Wednesday, 8 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி "NATIONAL...

Posted: 08 Oct 2014 07:30 AM PDT

வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி "NATIONAL GEOGRAPHIC" சேனலிலும், "DISCOVERY" சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா?

கோயில்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற சொத்து! அதில் அவர்களின் அனுபவமும் ஆராய்சிகளும் உள்ளது!! திறந்த கண்களோடும், செவிகளோடும் கோயில்களை அணுகுங்கள்..அவை நமக்கு கற்றுத்தர நிறைய விஷயங்கள் வைத்துள்ளது!.

- Sasi Dharan


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்...

Posted: 08 Oct 2014 04:30 AM PDT

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தின் கொள்கைகளை தற்போதைய அறிவியல் அறிஞர்களை விட மிக துள்ளியமான கணித அளவிடுகளுடன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்கள் நம் முன்னோர்கள்.

சீனா, லாஸ், திபத் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து திபத்தில் நடத்திக்கொண்டு இருக்கு ஆய்வின் போது அவர்களுக்கு பல ஆவணங்கள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்த காரணத்தால் அதை மொழி பெயர்க்க சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழ்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதை மொழிபெயர்த்த ரய்னா என்னும் பேராசிரியர் கொடுத்த விளக்கம் மிக ஆச்சரியம் மிக்க தகவலாக இருந்தது. அவற்றின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.,.

அந்த ஆவணத்தில் விமானம் இயங்கும் தத்துவங்களும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்டத்திரங்களின் இயக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பிரபஞ்சம் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய ஊடகமாக உள்ளது இதே தத்துவத்தை பயன்படுத்தி பல விமானங்கள் இயக்கமுடியும் என்றும் அத்துடன் சில கணித விகிதாச்சார அளவிடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது…
ஆவணங்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் விமானங்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும்,

இவை அனைத்தும் நம் புராணங்களில் கடவுள் காற்றில் பறந்து வந்தார், ராமணன் சீதையை விமானத்தில் இலங்கைக்கு கடத்திச்சென்றான் என்று படித்துள்ளோம்.


இராசராசனின் சில ஆய்வுக்குறிப்புகள்: பெரியகோவிலும். மா மன்னன் இராசராச சோழன் க...

Posted: 08 Oct 2014 04:30 AM PDT

இராசராசனின் சில ஆய்வுக்குறிப்புகள்:

பெரியகோவிலும்.

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள் (ஆய்வுக்குரியவை)

இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)

பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .

கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் - 42
1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)
மனைவியர் - 15

மக்கள் - இராசேந்திர சோழன், எறிவலி கங்கைகொ ண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்கமாதேவியார், இரண்டாம் குந்தவைஎன்னும் மூன்று பெண்மக்களும் இருந்தனர்
(30 கல்வெட்டுகள். வை.சுந்தரேச வாண்டையார். பக்கம் 29)

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985

ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது

தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை

கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)

இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்

முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014

பா விவேக்


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய...

Posted: 08 Oct 2014 02:30 AM PDT

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

பா விவேக்


கொஞ்சம் இங்க வாசிச்சிட்டு லைக் பண்ணிட்டு போங்க.... இங்கே இருக்கும் விநாயகர் சில...

Posted: 07 Oct 2014 10:13 PM PDT

கொஞ்சம் இங்க வாசிச்சிட்டு லைக் பண்ணிட்டு போங்க....

இங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கிறது.... உடனே நீங்க எல்லாம் சொல்லுவிங்க மத்த கோவிலில் விநாயகர் உக்காந்து இருப்பார் இங்க நின்னுகிட்டு இருக்கார் அவ்வளவுதானே என்று நினைப்பிர்கள், ஆனால் நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய "Structural Engineer" ஆளுன்னு இப்போம் சொல்றேன் உங்களுக்கு, விநாயகர் நிற்பது அவருடைய ஒரு காலில் மட்டுமே .இரு கரங்கள் ,ஒரு கால் ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையின் நுனி அலங்கார வளைவின் பக்கவாட்டு மிக சிறிய பிடிமானமாக இருக்கிறதே தவிர விநாயகரின் முழு கனமும் தாங்கப்படுவது ஒற்றை பாதத்தில் மட்டுமே.....
-திருப்பெருந்துறை

நம்ம கட்டிடக்கலைக்கு நிகர் எதுவும் இல்லை.... ஒழுங்கா லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.....

Narthana ganapathi balanced in single leg, two hands , right leg and deity's dress got the additional support from arch..


ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் . . அப்பா -Father அம்மா -Mot...

Posted: 07 Oct 2014 09:27 PM PDT

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல
என்பதற்கு இதுவே ஆதாரம் .
.
அப்பா -Father
அம்மா -Mother
.
சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister
.
அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?
.
மாமா -Uncle
மாமி -Aunt
.
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?
.
உலகிலேயே சொல்வளமும் பொருள்வளமும் மிக்க
மொழி
நம் தமிழ் மட்டும் தான் ........

பா விவேக்


0 comments:

Post a Comment