சமஸ்கிருதம் மொழி தமிழை வளர்த்ததா?
சமஸ்கிருதம் என்ற பெயர் ஒரு செயற்கையாக சூட்டப்பட்ட பெயர் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். சமஸ்கிருத மொழி ஒரு செயற்கை மொழி. இயற்கையாக வளர்ந்த மொழி அல்ல. சமஸ்கிருதம் தமிழ்மொழியி லிருந்து , , t, th, d, dh, n, s (த, ந, ண, ட, ச) போன்ற ஒலிகளை கடன் வாங்கியதாக சமஸ் கிருத அறிஞர்கள் பலர் ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்.
சமஸ்கிருதத்தில் உள்ள சொற்களும் பெரும்பாலும் கடன் வாங்கப்பட்டவை. ஆய்வாளர் கள் கருத்துப்படி சமஸ்கிருதம், 40% தமிழ் சொற்களையும், 30% பிராகிருத சொற்களையும், 30% இதர மொழிகளிடமிருந்து கடனாகப் பெறப் பட்டவை. கடனாக சொற்களை பெற்ற பிறகும் சமஸ்கிருதம் வளரவில்லை என்பதைக் கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சமஸ்கிருதம் பேசியவர்கள் எண்ணிக்கை 1921ல் 23 கோடியில் 356 பேர்கள்; 1951ல் 36.20 கோடியில் 555 பேர்கள், 1971--ல் 61 கோடியில் 2210 பேர்கள். மேலும் சமஸ்கிருதம் பேசும் ஆரியர்கள் கூட தமிழ் போன்ற மாநில மொழிகளைத்தான் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் பேசும் ஒருவர் கூட சரியான இலக்கணத்துடனும் சொற்களுடனும் பேசுவதில்லை.
மாதவ தேஷ்பாண்டே Socio Linguistic Issues என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்.
பாணினி (400- 500 கிமு) பதஞ்சலி (300 கிமு) போன்றவர்கள் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தபோது சமஸ்கிருதம் இறந்த மொழியாக இருந்தது. சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவதை கேள்வி அறிவின் மூலமே கற்றுக் கொள்கிறார்கள். இலக்கணத்துடன் கற்றுக் கொள்வதில்லை.''
இவ்வாறு மொழி அறிஞர்கள் சமஸ்கிருதத்தின் குறைபாடுகளை கூறுவதால் சமஸ்கிருதம் தமிழ் போன்ற வளம் நிறைந்த மொழிகளை ஒருபோதும் வளர்க்க உதவாது.
எனவே தமிழ் சமஸ்கிருதத்தின் உதவியால் வளர்ந்தது என்பதனை ஏற்க இயலாது.

0 comments:
Post a Comment