Relax Please: FB page daily Posts |
- மனைவி: ஏங்க! Dinnerகு Maggi Ok வா? கணவன் : அது சாப்பிட கூடாதாம்! Paperல பார்க்க...
- பேசிக்கொண்டே இருந்தால் நமது பலவீனமும், மெளனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெர...
- பெண்களின் காதல்...!!! அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...! நெருக்கம் தேவை அவனுடன்...
- ஆண்கள், வேட்டி சட்டை அணிந்து , முறுக்கு மீசை வைத்து , என்னதான் கம்பீரமா நடந்தாலு...
- தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு...
- இடியாப்பத்தின் வாழ்வு தனை நூடுல்ஸ் கவ்வும்.. மீண்டும் இடியாப்பமே வெல்லும். - ம...
- உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில...
- அருமையான செய்தி JRD TATA வுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்த...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை...
- <3 Relaxplzz
- :) Relaxplzz
- முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என...
- :) Relaxplzz
- எதை தடை பண்ணாலும் இந்த லேஸ் பாக்கெட்ட மட்டும் தடை பண்ண முடியாது ... . . காத்து...
- :) Relaxplzz
- சிந்திக்க சில!!! - சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணி...
- :) Relaxplzz
- போஸ்ட் போட மேட்டர் கிடைக்காத காரணத்தினால் பிரதமர் எதாவது ஒரு நாட்டிற்கு உடனே கெள...
- அஞ்சு பேரு மேல கார ஏத்துணவனே ..துபாய் ல டான்ஸ் ஆடிட்டு இருக்கான்... . என்னோமோ நூ...
- :) Relaxplzz
- இரவலாய் தரப்படுகிற எந்த ஒரு பொருளும் என்றோ ஒரு நாள் திரும்ப பறிக்கப் படுகின்றன....
- எனக்கென்னவோ நெஸ்லே கம்பெனிக்காரன்கொடுத்த கமிஷன் நம்ம அரசியல்வாதிகளுக்கு போதலைனு...
- :) Relaxplzz
- சிறு வயதில் இவற்றையெல்லாம் உண்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ;-) Relaxplzz
- ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மீது வழக்கு போட்டா அதுல நடிச்ச சின்னத்திரை நடிகர்களுக...
Posted: 04 Jun 2015 09:50 AM PDT மனைவி: ஏங்க! Dinnerகு Maggi Ok வா? கணவன் : அது சாப்பிட கூடாதாம்! Paperல பார்க்கலையா? மனைவி: ஓ! அப்போ உப்புமா ok வா? கணவன் : போற உசுரு Maggiலயே போகட்டும்!! :P :P Relaxplzz |
Posted: 04 Jun 2015 09:30 AM PDT |
Posted: 04 Jun 2015 09:10 AM PDT பெண்களின் காதல்...!!! அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...! நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...! கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...! சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...! சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...! தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...! சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...! பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...! பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...! தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...! பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...! தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...! சோகங்களின் போது அவன் தன்னை அம்மா என்று அழைத்திட வேண்டும்...! காலையும் வேண்டும்,மாலையும் வேண்டும், நொடி பொழுது இமைக்கும் நேரத்திலும் அவன் மட்டும் வேண்டும்...! இனி வரும் ஜென்மங்களிலும் அவன் வேண்டும்...! அவன் தனக்கு மட்டுமானவன் என்பதில் சுயநலமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது...! ஏன் அவன் நினைத்தால் கூட...!!! பெண்கள் முதல் இடம் தான் அன்பு வைப்பதிலும்...!அக்கறை காட்டுவதிலும்.! ♥ ♥ Relaxplzz |
Posted: 04 Jun 2015 08:50 AM PDT |
Posted: 04 Jun 2015 08:30 AM PDT தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து "நீ படித்த வரி என்ன?" என்று கேட்டார். "உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு" என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. Relaxplzz |
Posted: 04 Jun 2015 07:30 AM PDT |
Posted: 04 Jun 2015 07:10 AM PDT உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்.. அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை 4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கெனஆட்கள் யாரும் கிடையாது 5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்.... 6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்..... 7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது (அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது (ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது 8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்.... 9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்.... 10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை : 1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது 2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் 3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள் 4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்...... 5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர் 6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே... Relaxplzz |
Posted: 04 Jun 2015 06:25 AM PDT அருமையான செய்தி JRD TATA வுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பன் - மரியாதை கொடுப்போம். 3. பணம் - அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகள்- முறிக்க மாட்டோம். 5. வியாபாரம் - அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கை - உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 3 |
Posted: 04 Jun 2015 06:20 AM PDT |
Posted: 04 Jun 2015 06:10 AM PDT |
Posted: 04 Jun 2015 06:01 AM PDT |
Posted: 04 Jun 2015 05:51 AM PDT 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போக வேண்டியிருந்தது. * உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை அட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம். * அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது, ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது, டாப்-அப் கிடையாது. * தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாக அனுப்பினோம். * அடிக்கடி பேட்டரியை கழட்டியது கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது. * 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும் குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட் பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர் போடப்பட்டிருந்தது. * Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள். * பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால் மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். * 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக செல்போன் வைத்திருந்தார்கள். * வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின் செல்போனை தொடவே பயந்தார்கள். * மிஸ்டு கால் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம். * மழையில் நனைந்த செல்போனை மொட்டை மாடியில் காய வைத்து நமக்கு நாமே சரிசெய்து கொண்டோம். * செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு எப்படி போன் செய்வதென்று தெரியாமல் படித்தவர்களிடம் கேட்டோம். * Snake Xania மற்றும் Carrom Board கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம். * அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல் வைத்திருந்தோம். வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. ஆனால் இன்று? - Vignesh HR Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 04 Jun 2015 05:30 AM PDT |
Posted: 04 Jun 2015 05:11 AM PDT |
Posted: 04 Jun 2015 04:55 AM PDT முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.......! காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும்.......' கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும்.......! என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்.......! விடுமுறை நாட்களில் கூட வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் போதும்........! வேலைக்கு செல்லும் சமயத்தில் சாமி கும்பிட மறந்தாலும் என் நெற்றியில் முத்தமிட மறக்காத போதும்........! செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டும்போதும்....! என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் பேச கூச்சப்படும் போதும்; ஆனால் அவர்களிடமும் மறக்காமல் என்னை கிண்டல் செய்யும் போதும்.......! என் பிறந்தநாளையும் எங்கள் திருமண நாளையும் மறந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போதும்..! மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால் ஹைலைட்சிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்.......! நினைத்துக்கொள்வேன்,.... ஏனென்றால்... நீ எனக்கு கிடைத்த வரம் என்று.. என்றும் இருப்பேன் உன் அன்பாக.. என்றும் உன் மீது எனக்கு அன்பு மாறாதுடா....... ♥ ♥ Relaxplzz Photo Aa Photography ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 04 Jun 2015 04:43 AM PDT |
Posted: 04 Jun 2015 04:30 AM PDT எதை தடை பண்ணாலும் இந்த லேஸ் பாக்கெட்ட மட்டும் தடை பண்ண முடியாது ... . . காத்து தான் இருக்கு உள்ள ..!!! - Sharmila Rajasekar @ Relaxplzz |
Posted: 04 Jun 2015 04:18 AM PDT |
Posted: 04 Jun 2015 03:58 AM PDT சிந்திக்க சில!!! - சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது. - கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.. ஆம்! ! கனவு காணுங்கள்! - உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது. - சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு. அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு. - மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம். - எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும். - எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம் ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம். - நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும். - ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான். - காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும். - ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை. - அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது. - ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய். - குழந்தை "ஏன்?" என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல். - கடவுள் பாவங்களை மன்னிக்கிறார், இல்லாவிடில் சொர்க்கம் என்றும் காலியாகவே இருக்கும். - மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டி நொண்டி போகிறான், ஆனால் சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான். - வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான். - ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும். - பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும். - மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும். - கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான். மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான். - தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை. - குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. - ஐந்து பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. - கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா? - உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ? - உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள். - உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல், அது போதும். அது தானாகவே பரவி விடும். - போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். கணவன் மனைவி இரண்டுபட்டால் வக்கீல்களுக்கு கொண்டாட்டம். - மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. - தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். - மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. - உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. - அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். ## இந்த மாதிரி அறிவுகரைகளை படித்து ரசிப்பதைவிட, அதை நடைமுறையில் பின்பற்றுவதே சிறந்ததில் மிகச்சிறந்தது. Relaxplzz ![]() "சிந்தனைகள்" |
Posted: 04 Jun 2015 03:43 AM PDT |
Posted: 04 Jun 2015 03:30 AM PDT போஸ்ட் போட மேட்டர் கிடைக்காத காரணத்தினால் பிரதமர் எதாவது ஒரு நாட்டிற்கு உடனே கெளம்புமாறு கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் . - ரிட்டயர்டு ரவுடி @ Relaxplzz |
Posted: 04 Jun 2015 03:30 AM PDT அஞ்சு பேரு மேல கார ஏத்துணவனே ..துபாய் ல டான்ஸ் ஆடிட்டு இருக்கான்... . என்னோமோ நூடுல்சாம் வழக்காம் ..? . இந்தியாடா :( . ரிட்டயர்டு ரவுடி @ Relaxplzz |
Posted: 04 Jun 2015 03:04 AM PDT |
Posted: 04 Jun 2015 02:46 AM PDT இரவலாய் தரப்படுகிற எந்த ஒரு பொருளும் என்றோ ஒரு நாள் திரும்ப பறிக்கப் படுகின்றன. சில வேளைகளில் அன்பு உட்பட.... ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
Posted: 04 Jun 2015 02:30 AM PDT எனக்கென்னவோ நெஸ்லே கம்பெனிக்காரன்கொடுத்த கமிஷன் நம்ம அரசியல்வாதிகளுக்கு போதலைனு தோனுது.. அதான் மேகில அலுமினியம் கூடயிருக்குனு பில்டப்விட்டு குழந்தைகளுக்கு ஆபத்துனு பீலாவிடுறானுக.. இவனுகளுக்கு நம்மமக்களோட ஆரோக்கியத்துமேலலெல்லாம் அக்கறையில்ல. இவனுக கமிஷனை அதிகமாகேட்டிருப்பானக... அவனுக தரமுடியாதுனு பிகுபண்ணியிருப்பானுக.. முடிஞ்சா, சிகரெட்டையும் மதுபானங்களையும் தடைபண்ணட்டுமே... ப்ராய்லர்கோழிய தடைபண்ணட்டுமே... பண்ணமாட்டானுகளே.. எனக்குத்தெரிஞ்சு பெரும்பாலான டாக்டருங்க அப்போலேருந்து சொல்லிட்டுவர்றாங்க.. எல்லா Fast foodsமே Junky foodsனு.. அப்போல்லாம் இவனுகளுக்கு தெரியலயாம். இப்போதான் அலுமினியம் கூடயிருக்கு... எவர்சில்வர் கூடயிருக்குனு... - ஃபீனிக்ஸ் பாலா அரசாங்கமே விற்றால், விஷம் என்பது அமிர்தம் ஆகிவிடுமா ..! ? மேகி நூடுல்ஸ் உடலுக்கு தீங்கு என்ற காரணத்தால், இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டு வருகிறது .. இது மிகவும் வரவேற்க வேண்டிய நல்ல விஷயம் ஆகும் .. மேலும் அதன் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மீதும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்கள் கைதும் கூட செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .. நூடுல்ஸ் தீங்கு என்றால் அதைவிட பல மடங்கு தீங்கு செய்யக்கூடிய மது , சிகரெட் போன்றவை.. இதற்கு எப்போது தடை ..? மேலும் நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்கள் என்பதற்கே வழக்கு, தண்டனை என்றால் , இங்கே அரசாங்கமே சாராயம் விற்க்கிறது .. இது என்ன நியாயம் ..? - Vignesh HR Relaxplzz |
Posted: 04 Jun 2015 02:21 AM PDT |
Posted: 04 Jun 2015 02:03 AM PDT |
Posted: 04 Jun 2015 01:53 AM PDT |
Posted: 04 Jun 2015 01:30 AM PDT ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மீது வழக்கு போட்டா அதுல நடிச்ச சின்னத்திரை நடிகர்களுக்கு சிறப்பு ஜெயில் கட்ட வேண்டியது இருக்கும். (அம்புட்டு ஆள் இருக்கு) :O - வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment