Relax Please: FB page daily Posts |
- :P :P
- ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.! அதுல எல்லா பறவைகளும்...
- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில்...
- ஆண்கள் அழகானவர்கள் தான்.. * பொறாமை கொண்ட பெண்கள் தான் ஆண்களை வர்ணிப்பதே இல்லை.....
- வெள்ளரி கார் ;-)
- :)
- என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய்...
- (‘மயோரேலி’)......ஆகஸ்ட்-3ல் விஜய்சேதுபதி கலந்துகொள்ளும் தசை சிதைவு நோய்(muscular...
- தெரிந்து கொள்வோம்
- தத்ரூபமான ஓவியம்
- :)
- “நேத்து ஏன் டாக்டர் நீங்க வரலே”? “ஜுரம், அதான் வரலே” “எனக்கும்தான் ஜுரம், நான்...
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் சதிஸ் சிவலிங்கம்.. அவரது தந்தை சிவல...
- மதவெறியர்களையும் அடுத்தவர்களின் மதநம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து, அதைப் புண்படுத...
- :)
- ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார். ஐம...
- ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்... 1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள...
- 10 ரூபாய் இருந்தா கொடு என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை பரவாயில்லை, கொடு நான் சுத...
- (y)
- விதை துளிர்க்க சத்தம் எழுப்புவதில்லை. மரங்கள் சரிகையில் பெரும் இரைச்சலை ஏற்ப்பட...
- சாயங்கால நேரம் மசால்வடை காப்பி கூட்டணி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளி யிருப்போம். ஆனா...
- :)
- சிறிய சந்தர்ப்பம். சினிமாவில் நடிக்க ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் பிரமாதப்ப...
- 'உணவே மருந்தாக... மருந்தே உணவாக! சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீ...
- ;-)
- முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மந்திரிகளுக்கு முடி திருத்தும்...
- ஆசியாவின் அடையாளம் அழகு மாத்தூர் ..! மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்ன...
- அரிய வகை வெள்ளை திமிங்கலம்
Posted: 31 Jul 2014 09:21 AM PDT |
Posted: 31 Jul 2014 09:15 AM PDT ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.! அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு! போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.! காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப "கல்யாணத்தை நிறுத்துங்க"ன்னு ஒரு குரல்.! போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா? ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே.. அதனால தான்.! :P :P #என்னங்க அடிக்க எல்லாம் வர கூடாது, எனக்கும் இப்படித்தான் சொல்லிக்குடுத்தாய்ங்க... :P |
Posted: 31 Jul 2014 09:00 AM PDT தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.... முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்... தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்.... அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்... ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.. ![]() |
Posted: 31 Jul 2014 08:50 AM PDT |
வெள்ளரி கார் ;-) Posted: 31 Jul 2014 08:40 AM PDT |
Posted: 31 Jul 2014 08:30 AM PDT |
Posted: 31 Jul 2014 08:14 AM PDT என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு... அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு.. கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு... திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது.. சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு... அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது... பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு... விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு... ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் .... எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்... - அன்புடன் செல்வா ![]() குசும்பு... 1 |
Posted: 31 Jul 2014 08:00 AM PDT ('மயோரேலி')......ஆகஸ்ட்-3ல் விஜய்சேதுபதி கலந்துகொள்ளும் தசை சிதைவு நோய்(muscular dystrophy)விழிப்புணர்வு பேரணி..! பிறவியிலேயே சின்னக்குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்றுதான் தசை சிதைவு நோய்.. 3000 குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய குழந்தைகள் நடக்க சக்தியற்று அடிக்கடி கீழே விழுவர். உடனே தானாக எழுந்து நிற்கவும் சிரமப்படுவர்.. மாடிப்படி ஏற முடியாது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே கழிந்துவிடும் அபாயமும் உண்டு. ஆனால் அதற்காக இதை இப்படியே விட்டுவிட முடியுமா..? இந்த மாதிரி நோய் இனி வரும் காலங்களில் எந்த ஒரு குழந்தையையும் தாக்கிவிடக்கூடது என்பதற்காகத்தான் 'ஜீவன் பவுண்டேசன்' என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது. 'மயோரேலி' எனப்படும் இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த பேரணியில் இந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் திரையுலக நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கு இந்த நோய் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் வெற்றியடையும்.. பேரணியின் நோக்கமும் நிறைவேறும். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு உடனே அணுகவும்.. Dr. அஜய் மற்றும் திருமதி வசந்தி பாபு. ( 044-2847 4400/ 98843 23123/ 98412 12442). ![]() |
Posted: 31 Jul 2014 07:55 AM PDT |
Posted: 31 Jul 2014 07:45 AM PDT |
Posted: 31 Jul 2014 07:30 AM PDT |
Posted: 31 Jul 2014 07:20 AM PDT "நேத்து ஏன் டாக்டர் நீங்க வரலே"? "ஜுரம், அதான் வரலே" "எனக்கும்தான் ஜுரம், நான் வரலியா"? :O :O |
Posted: 31 Jul 2014 07:10 AM PDT |
Posted: 31 Jul 2014 07:00 AM PDT காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் சதிஸ் சிவலிங்கம்.. அவரது தந்தை சிவலிங்கமும் பளு தூக்கும் வீரராக இருந்தவராம். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து தங்கபதக்கம் வாங்கியவராம் ..தற்போது VIT கல்லூரியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறாராம் ..... :( சச்சின் டெண்டுல்கர் பேரு ஷரபோவாவுக்கு தெரியலைன்னு கவலைபடுறவங்க இருக்கிற நாட்டுல..இதுதான் விளையாட்டு மரியாதை ... # சதீசு நீயாவது சூதானமா இருப்பா - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ். |
Posted: 31 Jul 2014 06:45 AM PDT மதவெறியர்களையும் அடுத்தவர்களின் மதநம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து, அதைப் புண்படுத்தும் சில சில்லறைகளையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால்.. உண்மையான ஹிந்துக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்று..!! உண்மையான முஸ்லிம்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு கண்ணியமானவர்கள் என்று..!! உண்மையான கிறிஸ்தவர்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு பண்பானவர்கள் என்று..!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ♥ ![]() |
Posted: 31 Jul 2014 06:30 AM PDT |
Posted: 31 Jul 2014 06:10 AM PDT ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார். ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே! குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார்.. இந்த ஆளின் கத்தல் தாங்காத டாய்லெட் தேவதை, அவர் முன்னே தோன்றி, "ஏன் இப்படி ஊளையிடுகிறாய்" என்றது?. இவரும் கதையைச் சொன்னார். படக்கென மறைந்த தேவதை, ஒரு சில நிமிடங்களில் தகிக்கும் தங்க நிறத்தில் ஒரு ஃபோனைக்கொண்டு வந்து கொடுத்து. இவர் ஏற்கனவே விறகுவெட்டி (தங்கக்கோடாரி) கதைகளை சிறுவயதில் கேள்விப்பட்டிருந்ததால் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பதற்காக "தேவதையே, என்னுடையது சாதாரண ஃபோன் தான். தங்கத்தால் ஆனது அல்ல" என்றார் பவ்வியமாக! உடனே அந்த தேவதை,"ஏ மூதேவி.. இது உன்னுடைய ஃபோன் தான், நன்றாக கழுவி விட்டு உபயோகப்படுத்து"என்று கூறிவிட்டு மறைந்தது.!!?? கதை கருத்து: யாரும் டாய்லெட்ல mobile phone பயன்படுத்தாதீங்க ப்ளீஸ். :P |
Posted: 31 Jul 2014 05:50 AM PDT ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்... 1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் "சுகாதார பொறியியலாளர்" என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார். 4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும். 5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர். 7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள். 8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை. 9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே. 10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
Posted: 31 Jul 2014 05:40 AM PDT 10 ரூபாய் இருந்தா கொடு என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன். :P :P |
Posted: 31 Jul 2014 05:30 AM PDT |
Posted: 31 Jul 2014 05:15 AM PDT விதை துளிர்க்க சத்தம் எழுப்புவதில்லை. மரங்கள் சரிகையில் பெரும் இரைச்சலை ஏற்ப்படுத்துகின்றன. அழிவுகள் ஆர்ப்பரிக்கும். ஆக்கங்கள் அமைதிக்காக்கும். சாதனைகள் அமைதியாகவே தொடங்குகின்றன. (y) |
Posted: 31 Jul 2014 05:00 AM PDT |
Posted: 31 Jul 2014 04:45 AM PDT |
Posted: 31 Jul 2014 04:30 AM PDT |
Posted: 31 Jul 2014 04:15 AM PDT சிறிய சந்தர்ப்பம். சினிமாவில் நடிக்க ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் பிரமாதப்படுத்திவிடலாம் என்று தெற்கு ரயில்வேயில் குமாஸ்தாவாக வேலை செய்த அந்த இளைஞர் நினைத்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே நாடகத்தில் நடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததார்.'ஐய்யய்யோ வயிறு வலிக்குதே, டாக்டர் வயிறு வலிக்குதே' என்று அந்த இளைஞர் துடித்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அந்த இளைஞர் தான் நாகேஷ் என்ற நகைச்சுவை கலைஞராக இப்போது அறியப்படுபவர். 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார். அந்த நாடகத்தில் அவருக்கு பெரிய கதாபத்திரம் எதுவும் இல்லை,திருப்புமுனை தரும் கதாபாத்திரமும் இல்லை.ஆனால் கிடைத்த ஒரு நிமிடத்தில் அரங்கையே வயிறு குலுங்க சிரிக்க வைத்தாதால் முதல் பரிசை எம்.ஜி.ஆர். அவருக்கு வழங்கினார். கிடைத்த சின்ன சந்தர்பத்தை கெட்டியாக பிடித்துகொண்டு சினிமாவின் உச்சத்துக்கே போன பெரிய கலைஞர் அவர். -Ilayaraja Dentist. |
Posted: 31 Jul 2014 03:51 AM PDT 'உணவே மருந்தாக... மருந்தே உணவாக! சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீனிஸ் சாலை எப்போதும் பரபரப்பாக ஆட்கள் பறந்து கொண்டிருக்கும் இடம். மாலைவேளைகளில் இங்குள்ள போண்டா, பஜ்ஜி, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் ஈக்களைப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இவற்றுக்கு அருகிலேயே... சிறிய தள்ளுவண்டி ஒன்றில், 'உணவே மருந்தாக மருந்தே உணவாக' என்ற வாசகத்தோடு... 'சளி நீங்க தூதுவளை சூப்', 'கொழுப்பைக் கரைக்க கொள்ளு சூப்', 'மூட்டு வலி நீங்க முடக்கத்தான் சூப்', 'ஆயுள் நீட்டிக்க தேன்நெல்லி' என சிலேட்டுகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும் தாய்வழி இயற்கை உணவகத்திலும் கூட்டம் அலைமோதுவது ஆச்சர்யமே! உணவகத்தை நடத்தி வரும் மகாலிங்கத்திடம் பேசினோம், ''ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவுதான் ஏற்றதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்லுவாரு. அந்த வார்த்தைகள்தான் இந்தக் கடை தொடங்கக் காரணமா இருந்தது. நண்பர்கள் சரவணன், ரவி ரெண்டு பேரோடயும் சேர்ந்து... இயற்கையாகக் கிடைக்கும் விளைபொருள்களை வெச்சு ஆரோக்கியமான உணவுப் பொருளை மக்களுக்கு கொடுக்கலாம்ங்கிற முடிவோட இந்த ஜனவரியிலதான் ஆரம்பிச்சோம். இதுக்கு, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. காலையில, அருகம்புல் சாறு, நெல்லிக்கனிச் சாறு, வாழைத்தண்டு சாறு, மூலிகை கலந்த துளசி டீ, கறிவேப்பிலைச் சாறு, கேரட் கீர், பீட்ரூட் கீர் விற்பனை செய்றோம். மாலையில், தேன் நெல்லி, 7 வகை காய்கறிகள் கலந்த சூப், முடக்கத்தான் சூப், கொள்ளு சூப், முருங்கைக்காய் சூப், தூதுவளை சூப், மணத்தக்காளி சூப்பும் கொடுக்குறோம். இதை சாப்பிடறதால ஏற்படுற நன்மைகள் பத்தின துண்டு பிரசுரத்தையும் கொடுக்குறோம். பக்கத்துலயே சிறுதானிய உணவகத்தையும் ஆரம்பிச்சிருக்கோம். அதுல, இரவு நேரங்கள்ல சிறுதானிய தோசை, மூலிகை இட்லி, மூலிகை தோசைனு கொடுக்கிறோம். இதை ஆரம்பிக்கறதுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளதான் முதலீடு செஞ்சோம். ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், சிறுதானியங்கள் வாங்க மொத்தமா 2 ஆயிரம் ரூபாய் செலவாகுது. இயற்கை அங்காடிகள்ல காய்கறிகளை வாங்கிக்கிறோம். சாறு வகைகள், சூப் வகைகள்ல ஒரு நாளைக்கு 20 லிட்டர் தயாரிக்கிறோம். 200 மில்லி சூப் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். தோசை 30 ரூபாய்னும் மூலிகை இட்லி 5 ரூபாய்னும் விற்பனை செய்றோம். ஹோட்டல்ல விக்கிற விலையைவிட குறைவுதான். ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் வருது. செலவெல்லாம் போக 1,500 ரூபாய் லாபமா கையில நிக்குது. இப்பத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா எங்க பக்கம் திரும்ப ஆரம்பிச்சுருக்காங்க. சிலர் ரெகுலரா வர ஆரம்பிச்சுட்டாங்க. மெரினா கடற்கரையிலும் ஒரு கிளை தொடங்கி இருக்கோம். அங்கேயும் நல்ல வரவேற்பு'' என்றார் மகாலிங்கம் மகிழ்ச்சியுடன். அவரைத் தொடர்ந்த ரவி, ''நாங்க எந்த உணவுப் பொருள்லயும் ரசாயனத்தைச் சேர்க்கிறதில்ல. மூலிகைகள், கீரைகள்லருந்து எடுக்கப்பட்ட சாறுகளைத்தான் வடிகட்டி விற்பனை செய்றோம். நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிதான் சேக்குறோம். பொதுவா சூப் ருசியாக இருக்கறதுக்காக மைதா மாவு சேர்ப்பாங்க. நாங்க அதை சேர்க்கறதில்ல. கொள்ளு தவிர எல்லா சிறு தானியங்களையும் ஒண்ணா சேர்த்து அரைச்சு பொடியாக்கி... கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து, அரைச்ச மாவுல கலந்து தோசை செய்றோம். கருப்பு உளுந்து எலும்புக்கு நல்லது. இந்த சிறுதானிய தோசையில் எல்லா சத்துக்களுமே இருக்கு. இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருக்குறதால, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. எடையைக் குறைக்கணும்னு நினைக்கறவங் களுக்காக கொள்ளு தோசை தயாரிக்கிறோம். மூலிகைச் சாறை மாவோடு கலந்து மூலிகை இட்லி தயார் செய்றோம். மக்களுக்கு, நோய்க்கான மருந்தை நாங்க தரல. ஆனா, உணவையே மருந்தா தர்றோம்'' என்றார் புன்னகையோடு! - விகடன் ![]() பொது செய்திகள் - 2 |
Posted: 31 Jul 2014 03:32 AM PDT |
Posted: 31 Jul 2014 03:10 AM PDT முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மந்திரிகளுக்கு முடி திருத்தும் தொழில் கிடைத்தது. அவர் பிரதமருக்கு முடி வெட்டும் பொழுது, "இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?" என்று கேட்டார். அதற்கு பிரதமர், "நீ முடி வெட்டுகிறாயா அல்லது விசாரித்துக் கொண்டிருக்கிறாயா?" என சத்தமிட்டார். முடி திருத்துபவரும், "மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்" என்றார். மறு நாள் இரண்டாம் நிலை மந்திரியின் முடியை வெட்டும் பொழுதும், "ஐயா அது என்ன கருப்பு பணப் பிரச்சினை?" என்றார். அதற்கு அவர், "என்னிடம் எதற்கு இந்த கேள்வியை கேட்கிறாய்? அது உனக்கு தேவையில்லாதது" என கத்தினார். அதற்கு அந்த முடி திருத்துனர், "மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்" என்றார். மறுநாள் அந்த முடி திருத்துனரிடம் விசாரணை செய்தனர். "நீ எதிர்கட்சியை சேர்ந்தவனா" "இல்லை ஐயா", "நீ CID பிரதிநிதியா" "இல்லை ஐயா" "பின் எதற்கு முடி வெட்டும் பொழுது மந்திரிகளிடம் சுவிஸ் வங்கி கருப்பு பணம் பற்றி கேள்வி கேட்கிறாய்" அதற்கு அவர் பதில்.... "ஐயா நான் அவர்களிடம் ஏன் இப்படி கேட்கிறேன் தெரியுமா? சுவிஸ் வங்கி, கருப்பு பணம் பற்றி இவர்களிடம் கேட்கும் பொழுது அவர்களின் தலைமயிர் விறைப்பாக நிற்கிறது. அதனால் எனக்கு வெட்டுவதும் எளிதாக இருக்கிறது". :P :P ![]() குசும்பு... 3 |
Posted: 31 Jul 2014 02:50 AM PDT ஆசியாவின் அடையாளம் அழகு மாத்தூர் ..! மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் அமைந்துள்ளது. 1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 (கி.மீ.) தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம். ![]() |
Posted: 31 Jul 2014 02:44 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment