Tamil History and Culture Facebook Posts |
- இனிய இரவாகட்டும் ... @ Indupriya MP ...
- இளைஞர்களின் கையில் எதிர்காலத் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று நம் பக்கத்தின் வா...
- எதிர்கால தமிழகத்தினை வழிநடத்துவதில் இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ? ஒரே வ...
Posted: 14 Dec 2014 07:07 AM PST |
Posted: 14 Dec 2014 05:45 AM PST இளைஞர்களின் கையில் எதிர்காலத் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று நம் பக்கத்தின் வாயிலாக கேட்டதற்கு கிடைத்த பதில்கள் மிகவும் வருத்தமளிக்கிறது :( வந்த பதில்கள் குறைவு என்றாலும் அதில் பெரும்பாலான பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன..... நாம் இளைஞராகவோ அல்லது நம் வீட்டில் உள்ள ஒருவர் இளைஞராகவோ இருக்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் கூட உலகளவில் மனிதவளம் படைத்தவர்களின் பட்டியலில் நாம் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கிறோம். அப்படி இருந்தும் நாம் இளைஞர்களை நம்புவதில் பின்னிலையில் தான் இருக்கிறோம். நம் கண்முன் ஒரு சமூக பிரச்சினை நடக்கும்போது அதை நாம் தட்டிக்கேட்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் அங்குள்ள சூழ்நிலையினால் நமது அமைதியான வாழ்வில் எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று விலகிச்சென்றுவிடுவோம். இப்படி நாம் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நம்மைப்போல் யாராவது ஒருவர் நம்மை வழிநடத்தினால் நாமும் அதில் பங்கெடுக்கலாம் என்று பலர் நினைத்ததை நானும் அறிவேன். இப்படியே அனைவரும் யாராவது முன்வர வேண்டும் என்று எண்ணினால், தமிழகத்தின் நிலையும், தமிழர்களின் நிலையும் மிகவும் மோசமான நிலையினை எய்துவிடும் (ஏற்கனவே அதை நோக்கிதான் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது). ஒவ்வொரு முறை யாராவது தமிழகத்தில் இது குறை, அது குறை என்று கூறும் போது.... நீங்கள் ஏன் அதை சரிசெய்ய முயற்சி எடுக்கக் கூடாது, நீங்கள் இந்த இடத்தினைச் சேர்ந்தவர்தானே என்று எனக்குள்ளே கோபம்கொள்வதுண்டு (ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை). ஆனால், நானும் அவர்களைப் போலவே சுயநலத்துடன் இருந்துகொண்டு என் நலத்தினையும், என் குடும்பம், என் நண்பர்கள் என்று எண்ணும்பட்சத்தில் நான் எப்படி அடுத்தவரைகளைக் குறைகூற முடியும்... இதைப் போலவே அநேக இளைஞர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தனித்தனியாக ஒரே எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு சின்ன மாற்றத்தினையாவது கொண்டுவர முடியும்... உங்களுக்கும் என்னைப் போலவே எண்ணங்கள் இருக்குமாயின் கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தில் இணையுங்கள். இவர்களின் இந்த புதிய முகப்புத்தகப் பக்கம்தான் என்னுள் இருந்த பல எண்ணங்களை வெளிக்கொணர வழிவகுத்தது.. https://www.facebook.com/TN.ilayathalaimurai ஒரு முயற்சி செய்துதான் பார்ப்போமே.... வெற்றி, தோல்வி என்று எது கிடைத்தாலும் பகிர்ந்துகொள்வோம் என்ற நம்பிக்கையில்.... பா விவேக் ![]() |
Posted: 14 Dec 2014 02:11 AM PST எதிர்கால தமிழகத்தினை வழிநடத்துவதில் இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ? ஒரே வரியில் உங்களது கருத்தினை எளிமையாக பதிவு செய்யவும்... பா விவேக் |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment