND muslim brothers heart emoticon <3

Posted: 19 Jun 2015 07:30 AM PDT

Respect hashim amla grin emoticon :D
AND muslim brothers heart emoticon ♥


C.F.L .பல்புகள் உடைந்தால்...? என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது......!! சி...

Posted: 19 Jun 2015 07:20 AM PDT

C.F.L .பல்புகள் உடைந்தால்...?
என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது......!!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனேஅந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள்உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிடஅதிகவிஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் .அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால்என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித்துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக்கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுவார்கள் .


கடந்த ஆண்டு இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகள் தடை செய்தன . இவ்வாண்டு இந்திய பச...

Posted: 19 Jun 2015 06:20 AM PDT

கடந்த ஆண்டு இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகள் தடை செய்தன . இவ்வாண்டு இந்திய பச்சை மிளகாய் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா நியு ஜெர்சி மாகாணத்திலும் தடை செய்துள்ளனர் . அதற்கு அவர்கள் கூறும் காரணம் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் அதை தடை செய்திருப்பதாக அந்த நாட்டு அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன
போகட்டும் விசயத்திற்கு வருவோம்
1. காலம் காலமாய் இயற்கை முறையில் விவசாயம் செய்த இந்திய விவசாயிகளை செயற்கை உரமும் பூச்சி கொல்லி மருந்தையும் தந்தது யார் ? இந்திய அரசும் பணவெறி பிடித்த அமெரிக்க , ஐரோப்பிய நிறுவனங்கள் தானே
2. எந்த நாட்டையும் விட மாம்பழம் & பச்சை மிளகாய் போன்றவை உயர்ந்த தரத்துடன் சுவையுடன் விளைச்சலை கொடுப்பது இந்திய மண்ணில் தானே
3. பெப்சியிலோ கோக்கிலோ கரப்பான் பூச்சி , இரும்பு துண்டு ஏன் மலம் இருந்தாலும் எடுத்து போட்டு விட்டு உறிஞ்சி குடிக்கும் இந்தியனே உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா ?
4. நம் நாட்டு நீர் வளங்களையும் விளை நிலங்களையும் பன்னாட்டு நிறுவனத்துக்கும் இந்திய பணக்கார பொறுக்கி நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து விட்டு , கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலையை ஏசி அறையில் அமர்ந்து கொண்டு டிவியில் பார்த்து கொண்டு இருக்கும் ஆளும் வர்க்கமே, ஒட்டு மொத்தமாய் நாசமாய் போய்டுங்க
4. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் Johnson & Johnson தயாரிப்புகள் நறுமணத்திற்காக கெமிக்கல் சேர்க்கும் ஈவு இரக்கமற்ற காரியத்தை இது வரை யாரும் தட்டி கேட்கவில்லை
5. இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பின்பும் தினசரி பயன்படுத்தும் பற்பசை, குளியல் சோப்பு , சலவை சோப்பு , சலவை தூள், வீட்டு உபயோக பொருட்கள் , உணவு பொருட்கள் பிஸ்கேட், ஜாம் , குளிர்பானம் , என பல எல்லாம் அமெரிக்க & ஐரோப்பிய நிறுவனங்களே பெரிய சந்தையை கைப்பற்றி இருக்கும் மர்மம் என்ன ?
6. மட்டமான , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பொருட்களை அனுமதிப்பது யார் ?
7. இந்திய ரயில்வேயிலும் முக்கியமான மக்கள் கூடும் இடங்களிலும் பெப்சி , கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே விற்க்கப்படுவதின் மர்மம் என்ன ?
8. இந்திய தயாரிப்புகளை வாங்க கவுரவம் பார்க்கும் இந்தியனே , பன்னாட்டு தயாரிப்புகள் பல குப்பை என தெரிந்தும் பளப்பளப்பான பேக்கிங் , கவர்ச்சியான விளம்பரம் மற்றும் வெள்ளைத்தோலுக்கு மயங்கி எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கும் இளிச்சவாயனே , உன்னுடைய அடிமை புத்தி எப்பொழுது தான் நீங்கும் ?
இது போல விழிப்புணர்வு கட்டுரைகளை பகிர்வதோடு , கடைப்பிடிக்கவும் செய்வோம்.

இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை! வாடிக்கையாளரின் வசதி...

Posted: 19 Jun 2015 05:20 AM PDT

இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை!

வாடிக்கையாளரின் வசதிக்காக வெளியூர் அழைப்புகளை எளிமையாக்கியுள்ளன முக்கிய செல்போன் நிறுவனங்கள். இதன்படி, இனி வெளியூர் அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடத் தேவையில்லை.
தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், செல்போன் எண்ணை மாற்றாமல் மொபையில் ஆபரேட்டரை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யும் வசதியை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கு மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியை பயன்படுத்த முடியாது. இதற்குக் காரணம் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடவேண்டியிருப்பது தான்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த தடையை நீக்கும் படி, தொலைத்தொடர்பு துறை, மொபைல் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. அதோடு, வரும் ஜூலைக்குள் அதனை செய்து முடிக்கவும் காலக்கெடு விதிக்கப் பட்டது.
இதன்படி, ஏர்டெல், வோடபோன், எம்.டி.என்.எல். போன்ற முக்கிய நிறுவனங்கள் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
மற்ற நிறுவனங்களும் ஜூலை மாத முடிவிற்குள் இந்த தடையை நீக்கி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Posted: 19 Jun 2015 04:20 AM PDT


#இந்தியா-வில் பேசப்படும் #மொழிகள் மொழி வரைபடம் 1859 ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய...

Posted: 19 Jun 2015 03:04 AM PDT

#இந்தியா-வில் பேசப்படும் #மொழிகள்
மொழி வரைபடம் 1859
ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய மொழிகள் வரைபடம்
இப்படத்தில் தமிழ்ப் பகுதியில் திருவனந்தபுரமும் மைசூரும் உள்ளன.


0 comments:

Post a Comment