Thursday, 31 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோவில்!

Posted: 31 Jul 2014 09:40 AM PDT

அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோவில்!


Posted: 31 Jul 2014 08:45 AM PDT


இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா? ====================================== சிவில் ச...

Posted: 31 Jul 2014 03:45 AM PDT

இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா?
======================================
சிவில் சர்விஸஸ் தேர்வினை முடித்து பயிற்சிக்காக டேராடூன் சென்றிருந்த போது நிகழ்ந்த சம்பவம் இது.

உடன் பயிற்சியில் இருந்த உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பேட்ஜ் மேட்டுக்கு அன்று பிறந்த நாள். டிரக்கிங்கில் இருந்த இரண்டு வார காலகட்டத்தில் இந்த நாள் வந்தது. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அவர் அறையைத் தட்டி " ஹேப்பி பர்த் டே வர்மாஜி " என்றோம் கோரஸாக.

அதற்கு அவர் தந்த பதில் திகைப்பை ஏற்படுத்தியது. கூலாக " ஸேம் டூ யூ"- என்று பதில் தந்தார் தனது தொப்பையைத் தடவியபடி.

வட நாட்டுக்காரர்களின் ஆங்கில மொழி அறிவு இந்த லட்சணந்தான்.

ஆங்கிலத்தை அறிவாகச் சுட்டுவதில் எனக்கும் சம்மதம் இல்லைதான். ஆனால் இந்தியாவில் அனைத்து சட்டம், நிர்வாக புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கிறது. உலக அளவிலான புதிய நிர்வாகச் சங்கதிகளை ஆங்கிலத்திலேயே பெற முடிகிறது. இச்சூழலில் இந்தியா போன்ற ஆயிரக்கணக்கான மொழி புழங்கும் தேசத்தில் தொடர்புக்கான ஆங்கிலத்தின் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாத ஒரு நபருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி தூக்கிக் கொடுக்கப் படுகிறது என்றால் அதில் நியாயம் எப்படி இருக்க முடியும்?

சரி. வாதத்துக்காக ஒப்புக் கொள்கிறேன். இவருக்கு போதுமான நிர்வாக அறிவு இருக்கிறது. ஆங்கில மொழி அறிவு மட்டுமே குறைவு பதிலாக ஹிந்தி மொழி அறிவு இருக்கிறது. எனவே இவரைப் போன்றவர்களை உயர் பதவியில் அமர்த்துவது தவறில்லை என்ற சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அப்படியானால் இவரைப் போலவே போதுமான நிர்வாக அறிவும் ஆங்கில மொழி அறிவுக் குறைவும், அதற்குப் பதிலாக தமிழ் உட்பட தத்தம் தாய் மொழி அறிவு மட்டுமே கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இதர மாநிலத்து மாணவர்களை இந்த ஹிந்திக்காரனுக்கு நிகராக உயர்த்தி வைக்குமா அரசாங்கம்?

ஒரு போதும் அந்த வாய்ப்புக்கு வழியில்லை.

எப்படி?

சிவில் சர்வீஸஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் அவர்கள் தாய்மொழியில் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். ஏனையோருக்கு இந்த சலுகை கிடையாது. ஒரு போட்டித்தேர்வில் மற்றவரை விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் பிட் அடிக்க அனுமதிப்பதற்குச் சமமான செய்கையாகும் இது.

இந்த நியாயமற்ற தன்மையை உணர்ந்து சிவில் சர்வீஸஸ் தேர்வினை நடத்தும் யுபிஎஸ்ஸி அமைப்பு, முதல் நிலைத்தேர்வினில் (CSAT- Civil Services Aptitude Test) ஹிந்தி மாணவர்களுக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவை உறுதி படுத்தும் 8 கேள்விகளை இணைத்திருக்கிறது. இவைகள் காம்ப்ரிகன்சன் வகையிலானவை என்பதால் ஹிந்தி இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும். ஹிந்திக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சலுகையான இந்தியில் விளக்கம் கொடுக்கும் முறை இதில் நிறுத்தப்பட்டுள்ளது.

விடுவார்களா வடக்கத்தியர்?

இந்த உத்தரவினை எதிர்த்து தனக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நியாயமற்ற சலுகைகள் தொடர வேண்டும் எனக் கோரி வட இந்தியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

"ஆங்கிலம் தெரிந்த நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே எளிதில் வெற்றிபெறும் வண்ணம் தேர்வு முறை அமையக்கூடாது. இது கிராமப் புற எளிய மாணவர்களுக்கு எதிரானதாகும்" - என்ற இவர்களின் கவர்ச்சிகரமான பம்மாத்துக் கோரிக்கை இன்றைய வட இந்திய ஆட்சியாளர்களையும், மீடியாவையும்,பொதுமக்களையும் எளிதில் கவரக்கூடியதாகவும், அப்படியே சட்டமாகக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

ஆனால் அடிப்படை நியாயமோ அடியோடு வேறு.

இவர்கள் கும்பல் கலாச்சாரத்தில் மூழ்கி மெஜாரிட்டியான ஹிந்தி மாணவர்களுக்கு தனிச்சலுகை கொடுப்பது, ஹிந்தி தெரியாத ஏனைய கிராமப்புற மாணவர்களை அடியோடு நசுக்கும் காரியமாகும்.

ஹிந்தி தெரியாத கிராமத்து மக்கள் மட்டும் எளியவர்கள் இல்லாமல் எதிரிகளா? ஹிந்திக் காரர்களுக்கு தாய்மொழியில் விளக்கம் கொடுத்தால், தமிழ் உட்பட ஏனைய மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்களுக்கும் அவரவர் மொழியில் விளக்கம் கொடுங்கள். போட்டி என்றால் சமதளப்போட்டி மட்டும் தானே நியாயமாய் இருக்க முடியும்? இதில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது எப்படி சரியாக இருக்கும்?

ஒரு போட்டித்தேர்வில்- அதிலும் உலகிலேயே கடுமையான தேர்வுகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய சிவில் சர்விஸஸ் தேர்வில், தசம புள்ளிகள் கூட கட் ஆஃபாக நின்று ஆயிரக் கணக்கானோரின் தலை எழுத்தை மாற்றக் கூடிய கடும் போட்டித் தேர்வில், இந்தியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகள் யாருக்கு என முடிவு செய்யும் தேர்வில், ஒரு சாரருக்கு அவருடைய தாய்மொழியில் விளக்கம் கொடுப்பதும் இன்னொரு சாரருக்கு அப்படி ஒரு வாய்ப்பு மறுக்கப்படுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 14, "சமத்துவத்துக்கான உரிமைக"க்கு புறம்பானதும், அதனை மீறும் காரியமும் ஆகும்.

ஒரு தனி மனிதன் வேலை பெறுகிறானா இல்லையா என்பதோடு முடிந்து விடுகின்ற எளிய சங்கதி அல்ல இது. ஒரு கூட்டு தேசத்தின் நிர்வாகத்தில் ஒரு இனத்தின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது மறுக்கப்படுகிறதா என்ற உரிமை தொடர்பான சங்கதி இது.

வல்லான் வகுப்பதே வாய்க்கால்கள் என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து தமிழன் இளிச்சவாயன் களாகவே இருக்க வேண்டுமா என்பதை தமிழக அரசியல் தலைவர்களும், மீடியாவும், வழக்க றிஞர்களும், சமூக செயற்பாட்டாளரும், அதிகாரிகளும், பொதுமக்களும் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.

பகிர்வு: சுந்தரேசன் ராமச்சந்திரன்


ஒரு குழந்தை இருந்தால் நீ தகப்பன்...! இரு குழந்தைகள் இருந்தால் நீ ரெப்ரி ..!! @க...

Posted: 31 Jul 2014 02:45 AM PDT

ஒரு குழந்தை இருந்தால் நீ தகப்பன்...!
இரு குழந்தைகள் இருந்தால் நீ ரெப்ரி ..!!

@களவாணி பய

இலங்கை ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கிறது இந்தியா.(செய்தி1) கோடியக்கரை அருகே மீ...

Posted: 31 Jul 2014 02:30 AM PDT

இலங்கை ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கிறது இந்தியா.(செய்தி1)

கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.(செய்தி2).

கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தித் தானே மீனவர் சிக்கலைத் தீர்க்கமுடியும் என்பார்கள் உடம்பு முழுவதும் மூளையுள்ள இந்திய டேஷ்பக்தர்கள்.

Posted: 31 Jul 2014 01:40 AM PDT


இலங்கையுடன் மோடி நல்லுறவை விரும்புகிறார்....ஆனால் தமிழக மீனவர்களுடன் 'கொல்லுறவை'...

Posted: 31 Jul 2014 12:10 AM PDT

இலங்கையுடன் மோடி நல்லுறவை விரும்புகிறார்....ஆனால் தமிழக மீனவர்களுடன் 'கொல்லுறவை' விரும்புகிறார்....

# இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் சூனா.குமாரா..... !

உலகத்தில எத்தனையோ விமானம் வெடிக்குது, இந்த சூனா சாமி போற வண்டிக்கு மட்டும் ஒண்ணுமே ஆகமாட்டேங்கிறது


கொழும்பில் நடைபெறும் இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்திய ராணுவமும்,பாஜகவும் பங்கேற...

Posted: 30 Jul 2014 11:00 PM PDT

கொழும்பில் நடைபெறும் இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்திய ராணுவமும்,பாஜகவும் பங்கேற்கும் - மோடி சர்க்கார் அறிவிப்பு

# இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.இலங்கையை இந்தியா நட்பு நாடு என சொல்லக்கூடாது என 7 கோடி தமிழர்களின் பிரதிநிதியான தமிழக சட்டசபை இயற்றிய தீர்மானத்தை மதிக்கக்கூட தெரியாத ஒரு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.

தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கு?
தமிழக மக்களின் உணர்வை கொஞ்சம்கூட மதிக்க மாட்டாங்க போல.

மாமன்னர் 23ம் புலிகேசி தங்கள் பட்டத்து யானையை சிலோன் சமஸ்தான கல்யாணத்திற்கு வாடகைக்கு அனுப்புகிறார்.

@நம்பிக்கை ராஜ்

கும்பகோணம் தீ விபத்தில் அரசு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லையா...

Posted: 30 Jul 2014 10:35 PM PDT

கும்பகோணம் தீ விபத்தில் அரசு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லையா?.. கல்வித் துறைக்கும், நகராட்சிக்கும் இதில் பொறுப்பில்லையா என்ன?...

கும்பகோணம் முதல் பல நகரங்களில் தனியாருக்கான ஊக்குவிப்பு அதிகமாகவே இருக்கிறது. இன்றும் கூட கும்பகோணத்தில் தனியாரின் ஆதிக்கம் பொது பயன்பாட்டில் அதிகம் இருப்பதை பார்க்க முடியும்.

அரசும், வணிகநலன் மட்டுமே சார்ந்து இயங்கும் தனியாரும் கூட்டு சேர்ந்து நிகழ்த்தும் வன்முறையை நீதிமன்றமும் ஆதரிப்பதைத் தான் இந்த தீர்ப்பு காட்டி இருக்கிறது. அரசின் அனைத்து அயோக்கியத்தனங்களையும் தன்னகத்தே கொண்டு நீதித்துறை வளர்ந்து நிற்கிறது.

வணிகமயமாதலுக்கு இரையாகும் நமது எதிர்காலத்தினை மீட்டெடுக்க வேண்டுமென்றால் தனியார் மயத்தினை ஒழித்தாக வேண்டும். இல்லையேல் இது போன்ற கொடூரங்களை தடுக்க முடியாது.

நாளை மீத்தேன் நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுபோல விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படும். நிவாரனம் என்று கிள்ளிகொடுத்துவிட்டு நீதிமன்றமும் இவர்களுக்கு துணை போகும்.
நமது அடிப்படை வாழ்வாதாரத்தினை அழிப்பது என்பதுவே இந்தியாவில் வளர்ச்சி.

தீயில் கருகிய அந்த பிஞ்சுகளின் உடல்களை பார்க்க மனம் பதறுகிறது.
குழந்தைகளின் சிரிப்பொலிகளால் நிறையவேண்டிய இந்த உலகத்தினை, அழுகுரல்களால் நிரப்பும் இந்த அரசும், அரசு வர்க்கமும்.

- திருமுருகன் காந்தி


தன் நாட்டில் அகதிகளாக குடியேறிய ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்ததனால் இன்று க...

Posted: 30 Jul 2014 09:45 PM PDT

தன் நாட்டில் அகதிகளாக குடியேறிய ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்ததனால் இன்று கனடா நாடு தமிழின படுகொலையாளன் ராசபக்சேவை வானத்தில் இருந்து கீழே தன் மண்ணை மிதிக்க அணுமதிக்கவில்லை கனடா அரசு !

தன் சொந்த நாட்டில் வாழும் தமிழக மீனவர்களை வாரமொருமுறை கொத்துக் கொத்தாக கடலில் கைது செய்து சிறையில் அடைக்கும் சிங்கள அரசைப் பாராட்டி விருந்து வைப்பதோடு, அவர்கள் நடத்தவிருக்கும் ராணுவ மாநாட்டில் பாசத்துடன் கலந்து கொள்ள சம்மதம் சொல்கிறது இந்திய அரசு !

# அது மானமுள்ள 'கனடா', இது மானங்கெட்ட 'வெண்ணைடா'!

#வாழ்க_23ம்_புலிகேசி


0 comments:

Post a Comment