Wednesday, 8 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது! சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக...

Posted: 08 Oct 2014 10:20 AM PDT

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது!

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...

Posted: 08 Oct 2014 05:51 AM PDT

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

0 comments:

Post a Comment