Relax Please: FB page daily Posts |
- :)
- தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படி.... என்ன சொல்லவராங்கனு கொஞ்சம்...
- என்னை தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கச் சொன்னீர்கள் படித்தேன். விவசாயம் விட்டு அமெ...
- அருமையான ஓவியம்
- அழகு.... <3
- :)
- வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...! முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப்...
- பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி திடப்ப...
- சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைபகுதி!
- இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும் ,ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "த...
- :)
- ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்...
- கவனியுங்கள்... உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவைகளே வார்த்தைகளாக வருகின்றன....
- 'அவனுக்கு என்ன குறைச்சல்' என்பது அவன் அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய சம்பள...
- :)
- காட்டுத் தீ திகுதிகுவென எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிரு...
- யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப...
- நினைவிருந்தால் like பண்ணுங்க (y)
- :)
- உலகத்துலயே மிக வேகமானது எதுனு தெரியுமா? . . . . . .சிறுத்தை . . . . . புல்லட் டி...
- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவே...
- :)
- "சாவுற காலம் தெரிஞ்சிட்டா - வாழ்கின்ற காலம் நரகமாயிடும்" இதை எழுதிய தலைவர் சுஜாத...
- இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள...
- புரியாணி எச்சங்கள் கொட்டப்பட்டு பள்ளங்கள் திடலாகிறது இங்கே.. எச்சிலே ஊறாமல் பச்...
- :)
- பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது......
- "எதுக்கும் பயப்படாதீங்க!” டிராஃபிக் ராமசாமி... 'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்ப...
- உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ? 1 - சந்தோஸ் சுப்...
Posted: 08 Oct 2014 09:30 AM PDT |
Posted: 08 Oct 2014 09:15 AM PDT தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படி.... என்ன சொல்லவராங்கனு கொஞ்சம் படிச்சுத் தான் பாருங்களேன்.. ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான். அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம். தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...! (y) (y) Relaxplzz |
Posted: 08 Oct 2014 09:00 AM PDT என்னை தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கச் சொன்னீர்கள் படித்தேன். விவசாயம் விட்டு அமெரிக்கா போக சொன்னீர்கள் போனேன். ஊரெல்லாம் சுற்றி பணம் செய்வது நல்லது என்றீர்கள். அப்படியே செய்தேன். திரும்பி ஊருக்கு வந்தேன் என் நிலமெல்லாம் மாற்றான் கையில். என் மொழியோ சவக்கிடங்கில். அண்ணனும் தம்பியும் டாஸ்மார்க் கடையில் ஆங்கிலம் படித்தால் வெளிநாட்டில் வேலை பார்க்கலாம் எனச் சொல்லி சொல்லியே என் ஊரில் என்னை அகதி ஆக்கி விட்டீர்களே இது நியாயமா? என் நிலத்தில் புழுதியில் உரிமையோடு புரண்டவனை அழுக்குப் படுகிறது எனச் சொல்லி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அடிமையாக இருக்க விட்டீர்களே இது நியாயமா? -பிரபுகண்ணன் முத்தழகன் ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
அருமையான ஓவியம் Posted: 08 Oct 2014 08:50 AM PDT |
அழகு.... <3 Posted: 08 Oct 2014 08:40 AM PDT |
Posted: 08 Oct 2014 08:30 AM PDT |
Posted: 08 Oct 2014 08:15 AM PDT வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...! முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ.. ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு பிலிப்பினிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட ஷாப்பிங். சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் பணத்தை புடிங்கிருவான். குடிக்கற தண்ணிக்கும் காசு தான். கார் பார்க்கிங்குக்கும் பணம்.. இதுக்கே மாசம் 20 ஆயிரம் அழணும். நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான். ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. லெபனான்காரன் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக் குடுத்துருவான். அந்த சீனாக்காரன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா.. ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன். ஏழாவது வாரம்- திரும்பிப் போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை. எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. கசாப்க்கடை காதர் பாய் கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான். நான்.. போடாங்ங்ங்ங்...... :P Relaxplzz |
Posted: 08 Oct 2014 08:00 AM PDT பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி திடப்பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக்குகள் அடுத்தகட்டத்திற்கு தாவி தற்போது சூடான திரவப்பொருள்களை வாங்கி வரவும் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் உணவுப்பொருள்கள் வேதிவினை யாகி கேன்சர் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நம் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாகி ஊடுருவி கிடக்கிறது. சிறிய கேரி பேக் முதல் சமையல் பாத்திரம், மருத்துவம், சுகாதாரம், மின்துறை என்று அனைத்திலும் இதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது. இருப்பினும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி மூலம் தொடர்ந்து அவற்றை பல்வேறு ரூபங்களாக மாற்றி மாற்றி அதன் வீரியத்தன்மை வெகுவாய் குறைக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ் டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்கு களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை உள்ளிட்ட அனைத்து கட்டத்திலும் இதற்கு தடை உண்டு. இருப்பினும் அரசு, அதிகாரிகளின் கடும் நடவடிக்கை இன்மையால் தொடர் ந்து இவை சந்தையில் வலம் வந்தபடி உள்ளன. எளிமையான பயன்பாடு, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் பொதுமக்களின் பார்வை யை இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஈர்க்க துவங்கின. இதனால் துணிப்பை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இரு ந்து விலக துவங்கியது. கையை வீசி கொண்டு செல்லலாம். பொருட்களை வாங்கி வந்தபின் பிளாஸ்டிக் பையை தூக்கிப் போட்டு விடலாம் என்ற மனோநிலையில் நுகர்வோர் மத்தியில் புதிய கொள்முதல் கலாச்சாரத்தை ஏற்படுத்த துவங்கியது. எனினும் இதன்பின்னால் உள்ள அபாயங்களை பலரும் உணரவில்லை. இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பிளா ஸ்டிக்குகள் அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்தே கிடந்து மழைநீரை உட்புகாமல் செய்வதுடன், மண்ணின் உதிரித்தன்மையை பாதித்து காற்று ஊடுருவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் மண்புழு உள்ளிட்டவைகளும் அழிய துவங்கின. சிதறி கிடக்கும் இந்த பிளாஸ்டிக்கழிவுகளை அழித் தாலும் அது சுற்றுச்சூழலுக்கு கேட்டையே விளைவிக்கிறது. எரிக்கும் போது, அதில் இருந்து வெளிவரும் டையாக்சின் காற்றுமண்டலத்தில் கலந்து விடுகிறது. இதை சுவாசிப்பவர்களுக்கு தும்மல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்றில் கலந் திருக்கும் டையாக்சினின் மீது மழை பொழியும் போது அவை அமில மழையாக தரையை தொட்டு பாதிப்பை தொடர்கிறது. பொதுவாக மண்ணில் பல் வேறு விதைகள் சிதறி கிடக்கும். மழை நேரங்களில் இவை தழைத்தெழும். மழை காலங்களில் சிறு தாவரங்களான நாயுருவி, துளசி, குப்பை மேனி, தும்பை, திருநீற்றுப்பச்சை என்று பல்வேறு மூலிகைச்செடிகள் கண்ணுக்கெட்டியதூரம் வரை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தின. ஆனால் பிளாஸ்டிக் எரிப்பினால் மண்ணின் மேல் உள்ள மண்புழு மட்டுமல்லாது இதுபோன்ற விதைகளும் கருகுவதால் முன்பு போல மழைக்கு பிந்தைய சிறுதாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இவ்வாறு புதைத்தாலும், எரித்தாலும் தன்சுபாவத்தை மாற்றி கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்குகள் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. திடப்பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த இந்த பிளாஸ்டிக்குகள் தற்போது திரவ பொ ருட்களையும் ஆட்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் உணவகங்களில் குழம்பு, ரசம் என்று பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் தற்போது இதை விட அதிகமாக டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கட்டட வேலைகள், தினக்கூலிகள் என்று டீயை மொத்தமாக வாங்கி பகிர்ந்து குடிக்கும் அத்தனை இடங்களிலும் இந்த முறை பரவலாகிவிட்டது. டீயை பார்சல் கட்டி தருவதற்காகவே பல்வேறு முன்னேற்பாடுகள் கடைகளில் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள பாலிபுரோப்பின் அதிகசூட்டினால் உருகி உணவுப்பொருளுடன் கலக்கும். கேன்சர், கிட்னி பாதிப்பு, வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் கையை வீசிக்கொண்டு சென்று பொருளை வாங்கி பழகிவிட்ட தற்போதைய நடைமுறை பாதிப்பையும் துரிதப்படுத்தி வருகிறது. தூக்குவாளி போன்ற பாத்திர விற்பனையும் குறைந்துவிட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த வில்லனை அரசு, அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்வதன் மூலமே இதனை தடுக்க முடியும். ![]() "விழிப்புணர்வு" |
Posted: 08 Oct 2014 07:49 AM PDT |
Posted: 08 Oct 2014 07:40 AM PDT இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும் ,ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "தொடங்கக்கூடாது ...? #சும்மா_கேட்டு_வைப்போம் ;-) |
Posted: 08 Oct 2014 07:30 AM PDT |
Posted: 08 Oct 2014 07:15 AM PDT ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்" "என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?" "சரி சரியான நம்பர் எது?" "ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" "யாரு கிட்ட?" "நான் தான் இந்த கம்பெனியோட CEO" "நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" "தெரியாது,யார் கிட்ட?" "தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது" டொக்… :P :P Relaxplzz |
Posted: 08 Oct 2014 06:56 AM PDT கவனியுங்கள்... உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவைகளே வார்த்தைகளாக வருகின்றன. உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள், அவைகளே செயல்களாக ஆகின்றன. உங்கள் செயல்களைக் கவனியுங்கள், அவைகளே பழக்கமாகின்றன. உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள், அவைகளே உங்கள் நடத்தையாகின்றன. உங்கள் நடத்தையைக் கவனியுங்கள், அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன. Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 08 Oct 2014 06:42 AM PDT |
Posted: 08 Oct 2014 06:32 AM PDT |
Posted: 08 Oct 2014 06:19 AM PDT காட்டுத் தீ திகுதிகுவென எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் செய்வதறியாது தவித்தன. ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவி மட்டும் எவ்வளவு வேகமாக பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக பறந்து தனது சின்னஞ் சிறு அலகால் தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது . இதைக் கண்ட பெரிய விலங்குகள் " நீயோ சின்னஞ் சிறு குருவி. உன்னால் என்ன செய்து விட முடியும் ? " என்று கேட்டன. அதற்கு அந்த குருவி " என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் . என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத்தான் செய்ய வேண்டும் " என்றது. இந்த கதையைச் சொன்னவர் வங்காரி மத்தாய். அவர் மேலும் " நானும் அந்த சிட்டுக் குருவி போல இந்த பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்வேன்." அவர் என்ன செய்தார் தெரியுமா ? கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கியது அவரது இயக்கம். அவருக்கு நோபல் பரிசு பின் கிடைத்தது . அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பின பெண். Relaxplzz |
Posted: 08 Oct 2014 04:59 AM PDT யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது. இனி யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உன் தலையினை நீயே வருடிக்கொடு உன் தோள்களை நீயே தட்டு உன் திறமைகளை நீயே பாராட்டு.. உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை. தோல்விகளை கண்டு அஞ்சாதே வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே முதலில் உன்னை வென்று பின் உலகை வெல்ல வா.... உடலில் உயிரும் உணர்வில் துணிவும் இருக்குவரை போராடு... உன் எதிரிகளின் மூக்குகளை உன் நம்பிக்கைகளால் உடை நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல உன் கால்களைக்கொண்டு....! (y) (y) Relaxplzz ![]() "தன்னம்பிக்கை வரிகள்" |
Posted: 08 Oct 2014 04:45 AM PDT |
Posted: 08 Oct 2014 04:30 AM PDT |
Posted: 08 Oct 2014 04:15 AM PDT உலகத்துலயே மிக வேகமானது எதுனு தெரியுமா? . . . . . .சிறுத்தை . . . . . புல்லட் டிரெயின் . . . . . . . . ஜெட் விமானம் . . . . . . . . இது எதுவும் கிடையாது........... . . . . . . . . நம்ம ஊரு மீடியாக்கள்தான் . . . . . பயபுள்ளைக ஜட்ஜ் தீர்ப்பை எழுதறதுக்கு பேனாவை எடுத்த உடனயே இவங்க தீர்ப்பை டெலிகாஸ்ட் பண்ணிட்டாங்க...... :P :P Relaxplzz |
Posted: 08 Oct 2014 03:55 AM PDT நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே.. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி.. மறுவாசல் வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன்மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் Relaxplzz ![]() தமிழ் பாடல்கள் |
Posted: 08 Oct 2014 03:30 AM PDT |
Posted: 08 Oct 2014 03:15 AM PDT "சாவுற காலம் தெரிஞ்சிட்டா - வாழ்கின்ற காலம் நரகமாயிடும்" இதை எழுதிய தலைவர் சுஜாதா நம்முடன் இல்லை, ஆனாலும், இது இப்ப உண்மையாகி விட்டது. பிரிட்டனில் ஒரு பிளட் டெஸ்ட்(blood test) 400 பவுன்டில் (34,000 ரூபாய்கள்) செய்கிறார்கள். இது டெலிமோர்ஸ் டெக்னலாஜி வகையை சேர்ந்தது. இதன் மூலம் உடம்பில் இருக்கு அத்தனை நோய்கள், வயதுக்கு மீறிய மூப்பா, இளமையா, என்று கூறுவது மட்டுமில்லாமல் - உங்களின் இறப்பை துள்ளியமாக கணிக்க முடியும். இதை ஏற்கனவே பறவை மிருகங்கள் என டெஸ்ட் செய்து இப்போது மனிதர்களுக்கும் இதை வெற்றிகரமாக சோதனை செய்து வெற்றி கண்டுள்ளார்கள். டெஸ்டுக்கு எத்தனை பேர் தைரியமா போக ரெடி..?! via Ravi Nag Relaxplzz |
Posted: 08 Oct 2014 03:00 AM PDT இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க! * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும். * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி. * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும். * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும். * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும். * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம் * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம். * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம். * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள். * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும். * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும். * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள். * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும். * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது. * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை. * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும். * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும். * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள். * தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம். * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும். * உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது. Relaxplzz ![]() "வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS" |
Posted: 08 Oct 2014 02:45 AM PDT புரியாணி எச்சங்கள் கொட்டப்பட்டு பள்ளங்கள் திடலாகிறது இங்கே.. எச்சிலே ஊறாமல் பச்சிளம் ஒன்று பரிதாப மரணமாகிறது அங்கே .. #மரத்துப்போன_மனிதாபிமானம் Relaxplzz ![]() |
Posted: 08 Oct 2014 02:30 AM PDT |
Posted: 08 Oct 2014 02:15 AM PDT பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது... அமைதி வேணும் அதிகாரம் பண்ண கூடாது... கட்டுபாடு வேணும் இப்படி கத்த கூடாது... பயபக்தியா இருக்கணும் இப்படி பஜாரித்தனம் பண்ண கூடாது... மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்... இந்த டயலாக்கை ரஜினி பேசுனா கை தட்டி ரசிக்குதுங்க பொண்ணுங்க... புருசன் பேசுனா கையை முறுக்கி நெஞ்சுலையே குத்துதுங்க... #என்னமோ போடா கொமாரு... ;-) - சதீஷ் குமார் தேவகோட்டை |
Posted: 08 Oct 2014 02:00 AM PDT "எதுக்கும் பயப்படாதீங்க!" டிராஃபிக் ராமசாமி... 'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்பா... சும்மா எதுனா கேஸ் போட்டுட்டே இருப்பார்!' என அலுத்துக்கொள்வார்கள் சிலர். ஆனால், அந்த ஒரு நபரின் முனைப்புதான், தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத் தலையிடவைத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒட்டுமொத்த வில்லங்கத்தையும் மீண்டும் விசாரிக்க வைத்திருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்ப நாட்களில் விறுவிறுக்கவைத்து, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டவைத்திருக்கிறது. சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இவர் தொடர்ந்த வழக்குதான், தலைநகரில் விதிமீறல் கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டது. நோக்கு வர்மம், களறி சண்டை என சட்டத்தைக் கையில் எடுக்காமல், சட்டரீதியாகப் போராடும் இந்தத் 'தமிழன்' தாத்தாவுக்கு வயது 82. என்னைச் சுத்தி ஏதோ ஒரு விஷயம் சரியில்லைனா, நான்தானே அதைச் சரி செய்யணும். 'என் வீட்டுக்கு வெளியே என்ன நடந்தா எனக்கு என்ன'னு போக முடியுமா? காந்திஜி அப்படி நினைச்சிருந்தா, இப்போ நான், நீங்கள்லாம் இப்படி சுதந்திரமா உலாத்திட்டு இருக்க முடியுமா? இதே சென்னையில்தான் நான் பிறந்தேன்; வளர்ந்தேன். அப்போ எல்லாம் இந்த ஊர் எப்படி இருக்கும் தெரியுமா? பொதுமக்களும் அரசாங்க ஊழியர்களும் எவ்வளவு பொறுப்போடு இருப்பாங்க தெரியுமா? பின்னி மில்லில் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பின்னாடி ஊர்க்காவல் படையில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையைத் தொடங்கினதே நான்தான். இப்போ அது போலீஸுக்கு கமிஷன் வசூலிச்சுத் தரும் அமைப்பா மாறிடுச்சு. மனைவி, ஒரே பொண்ணு. பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் போடும் பொதுநல வழக்குகளால் என் குடும்பத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். வீட்டுக்கே வந்து மிரட்டுவார்கள்; அடிப்பார்கள். அதனால் என் மனைவி பயந்தார். குடும்பமா, சமூகமானு யோசிச்சப்ப, சமூகம்தான் முக்கியம்னு முடிவு எடுத்தேன். இப்போ 12 வருஷமா ஒரு மாடி ரூம்ல தங்கித்தான் என் வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். காலை, மதியம், இரவு... மூணு வேளையும் காபி, மோர், இவைதான் எனக்கு நீர், ஆகாரம் எல்லாம். ரெண்டையும் மாத்தி மாத்திக் குடிச்சுப்பேன். தாம்பரத்தைத் தாண்டினா மட்டும், காலையில் ரெண்டு இட்லி சாப்பிடுவேன். மூணு வேளை சாப்பிட்டு, பல வருஷங்கள் ஆச்சு. ஒருவேளை சாப்பாட்டு மேல ஆசையில்லாம போனாத்தான், சமூகம் மேல அக்கறை வருமோ என்னவோ!'' ''பயப்படாதீங்க. எதுவா இருந்தாலும் விடாப்பிடியா எதிர்த்து நில்லுங்க. எதிர்ப்புகள் விலகிப்போகும். சொந்த இழப்புகளைச் சந்திக்க தயாரா இருங்க. எதிராளி பெரிய ஆளா இருந்தா, அஞ்சி ஒதுங்கிடாதீங்க. நியாயம் நம் பக்கம் இருக்குனு துணிஞ்சு இறங்குங்க. இதுக்கெல்லாம் தயாரா இருந்தா, யார் வேணும்னாலும் சமுதாயப் பணி செய்ய வரலாம்!'' Thanks Vikatan ![]() |
Posted: 08 Oct 2014 01:45 AM PDT உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ? 1 - சந்தோஸ் சுப்ரமணியம் ஜெனிலியா. 2 - அலைபாயுதே சாலினி. 3 - ராஜா ராணி நஸ்ரியா. 4 - காதல் சுகமானது சினேகா. 5 - பிரியமானவளே. சிம்ரன். 6 - எங்கேயும் காதல் ஹன்சிகா. 7 - மௌனம் பேசியதே திரிஷா. 8 - துப்பாக்கி காஜல். 9 - களவாணி ஓவியா. 10 - காதல் கீதல் னு எவணாச்சும் வந்திங்க..... கொய்யால அழிகின தக்காளியாலயே அடிப்பேன். ;-) 11. " என் மனைவிதான் என் காதலி." பதில் சொல்லுங்க பார்க்கலாம்! Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment