Wednesday, 17 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


"ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி" ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவா...

Posted: 17 Jun 2015 09:10 AM PDT

"ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி"

ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை காணலாமா....

1.ஒன்றாம் மாதம் :கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும்.
சிசு மூன்று பாகங்களாகத் தெரியும்.
முதல் பாகம் :மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.

இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் : இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.

2.இரண்டாம் மாதம் : சிசுவிற்கு முகம் உருவாகிறது. கண் பகுதி குழி தோன்றும். மூளை, இதயம், சுவாசப்பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

3.முன்றாம் மாதம்: உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும். நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

4.நான்காம் மாதம்: தலைமுடி, புருவம் போன்றவை லேசாக வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

5.ஐந்தாம் மாதம்: சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். "லாலுனுகோ" என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

6.ஆறாம் மாதம் : சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

7.ஏழாம் மாதம் :குழந்தை கண் திறக்கும். எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

8 மாதம் : நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.

9.ஒன்பதாம் மாதம் : ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும். பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

Relaxplzz

பார்த்தீனியா.. வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்...

Posted: 17 Jun 2015 08:30 AM PDT

பார்த்தீனியா..

வெளிநாட்டிலிருந்து கோதுமை
இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு
திட்டமிட்டே கலந்து விடபட்ட
விஷ விதை..

ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானா
விதைகள் காற்றில் பரவுகிறது..

ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்
கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..

இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்கு தீராத சளி,
பெரியவர்களுக்கு தும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..

இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..

அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..

இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்து
மழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு போய்விடுகிறது..

மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது..

மூன்று வருடங்களுக்கு முன் யோசித்தேன்..

இந்த விஷ செடியை அழிக்க என்ன வழி என்று..

தேடினேன்..

பல புத்தகங்களில் தேடினேன்..

ஒரு சிறு தகவல் கிடைத்தது ..

பத்து லிட்டர் நீரில் ஒரு கிலோ கல் உப்பை கரைத்து தெளித்தால் இந்த பார்த்தீனியா அழிந்துவிடும் என்று..

முயற்சி செய்தேன்..
பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பு என்று..

விஷசெடி காயவில்லை..

இரண்டு கிலோவுக்கும் இல்லை

மூன்று இல்லை,

நான்கு கிலோவுக்கும் இல்லை,

ஐந்து கிலோ என்ற வீதத்தில் கலந்து தெளித்த பிறகுதான் இந்த விஷ செடி காய தொடங்கியது..

ஒரு கிலோ உப்பு மூன்று ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு..

பார்த்தீனியா பூ பிடித்த பின் தெளித்தால் முற்றிலும் அழிந்து விடுகிறது..

நான் இப்போது இந்த கல் உப்பை தெளித்த பிறகுதான் ஓரளவு அந்த விஷ செடியை அழிக்க முடிந்தது..

பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்த பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது..
வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை..

தெளித்து அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது.
அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது..

அதிகமாக இந்த விஷ செடிகள் இருந்தால் விசைதெளிப்பானிலும்,
குறைவாக இருந்தால் கைத்தெளிப்பானிலும்
தெளிக்கலாம்..

நான் இந்த முறையை பயன்படுத்திய பிறகுதான் எனது தென்னை மரம் காய் அதிகமாகிமாக பிடிக்கத்தொடங்கியது..

தென்னைக்கு வருடம் ஒருமுறை இரண்டு கிலோ கல் உப்பு போட வேண்டும்..

ஆனால் நான் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பார்த்தீனியா அழிவதுடன்
தென்னையின் மகசூலும் அதிகமாகிவிட்டது..

களைக்கொல்லி பயன்டுத்ததால் இப்போது கொழிஞ்சி விதையை வரப்புகளில் தூவி விட்டு கொழிஞ்சி விதையையும் மீண்டும் எனது பூமிக்கு மீட்டு விட்டேன்..

வாழைகாட்டில் இந்த பார்த்தீனிய செடி ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது.

வாழை இலைக்கு படாமல் இந்த உப்பை தெளித்து பார்த்தீனிய செடியை அழித்தேன்.

முடிந்த வரை வெள்ளாமை இல்லாத போது இந்த பார்த்தீனியாவை நன்கு வளர விட்டு பிறகு உப்பு தண்ணீரை தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் இரண்டுமுறை தெளித்து விட்டால் இந்த விஷ செடியை முற்றிலும் அழித்து விடலாம்..

அதிகம் வேண்டாங்க..
ஒரு கிலோ பார்த்தீனிய பூ ஐம்பது பைசாவிற்கு விற்றாலே விவசாயிகள் ஆகிய நாங்க லட்சாதிபதி ஆகிடுவோம்...!!

Relaxplzz


அம்மா மகன் உறவைவிட, அப்பா மகள் உறவு தான் மிக அழகானது... <3

Posted: 17 Jun 2015 08:10 AM PDT

அம்மா மகன் உறவைவிட, அப்பா மகள் உறவு தான் மிக அழகானது... ♥


பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ? +++++++++++++++++++++++++++++++++++++++ அ...

Posted: 17 Jun 2015 07:30 AM PDT

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?
+++++++++++++++++++++++++++++++++++++++

அப்ப இத மறக்காம படிங்க !!

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

COPY & PASTE THIS LINK

https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service

Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்

Mobile No : மொபையில் எண்

Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்

Father's Name: தந்தை பெயர்

Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.

அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு

· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,

மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும்

அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

மறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும்

நேரத்தை நன்கு குறித்து கொண்டு,

அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,

அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...

நாள் மட்டும்தான் உண்மை,

முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...

கால் கடுக்க நிற்க வேண்டும்,

ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி :-

பொது நலம் கருதி வெளியிடுவோர்:-

கடலூர் அரங்கநாதன்...

Relaxplzz


அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான். ரயிலில் கூட்டம...

Posted: 17 Jun 2015 07:10 AM PDT

அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான். ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.

அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.

அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம் வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன். நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.

அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''.என்றான்.

அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான். விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.

அவனுக்கு ரொம்பக் கோபம். ''என்ன சார், படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே. இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே. இந்நேரம் நான் விழுப்புரத்தில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.

அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.

''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?'' என்று கேட்டான்.

அவர் சொன்னார் ,''அதுக்கு இல்லைப்பா. தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே....., தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே, அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன்"!! ...'என்றாராம்...

:P :P

Relaxplzz

இந்த அழகான அப்பாவையும் மகளையும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y) நடிகர்: பக்ரூ

Posted: 17 Jun 2015 06:30 AM PDT

இந்த அழகான அப்பாவையும் மகளையும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

நடிகர்: பக்ரூ


சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்...

Posted: 17 Jun 2015 06:10 AM PDT

சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

Relaxplzz

இவர்களை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம்.. :)

Posted: 17 Jun 2015 05:30 AM PDT

இவர்களை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம்.. :)


" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...? "செங்கல்பட்டு" வரைக்கும் போகணும் தம்பி...

Posted: 17 Jun 2015 05:10 AM PDT

" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...?

"செங்கல்பட்டு" வரைக்கும் போகணும் தம்பி"!..

" போற வழில எனனை கொஞ்சம் 'தாம்பரத்துல' பக்கத்தில ட்ராப் பண்றீங்களா"?..

" வாங்க அதனால என்ன, வந்து உட்காருங்க"!..

" அண்ணே, என்ன விஷயமா போறீங்க"?

" அதுவா, என் நண்பன் ஒருத்தனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க... மேரேஜ் லைஃப் எப்படி இருக்குமுன்னு என் அனுபவததை வெச்சு 9 தமிழ் பட சிடி மூலமா குறிப்பால உணா்த்தப் போறேன்"!.

" என்னண்ணே செல்றீங்க!... படத்திற்கும், வாழ்க்கைக்கும் என்னண்ணே சம்பந்தம்"?..

" இப்ப பொண்ணு பார்த்துக்கிட்டு இரூக்காங்க..
"அவள் வருவாளா?",

நிச்சயதாா்த்தம் முடிஞ்சதும் "தேவதையை கண்டேன்",

கல்யாணம் வரைக்கும் "என் சுவாசக் காற்றே",

கல்யாணம் முடிஞ்சதும் "லட்சுமி வந்தாச்சு",

திருமணத்திற்கு பிறகு "வரவு எட்டணா செலவு பத்தணா",

ஒரு வருஷத்திற்கு பிறகு "பொண்டாட்டி சொன்னா கே்ட்டுக்கணும்",

எல்லாமே நம் கை விட்டு போனதும் "எல்லாம் அவன் செயல்",

வெளியே ஏதும் நடக்காதது போல கெத்தா திரியறப்போ
"வீட்ல எலி வெளில புலி"...

அப்பறம் கடைசி வரைக்கும் ஒரே சிடிலதான் வாழ்க்கை ஓடும்!

" பிரமாதமுண்ணே...! அது என்னண்ணே கடைசி சிடி"?..

"பேய் வீடு"....

ஹா ஹா.. ஆன அண்ணேன் எல்லாத்துக்கும் மேல கடைசியா 10ஆவது CD ஒண்ணு போடுவாங்க, அது தான் டாப்பு..

அது என்ன CD ...

"வாழ்வே மாயம்"

:P :P

Relaxplzz

அப்பாவை... அப்பா,, நைனா,, டாடி,, ஃபாதர்,, பிதா'னு.. கூப்பிடலாம்..!!! அம்மாவை......

Posted: 17 Jun 2015 04:10 AM PDT

அப்பாவை...
அப்பா,, நைனா,, டாடி,, ஃபாதர்,, பிதா'னு.. கூப்பிடலாம்..!!!

அம்மாவை...
அம்மா,, மம்மி,, தாய்,, ஆத்தா,, மதர்'னு.. கூப்பிடலாம்..!!!

தங்கைக்கு...
சிஸ்டர்,, சகோதரி,, தங்கச்சி'னு.. கூப்பிடலாம்..!!!

அண்ணனை...
பிரதர்,, சகோதரர்,, உடன் பிறப்பு,, அண்ணா'னு.. கூப்பிடலாம்..!!!

ஆனா... நண்பனை மட்டும் தான்..

மச்சான்,, மாப்ளே,, மச்சி,, தோழா,, நண்பா,, பிரண்ட்ஸ்,, கூட்டாளி,, பங்காளி,, மாமா,, சித்தப்பு,, சகலை,, தோஸ்து,, லூசு,, பக்கி,, எருமை,, பொறுக்கி,, முண்டம்,, பொறம்போக்கு,, வெட்டிப் பய.. மற்றும் பல..

நீங்க எப்படி கூப்பிட்டாலும்.. அர்த்தம் ஒன்னு தான்..!!
அதான்யா.. நண்பன்..!!

இதுக்குள்ள.. எல்லா உறவுகளும் அடங்கும் அதுக்கு பெயர் தான் "நட்பு"..!!!

♥ ♥

Relaxplzz

அதிகமா ஒருத்தர் மேல கண்மூடித்தனமா பாசம்.... வச்சா என்ன கிடைக்குமோ இல்லயோ.......

Posted: 17 Jun 2015 03:30 AM PDT

அதிகமா ஒருத்தர் மேல
கண்மூடித்தனமா பாசம்....

வச்சா என்ன
கிடைக்குமோ இல்லயோ....

#ஏமாற்றம் #எரிச்சல்
#அழுகை #அவமானம் #உதாசீனம்
இதெல்லாம் கிடைக்கும்......


உலகின் மிக நீளமான திருமண ஆடை :)

Posted: 17 Jun 2015 03:26 AM PDT

உலகின் மிக நீளமான திருமண ஆடை :)


ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்... அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்.....

Posted: 17 Jun 2015 03:14 AM PDT

ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்... அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்...

ராமசாமி பி.டெக் முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க... அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்... ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க.... இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்...

ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்... வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை... வீட்டில் மட்டுமா?... சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்...

அதுமட்டுமா?... ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்... இட்லிகடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக்கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக்கடை வை என்று..... மாடசாமியின் அப்பாவுக்கோ சொல்லவொண்ணா வேதனை... மகன் இப்படி செய்து விட்டானே என்று... மாடசாமியோ இடிந்து போய் விட்டான்... கடைசியில் ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்...

ராமிசாமி க்ரடிட் கார்டுமூலம் பைக் வாங்குகிறார்... மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்... மாடசாமி டி.வி.எஸ் 50 வாங்குகிறார்... அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்... இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்... ராமசாமி மகிழ்ச்சி பொங்க 'ஹாய்' என்று சொல்லி கையசைக்கிறார்... மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு 'ஹாய்' சொல்லிவிட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்...

ஆறு மாதங்களுக்குப் பிறகு.......

ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்.... மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்... அதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடுகிறார்... இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது... மாடசாமிக்கோ... தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது...

ஒரு வருடத்திற்குப் பிறகு.........

ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்... பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை.... இப்போது அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது... மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது... அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து... அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்... ராமசாமி தன் பைக் லோனை அடைத்துவிட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்... அதைக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், எல்.சி.டி டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்... சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்... மாடசாமியோ... மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்....

இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது... மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்... காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை....

இரண்டு வருடங்களுக்குப் பிறகு...

ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது... அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்...அந்த சமயத்தில் மாடசாமி... எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்... மேலும் அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்... இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது... இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது... மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி... பால் வியாபாரத்தை கவனிக்கிறார்... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க..... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.....

நான்கு வருடங்களுக்குப் பிறகு..........

ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்... மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது....மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்..... இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது.... லிட்டர் விலை 40 ரூபாய்... மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது... வேறு வழி இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்.... இப்போது இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.... ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்... அதேமாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்... இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்....

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....

ராமசாமியின் வருட வருமானம் 7 லட்சமாய் உயர்ந்திருக்கிறது... ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது...
*
*
*
*
2008 ல் பாலின் விலை... லிட்டர்15 ரூபாய்... இப்போது 40 ரூபாய்... அப்போது தங்கம் பவுன் 12,500. இப்போது பவுன் 25,000. ஐந்து வருடங்களாக பொறியாளர்களின் சம்பள உயர்வு 30% மட்டுமே... ஆனால் பெரும்பாலான மக்கள் பொறியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்கள்......

கதையின் நீதி..... பேசாம மாடுமேய்க்கப் போயிருக்கலாமோ????????????????? ;-)

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

:P Relaxplzz

Posted: 17 Jun 2015 03:03 AM PDT

#கிராமமும்_நகரமும்..... வெற்றிலை பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகர...

Posted: 17 Jun 2015 02:47 AM PDT

#கிராமமும்_நகரமும்.....

வெற்றிலை பாக்கு போட்டால் கிராமத்தான்

பீடா போட்டால் நகரத்தான்

பச்சை குத்தினால் கிராமத்தான்

டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்

மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

மெஹந்தி என்றால் நகரம்

90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்

2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்

மங்களமான மதுரை மஞ்சப்பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்

தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்

கிழிந்த ஆடை போட்டால் கிராமம்

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்

உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..

எது நாகரீகம் எது ஆரோக்கியம்.....

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

ஒரு கல்கோனா மிட்டாயை வாங்கி அதை சட்டை நுனியில் வைத்து இரண்டாக கடித்து அதில் பாதி...

Posted: 17 Jun 2015 02:38 AM PDT

ஒரு கல்கோனா மிட்டாயை வாங்கி அதை சட்டை நுனியில் வைத்து இரண்டாக கடித்து அதில் பாதியை நண்பனுக்கு கொடுத்த சந்தோஷத்தை இக்கால குழந்தைகள் அறிவார்களா...??


அந்தக் காலத்தில

:) Relaxplzz

Posted: 17 Jun 2015 02:29 AM PDT

ஒரு பெரியவர் 70 வயசு இருக்கும் இப்போ கடைக்கு வந்தார் CELKON போன் அவரோடது "பேசுறத...

Posted: 17 Jun 2015 02:10 AM PDT

ஒரு பெரியவர் 70 வயசு இருக்கும் இப்போ கடைக்கு வந்தார் CELKON போன் அவரோடது "பேசுறது சரியா கேக்கல தம்பி என்னன்னு கொஞ்சம் பாத்து குடு" ன்னு சொன்னார் ...

செக் பண்ணேன் மைக் பிராப்ளம் அவர் போன்ல ... நான் அவர்கிட்ட "அய்யா இதுல மைக் வேல செய்யல மாத்தனும்ன்னு " சொன்னேன் .... அவர் "எவ்ளோ ஆகுமப்பா" ன்னு கேட்டார் ... பாக்க ரொம்ப கஷ்ட படுறவர் மாதிரி இருந்தார் அதனால அவர்கிட்ட சொன்னேன் " நார்மலா 100 ரூவா சார்ஜ் பண்ணுவேன் .. நீங்க ஒரு 50 ரூவா மட்டும் குடுங்க "ன்னு சொன்னேன் ..

அதுக்கு அவர் " சரி அப்போ இருங்க வரேன் " ன்னு சொல்லிட்டு போய்ட்டார் .....

ஒரு மணி நேரம் கழிஞ்சு வந்தார் "இப்போ ரெடி பண்ணி குடுங்க" ன்னு சொன்னார் ... நான் போன சர்வீஸ் பண்ணிகிட்டே கேட்டேன் " இப்போ எங்க போய்ட்டு வந்தீங்கன்னு" அதுக்கு அவர் " நானும் என் மனைவியும்தான் வீட்ல இருக்கோம் பசங்க அனாதையா எங்கள விட்டுட்டு போய்ட்டாங்க நான் நைட் வாட்ச்மேன் வேலைக்கு போய்தான் சம்பாரிச்சு சாப்டுறோம்...

50 ரூவா சொன்ன நீ, அம்பது ரூபா இப்போ இல்ல அதான் அக்கம் பக்கம் போய் கடன் வாங்கி வந்தேன் அதுவும் 40 ரூபா தான் கிடைச்சதுன்னு " ...

ஒண்ணும் சொல்ல தோணல போன ரெடி பண்ணி அவர் கைல குடுத்துட்டு .. " இந்த 40 ரூபாவ யார் கிட்ட கடனா வாங்குனீங்கலோ அவங்க கிட்டயே போய் குடுத்துடுங்கன்னு " சொன்னேன் ....

மனசு எதோ லேசாகிட்ட மாதிரி ஒரு feel :)

வாரிவழங்கும் அளவுக்கு பெரிய அளவில் என்னிடம் இல்லாவிட்டாலும் எதோ என்னால் முடிந்த சிறு உதவி என்னும்மட்டில் தான்..

via Selvakumar

Relaxplzz

எளிய அழகுக் குறிப்புகள் - இயற்கை வைத்தியம் 1. கருமை நிறம் மாற‌ பச்சை உருளைக்கி...

Posted: 17 Jun 2015 01:18 AM PDT

எளிய அழகுக் குறிப்புகள் - இயற்கை வைத்தியம்

1. கருமை நிறம் மாற‌

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

2. முகம் மிருதுவாக‌

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

3. வியர்வை நாற்றம் போக:

* குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

* வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

* குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

* இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

* 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

4. கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.

5. எடை குறைய

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

6. முடிகளை நீக்க

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

7. சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

8. தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

9. சருமம் நிறம் அதிகரிக்க

ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் அரை டீஸ்பூன் பார்லி பவுடர் அரை டீஸ்பூன்

மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.

10. கண்கள் பிரகாசமாக இருக்க

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

11. கருவளையம் நீங்க

ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.

12. மருதாணி நன்கு சிவக்க

மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்

Relaxplzz


இயற்கை வைத்தியம் - 2

மண்ணை பொன்னாகி, பசியை பாசமாக்கி , பறவைகள் போல, சந்தோஷசமா வாழும், எங்கள் கிராமத்த...

Posted: 17 Jun 2015 01:13 AM PDT

மண்ணை பொன்னாகி,
பசியை பாசமாக்கி ,
பறவைகள் போல,
சந்தோஷசமா வாழும்,
எங்கள் கிராமத்து வாழ்க்கை..

- புரட்சி


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

:) Relaxplzz

Posted: 17 Jun 2015 12:50 AM PDT

இது மட்டும் புரியவில்லை ஏனோ? Watsap chat-ல்லோ, Messenger,hike-கிலோ Hi என்று Tex...

Posted: 17 Jun 2015 12:30 AM PDT

இது மட்டும் புரியவில்லை ஏனோ?

Watsap chat-ல்லோ,
Messenger,hike-கிலோ
Hi என்று Text செய்து நீ
அழைத்ததுமில்லை..

பிறந்தநாள் வாழ்த்தோ!
புதுவருட வாழ்த்தோ!
நடுஇரவில் எழுப்பி நீ செய்ததுமில்லை..
செய்த சொதப்பலோ,
வாங்கிய மொக்கையோ,
சொல்லிக்காட்டி என்னை கலாய்ததுமில்லை நீ..

அனிரூத் இசையோ,
கெஜ்ரிவால் வெற்றியோ, விவாதங்கள்
நமக்கிடையே இருந்ததேயில்லை...

பேருந்தில் அழகியோ,
வகுப்பினில் குறும்போ,
எதையும் உன்னிடம் பகிர்ந்ததேயில்லை நான்...

என் நண்பர்கள் பட்டியலில்
என்றுமே உன் பெயர்
இடம்பெற்றதேயில்லை...

இருந்தும் நீ எப்படிதான்
என் சிறந்த தோழியாக இருக்கிறாயோ #அம்மா!!

அன்று முதல் இன்று வரை.
ஆம் சுவாரஸ்யமான புதிர் தான் நீ!!!!!

Relaxplzz

ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சுஜாதா அழைக்கப்பட்டு இருந்தா...

Posted: 17 Jun 2015 12:13 AM PDT

ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சுஜாதா அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது கம்ப்யூட்டர் அவ்வளவாகப் பிரபலமாகாத நேரம். கம்ப்யூட்டர் பற்றி எளிய உதாரணங்களுடன் சுஜாதா பேசிக்கொண்டு இருந்தார்.

'மனிதர்களுக்குச் சில விஷயங்கள் தான் நினைவில் நிற்கும். தினம் தினம் செய்யக்கூடிய காரிய மானாலும் அவை அனைத்தும் நினைவில் இருப்பது இல்லை. ஆனால், கம்ப்யூட்டர் அப்படியில்லை. அதன் மெமரியில் அனைத்துத் தகவல்களும் அழியாமல் அப்படியே இருக்கும்' என்று சுஜாதா பேசிக்கொண்டு இருந்தார்.

இதை எளிதாகப் புரியவைக்க எண்ணி, ஒரு மாணவியை எழுந்து நிற்கச் சொல்லி, 'நேற்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?' என்று கேட்க, அவரும் 'தேங்காய்ச் சாதம் சாப்பிட்டேன் சார்' என்றார்.

'நல்லது, போன வாரம் புதன்கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?' என்று கேட்க, அந்த மாணவியோ 'ஞாபகம் இருக்கே... தேங்காய்ச் சாதம் சார்' என்றார்.

உடனே மாணவிகள் மத்தியில் சிரிப்பு. சுதாரித்துக்கொண்ட சுஜாதா, 'ஓ.கே. உங்களுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெமரி போலிருக்கிறது' என்றவர், 'போனவாரத் துக்கு முந்தைய புதன்கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்க, அந்த மாணவியும் 'தேங்காய்ச் சாதம்தான்' என்றார். மீண்டும் மாணவிகள் மத்தியிலிருந்து சிரிப்பலை.

அந்த மாணவி தன்னைக் கலாய்க்கிறார் என்று புரிந்துகொண்ட சுஜாதா சற்றுக் கோபத்துடன், 'நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். போன வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் புதன் கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்கூட தேங்காய்ச் சாதம் என்றுதான் சொல்வீர்கள்' என்று சொல்ல, அந்த மாணவியும் 'யூ ஆர் சர்ட்டன்லி கரெக்ட் சார்' என்றார்.

மீண்டும் எழுந்த சிரிப்பலைகளுக்கு மத்தியில் பதில் அளித்த மாணவிக்குப் பக்கத்திலிருந்த மாணவி எழுந்தார். 'சார், அவள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். ஹாஸ்டல் மெனுப்படி ஒவ்வொரு புதன்கிழமை மதியமும் தேங்காய்ச் சாதம்தான்' என்று விளக்கமளித்தார்.

'அப்பாடா! நல்லவேளை! இது பெண்கள் கல்லூரியா, ஆண்கள் கல்லூரியா என்று ஒரு விநாடி தடுமாறி விட்டேன்' என்று சுஜாதா சமாதானமானார்.

தனது நகைச்சுவையால் பலரையும் சிரிக்கவைத்த சுஜாதாவே அந்த பெண்ணிடம் பல்பு வாங்கி விட்டார்.

நீதி: இந்த பொண்ணுங்க கிட்ட பேசி ஜெய்க்க முடியாது.;-)

via Senthilkumar

Relaxplzz


"மேதைகளின் நகைச்சுவை"

:) Relaxplzz

Posted: 17 Jun 2015 12:04 AM PDT

Posted: 17 Jun 2015 12:02 AM PDT


:) Relaxplzz

Posted: 16 Jun 2015 11:52 PM PDT

குழந்தையாய் இருக்கும்போது கோடிக்கணக்கில் இருக்கும் உலக அதிசயங்கள், வளர்ந்தவுடன்...

Posted: 16 Jun 2015 11:41 PM PDT

குழந்தையாய் இருக்கும்போது கோடிக்கணக்கில் இருக்கும் உலக அதிசயங்கள், வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன. :)

- Suresh Adithya @ Relaxplzz


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

;-) Relaxplzz

Posted: 16 Jun 2015 11:33 PM PDT

தன்னுடைய 26 ஆம் ஆட்சியாண்டின் இருபதாவது நாள், தஞ்சாவூர் அரண்மனையின் கிழக்கே இருந...

Posted: 16 Jun 2015 11:21 PM PDT

தன்னுடைய 26 ஆம் ஆட்சியாண்டின் இருபதாவது நாள், தஞ்சாவூர் அரண்மனையின் கிழக்கே இருந்த குளியல் அறையில் (திருமஞ்சன சாலை) அமர்ந்தபடி ராஜ ராஜன் தஞ்சை கோயிலுக்காக கொடுக்கப்படும் தானங்களை எப்படி கல்வெட்டில் குறிப்பிட வேண்டும் என்று கூறிய வார்த்தைகள் இவை..

"நாங் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் பெண்டுகள் குடுத்தனவும்
மற்றும் குடுத்தார் குடுத்தனவும் கல்லிலே வெட்டி அருளுக".... என்று அவர் கூறியத்தைப் போல் வரிசை மாறாமல் முதலில் ராஜ ராஜன் கொடுத்த கொடைகளும், அதற்கு அடுத்து குந்தவை கொடுத்த கொடைகளும். அடுத்து அவரின் மனைவிகள் கொடுத்த கொடைகளும் பிறகு அந்த கோயிலுக்காக யார் யார் என்னென்ன கொடைகள் கொடுத்தார்களோ அவை அனைத்தும் அகலம், நிகளம், எடை, வடிவம் என அனைத்தும் துல்லியமாக கணக்கிடப்பட்டு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.. கோயிலுக்காக கொடுக்கப்பட்ட நகைகள், மணிகள், மணி கோர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நூலின் எடை கூட கல்வெட்டில் பதிவாகியுள்ளது!.

நெய் ஊற்ற பயன்படும் சிறிய கரண்டியின் அளவும் எடையும் பதிவு செய்யப்பட்டுள்ளது! அனைவரும் சேர்ந்து மொத்தம் 66 சிலைகள் கொடையளித்திருக்கிறார்கள், அதில் இன்றைக்கு 2 மட்டுமே மீதம் உள்ளது. மீதம் எங்கே சென்றது என்பது குறித்த எந்த தகவலுமில்லை. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நகைகள் ஏதும் இன்றைக்கு இல்லை.... ஒன்றே ஒன்று உள்ளது அது ஆயிரம் வருடங்களுக்கு முன் குளியல் அறையில் அமர்ந்த படி ராஜ ராஜன் பிறப்பித்த உத்தரவின் பதிவு..அது தான் இப்போது நீங்கள் படத்தில் பார்ப்பது. :)

- சசி தரன்

Relaxplzz


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார்....

Posted: 16 Jun 2015 11:10 PM PDT

நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார். மேனேஜர் அவரிடம் புதுவிதமாக கேள்வி கேட்டு மடக்க நினைத்தார். எனவே தனது செல்போனை எடுத்து அவர் கையில் குடுத்து,

"எங்கே இதை எனக்கு விற்று காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் விற்பனை துறையில் எந்த அளவுக்கு திறமையாக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புறேன்" என்றாராம்.

நம்மவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அந்த செல்போனை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு தனது வீட்டுக்கு போய்விட்டார்.

இதை மேனேஜர் சற்றும் எதிர்பார்க்காத மேனேஜர், தனது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மவர் வீட்டுக்கு அழைத்து,

"யோவ் மரியாதையா என் செல்போன கொண்டு வந்து குடுத்துட்டு போ" என்று கத்தினார்.

நம்மவர் புன்முறுவலுடன்,

"10,000 ரூபாய் குடுத்துவிட்டு, செல்போன வாங்கிகோங்க" என்றாராம்.

அப்பறம் என்ன, நம்மவர் உடனடியாக அந்த கம்பெனியில் தலைமை சேல்ஸ் அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

#நீதி: கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக உழைப்பவர்களே வாழ்வில் சீக்கிரமாக முன்னேறுகிறார்கள்.

;-) ;-)

Relaxplzz

0 comments:

Post a Comment